Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இது வாட்ஸ் அப் கலக்கல்

Posted: 14 Sep 2017 12:30 PM PDT


நன்றி-தினமலர்
-

இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...

Posted: 14 Sep 2017 08:40 AM PDT

கணவன் - மனைவிக்கு இடையே நடந்த சண்டையின் போது:-  கணவன்: உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே!...  மனைவி: பொய் சொல்லாதே... என்னைப் பொண்ணுப் பாக்க வரும்போது 6 பேரோட வந்தே!... நிச்சயம் பண்ணும்  போது 100 பேரோட வந்தே!!... தாலி கட்டும் போது 500 பேரை கூட்டிட்டு வந்தே!!!... ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் வீட்டுக்குத் தனியாவே  வந்திருக்கேன் பாத்தியா!...  இப்ப புரியுதா யாரு  "தைரியசாலி" ன்னு... கணவன்:

மகிழ்ச்சி என்றால் என்ன?

Posted: 14 Sep 2017 08:19 AM PDT

மகிழ்ச்சி என்றால் என்ன? நான் சில பேராசிரியர்களைக் கேட்டேன் – 'மகிழ்ச்சி என்றால் என்ன?'என்று! அவர்கள் எல்லாம் , 'வாழ்க்கையின் பொருள்' பற்றிப் பாடம் நடத்துபவர்கள்! ஆயிரக்கணக்கானவர்களை வைத்து வேலை வாங்கும் சில மேலதிகாரிகளிடமும் இதே கேள்வியைக் கேட்டேன்! - ஒரு புன் சிரிப்புடன் தலையை ஆட்டினார்கள்- நான் ஏதோ வெட்டியாகக் அவர்களைக் கேலி செய்கிறேன் என்று ! ஒரு நாள் ஞாயிறன்று- டெஸ்பிளெய்ன்ஸ் ஆற்றோரமாகச் சென்றுகொண்டிருந்தேன்; அப்போது நான் கண்டேன்!- மரங்களின் அடியில், சில ஹங்கேரியர்கள்- ...

காதல்

Posted: 14 Sep 2017 07:41 AM PDT

காதல் நீ என் வாழ்வின் வசந்தம் என் வாழ்க்கையின் புதிய தொடக்கம் என் உலகில் பெய்யும் மழையில் நான் நனையாமல் இருக்க நீயே வந்தாய் குடையுடன் ... சூரியன் நடு வானத்தில் மின்னிடும் வேளையில் உன் நிழலே நான் இளைப்பாற .... மார்கழிப் பனியிலும் நான் குளிர் காய்கிறேன் உன் வெப்பச் சூட்டில்... ஆடிக் காற்றும் என் மேல் படவில்லை காரணம் நீயே அரணாய் அங்கும்... ஒவ்வொரு காலத்திலும் உன் அன்பும், உன் அருகாமையும் உன் அரவணைப்பும் உன் பார்வையும் எனக்கு போதும்.. என்னுடன் வா அன்பில் ...

வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்

Posted: 14 Sep 2017 07:40 AM PDT

- ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்ணை இந்தியர் ஒருவர் வெறும் 11 ரூபாய் செலவில் மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 13, 2017, 10:50 AM இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாஹித் அலி, ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் நபிசதா பேரேஸ்டா. ஜாஹித்தும், நபிசதாவும்  விமான நிலையத்தில் சந்தித்து கொண்ட போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இதன் பின்னர், நபிசதா, ஜாஹித்தை தேடி பஞ்சாப் மாநிலத்துக்கு வந்தார், அப்போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. காதலர்கள் ...

அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை)

Posted: 14 Sep 2017 07:38 AM PDT

அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை) அவள் பெயர் மஞ்சுளா; தேன் ததும்பும் தேனடை! சிக்கென்ற உடல்! எங்கள் வீட்டுக்குக்கு எதிர் வீட்டில் இருந்தாள்! 'பள்ளிப்படிப்பைத் தொடர வேண்டாம்' என அவர்கள் வீட்டில் நிறுத்திவிட்டார்கள். எங்கள் இருவர் பார்வையும் அவ்வப்போது மோதிக்கொண்டன! ஒருநாள் அதிகாலை ஐந்துமணி! நான் எங்கள் வீட்டு முகப்பில் உலாவலானேன் ! அவள் அப்போது அவர்கள் வீட்டைப் பெருக்கியதோடு , இருவரிடையே இருந்த ' இரசாயனப் பிணைப்பு' தொடரவேண்டும் என்று அடுத்த வீட்டு வாசலையும் பெருக்கலானாள்! நான் ...

இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்

Posted: 14 Sep 2017 07:27 AM PDT

இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள் அன்பர்களே PDF முறையில் ,புத்தகங்களை பெற www.pdfdrive.net என்ற தளத்திற்கு சென்று இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.லட்ஷ கணக்கில் புத்தகங்கள் தலைப்புக்கள் மூலமாக அல்லது ஆசிரியர்கள் மூலமாக தேடவும் 274376478 புத்தகங்கள் இருக்கின்றதாம். நிமிடத்திற்கு 50  புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறதாம். எல்லா any subject/field or topic? துறை புத்தகங்களும் கிடைக்கிறதாம் புலனம் (கட்செவி) மூலம் என்னை வந்து அடைந்த  செய்தி. ரமணியன்

books upload - details requird

Posted: 14 Sep 2017 06:46 AM PDT

என்னிடம் பிடிஎப் வடிவில்
   முத்துலட்சுமி ராகவன்
   என். சீதாலட்சுமி
    ரமணிச்சந்திரன்
    காஞ்சனா ஜெயதிலகர்
        புக்ஸ் உள்ளன. அதனை ஈகரை  தமிழ் களஞ்சியத்தில் பதிவேற்றம் செய்வது எப்படி என்று தெரிவிக்கவும். pls

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது தமிழக அரசு பதில் மனு

Posted: 14 Sep 2017 01:12 AM PDT

சென்னை,  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக அரசு பள்ளிக்கூட மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் பணியை தவிர்த்து மற்ற பணிகளை மேற்கொள்வதாகவும், இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தமிழன்பன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த ...

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Posted: 14 Sep 2017 12:54 AM PDT

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

பொன்னியின் செல்வன் முழு புத்தகம் பிடிஎப்

Posted: 13 Sep 2017 09:57 PM PDT

பொன்னியின் செல்வன் முழு புத்தகம் ஓவியங்களுடன் உள்ள பிடிஎப் தேவை. தங்களிடம் இருப்பவர்கள் கொடுத்து உதவுங்கள் லின்க் இருந்தாலும் போதும் தரவிறக்கிக் கொள்கிறேன் நண்பர்களே

நன்றி

போட்டியாளர்கள் தகுதி நீக்கத்தால் அதிரடி சிங்கப்பூர் முதல் பெண் அதிபரானார் ஹலீமா

Posted: 13 Sep 2017 09:21 PM PDT

சிங்கப்பூர்:  சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக ஹலீமா யாகோப்  தேர்வாகியுள்ளார். எதிர்த்து போட்டியிட்டவர்கள் தகுதி   நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஹலீமா யாகோப்புக்கு  இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.  சிங்கப்பூர் அதிபராக இருந்த டோனி டான் பதவிக்காலம்  முடிவடைந்ததை தொடர்ந்து புதிய அதிபரை  தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறும்  என அறிவிக்கப்பட்டிருந்தது.  இங்கு அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்.  சிங்கப்பூரில் அதிபராவது என்பது கெடுபிடிகள் நிறைந்தது   என்ற நிலையில் தற்போது ...

மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து : மாணவர்கள் உள்பட 25 பேர் பலி

Posted: 13 Sep 2017 09:00 PM PDT

கோலாலம்பூர் :  மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில்  ஜாலன் தாடக் கேராமத் என்ற பகுதியில்  தாருல் குரான் இட்டிபாகியா என்ற பெயரில் மத வழிபாட்டு  பள்ளி செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.  இதில் மாணவர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் 23 மாணவர்கள் மற்றும்  2 ஊழியர்கள்  உயிரிழந்தனர்.இன்று அதிகாலை 5.40 மணி அளவில் பற்றிய  தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் முயற்சி செய்து  வருகின்றனர். பலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவனைக்கு  கொண்டு ...

நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு

Posted: 13 Sep 2017 07:41 PM PDT

தாங்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்திக்கு தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு தெரிவித்திருப்பது தமிழ்த்திரையுலகத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருட்டு வீடியோ தொழிலில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு குழுவை அமைத்து கண்காணித்து வந்ததாகத் தெரிகிறது. அந்தக் குழுவினர் tamilgun.com என்ற இணையதள உரிமையாளர் கவுரி சங்கரை தொடர்ந்து 6 மாதங்களாக கண்காணித்து வந்ததோடு, திருட்டு விசிடி தயாரிக்க மாஸ்டர் காப்பியை ...

டெல்லியில் சரளமாக ஆங்கிலம் பேசிய இளைஞர் மீது கும்பல் தாக்குதல்

Posted: 13 Sep 2017 07:29 PM PDT

புதுடெல்லி, டெல்லியில் 5-ஸ்டார் ஓட்டலுக்கு வெளியே நண்பரிடம் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடிய 22 வயது வாலிபரை பிடித்து 5 பேர்கள் கொண்ட கும்பல் தாக்கிஉள்ளது என போலீஸ் தெரிவித்து உள்ளது. இளைஞர் மீது தாக்குதல் நடத்திய கும்பல் குடிபோதையில் இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சனிக்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது, இவ்விவகாரம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் எனவும் போலீஸ் தெரிவித்து உள்ளது. நொய்டாவை சேர்ந்த வருண் கலாதி என்பவர் தன்னுடைய நண்பரை 5 ஸ்டார் ...

ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது

Posted: 13 Sep 2017 07:21 PM PDT

ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்கிறவர்கள் அடையாள அட்டையாக மொபைல் ஆதாரை பயன்படுத்தலாம் என ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்காக ஆதார் அடையாள அட்டையை வழங்குகிற 'யுஐடிஏஐ' அமைப்பு, 'எம்ஆதார்' என்னும் மொபைல் செயலி ஒன்றை உருவாக்கி உள்ளது. பயணிகள் தங்களது செல்போனில், இந்த எம்.ஆதார் செயலிக்கு போய் ஆதார் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதார் அடையாள அட்டை பதிவின்போது தெரிவிக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணில்தான் இந்த ஆதார் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும். ரெயில் ...

சபரிமலை நடை 16-ல் திறப்பு

Posted: 13 Sep 2017 07:14 PM PDT

சபரிமலை, புரட்டாசி மாத பூஜைகளுக்காக பரிமலை நடை 16-ம் தேதி திறக்கிறது. 21 வரை நடை திறந்திருக்கும். 16-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து விளக்கு ஏற்றுவார். தொடர்ந்து ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும். 17-ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்ததும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் காலை 5.30 முதல் 11.30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். உஷபூஜை, உச்சபூஜை, ...

கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட

Posted: 13 Sep 2017 07:07 PM PDT

புதுடில்லி : கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: கர்நாடக இசைக் கலைஞரான, மறைந்த, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள் நுாற்றாண்டு நிறைவு பெறுவதையொட்டி, அவரது நினைவாக, அவர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிடும்படி கோரிக்கை வந்தது. இதையேற்று, சுப்புலட்சுமியின் உருவம் பொறித்த, 10 மற்றும், 100 ரூபாய் நாணயங்களை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு ...

'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'

Posted: 13 Sep 2017 07:04 PM PDT

போபால்: மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இங்கு பள்ளிகளில், மாணவர் வருகையை பதிவேட்டில் குறிக்கும் போது, மாணவர்கள், 'உள்ளேன் ஐயா' என, கூறுவது வழக்கம். இனி, உள்ளேன் ஐயாவுக்கு பதிலாக, 'ஜெய்ஹிந்த்' என, கூறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.வரும், நவ., 1 முதல், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. அதற்கு முன், சத்னா மாவட்டத்தில், அக். 1 முதல் இது சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது.''ஜெய்ஹிந்த் என்று கூறுவதன் மூலம், மாணவர்கள் இடையே ...

மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்

Posted: 13 Sep 2017 07:02 PM PDT

சென்னை: ''நான் மருத்துவம் படித்தது, கருணாநிதி போட்ட பிச்சை என, ஸ்டாலின் கூறியிருப்பது தவறு,'' என, பா.ஜ., மாநில தலைவர், தமிழிசை தெரிவித்துள்ளார். வார்த்தை மோதல்: மருத்துவ சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு தொடர்பாக, தமிழகத்தில், பா.ஜ.,வுக்கும், எதிர் கட்சிகளுக்குமிடையே, வார்த்தை மோதல் வெடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, 'தமிழிசை மருத்துவ படிப்பில் சேர்ந்தது, கருணாநிதி போட்ட பிச்சை' என, ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சிறந்த மாணவி: இதுகுறித்து, தமிழிசை நேற்று, சென்னையில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™