Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா ஷங்கர்?

Posted:

சத்யஜோதி தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'விவேகம்'. மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான விவேகம் படம், எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமையவில்லை.

விவேகம் படம் வெளியாவதற்கு முன்புவரை அஜித்தின் அடுத்த படத்தை சிவா இயக்குவதாக சொல்லப்பட்டது. அதாவது, 'விவேகம்' படத்தை தொடர்ந்து, ...

ஆசிஷ் வித்யார்த்தியின் புதிய அவதாரம்

Posted:

டைரக்டர் தரணியால் 'தில்' படத்தில் என்கவுன்டர் சங்கராக அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் தான் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. 2000-ஆம் வருட ஆரம்பத்தில் இருந்து பல வருடங்கள் தமிழ் சினிமாவில் மிரட்டல் வில்லனாக வலம் வந்த இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தமிழில் வெளியான என்னை அறிந்தால், அநேகன் ஆகிய ...

திலீப்பின் நண்பரை காட்டிக்கொடுத்த மொபைல் டவர்

Posted:

கேரளாவில் நடிகை கடத்தல் விவகாரத்தில் முதல் குற்றவாளியாக போலீசிடம் சிக்கிய பல்சர் சுனில், தினசரி ஏதோ ஒரு விவகாரமான செய்தியை கொளுத்திப்போட்டு வருகிறார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவனை மேடம் என குறிப்பிட்டு போலீசாரின் பார்வையை அவர் ...

மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த காலா

Posted:

தமிழ்த்திரையுலகில் கடந்த சில நாட்களாக நடந்து வந்த பெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படங்களின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. அவற்றில் முக்கியமான படம் ரஜினி நடிக்கும் 'காலா'.

தனுஷின் 'வுண்டர் பார் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் ...

பின்வாங்கிய சிவகார்த்திகேயன்... முன்னேறிய விஜய்சேதுபதி

Posted:

'ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ்' நிறுவனம் சார்பில் ஏம்.எம்.ரத்னம் தயாரிக்க, 'ரேனிகுண்டா' படத்தை இயக்கிய பன்னீர்செல்வம் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்துள்ள படம் 'கருப்பன்'. ஆயுதபூஜை விடுமுறையையொட்டி வருகிற 29-ஆம் தேதி இந்த படம் ரிலீசாகிறது.

'கருப்பன்' படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் அனைவரும் பார்க்கக் கூடிய படமாக 'U' ...

மா.கா.பா.வுக்கு விஷால் கொடுத்த உற்சாகம்

Posted:

சந்தானம், சிவகார்த்திகேயன், வரிசையில் விஜய் டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் மா.கா.பா. ஆனந்த். நாளைய இயக்குனர் சீஸன் 5-ன் வெற்றியாளர் மார்டின் இயக்கத்தில் மா.கா.பா. ஆனந்த் நடித்திருக்கும் படம் 'மாணிக்'.

மா.கா.பா.ஆனந்துக்கு ஜோடியாக சூசா குமார் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில், இரண்டாவது கதாநாயகனாக வத்சன் ...

'ஒரு பக்கக் கதை' படத்திற்கு சென்சார் கிடைத்தது

Posted:

தமிழ், மலையாள நடிகரான ஜெயராமின் மகன் காளிதாஸ் முதன் முதலாக நடிக்க வந்த படம் 'ஒரு பக்கக் கதை'. மூன்று வருடங்களுக்கு முன்பு 2014ம் ஆண்டு இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார். விஜய் சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கும் இரண்டாவது படமாக ஆரம்பமானது. புதுமுக நடிகை மேகா ஆகாஷ் ...

பரபரப்பில்லாமல் வெளியாகும் 'மகளிர் மட்டும்'

Posted:

தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக இருந்த ஜோதிகா, சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு நடிப்பதிலிருந்து விலகினார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகு அவர்கள் ஓரளவிற்கு வளர்ந்ததும் மீண்டும் நடிக்கும் ஆசை அவருக்கு வந்தது.

மலையளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'ஹௌ ஓல்ட் ஆர் யு' படத்தின் தமிழ் ரீமேக்கான '36 ...

தீரன் அதிகாரம் ஒன்று படப்பிடிப்பு முடிவடைந்தது

Posted:

சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய வினோத், தற்போது கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கியுள்ளார். நாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ள இந்த படத்தற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தோழா படத்திற்கு பிறகு தெலுங்கிலும் கார்த்தியின் மார்க்கெட் எகிறியிருப்பதால் தெலுங்கில் இப்படம் காக்கி என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. ...

விக்ரம்பிரபுவின் பக்கா படத்தில் கரகாட்டப் பாடல்

Posted:

நெருப்புடா படத்தை அடுத்து விக்ரம் பிரபு நாயகனாக நடித்து வரும் படம் பக்கா. எஸ்.எஸ்.சூர்யா என்பவர் இயக்கும் இந்தபடத்தில் நிக்கி கல்ராணி, பிந்து மாதவி, சூரி, ஆனந்தராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சி.சத்யா இசையமைக்கிறார். கிராமத்து கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் கோயில் திருவிழாவில் நடக்கும் கரகாட்ட பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளதாம். ...

சண்டை காட்சியுடன் பிரபாஸின் படப்பிடிப்பு தொடங்கியது

Posted:

பாகுபலி-2 படத்தை அடுத்து பிரபாஸ் நாயகனாக நடிக்கும் படம் சாஹோ. சுஜீத் இயக்கும் இந்த படத்தில் அவருடன் ஸ்ரத்தா கபூர், மந்த்ரா பேடி, நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் உள்பட பல ஹிந்தி நடிகர், நடிகைகளும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்காக செட் போடும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அமீர் பேட்டை பகுதியில் ...

தமிழில் வேகமாக வளரும் பகத்பாசில்

Posted:

பிரபல மலையாளப்பட டைரக்டர் பாசிலின் மகன் பகத்பாசில். மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர். குறிப்பாக, ஹீரோ என்கிற இமேஜிற்குள் சிக்காமல் யதார்த்தமான கதையின் நாயகனாக நடித்து வருகிறார். தமிழில் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு ...

சுமூக தீர்வு, படப்பிடிப்புகள் ஆரம்பம் : ஆர்கே செல்வமணி

Posted:

பில்லா பாண்டி படப்பிடிப்பில் ஆரம்பமான பெப்சி - தயாரிப்பாளர்கள் சங்கம் இடையேயான பிரச்னை, மெல்ல மெல் பெரிதாகி, தயாரிப்பாளர்கள் சங்கம் தனியாக புதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்கவும், பெப்சி அல்லாத தொழிலாளர்களுடன் பணியாற்றும் முடிவு என்ற அளவுக்கு சென்றது. இதனால் கோபாமான பெப்சி கடந்த 12 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ...

நெடுநல்வாடை இசை வெளியீட்டு விழாவில் புதுமை

Posted:

தமிழ் சினிமாவில் முதன்முறையாக, 50 நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் படம் நெடுநல்வாடை. "நெடுநல்வாடை" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை, வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழா வழக்கமாக நடைபெறும் சினிமா விழாக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் என்று யாரும் இல்லாமல் புதுவிதமாக ...

லட்சுமி ராயின் ஜூலி-2 படத்திற்கு ஏ சான்று : நோ கட்

Posted:

தென்னிந்திய படங்களில் பிரபலமாக இருந்த நடிகை லட்சுமி ராய், பாலிவுட்டில் ஜூலி 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் லட்சுமி ராய் மிகவும் கவர்ச்சியாக பிகினி உடையெல்லாம் அணிந்து நடித்திருக்கிறார். ஜூலி 2 படத்தின் போஸ்டர்கள், டீசர்கள் எல்லாம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த ...

அனில் கபூரின் பாடகர் அவதாரம்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர் அனில் கபூர். 40 ஆண்டுகளாக சினிமாவில் வலம் வரும் இவர், நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இப்போது புதிதாக பாடகராகவும் அவதரித்திருக்கிறார். அதுல் மஞ்ச்ரேக்கர் இயக்கத்தில் பேனி கான் என்ற படம் உருவாக உள்ளது. இதில் அனில் கபூரும், ஐஸ்வர்யா ராய்யும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர். இதில் தான் ...

எவ்வளவு நேரம் வருகிறோம் என்பது முக்கியமல்ல : டயானா பென்டி

Posted:

ரஞ்சித் திவாரி இயக்கத்தில், பர்கான் அக்தர் நடிப்பில் உருவாகியுள்ள படம் லக்னோ சென்ட்ரல். சிறையில் உள்ள 5 கைதிகளை சுற்றி நடக்கும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை டயானா பென்டியும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த டயானா, லக்னோ சென்ட்ரல் பற்றி பேசுகையில், "லக்னோ சென்ட்ரல் ...

ஜூட்வா 2 படத்துடன் கோல்மால் அகைன் டிரைலர்

Posted:

கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமாக கோல்மால் அகைன் உருவாகி வருகிறது. அஜய் தேவ்கன், பரிணிதி சோப்ரா, தபு, அர்ஷத் வர்சி, துஷார் கபூர், குணால் கேமு உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை ரோகித் ஷெட்டி இயக்குகிறார். முந்தைய பாகங்களை போன்று இப்படமும் பக்கா காமெடி படமாக உருவாகி வருகிறது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் ...

கம்யூனிஸ்ட் கருத்தரங்கில் பங்கேற்கவில்லை : கமல்

Posted:

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வருகிற 16ம் தேதி, கம்யூனிஸ்ட் கருத்தரங்கு நடக்கிறது. இதில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்களும், கேரள மாநில கம்யூனிஸ்ட் நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். இதில் நடிகர் கமல்ஹாசனும் பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் இந்த செய்தியை கமல் ...

அக்டோபரில் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் கமல்ஹாசன் ?

Posted:

தமிழக அரசியலில் களமிறங்கும் மற்றுமொரு நடிகர் என்ற பெருமை கமல்ஹாசனுக்கு விரைவில் கிடைக்கலாம். வரும் அக்டோபர் மாதம் அவருடைய கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தற்போது தகவல் பரவி வருகிறது. இருந்தாலும் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை டுவிட்டரில் எப்போதே ஆரம்பித்துவிட்டேன் என்று கமல்ஹாசன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அவர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™