Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஜாக்கியின் காதல் பரிசு..!

Posted: 16 Sep 2017 11:00 AM PDT

- ஆக்‌ஷன் கிங் என்ற பெயருக்குச் சொந்தக்காரர் நடிகர் ஜாக்கிசான். இவர் நடித்துள்ள 'தி பாரீனர்' படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் ஜாக்கிசான், 'ஏய் குயிங் லா லீ' எனத் தொடங்கும் ஒரு புதிய பாடலை வெளியிட இருக்கிறாராம், அதுவும் அவரே அதை பாடியும் உள்ளாராம். இதுவரை 12 பாடல் ஆல்பங்களுக்குப் பாடியுள்ள ஜாக்கிசான் இந்த முறை ஸ்பெஷலாக பாடியிருக்கிறார். அதாவது ஜாக்கிசான் தன்னுடைய மனைவி 'ஜோன் லின் பெங்க் ஜியாவோ'வுக்காக ஒரு புதிய பாடலை உருவாக்கியிருக்கிறாராம். ...

ரஷ்ய நாட்டுப்புறப் பாடல்!

Posted: 16 Sep 2017 07:38 AM PDT

ரஷ்ய நாட்டுப்புறப் பாடல்!

இங்கே பாருங்க !
மலையிலிருந்து யாரோ இறங்கி வர்றாங்க!
ஒருவேளை- என் கணவனாகவும் இருப்பார்!

வருபவர்-
காக்கிச் சீருடை அணிந்திருக்கிறார்!

ஐயோ ! அந்தச் சீருடை –
என்னைப் பைத்திய மாக்குதே!

(A portion from Russian Folk Song; தமிழில் மொழிபெயர்த்தவர்- முனைவர் சு. சௌந்தரபாண்டியன்)

தூங்கு என் கண்ணே! (ஸ்பெயின் தாலாட்டு)

Posted: 16 Sep 2017 06:50 AM PDT

தூங்கு என் கண்ணே! (ஸ்பெயின் தாலாட்டு)

தூங்கு என் கண்ணே தூங்கு!
தூங்கு கண்ணே தூங்கு!
பூதம் வருது பாரு- அது உன்னைத்
தூக்கிட்டுப் போகும் பாரு !

தூங்கு என் கண்ணே தூங்கு!
தூங்கு கண்ணே தூங்கு!
பூதம் வருது பாரு- அது உன்னைச்
சாப்பிடப் போகுது பாரு!

(Spanish Children's Song ; ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)

என்னருமைக் கழுதை ! (ஸ்பெயின் பாடல்)

Posted: 16 Sep 2017 06:30 AM PDT

என்னருமைக் கழுதை ! (ஸ்பெயின் பாடல்) என்னருமைக் கழுதை !என்னருமைக் கழுதை ! அதுக்குத் தலைவலி! டாக்டர் வந்தார் தொப்பி கொடுத்தார்- பெரிய தொப்பி கொடுத்தார் !; என் கழுதைக்குச் சுகமில்லை! என் கழுதைக்குச் சுகமில்லை! என்னருமைக் கழுதை ! என்னருமைக் கழுதை ! அதுக்குக் காது வலி! டாக்டர் வந்தார், பீர் கொடுத்தார்!- ஒரு குவளைப் பீர் கொடுத்தார் ! என் கழுதைக்குச் சுகமில்லை! – என் கழுதைக்குச் சுகமில்லை ! என்னருமைக் கழுதை ! என்னருமைக் கழுதை! அதுகுத் தொண்டை வலி! டாக்டர் வந்தார் – வெள்ளைக் ...

குந்தியும் நிஷாத பெண்களும்

Posted: 16 Sep 2017 06:03 AM PDT

விளிம்புநிலை மக்களைத் தங்களின் சுயநலத்துக்காகக் காவு கொடுக்கும் அதிகார வர்க்கத்துக்கு ஒரு சாட்டையடியாக அமைந்திருப்பது வங்கமொழி இலக்கியத்தின் புகழ் மிக்க படைப்பாளியும்,சமூகப் போராளியுமான மகாஸ்வேதா தேவியின் 'குந்தியும் நிஷாதப் பெண்ணும்'என்னும் மீட்டுருவாக்கச் சிறுகதை. இன்றைய சமூகத் தளத்திலும் -கூடங்குளம் முதல் முல்லைப் பெரியாறு வரை...பல வகையான அர்த்தப் பரிமாணங்களிலும் வைத்து வாசிக்க இடம் தரும் அந்தக் கதை குறித்துச் சில பகிர்வுகள்... பாரதப் போர் முடிந்த பின்பு வானப் பிரஸ்தவனவாசம் மேற்கொள்ளும் ...

தூரமாகிய மனது

Posted: 16 Sep 2017 06:01 AM PDT

தூரமாகிய மனது அருகருகில் இருந்தாலும் சிலரிடம் என்னவோ அதிகம் கத்திப் பேசவேண்டி இருக்கிறது . எத்தனைக் கத்திப்பேசினாலும்சிலரின் காதில் எதுவும் விழுவதில்லை . கோபம் வந்தால் நமது குரலும் உயர்ந்துவிடுகிறது ,மற்றவர் அருகிலேயே இருந்தாலும் கத்துகிறோம் எத்தனை தான் நம் பக்கம் நியாயங்கள் இருந்தாலும் என்னதான் பேசினாலும் ,அத்தனையும் சிலர் காதில் ,கண்ணில் படுவதில்லை . தம்பதியர் சிலர் "கிசுகிசு "எனப்பேசியே காரியம் சாதிக்கின்றனர் . சிலரின் நயனபாஷையே மற்றவருக்கு புரிகிறது . இத்தனைக்கும் ...

மகிழ்ச்சித் தோட்டம் ! (ஸ்பெயின் கவிதை)

Posted: 16 Sep 2017 05:59 AM PDT

மகிழ்ச்சித் தோட்டம் ! (ஸ்பெயின் கவிதை) என் அம்மா என்னை - மகிழ்ச்சித் தோட்டத்திற்குப் போகச் சொன்னாள்! அங்கே – என்னால் முடிந்தால்- ஒரு நண்பனைக் காணச் சொன்னாள்!- ஸ்பெயின் நாட்டின் கொள்ளை அழகாம் நண்பனைக் – காணச் சொன்னாள்! நானும் அவனும் செல்வோமே !- நாங்கள் இருவரும் செல்வோமே – இருவரும் செல்வோமே – அந்த அழகான மகிழ்ச்சித் தோட்டம் செல்வோமே! (Spanish Children's Song; ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் – முனைவர் சு. சௌந்தரபாண்டியன்)

மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!

Posted: 16 Sep 2017 04:07 AM PDT


-

எனது சொந்த ஊர் ! (ஜப்பானியக் கவிதை)

Posted: 16 Sep 2017 04:03 AM PDT

எனது சொந்த ஊர் ! (ஜப்பானியக் கவிதை) எங்க ஊர் மலையில் நான் முயல்களை விரட்டிக்கொண்டிருப்பேன் ! எங்க ஊர் ஆற்றில் நான் குட்டி மீன்களைப் பிடித்துக்கொண்டிருப்பேன் ! நான் அந்தப் பழைய நாட்களை இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறேன் ! அடடா! எனது பழைய ஊரை எப்படி மறப்பேன்? எனது பெற்றோர் எப்படி இருக்கிறார்களோ? எனது நண்பர்கள் நலமாக இருக்கிறார்களோ இல்லையோ? இங்கே மழை பெய்யும் போதெல்லாம்- இங்கே காற்று வீசும் போதெல்லாம்- எனது சொந்த ஊர்தான் என் நினைவுக்கு வருகிறது ! நான் வந்த வேலை இங்கே முடிந்துவிட்டால்- உடனே ...

நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’!

Posted: 16 Sep 2017 02:55 AM PDT

- --- சிறுவர் மலர் தமக்கு விசுவாசமான ஒருவரை ராஜப் பிரதிநிதியாக அமர்த்தி, எகிப்தை நோக்கி படையுடன் புறப்பட்டார் அலெக்சாண்டர். எகிப்தின் நீண்ட நெடிய பாலைவனங்களில், தொடர்ந்து பல நாட்கள் பயணம் செய்ய நேரிட்டது. குறிப்பிட்ட கால கெடுவை தாண்டி பயணம் தொடர்ந்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தாகத்தால் தவித்த அலெக்சாண்டர், 'தண்ணீர் வேண்டும்' என்றார். ஒரு வீரனிடம், ஒரு கலசம் தண்ணீர் மட்டுமே இருந்தது. அதை, அலெக்சாண்டருக்காக கொடுத்து விட்டான். எல்லாரும் தாகத்தில் தவித்து கொண்டிருக்கும் ...

ரூ.100 கோடி சொத்து, குழந்தையை கைவிட்டு துறவறம் செல்லும் தம்பதி

Posted: 16 Sep 2017 02:54 AM PDT

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுடன், மூன்று வயது குழந்தையை கைவிட்டு, துறவறம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர், வசுந்தரா ராஜே தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சித்தோர்கர் மாவட்ட, பா.ஜ., முன்னாள் தலைவர், அசோக் சந்தாலியா. இவரது மகள் அனாமிகாவுக்கும், ம.பி., மாநிலத்தை சேர்ந்த சுமித் ரத்தோருக்கும் நான்கு ஆண்டு களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை ...

வாழ்க்கை

Posted: 16 Sep 2017 02:51 AM PDT

என்பது இரண்டு எழுத்துக்களுக்கு இடையே உள்ள இணைப்புதான் அந்த இரண்டு எழுத்து B AND D உம் தான் இதில் B பிறப்பையும் D இறப்பையும் குறிப்பன அந்த இரண்டு எழுத்துக்களுக்கு இடையே இருக்கும் எழுத்து ஒன்றே ! அது C தான் அதாவது அதுதான் சாய்ஸ் எனும் தேர்வு கொடுக்கப்பட்ட இரண்டு புள்ளிகளுக்குள் , நமது தேர்வு மிக முக்கியம் . தேர்ந்து வாழுங்கள் ! தெளிந்து வாழுங்கள் ! அண்ணாமலை சுகுமாரன் 16/9/17

அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி

Posted: 16 Sep 2017 02:40 AM PDT

நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன்  "நான் சினிமாவில் நடிக்கிறேன். சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர். அறவழியில் போராடுவதே ஆரம்பம். அஹிம்சையின் உச்சகட்டமே போராட்டம். மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வருவேன். வந்த பின் ரஜினியிடம் பேசி, அவர் விரும்பினால் அவரை என்னோடு இணைத்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். என் வாரிசுகளுக்காக நான் அரசியலுக்கு வருவதாக கூறவில்லை. மாற்றம் வேண்டும் என்பதே என் நோக்கம்" என அவர் பேசினார். - ------------------------- தமிழ் வெப்துனியா

இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பத்திரிக்கையார் முதலை கடித்து பலி...

Posted: 16 Sep 2017 02:39 AM PDT

- இங்கிலாந்தில் வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையில் செய்தியாளராக பணி புரிந்து வந்தவர் பால் மெக்லன் (24). இவர் தனது விடுமுறையை கழிப்பதற்காக சமீபத்தில் தனது நண்பர்களுடன் இலங்கைக்கு வந்திருந்தார்.    அந்நிலையில், நேற்று பிற்பகல் பனாமா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு கடலை ஒட்டியுள்ள நீர்நிலையில் இறங்கி சற்று நேரம் நின்றுள்ளார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த முதலை அவரை கடித்து நீருக்குள் இழுத்து சென்றது.    உடனடியாக இதுபற்றி மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ...

குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)

Posted: 16 Sep 2017 02:38 AM PDT

குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை) மகளைப் பார்க ஊருக்குப் போன பார்வதி, மகள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தாள். அவர்கள் வீட்டில உள்ள படத்தை உற்றுப்பார்த்தாள்! எழுந்து படம் அருகே சென்று இன்னும் உற்றுப் பார்த்தாள்! பார்த்தவள் , "இதுல இருக்கிற ஆளு யாரு ?" என்றாள். வீட்டுக்காரி அஞ்சலை , " ஏன்? எங்க வீட்டுக்காரர்தான் ! உங்களுக்கு அவரைத் தெரியுமா?" எனக் கேட்டாள்! ஆனால் அஞ்சலையிடம் எந்தச் சலனமும் இல்லை! பார்வதி - "இவரு சாமுவேல்தானே? பி.டி. வாத்தியார்தானே?" அஞ்சலை ...

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!

Posted: 16 Sep 2017 02:32 AM PDT

தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்...! உங்களுக்கு சேவை செய்யவும், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்தவும் முடிவெடுத்து அடுத்த தேர்தலில் போட்டியிட புதிய அரசியல் கட்சி தொடங்க முடிவெடுத்திருக்கிறோம். (கட்சி தொடங்கலாமா வேண்டாமா? என்பதற்கான ஆலோசனைகளும், கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. மக்களின் ஆதரவைப் பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும்.) மெரினாவிற்கு பொண்ணு பார்க்க போனவர்கள் எல்லாம் போராட்டம் செய்தோம் என்று புகைப்படமெடுப்பதை பார்த்தபோது மெய்சிலிர்த்துப் போகிறது... அரசை எதிர்த்து ...

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Posted: 15 Sep 2017 08:30 PM PDT

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1 முகப்புரை குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் . ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை. திருவள்ளுவரைப்போலவே ...

“சின்ன வயசுல பீடியும் கள்ளும்தான் சோறு போட்டுச்சு!” - மனம் திறந்த பினராயி விஜயன்

Posted: 15 Sep 2017 07:56 PM PDT

தமிழ்நாட்டு மக்களுக்கு, கேரள மக்கள் மீது இப்போது   பொறாமையோ பொறாமை! `ஜிமிக்கி கம்மல்' பாட்டுக்குப் பதில் மீம்ஸ் போடுவதிலேயே இதைக் காண முடியும். நல்ல தலைவர் இல்லாமல் தமிழகம் தத்தளிக்க, கேரளத்தைப் பிரமாதமாக ஆட்சிசெய்கிறார் பினராயி விஜயன். கேரள மருத்துவமனைகளின் அலட்சியத்தால் தமிழகத்தைச் சேர்ந்த முருகன் இறந்தபோது, அந்தப் பிரச்னையை மனிதநேயத்தோடு அணுகினார்.  சில நடிகர்கள் அடுத்தடுத்து தமிழக அரசியலில் குதிக்கப் போவதாகச் சொல்லப்படுகிறது.  ரஜினி, கமல் மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ...

சவுதி அரேபியாவில் புரட்சியை முன்னெடுத்த தனி ஒருத்தி!

Posted: 15 Sep 2017 07:44 PM PDT

பெண்களுக்கான சுதந்திரம் என்பது சவுதி அரேபியாவில் இன்னமும் நடக்காத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த நிலையை மாற்றும் முயற்சியில் முதல் அடியை தனிஒருத்தியாக எடுத்து வைத்திருக்கிறார் மனால் அல் ஷரிஃப். மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரியும் மனால் சமீபத்தில் அமெரிக்காவுக்கு மாற்றுதல் செய்யப்பட்டார். சவுதி அரேபியாவில் பெண்கள் அனைவரும் ஆண்களில் நிழலில்தான் வாழ வேண்டும் என்ற நிலை இன்னமும் நீடித்து வருகிறது. அங்கே காரைக் கூட பெண்கள் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. ...

ஜி.எஸ்.டி.,க்கு பின் மின்துறைக்கு ரூ.6,000 கோடி மிச்சம்

Posted: 15 Sep 2017 07:03 PM PDT

புதுடில்லி: ஜி.எஸ்.டி., அமலுக்கு பின், நிலக்கரி மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதால், மின்துறைக்கு, 6,000 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. பாதிப்பில்லை: இதுகுறித்து கோல் இந்தியா நிறுவனத்தின் நிதிப்பிரிவு இயக்குனர், சி.கே.தேவ் கூறியதாவது: மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், கோல் இந்தியா நிறுவனத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. ஏனெனில், பண பரிவர்த்தனை முழுவதும், ஆன்--லைனிலேயே நடக்கிறது. எனினும், ஜி.எஸ்.டி,, அமலால், நிலக்கரிக்கு விதிக்கப்பட்ட வரி விகிதத்தில் மாற்றம் ...

மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்

Posted: 15 Sep 2017 06:02 PM PDT

ஊட்டி, ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நூலகம் இயங்கி வருகிறது. இங்கு சர்வதேச அளவிலான தகவல்களை கொண்ட பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருந்து எழுத்தாளர்கள், கட்டுரை ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஆய்வுகளையும், கட்டுரைகளையும் சரிபார்க்க இங்கு வருவதால் முக்கியத்துவம் வாய்ந்த நூலகமாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் நூலக குழு சார்பில் இலக்கிய விழா நூலகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் மகாத்மா காந்தியின் பேரனும், சர்வதேச எழுத்தாளருமான ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™