Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'ஆதார்' தகவல்கள் திருடப்படுமா?

Posted: 13 Sep 2017 12:59 PM PDT

'ஆதார்' தகவல்களை, மொபைல் போன் எண்ணுடன் இணைத்த பின், அவற்றை தொலை தொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்; இல்லையெனில், அது, கிரிமினல் குற்றமாக கருதப்படும் என, கூறப்பட்டுள்ளது.

தயக்கம்:
பயங்கரவாதிகள், தேச விரோதிகள், 'சிம் கார்டு' பயன்படுத்துவதை தவிர்க்க, மொபைல் போன் உபயோகிப்பாளர்கள், தங்கள் எண்ணுடன், ஆதார் எண்ணை, 2018 பிப்ரவரிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, அனைத்து தொலைபேசி நிறுவனங்களும், தங்கள் கிளையிலோ அல்லது முகவர்களிடமோ, வாடிக்கையாளரின் கைவிரல் ரேகை பதிவை பெறுவதற்காக, ...

ஆமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டம்...துவக்கம்!

Posted: 14 Sep 2017 09:14 AM PDT

ஆமதாபாத்: ஜப்பான் நாட்டின், 88 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியுடன் கூடிய, ஆமதாபாத் - மும்பை இடையேயான, நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. ''இந்த திட்டம், ஜப்பான் நமக்கு அளித்துள்ள பரிசு; நமக்கு இலவசமாகவே கிடைக்கிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து, மஹாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு செல்லும் வகையிலான, நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா, ஆமதாபாத்தில் நேற்று நடந்தது. ஜப்பான் பிரதமர், ஷின்சு அபே, பிரதமர் நரேந்திர மோடி திட்டத்தை ...

தனிக்கட்சி தொடங்குகிறார் கமல்

Posted: 14 Sep 2017 10:17 AM PDT

சென்னை: அரசியலில் களமிறங்க இருக்கும் நடிகர் கமல், யாருடனும் கூட்டு சேராமல் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக, பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அரசியலில்ஜெயலலிதா மறைவிற்கு பின், நடிகர் கமல், தமிழக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதோடு சமீபத்திய அவருடைய பேட்டிகள், டுவீட்டரில் பதிவிடும் கருத்துகள் எல்லாம் அரசியல் தொடர்பானதாகவே இருக்கின்றன. இதனால் அவர் விரைவில் அரசியல் களத்தில் இறங்க வாய்ப்புள்ளது. அதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.அக்டோபரில், கமல் அரசியல் களத்தில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் . ...

18 எம்.எல்.ஏ.,க்கள் பதவி இன்று பறிப்பா? சட்ட நிபுணர்களுடன் சபாநாயகர் ஆலோசனை

Posted: 14 Sep 2017 10:22 AM PDT

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களில், 18 பேரை, தகுதி நீக்கம் செய்வது குறித்து, சபாநாயகர் தனபால், நேற்று பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், ஆகஸ்ட், 22ல் கவர்னரை சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக, கடிதம் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து, அவர்களை எம்.எல்.ஏ., பதவியில் இருந்து, தகுதி நீக்கம் செய்யும்படி, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.அதை ஏற்று, 19 எம்.எல்.ஏ.,க்களிடம் விளக்கம் கேட்டு, சபாநாயகர் தனபால், ஆக., 24ல், 'நோட்டீஸ்' அனுப்பினார். அதற்கு, இடைக்கால பதில் ...

நிபுணர்களை அழைத்து வாங்க! தமிழகம், கர்நாடகாவுக்கு உத்தரவு

Posted: 14 Sep 2017 10:25 AM PDT

புதுடில்லி:'காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னையில், உங்கள் தரப்பு வாதங்களை நியாயப்படுத்த, நிபுணர்களை அழைத்து வாருங்கள்' என, தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழகம், கர்நாடகா,கேரளாமாநிலங்கள், மனு தாக்கல் செய்து உள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள், அமிதவ் ராய், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்து வருகிறது.கேரளதரப்பு வாதம் முடிந்த நிலையில், ...

அரசியல் களமானது சாரணர் இயக்கம்; ஏழு ஆண்டுக்கு பின் நாளை தேர்தல்

Posted: 14 Sep 2017 10:31 AM PDT

ஏழு ஆண்டுகளுக்கு பின், சாரண - சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு, முதல் முறையாக தேர்தல் நடக்கிறது.

பாரத சாரண - சாரணியர் இயக்க அலுவலகம், சென்னை, காமராஜர் சாலையில், ராணி மேரி கல்லுாரி அருகே வென்லாக் பூங்காவில் உள்ளது.மாநில தலைவராக, பள்ளி கல்விதுறை அமைச்சர் இருப்பார். ௨௦௧௦ல், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைவராக இருந்தபோது, நிர்வாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அதனால், தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தவும், பதவிக்காலத்தை மூன்றாண்டில் இருந்து, ஐந்தாண்டாக அடுத்து, தலைவர் பதவிக்கு, ...

கவுரி லங்கேஷ் கொலையில் திடுக்கிடும் புதிய தகவல்

Posted: 14 Sep 2017 10:34 AM PDT

பெங்களூரூ: பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில், விசாரணை அதிகாரிகளுக்கு, புதிய துப்பு கிடைத்துள்ளது.

சமூக ஆர்வலர் கலபுரகி கொலையிலும், கவுரி லங்கேஷ் கொலையிலும் ஒரே துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது, தடயவியல் சோதனைகளில் தெரியவந்துள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்து உள்ளது. தலைநகர் பெங்களூரில் வசித்து வந்த, பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான, கவுரி லங்கேஷ், 55, மர்ம நபர்களால் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து போலீஸ் ...

43 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' ஐகோர்ட்டில் அரசு தகவல்

Posted: 14 Sep 2017 10:38 AM PDT

சென்னை: அனுமதியின்றி, 'ஆப்சென்ட்' ஆன ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. 43 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, நோட்டீஸ் வழங்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும், தமிழக அரசிடம், 12 கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படியும் உத்தரவிட்டு இருந்தது.
ஆறு ஆசிரியர் ...

100 கார்களில் பவனி வந்த எம்.பி., சசி குடும்பம் நீக்கத்தால், 'மவுசு'

Posted: 14 Sep 2017 10:40 AM PDT

திருச்சி: அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா, தினகரன் நீக்கப்பட்ட பின், முதன் முறையாக சொந்த ஊர் வந்த, ராஜ்யசபா எம்.பி., வைத்திலிங்கத்தை, 100 கார்கள் புடைசூழ, ஆதர வாளர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

அ.தி.மு.க., பொதுக்குழுவில், சசிகலா மற்றும் தினகரனை நீக்கிய பின், தஞ்சையைச் சேர்ந்த, ராஜ்ய சபா, எம்.பி., வைத்திலிங்கம் முதன் முறையாக நேற்று, சொந்த ஊரான தஞ்சைக்கு வந்தார். திருச்சிக்கு விமானத்தில் வந்த அவரை, 500க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் திரண்டு வரவேற்றனர். தஞ்சைக்கு, 60 கி.மீ., 100 கார்களில், ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
தஞ்சையில், வைத்திலிங்கம் ...

சட்டசபையில் 20ம் தேதி வரை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த தடை

Posted: 14 Sep 2017 11:08 AM PDT

சென்னை:தமிழக சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த, வரும், 20ம் தேதி வரை, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முதல்வர் பழனிசாமி அரசு, மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது. இந்த மனு தொடர்பாக, கவர்னரின் செயலர் பதில் அளிக்கவும், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.

முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவளித்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், ௨௧ பேர், தற்போது ஆதரவை வாபஸ் பெற்றனர். இதுகுறித்து, கவர்னரை சந்தித்து கடிதம் அளித்த அவர்கள், அரசியலமைப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளனர். ...

டீசல் வாகனங்களுக்கு தடையை நீக்க மறுப்பு

Posted: 14 Sep 2017 12:21 PM PDT

புதுடில்லி: டில்லியில், 10 ஆண்டுக்கு மேல் பழமையான டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுத்து விட்டது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லியில், வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால், காற்றில் மாசு அதிகரிக்கிறது. இதை சுவாசிப்பதால், பல்வேறு நோய்களால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுபற்றி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த, பசுமை தீர்ப்பாயம், 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களை, டில்லியில் இயக்க தடை ...

'ஸ்மார்ட்' கார்டு இல்லாதோருக்கும் ரேஷன் பொருட்கள் உண்டு

Posted: 14 Sep 2017 12:58 PM PDT

ரேஷன் கடைகளில், 'ஸ்மார்ட் கார்டு' பெறாதோருக்கு, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்க, ஊழியர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது; ஆனால், பழைய கார்டு வைத்திருப்போருக்கும், பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். தற்போது, காகித ரேஷன் கார்டுகளுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள, 1.92 கோடி கார்டுகளில், 28 லட்சம் பேருக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு, ரேஷன் பொருட்களை வழங்காமல், ஊழியர்கள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. ...

2,200 பாலியல் வழக்கு பதிவு : தமிழகத்தின் ஓராண்டு கணக்கு

Posted: 14 Sep 2017 02:14 PM PDT

ஈரோடு: 'தமிழகத்தில் ஆண்டு க்கு, 2,200 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன' என, ஈரோட்டில் நடந்த பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது.

ஈரோட்டில், பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் குறித்த பயிலரங்கம் நடந்தது. 'ரீடு' அமைப்பின் இயக்குனர் கருப்புசாமி வரவேற்றார். பயிலரங்கை துவக்கி, ஈரோடு, எஸ்.பி., சிவகுமார் பேசியதாவது:குழந்தைகள், மாணவ, மாணவியர் மொபைல் போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்காணித்து, கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த மாவட்டத்தில், 60 வயது முதியவரால், சிறுமிக்கு பாலியல் தொல்லை ஏற்பட்ட பிரச்னையில், ...

லாலு பிரசாத் மகனின் கல்வி தகுதி 9-ம் வகுப்பு

Posted: 14 Sep 2017 03:35 PM PDT

பாட்னா: பீஹார் முன்னாள் முதல்வர், லாலு பிரசாத் யாதவின் மகனும், முன்னாள் துணை முதல்வருமான, தேஜஸ்வி யாதவ், ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

சி.பி.ஐ., விசாரணை:
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத் யாதவ், 2004ல் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, லஞ்சம் பெற்று, ரயில்வே துறை ஓட்டல்களை, தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்த்ததாக, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட, லாலு பிரசாத் மனைவி, ரப்ரி தேவி, இளைய மகன் தேஜஸ்வி யாதவிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
9ம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™