Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரஷ்யா, செக் குடியரசில் வெளியாகும் ஸ்ரீதேவியின் மாம்

Posted:

சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றதோடு, பாராட்டையும் பெற்ற படம் "மாம்". படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் ஸ்ரீதேவியின் நடிப்பை பார்த்து, தற்போது வெளிநாடுகளில் மாம் படத்தை ரிலீஸ் செய்ய வேலைகள் நடந்து வருகின்றன.

முதற்கட்டமாக ரஷ்யாவில் 21 தியேட்டர்களிலும், போலாந்தில் 9 தியேட்டர்களிலும், செக் ...

நிகில் அத்வானி படத்தில் அர்ஜூன் கபூர்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகரான அர்ஜூன் கபூர், தற்போது கைவசம் சில படங்களை வைத்துள்ளார். அடுத்தப்படியாக தயாரிப்பாளர் நிகில் அத்வானி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அர்ஜூன் ஜோடியாக பரிணி சோப்ரா நடிக்கிறார். இளைஞர்களை கவரும் விதத்தில் இப்படம் உருவாக உள்ளது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. சவுரவ் சுக்லா ...

ஹாலிவுட் படத்தில் விஞ்ஞானியாக ராணா

Posted:

பாகுபலி-2 படத்தை அடுத்து நேனே ராஜூ நேனே மந்திரி படத்தில் அரசியல் கதையில் நடித்த ராணா, அடுத்தபடியாக ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். 1888-ம் ஆண்டு செளராஷ்டிராவில் இருந்து புறப்பட்டுச்சென்ற விஜில் என்ற கப்பல் 700 பணிகளுடன் காணாமல் போன ஒரு கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. இந்த படத்திற்கு "விஜில் மிஸ்டிரி ஆப் தி பேண்டம் ஷிப்" ...

செப்டம்பர் 25 முதல் 'சாமி-2' படப்பிடிப்பு

Posted:

ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் விக்ரம். அதனால் அவருக்கு ஏராளமான இழப்புகள். திட்டமிட்டபடி படங்கள் முடியாமல் இழுத்துக் கொண்டபோகும் சூழல் அடிக்கடி ஏற்பட்டதால் புதிய படங்களை கமிட் பண்ண முடியாமல் அவதிப்பட்டார். இது தொடர்கதையாகிப்போனதால் தற்போது தன் கொள்கையை மாற்றிக் கொண்டார் ...

ஸ்பைடர் படத்திற்காக தமிழ்பேசும் மகேஷ்பாபு

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் நடிக்கும் படம் 'ஸ்பைடர்' இம்மாதம் 27-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. தெலுங்கில் தயாரிக்கப்பட்ட ஸ்பைடர் படத்தை தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளனர். ஸ்பைடர் தெலுங்குப் படத்தை சில தினங்களுக்கு முன் சென்சாருக்கு ...

மகளிர் மட்டும் : ராஜூ முருகன் பாராட்டு

Posted:

சூர்யா தயாரிப்பில், குற்றம் கடிதல் பிரம்மா இயக்கத்தில், ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன், நாசர் நடிப்பில், கடந்த வாரம் வெளியான படம் 'மகளிர் மட்டும்'. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த '36 வயதினிலே' படத்தைப் போலவே இந்த படமும் பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறது. எனவே பெண்கள் மத்தியில் மட்டுமே நல்ல ...

இமைக்கா நொடிகள் டப்பிங் தொடங்கியது

Posted:

'டிமாண்டி காலனி' படத்தை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான இவரது இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் 'இமைக்கா நொடிகள்'. இதில் அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க, புலனாய் அதிகாரியாக நடிக்கிறார் நயன்தாரா.

பாலிவுட் பிரபலம் அனுராக் காஷ்யாப் வில்லனாக நடிக்கிறார். ஒரு கெஸ்ட் ரோலில் விஜய் ...

மீண்டுமொரு காமெடி படத்தில் அஜய்

Posted:

அஜய் தேவ்கன், ஆக்ஷ்ன், காமெடி என இரண்டு வேடங்களிலும் நடித்து அசத்துபவர். சில மாதங்களுக்கு முன்னர் இவர் லவ் ரஞ்சன் தயாரிப்பில் ஒரு காமெடி படத்தில் நடிக்க போவதாக செய்தி வெளியான நிலையில் இப்போது அது உறுதியாகியிருக்கிறது. இப்படத்தை அக்வி அலி இயக்க உள்ளார். அஜய் உடன் தபு மற்றும் இளம் நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். இன்னும் படத்திற்கு ...

செப்., 22-ல் கோல்மால் அகைன் டிரைலர்

Posted:

ரோகித் ஷெட்டி இயக்கத்தில், அஜய் தேவ்கன், அர்ஷத் வர்சி, குணால் கேமு, துஷார் கபூர், ஸ்ரேயாஸ் தல்படே, நீல் நிதின் முகேஷ், தபு, பரிணிதி சோப்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் கோல்மால் அகைன். கோல்மால் படங்களின் நான்காம் பாகமாக இது உருவாகி வருகிறது. முந்தைய படங்களை போன்று முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி ...

இந்தவாரம் 11 படங்கள் ரிலீஸ் : தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதா.?

Posted:

தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே படங்களின் ரிலீஸ் எண்ணிக்கை 200-ஐ தாண்டி போய் கொண்டிருக்கின்றன. வாரம் வாரம் 4 படங்களுக்கு குறைவில்லாமல் ரிலீஸாகின்றன. அத்திபூத்தாற் போல் எப்போதாவது ஒரு படம், இரண்டு படங்கள் ரிலீஸாகின்றன.

அந்தவகையில் இந்தவாரம் செப்., 22-ம் தேதி வெள்ளிக்கிழமை, ஒன்றல்ல, இரண்டல்ல... "ஆயிரத்தில் இருவா், நெறி, ...

தேவி 2-க்காக பிரபுதேவா - விஜய் மீண்டும் கூட்டணி?

Posted:

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிக்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் 'தேவி'. ஹாரர் படமான தேவி படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து ஜெயம்ரவியை வைத்து 'வனமகன்' படத்தை இயக்கினார் ஏ.ஏல்.விஜய்.

வனமகன் படத்தை அடுத்து இப்போது சாய் பல்லவி நடிப்பில் 'கரு' என்ற படத்தை இயக்கி வருகிறார் ...

எடிட்டிங்கில் வேலைக்காரன்

Posted:

சிவகார்த்திகேயனின் '24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படம் விநாயக சதுர்த்திக்கு ரிலீஸாக இருந்தது. அந்த தேதியில் விவேகம் ரிலீஸ் ஆனதால், வேலைக்காரன் ரிலீஸை ஆயுதபூஜை விடுமுறையையொட்டி இம்மாதம் 29-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ஆயுதபூஜைக்கும் அரை டஜன் படங்கள் வெளிவரவிருப்பதால் தீபாவளிக்கு ...

மம்முட்டி படத்தை இயக்கும் சந்தோஷ் சிவன்

Posted:

இந்தியாவின் மோஸ்ட் வான்டட் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் தான் சந்தோஷ் சிவன்.. பொதுவாக இங்கே பலருக்கும் சந்தோஷ் சிவனை ஒரு மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக மட்டுமே தெரியும். ஆனால் அவர் ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, ஒரு நடிகராக என பல தளங்களில் இயங்கி வருபவர் என பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவையெல்லாம் மலையாளத்தில் தான். ...

ரசிகர்களை உருக்கும் விதமாக தயாரான திலீப் பட போஸ்டர்

Posted:

மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு நான்காவது முறையாகவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இந்தமுறை எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில், திலீப் நடிப்பில் உருவாகி, கடந்த சில மாதங்களாக ரிலீசாக காத்துக் கொண்டிருக்கும் அவரது 'ராம்லீலா' படத்தை வரும் செப்-28ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்தார்கள்.

முதலில் தியேட்டர் ...

ஷாலினி பாண்டேவின் மொழிப்பாசம்

Posted:

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் தான் அர்ஜுன் ரெட்டி.. இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஷாலினி பாண்டேயும் தற்போது லைம்லைட்டுக்குள் வந்துள்ளார். மத்தியபிரதேசம் ஜபல்பூரை சேர்ந்த இவர், அர்ஜுன் ரெட்டி படத்திற்காக தெலுங்கு மொழியை கற்றுக்கொண்டு தானே சொந்தமாக டப்பிங் பேசி ஆச்சர்யப்படுத்தினார். அடுத்து ...

பிளாஷ்பேக் : அப்பாவின் ஆசையை இப்படித்தான் நிறைவேற்றினார் சுரேஷ்கோபி..!

Posted:

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் மாதிரி சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக மலையாள சினிமாவில் சாசனம் எழுதிக் கொடுத்தது போல போலீஸ் அதிகாரி கேரக்டர்களை குத்தகைக்கு எடுத்திருந்தவர் சுரேஷ்கோபி மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் நான்கு வருடத்திற்கு ஒருமுறை போலீஸ் கேரக்டரில் நடித்தால் இவர் வருடத்திற்கு நான்கு போலீஸ் படங்களில் நடித்தார். ...

என்னை காமெடியனாக்குகிறார்கள் : நாசர்

Posted:

தமிழ் சினிமாவில் கேரக்டர் நடிகராக என்ட்ரி கொடுத்து பின்னர் அவதாரம் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்தவர் நாசர். பல படங்களில் அதிரடி வில்லனாகவும் நடித்திருக்கிறார். ஆனால் சமீபகாலமாக அவரை குணசித்ர நடிகராக்கிவிட்ட இயக்குனர்கள், சில படங்களில் காமெடியனாகவும் மாற்றி வருகிறார்கள்.

இதுபற்றி நாசர் கூறுகையில், இதுவரை நான் ...

ஸ்பைடர் தெலுங்கு பதிப்பிற்கு யு/ஏ சான்று

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல்பிரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்துள்ள படம் ஸ்பைடர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மகேஷ்பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப்படம் என்பதால், இந்த படத்தின் ஆடியோ விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் சென்னையிலுள்ள மகேஷ்பாபுவின் ரசிகர்கள் ...

மகிமா நம்பியாரை நெகிழவைத்த மதுரைக்காரர்கள்

Posted:

சாட்டை படத்தில் நாயகியாக நடித்தவர் மலையாள நடிகை மகிமா நம்பியார். அதையடுத்து சில படங்களில் நடித்தவர், அறிவழகன் இயக்கிய குற்றம் -23 படத்தில் நடித்து கவனிக்கப்படும் நடிகையானவர், தற்போது சசிகுமாருடன் கொடிவீரன், ஜி.வி.பிரகாசுடன் அய்யங்கரன், அருள்நிதியுடன் இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் சசிகுமாரின் ...

விஜய்யுடன் நடனமாடுவது கஷ்டம் : காஜல்அகர்வால்

Posted:

விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து தற்போது மெர்சல் படத்தில் நடித்துள்ளார் காஜல் அகர்வால். முந்தைய படங்களைப்போன்றே விஜய் - காஜல் அகர்வாலுக்கு சில ரொமான்ஸ் காட்சிகள் உள்ளதாம். அதோடு, அவர்கள் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் இளசுகள் விரும்பும் வகையில் இளமை துள்ளலுடன் படமாக்கப்பட்டிருக்கிறதாம்.

ஒரு பேட்டியில், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™