Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சதம் அடிக்க வேண்டும் : காஜல் அகர்வால் ஆசை

Posted:

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக இருக்கும் 'விவேகம்' பட நாயகி காஜல் அகர்வால் ஏற்கெனவே 50 படங்களை நடித்து முடித்துவிட்டார். முதலில் கொஞ்சம் குண்டாக இருந்த காஜல் தற்போது உடல் இளைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டார். 30 வயதைக் கடந்தாலும் முன்பு இருந்ததை விட கொஞ்சம் வயது குறைந்தவராகவே தெரிகிறார். சமீபத்தில் அவர் ...

மெர்சல் படத்தை அமெரிக்காவில் வெளியிடும் 2 நிறுவனங்கள்

Posted:

ரஜினி, கமல் படங்களுக்குப் பிறகு வெளிநாடுகளில் பெரிய பிசினஸ் விஜய் நடித்த படங்களுக்குத்தான். அந்தவகையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து, தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் 'மெர்சல்' படத்திற்கும் வெளிநாடுகளிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால், 'மெர்சல்' படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை வாங்குவதில் கடும் ...

'இந்திரசேனா' பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிரஞ்சீவி

Posted:

'எமன்' படத்தைத் தொடர்ந்து தற்போது அண்ணாதுரை, காளி என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. ராதிகா சரத்குமார் தயாரிப்பில் உருவாகும் அண்ணாதுரை படத்தை அறிமுக இயக்குனர் சீனிவாசன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று ...

வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து: கமல் வரவேற்பு

Posted:

சேலம், பெரியார் பல்கலையில், இதழியல் படிக்கும் மாணவி, வளர்மதி; கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டங்களுக்கு ஆதரவாக, துண்டு பிரசுரங்கள் வினியோகித்ததாகவும், போராட்டத்துக்கு துாண்டியதாகவும், வளர்மதியை போலீசார் கைது செய்தனர்.

பின், குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை, சேலம் போலீஸ் கமிஷனர், ஜூலை, 17ல் பிறப்பித்தார். இதனை ...

வியாழக்கிழமை விஷால் படம்

Posted:

'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனமும், 'மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்' நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் 'துப்பறிவாளன்'. மிஷ்கின் இயக்கத்தில் சுமார் 23 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரசன்னா வில்லனாக நடிக்கிறார். மற்றும் வினய்ராய், சிம்ரன், ஆண்ட்ரியா, அனு இமானுவேல், ஜான்விஜய், கே.பாக்யராஜ் என மிகப்பெரிய ...

ஆரவ் மீதான காதலை மறந்தாரா ஓவியா ?

Posted:

'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகப் பெரும் பெயரையும், புகழையும் பெற்றார் நடிகை ஓவியா. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான ஆரவ் மீது அவருக்கு பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போதே காதல் மலர்ந்தது. அந்தக் காதலை அவர் வெளிப்படையாக ஆரவ்விடம் சொன்னார்.

முதலில் காதலிக்க ஆரம்பித்த ஆரவ், ஒரு கட்டத்தில் ஓவியாவிடம் ...

'நெருப்புடா' விக்ரம் பிரபுவின் நம்பிக்கை ?

Posted:

'கும்கி' படத்தில் அறிமுகமான நடிகர் திலகம் குடும்பத்தின் வாரிசு விக்ரம் பிரபு, கடந்த சில படங்களாக வெற்றி கிடைக்காமல் திண்டாடி வருகிறார். அதன் பின் அவர் நடித்து வெளியான 'இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை' ஆகிய படங்கள் கொஞ்சும் சுமாரான வரவேற்பைப் பெற்றன. கடந்த இரண்டு வருடங்களாக விக்ரம் பிரபு நடித்து ...

ஜெயராமை தொடர்ந்து திலீப்பை சந்திக்க ஆரம்பித்த பிரபலங்கள்..!

Posted:

நடிகை விவகாரத்தில் கைதாகி கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக சிறையில் இருக்கிறார் மலையாள நடிகர் திலீப். அவர் சம்பந்தப்பட்டது நடிகை விவகாரம் என்பதாலோ என்னவோ திரையுலகை சேர்ந்த யாரும் இதுவரை அவரை சிறையில் சென்று சந்திததாகவோ, ஆறுதல் கூறியதாகவோ தெரியவில்லை.. அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் கூட சிறைக்கு சென்று அவராய் ...

தனுஷ் பட கேரக்டர்கள் போஸ்டர் வெளியானது

Posted:

மலையாளத்தில் தற்போது உருவாகி வரும் 'தரங்கம்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது மட்டுமல்ல, அதன் வித்தியாசமான உருவாக்கத்திற்காக ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. இப்போது இந்தப்படத்தின் முக்கிய மூன்று கேரக்டர்களின் போஸ்டர்களை தனித்தனியாக வெளியிட்டுள்ளனர். பப்பன்' என்கிற கேரக்டரில் கதாநாயகனாக நடிக்கும் டொவினோ தாமஸ், 'மாலு' ...

நிவின்பாலி படத்தில் 'லைப் ஆப் பை' டீம்

Posted:

தற்போது நிவின் பாலியை கதாநாயகனாக வைத்து 'மூத்தோன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார் நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ். கிட்டத்தட்ட மொட்டை தலையுடன், பரட்டை தாடியும், மீசையுமாக, மூக்கில் 'புல்லாக்கு' குத்திக்கொண்டு பார்க்கவே வித்தியாசமான கெட்டப்பில் காட்சி தருகிறார் நிவின்பாலி.

இந்தக்கதை சிறுவயதிலேயே காணாமல் போன தனது ...

கார்கில் போர் வீரராக சித்தார்த் மல்கோத்ரா

Posted:

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரின் போது இந்தியாவை சேர்ந்த கேப்டன் விக்ரம் பத்ரா, தன் தாய் நாட்டிற்காக வீர மரணம் அடைந்தார். இவரது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க பாலிவுட்டில் எடுக்க உள்ளனர். இதில் விக்ரம் பத்ரா ரோலில் சித்தார்த் மல்கோத்ராவை நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நிஜமான ராணுவ வீரரின் வாழ்க்கை படத்தில் ...

அக்.,6-ல் மோதும் இரண்டு கிளாமர் குயின்கள்

Posted:

அனந்த் மகாதேவன் இயக்கத்தில் ஜரீன் கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் அக்சர் 2. இதேப்போன்று தீபக் சிவதாசினி இயக்கத்தில், லட்சுமி ராய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜூலி-2. இந்த இரண்டு படங்களுமே ஒரு திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. அதோடு இரண்டு படத்திலும் நடித்துள்ள ஹீரோயின்களும் கிளாமரில் வெளுத்து வாங்கியுள்ளனர். இரண்டு பேரும் ...

பரிணிதியுடன் நடிக்க பயப்படும் அர்ஜூன் கபூர்

Posted:

அர்ஜூன் கபூரும், பரிணிதி சோப்ராவும், ஏற்கனவே இஷாக்ஜாதே என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் திபாகர் பானர்ஜி இயக்கும் சந்தீப் அவுர் பிங்கி பரார் என்ற படத்தில் இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. இதுகுறித்து அர்ஜூன் கபூரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது...

பரிணிதி சோப்ராவுடன் மீண்டும் இணைந்து ...

கேதர்நாத் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Posted:

2013ம் ஆண்டு உத்தர்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேதர்நாத் கோவில் உட்பட பல சேதங்கள் ஏற்பட்டன. 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினார். ஆயிரக்கணக்கான பேர் வீடுகளை இழந்தனர். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து அபிஷேக் கபூர், "கேதர்நாத்" என்ற படத்தை இயக்குகிறார். சுசாந்த் சிங் ராஜ்புட் ஹீரோவாக நடிக்க, சைப் அலிகானின் ...

ஆசிரியர் தினம் : கமல் வாழ்த்து

Posted:

டுவிட்டரில் ஆக்ட்டீவ்வாக இருக்கும் நடிகர் கமல்ஹாசன், அவ்வப்போது அரசியல் உள்ளிட்ட பல விஷயங்களையும் தைரியமாக பதிவிட்டு வருகிறார். சமீபத்திய அவருடைய பதிவுகள் எல்லாம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த அரசு ஊழல் அரசு என தொடர்ந்து அரசுக்கு எதிராக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். ...

ஜூலி 2 போஸ்டர் : தணிக்கை அதிகாரி மீது மெட்ரோ இயக்குநர் பாய்ச்சல்

Posted:

அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் உள்ளிட்டோரது நடிப்பில் வெளியான மெட்ரோ திரைப்படம், கடுமையான தணிக்கைப் பிரச்சினையில் சிக்கியது. நகரில் நடக்கும் செயின் பறிப்பு கொள்ளையர்களை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்திற்கு கடும் போராட்டத்திற்கு பிறகு தணிக்கை குழுவில் ஏ சான்று கிடைத்தது. படத்திற்கு தியேட்டரில் ...

பெப்சி ஸ்டிரைக் இரண்டு நாளில் முடிவுக்கு வரும் : ஆர்கே செல்வமணி

Posted:

பெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வரும் என்று ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். அதோடு, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டமும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பெப்சி தொழிலாளர்களுக்கு மாற்றாக புதிய பணியாளர்களை தயாரிப்பாளர் சங்கம் தேர்வு செய்து ...

ராஜமவுலியை கவர்ந்த அனிருத்தின் இசை

Posted:

தனுஷின் 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், அந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் பிரபலமானார். அதையடுத்து தொடர்ச்சியாக ஹிட் பாடல்களை கொடுத்து தற்போது விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.

இந்தநிலையில், தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் ...

தெலுங்கு கற்கும் ஸ்ரத்தா கபூர்

Posted:

ஹிந்தியில் பல படங்களில் நடித்தவர் ஸ்ரத்தா கபூர். இவர் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 10-ந்தேதி முதல் தொடங்குகிறது. இப்படத்தில் ஸ்ரத்தா கபூருக்கு முக்கியமான வேடம்.

ஸ்ரத்தா கபூருக்கு ஓரிரு தெலுங்கு வார்த்தைகள்கூட பேசத் தெரியாது. அதனால் என்னதான் அவருக்கு ...

மகேஷ்பாபுவுடன் மீண்டும் இலியானா ஜோடி சேருகிறாரா?

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில் நடித்துள்ள மகேஷ்பாபு, அதையடுத்து கொரட்டல்ல சிவா இயக்கத்தில் பாரத் அனி நேனு என்ற அரசியல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், அர்ஜூன் ஆகிய இருவரும் முக்கிய அரசியல் தலைவர்களாக நடிக்கிறார்கள். இப்படம் 2018-ம் ஆண்டு ஜனவரி சங்கராந்திக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™