Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


2025க்குள் காசநோயை முழுமையாக ஒழிக்க...தீவிரம்! மத்திய அரசுக்கு உலக சுகாதார மையம் உதவி

Posted: 11 Sep 2017 09:21 AM PDT

மாலே: வரும், 2025க்குள், காசநோயை முழுமையாக ஒழித்துக் கட்டுவதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது; இதற்கு தேவையான உதவிகளை அளிப்பதாக, டபிள்யு.எச்.ஓ., எனப்படும், உலக சுகாதார மையம் உறுதி அளித்துள்ளது.

'தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளில், 2030க்குள், காசநோயை ஒழித்துக் கட்ட வேண்டும்' என, அந்நாடுகளுக்கு, உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது.
28 லட்சம் பேர்
இது குறித்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான, உலக சுகாதார மையத்தின், பிராந்திய இயக்குனர், கேத்ரபால் சிங், மாலத்தீவின், மாலே நகரில் நேற்று கூறியதாவது:தென்கிழக்கு ஆசிய நாடுகளில், காசநோயை ...

'தூய்மை, பெண்களை மதிக்காதவர்கள் வந்தே மாதரம் உச்சரிக்க தகுதியற்றவர்கள்'

Posted: 11 Sep 2017 09:31 AM PDT

புதுடில்லி: ''துாய்மையையும், பெண்களையும் மதிக்காதவர்கள், வந்தே மாதரம் என, உச்சரிக்க தகுதியற்றவர்கள்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சுவாமி விவேகானந்தர், 1893ல், அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய எழுச்சி மிக்க உரையின், 125வது ஆண்டை முன்னிட்டும், பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் நுாற்றாண்டை முன்னிட்டும், மாணவர்கள் இடையே, பிரதமர் மோடி உரையாற்றினார்.
உரிமை கிடையாதுடில்லியில், நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:சமூகத்தில் உள்ள தீமைகளை ஒழிக்க இளைஞர்கள், மாணவர்கள் முன்வர வேண்டும். நாம் அனைவரும்
...

நவோதயா வித்யாலயா பள்ளிகள்; தமிழகத்தில் துவங்க அனுமதி

Posted: 11 Sep 2017 09:37 AM PDT

மதுரை: 'தமிழகத்தில் மாவட்டந் தோறும் நவோதயா வித்யாலயா பள்ளிகளை துவக்க, அனுமதி வழங்குவது குறித்து, தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

குமரி மகாசபா செயலர் ஜெயகுமார் தாமஸ் தாக்கல் செய்த பொதுநல மனு:கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை மத்திய அரசு நடத்துகிறது.
தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டுமே உள்ளன. ஜவஹர் நவோதயா வித்யாலயா என்பது உண்டு, உறைவிடப் பள்ளி.மும்மொழி கொள்கைஆறாவது வகுப்பு முதல், பிளஸ் 2 வரை கற்பிக்கப்படுகிறது. பிராந்திய மொழி, ஆங்கிலம், ஹிந்திக்கு ...

வங்கியில், 'டிபாசிட்' அதிகரிப்பு வருமான வரி துறை கண்காணிப்பு

Posted: 11 Sep 2017 09:59 AM PDT

வங்கியில், ஜூலைக்கு பின், 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் நிரந்தர வைப்பு தொகை வைத்த வாடிக்கையாளர்களை, வருமான வரித் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

பண பரிமாற்ற அறிவிப்புக்கு பின், வரி வருவாயை பெருக்க, வங்கி மற்றும் வருமான வரித் துறை மூலம், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.முதல் கட்டமாக, கறுப்பு பணத்தை வெளி கொண்டு வரும் நோக்கில், ஜூலைக்கு பின், வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களில், 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல், இருப்பு வைத்துள்ளோரின் வருமான விபரம் கண்காணிக்கப்படுகிறது.
வங்கிகளில், நிரந்தர வைப்பு தொகைக்கு, 6 ...

98 எம்.எல்.ஏ.,க்கள் சொத்து குவிப்பு: நேரடி வரிகள் வாரியம் விசாரணை

Posted: 11 Sep 2017 10:06 AM PDT

புதுடில்லி: ஏழு, எம்.பி.,க்கள், 98 எம்.எல்.ஏ.,க்களின் சொத்து மதிப்பு, குறுகிய காலத்தில், பல மடங்கு உயர்ந்துள்ளது குறித்து விசாரிக்கப்படுவதாக, உச்ச நீதிமன்றத்தில், மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

அரசியல் தலைவர்கள், தேர்தலில் வென்ற பின், குறுகிய காலத்தில், அவர்களின் சொத்து மதிப்பு, பல மடங்கு உயர்ந்து வருவது, சந்தேகத்தை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தேர்தலில் பண ஆதிக்கம்
அதில், 'வேட்பாளர் மட்டுமல்லாது, அவரது மனைவி அல்லது கணவர், குழந்தைகள் ஆகியோரின் சொத்து ...

அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு, 'கெடு'

Posted: 11 Sep 2017 10:09 AM PDT

வேலை நிறுத்தம் நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுக்கு, தமிழக அரசு கெடு விதித்துள்ளது,

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், செப்., ௭ முதல், காலவரையற்ற போராட்டம் துவங்கியுள்ளது.
'வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதை மீறி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
தேர்வு பாதிப்பு
அதனால், பள்ளி, ...

'நீட்' தேர்வின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்'

Posted: 11 Sep 2017 10:34 AM PDT

'நீட்' போராட்டத்திற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், 'ஜாக்டோ - ஜியோ' போராட்டம், 'நீட்' தேர்வுக்கு எதிராக சில அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் என, அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தவிர, அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையும், கூடுதல் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.
பல ஆண்டுகளாக,
'நீட்' போராட்டத்தில் இருந்து, மாணவர்களை விலக்கி, அவர்களுக்கு முறையாக
வகுப்புகளை நடத்த, தலைமை ஆசிரியர்கள் வழியே, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'நீட்' போராட்டத்தில் பெரும்பாலும், அரசு பள்ளி ...

ஐகோர்ட் தடை விதிக்க மறுத்ததால் அ.தி.மு.க.,வினர் உற்சாகம்! அறிவித்தபடி இன்று கூடுகிறது பொதுக்குழு கூட்டம்

Posted: 11 Sep 2017 10:50 AM PDT

குழப்பமான அரசியல் சூழ்நிலையில், சென்னையில், இன்று கூடும், அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டதால், அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அறிவித்தபடி இன்று நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க, 95 சதவீத உறுப்பினர்கள், சென்னை வந்துள்ளதால், முதல்வர் தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது. அவர்களின் ஒருமித்த ஆதரவுடன், இன்றைய கூட்டத்தில், 'கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து, சசிகலா அதிரடியாக நீக்கப்படுவார்' என, எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னத்திற்கு உரிமை கோரின.
ஜெ., மறைவுக்கு பின், டிசம்பர், ...

ராஜாவுக்கு பதவி; அரசு ஏற்பாடு: ஸ்டாலின் கண்டனம்

Posted: 11 Sep 2017 11:05 AM PDT

சென்னை, 'பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜாவை, தமிழக சாரண - சாரணியர் இயக்க தலைவராக்க, முதல்வர் பழனிசாமி அரசு கூட்டு சதி செய்கிறது' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை: தமிழக சாரண - சாரணியர் இயக்க தலைவர் பதவியை, ராஜாவிற்கு தாரைவார்க்க, முதல்வர் பழனிசாமியும், அமைச்சர் செங்கோட்டையனும் கூட்டு சதி செய்து வருகின்றனர். நீண்டநாட்களாக, தேர்தல் நடைபெறாமல் இருந்த, சாரண - சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கு, செப்., 16ல், தேர்தல் நடக்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், ...

இணையதள விளையாட்டுகள்: இலவச, 'லேப் - டாப்'களில் தடை?

Posted: 11 Sep 2017 12:19 PM PDT

கணினி விளையாட்டுகளால், மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, அரசு, 'லேப் - டாப்'களில், விளையாட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், பிளஸ் ௨ முடித்ததும், அவர்களுக்கு, இலவச லேப் - டாப் வழங்கப்படுகிறது. அனைத்து வகை, 'சாப்ட்வேர்'களையும் உள்ளீடு செய்து, இதை உடனடியாக பயன்படுத்த முடியும். இந்நிலையில், லேப் - டாப் வாங்கும் மாணவர்கள் பலர், 'வீடியோ கேம்' விளையாடுவதும், இணைய தளங்களில் பொழுதை போக்குவதும் தெரிய வந்துள்ளது. சமீபத்தில், 'ப்ளூ வேல்' இணையதள விளையாட்டால், சில மாணவர்கள் பலியாகினர். ...

கீழடியில் அகழாய்வு தொடர தமிழக அரசு விண்ணப்பம்

Posted: 11 Sep 2017 01:12 PM PDT

மதுரை: 'மதுரை அருகே கீழடி அகழாய்வை தொடர, உரிமம் கோரி தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்தது.
சென்னை வழக்கறிஞர் கனிமொழிமதி தாக்கல் செய்த பொதுநல மனு: சிவகங்கை மாவட்டம் கீழடியில், ஆற்றங்கரை நாகரிகம் பற்றிய தொல்லியல் அகழாய்வு நடக்கிறது. பழங்கால பொருட்களை மத்திய தொல்லியல் துறையினர் சேகரித்துள்ளனர். அவற்றை, பெங்களூரு மியூசியம் எடுத்து செல்ல, மத்திய தொல்லியல் துறைக்கு தடை விதிக்க வேண்டும். கீழடியில் மியூசியம் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கனிமொழி மதி மனு ...

பொதுக்குழு தீர்மானங்கள்: கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்பட்டது

Posted: 11 Sep 2017 02:10 PM PDT

சென்னை: சென்னையில், இன்று நடக்க உள்ள அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. பொதுக்குழுவில் எடுக்கும் முடிவுகள், வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் பழனி சாமி தலைமையிலான அணியும், பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைந்ததை தொடர்ந்து, சென்னையில், இன்று பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
'அ.தி.மு.க., பெயரை பயன்படுத்தக் கூடாது; பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்' எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தினகரன் ஆதரவு ...

வட மாநிலங்களில் தமிழ்நாடு தினம் பிரதமர் மோடி புது யோசனை

Posted: 11 Sep 2017 03:03 PM PDT

"வேற்றுமையில் ஒற்றுமையே நம் சிறப்பு. வட மாநிலங்களில், தமிழ்நாடு தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது," என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அமெரிக்காவின் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றியதன், 125வது ஆண்டு மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு, மாணவர்கள் இடையே, பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். டில்லியில் நடந்த நிகழச்ச்யில், 'வீடியோ கான்பரஸ்' மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக மாணவர்களிடம், தமிழில் வணக்கம் கூறி, அசத்தினார் மோடி.
நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:வேற்றுமையில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™