Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மக்களுக்கு திறந்துவிடப்பட்ட மகிழ்மதி அரண்மனை

Posted:

'பாகுபலி' படம் இந்தியத் திரையுலகில் தனி முத்திரை பதித்த ஒரு படமாக சினிமா வரலாற்றில் இடம் பிடித்துவிட்டது. அந்தப் படத்திற்காக சில பிரம்மாண்டமான அரங்குகள் உருவாக்கப்பட்டன. அவற்றில்தான் மகிழ்மதி அரண்மனை மற்றும் குந்தலதேசம் அரண்மனை ஆகியவை உருவாக்கப்பட்டன. பல கோடி ரூபாய் செலவில் உருவான அந்த அரங்குகள் படம் பார்க்கும் போது வியக்க ...

கோல்டு : 2018 ஆகஸ்ட் 15 ரிலீஸ் உறுதி

Posted:

டாய்லெட் படத்தை தொடர்ந்து அக்ஷ்ய் குமார், தற்போது பேடுமேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ரீமா காக்தி இயக்கத்தில் கோல்டு என்ற படத்தில் நடிக்கிறார்.

1948-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி ஹாக்கி போட்டியில் தங்கம் வென்றது. இதை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ...

திரில்லர் படத்தில் ஊர்வசி ராட்லா

Posted:

சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி படங்களில் நடித்தவர் நடிகை ஊர்வசி ராட்லா. இவர் அடுத்தப்படியாக விஷால் மிஸ்ரா இயக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் படத்தின் கதையும் இவரை சுற்றி தான் நடக்க இருக்கிறது.

இதுகுறித்து இயக்குநர் விஷால் மிஸ்ரா கூறுகையில், சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இயக்க மிகவும் ஆவலுடன் ...

போஸ்டர் பாய்ஸ் முதல்நாள் வசூல் என்ன?

Posted:

ஸ்ரேயாஸ் தல்படே இயக்கத்தில் சன்னி தியோல், பாபி தியோல் மற்றும் இயக்குநர் ஸ்ரேயாஸ் முக்கிய ரோலில் நடித்து நேற்று வெளியான படம் போஸ்டர் பாய்ஸ். காமெடி படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்களை மகிழ்வித்தாலும் வசூல் அவ்வளவு சிறப்பாக இல்லை. சுமார் ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவாகி, 1000 தியேட்டர்களில் வெளிவந்த இப்படம் முதல்நாளில் வெறும் ரூ.1.80 கோடி ...

மம்முட்டி படத்தின் 2-ஆம் பாகத்தில் பிருத்விராஜ்..?

Posted:

'புலி முருகன்' பட இயக்குனரான வைசாக் அடுத்ததாக மம்முட்டி நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். இது ஒன்றும் புதிய படம் அல்ல ஏற்கனவே மம்முட்டியும் பிருத்விராஜும் இணைந்து நடித்த, வைசாக் இயக்கத்தில் வெளியான 'போக்கிரி ராஜா' படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தப்படத்திற்கு 'ராஜா-2' என டைட்டில் வைத்துள்ளார்கள். ...

வில்லனை தள்ளி வைக்க விஷால்-மோகன்லால் வேண்டுகோள்..!

Posted:

ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன் மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் ரிலீஸானது. இயக்குனர் லால் ஜோஸின் டைரக்சனில் மோகன்லால் முதன்முதலாக நடித்துள்ள படம் என்பதால் ரிலீசாவதற்கு முன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், பெரிய அளவில் ரசிகர்களுக்கு திருப்தி தரவில்லை. இந்தநிலையில் பி.உன்னிகிருஷ்ணன் ...

மம்தா இடத்தில் இஷா தல்வார்

Posted:

பிருத்விராஜ் நடித்துள்ள 'ஆடம் ஜான்' படம் சமீபத்தில் ரிலீஸாகி டீசன்டான வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரணம் என்கிற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் பிருத்விராஜ்.. பிருத்விராஜ் - நிவின்பாலி இருவரும் இணைந்து நடித்து, கடந்த 2015ல் வெளியான 'இவிடே' படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்த நிர்மல் சகாதேவ் என்பவர் தான் ...

மீண்டும் காக்கி அணியும் மம்முட்டி

Posted:

பொதுவாக மம்முட்டி தான் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படங்களுக்கு இடையில் சில வருட இடைவெளி விடுவது வழக்கம். ஆனால் கடந்த வருடம் தான், அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த 'கசபா' படம் வெளியான நிலையில், தற்போது உடனடியாக இன்னொரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். 'கசபா' படம் அவருக்கு 'கசப்பான' அனுபவங்களை தந்துவிட்டது தான் இந்த ...

ஒடியனுக்காக 2 பெரிய படங்களை உதறிய பீட்டர் ஹெய்ன்...!

Posted:

மோகன்லாலின் இன்னொரு பரிமாணத்தை வெளிக்கொண்டு வரும் படமாக தற்போது காசி, பனராஸ் பகுதிகளில் உருவாகி வருகிறது ஒடியன். புலி முருகன் படத்தைவிட மிஞ்சும் பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்தப்படத்தை விளம்பரப்பட இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இயக்குகிறார். கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடிக்க, முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். புலி ...

துபாய், புர்ஜ் பார்க்கில் '2.0' இசை வெளியீட்டு விழா

Posted:

லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் பிரம்மாண்டத் தயாரிப்பான '2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் துபாயில் நடைபெறும் என சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. துபாயில் புகழ் பெற்ற பிரம்மாண்டமான கட்டடமான புர்ஜ் கலிபா ...

'ஸ்பைடர்' வெளியீட்டிற்கு மிகப் பெரும் திட்டம்

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற உள்ளது. அடுத்த வாரம் 15ம் தேதி ஐதராபாத்தில் பட வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தமிழ், தெலுங்கில் ஸ்பைடர் படத்தைத் தயாரித்துள்ள இந்தப் படத்தை உலகம் ...

அமெரிக்காவில் விவேகத்தை விட கல்லா கட்டும் 'அர்ஜுன் ரெட்டி'

Posted:

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவந்து தமிழ்நாட்டில் ஓடுகிறதோ இல்லையோ, அமெரிக்காவில் சூப்பர் ஹிட், ஆஸ்திரேலியாவில் பம்பர் ஹிட் என அளந்துவிடுவார்கள். பொதுவாக எந்த பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அமெரிக்காவைப் பொறுத்தவரை வசூல் விவரங்களை ஒரு டாலர் என்றால் கூட அவ்வளவு சரியாகச் சொல்வார்கள்.

ஆனால், ...

விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி

Posted:

நான் படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி, எமன் படம் வரை ஆறு படங்களில் நடித்து விட்டார். அதில், பிச்சைக்காரன் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. தெலுங்கிலும் பிச்சைக்காடு என்ற பெயரில் வெளியாகி அங்கும் அவருக்கு ஒரு பெரிய ஓப்பனிங்கை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்நிலையில், எமன் படத்தை அடுத்து தற்போது அண்ணாதுரை, காளி என்ற இரண்டு படங்களில் ...

திருமணம் முடிந்த கையோடு மலையாள படத்தில் நடிக்கிறார் பிரியாமணி

Posted:

பருத்தி வீரன் பிரியாமணிக்கு தமிழ் சினிமாவில் எதிர்பார்த்தபடி பெரிய இடம் கிடைக்கவில்லை என்றபோதும் தெலுங்கு, மலையாளத்தில் அவர் அதிகமான படங்களில் நடித்தார். சமீபத்தில் மும்பை தொழிலதிபரான தனது நீண்ட நாள் காதலர் முஸ்தபா ராஜூவை பெங்களூரில் பதிவுத்திருமணம் செய்து கொண்டார் பிரியாமணி.

திருமணம் முடிந்து இரண்டு வாரங்களே ஆகியுள்ள ...

விஜய்யின் அப்பா வேடத்தில் வடிவேலு?

Posted:

விஜய் நடித்த பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் வடிவேலு. அந்த வகையில், அவர்கள் நடித்த பிரண்ட்ஸ், காவலன், சச்சின், வில்லு, சுறா, பகவதி, வசீகரா, போக்கிரி, வில்லு என பல படங்களில் அவர்களது காமெடி கூட்டணி பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது. இந்நிலையில், தெறி படத்திலும் காமெடியனாக வடிவேலுவை நடிக்க அழைத்தபோது மறுத்து விட்டார்.

ஆனால் இப்போது ...

எனக்கு அடையாளம் கொடுத்தவர் விஜய் மில்டன்! -சுபிக்ஷா

Posted:

பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் அறிமுகமானவர் சுபிக்ஷா. அதன்பிறகு பல மலையாள படங்களில் நடித்து வந்த அவர், விஜய் மில்டன் இயக்கிய கடுகு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். இப்போது நேத்ரா, சீமத்தண்ணி, கோலிசோடா-2, வேட்டை நாய் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த படங்கள் பற்றி சுபிக்ஷா கூறுகையில், நேத்ரா படத்தில் ...

அஜித்திற்கு ஆபரேஷன் : 3 மாதம் ஓய்வு

Posted:

நடிகர் அஜித்திற்கு தோளில் சிறிய அளவிலான ஆபரேஷன் நடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். சண்டைக்காட்சிகளில் எப்பவும் அதிக ரிஸ்க் எடுத்து நடிக்க கூடியவர். இதனால் அவ்வப்போது உடலில் காயம் ஏற்பட்டு சில ஆபரேஷன்களும் செய்துள்ளார்.

சமீபத்தில் வெளியான விவேகம் படத்தின் ஷூட்டிங்கில் அஜித் நிறைய ரிஸ்க் ...

நீதித்துறையை சரியாக பயன்படுத்துவோம் : கமல்

Posted:

நீதித்துறையை சரியாக பயன்படுத்துவோம் என நடிகர் கமல் டுவிட்டரில் கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகர் கமல் டுவிட்டரில் கருத்து பதிவு வெளியிட்டார். அதில், நீதிமன்றத்தை அவமதிக்க கூடாது, நீதிமன்ற உத்தரவை மீறவும் கூடாது. நீதித்துறையை சரியான நோக்கில் பயன்படுத்துவோம். நம்மால் சரியாக பயன்படுத்த முடியும். அரசியலமைப்புக்குட்பட்டு ...

7 கிலோ எடை குறைத்தார் சோனா

Posted:

தமிழ் சினிமாவில் ஹீரோயின் கனவுடன் நுழைந்து கவர்ச்சி நடிகை ஆனவர் சோனா. பல படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடினார். கனிமொழி என்ற சொந்தப் படத்தை எடுத்து பல கோடிகளை இழந்தார் சோனா. செயற்கை நகை விற்கும் கடை ஆரம்பித்தார். அதுவும் சரியாக நடக்காததால் மூடிவிட்டார். தற்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

உடல் பருமன் பிரச்சினையால் ...

சாய்னாவிடம் பேட்மிண்டன் பயிற்சி பெறும் ஸ்ரத்தா கபூர்

Posted:

உலக புகழ்பெற்ற பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா நெய்வாலின் வாழ்க்கை வரலாறு சாய்னா என்ற பெயரில் ஹிந்தியில் தயாராகிறது. அமோல் குப்தா இயக்குகிறார். இதில் சாய்னாவாக நடிக்கிறார் பிரபல ஹிந்தி நடிகை ஸ்ரத்தா கபூர்.

படத்தில் சாய்னாவாக நடிப்பதற்கு ஏற்ற வகையில் அவரின் அன்றாட நடவடிக்கைகளை அறிந்து கொள்ளவும், அவரது மேனரிசத்தை புரிந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™