Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ராகுலுக்கு பாதுகாப்பு குறைவா? : அமைச்சர் ராஜ்நாத் பதிலடி

Posted: 08 Aug 2017 07:46 AM PDT

புதுடில்லி: ''காங்., துணைத் தலைவர் ராகுல், வெளிநாடு சென்ற போது, அவருக்கு அளிக்கப் பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு வசதியை பயன் படுத்தவில்லை; அதற்கான காரணத்தை, நாட்டு மக்களுக்கும், எம்.பி.,க்களுக்கும், அவர் விளக்க வேண்டும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

குஜராத்தில், பா.ஜ.,வைசேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். காங்., துணைத் தலைவர் ராகுல், சமீபத்தில் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது, அவர் பயணித்த கார் மீது, கல் வீச பட்டது. இது தொடர்பாக, கல்வீச்சில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்துள்ளனர்.இந் நிலையில், குஜராத்மாநிலத்தில், ...

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து செல்லுமா?

Posted: 08 Aug 2017 07:48 AM PDT

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து செல்லுமா என்பது குறித்த வழக்கில், நான்கு வாரங்களுக் குள் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம், 370வது பிரிவின் கீழ், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டதை எதிர்த்து, குமாரி விஜயலட்சுமி ஜா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ...

ஜெ., அரசுக்கு சிக்கல் ஏற்படுத்தாதீர்! : பன்னீருக்கு ஜெயகுமார் வேண்டுகோள்

Posted: 08 Aug 2017 09:11 AM PDT

சென்னை: ''ஜெ., அரசு மற்றும் கட்சியை, பிறர் எள்ளி நகையாடக் கூடிய வாய்ப்பை, பன்னீர் அணி ஏற்படுத்தி விடக்கூடாது,'' என, அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னையில் அவர் கூறியதாவது: தற்போது, ஜெ., அரசு சிறப்பான செயல்பட்டு வருகிறது. பல்வேறு இடையூறுகள் வந்த போதிலும், முதல்வர் பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி செல்கிறார். நெஞ்சில் குத்துவோர், மார்பிலே எகுத்துவோரை எல்லாம் தாண்டி, வரும், 15ம் தேதி, அவர் கோட்டை யில் கொடியேற்றுகிறார்.இந்த ஆண்டு மட்டுமல்ல; வரும் ஆண்டுகளிலும், ஜெ., அரசு தான் கொடியேற்றும். அ.தி.மு.க.,ஆட்சி, இமயமலை போன்ற இரும்பு கோட்டை; மண் சட்டி ...

'சி.பி.எஸ்.இ., பாடத்தை தமிழக பாடத்திட்டம் மிஞ்சும்'

Posted: 08 Aug 2017 09:13 AM PDT

சென்னை: ''சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில், தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டம் தயாரிக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில், தமிழக அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை மற்றும், 'சென்னை - 2000 பிளஸ்' ஆகி யவை இணைந்து, சென்னையின் வரலாறு மற்றும் தொல்லியல் குறித்த, தொடர் சொற் பொழிவு, நேற்று துவங்கியது. இதை துவக்கி வைத்து, பள்ளிக் கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:ஒரு அரசு துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, தமிழக பள்ளிக் கல்வி துறை ...

வெவ்வேறு அளவுகளில் 500 ரூபாய் நோட்டு அச்சிடப்பட்டதாக சர்ச்சை!

Posted: 08 Aug 2017 09:50 AM PDT

புதுடில்லி:'இரண்டு, வெவ்வேறு அளவுகளில், 500 ரூபாய் நோட்டு, வெளியிடப் பட்டுள்ளது; இது, இந்த நுாற்றாண்டின் மிகப்பெரிய ஊழல்' என்று குற்றஞ்சாட்டி, ராஜ்யசபாவில் நேற்று, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர்; இதனால், சபை நடவடிக்கைகள், பல முறை ஒத்தி வைக்கப் பட்டன.

ராஜ்யசபாவில் நேற்று, காங்., உறுப்பினர், கபில் சிபல் பேசுகையில், ''மத்திய அரசு, இரண்டு, வெவ்வேறு அளவு களில், 500 ரூபாய் நோட்டு களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, சபையில் ஒழுங்கு பிரச்னை கொண்டு வரப்பட வேண்டும்,'' என, அவர் வலியுறுத்தினார்.காங்கிரசை் சேர்ந்த மற்ற ...

தி.மு.க., முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன்...கைது!

Posted: 08 Aug 2017 10:44 AM PDT

தி.மு.க., முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி யின் மகன், அன்பழகன், 80 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி வழக்கில், கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், போலி நிறுவனங்கள் துவக்கி, வெளி நாடுகளில் இருந்து, எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி செய்ததாக கணக்கு காட்டி, மோசடி யில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. இவரை தொடர்ந்து, மேலும், சில முக்கிய புள்ளிகளும் சிக்கலாம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.மத்திய அரசு, 2016 நவம்பர், 8ல்,1,000 மற்றும், 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என, அறிவித்தது. அப்போது, கறுப்பு பணம் பதுக்கி வைத்திருந்த பண முதலைகள், பல தில்லு முல்லு வேலைகளில் ஈடுபட்டனர்; தங்களிட ...

ரஜினி, பன்னீருடன் தேர்தல் கூட்டணி : பா.ஜ., தலைவர் அமித் ஷா புதுக்கணக்கு

Posted: 08 Aug 2017 10:49 AM PDT

நடிகர் ரஜினி மற்றும் பன்னீர்செல்வம் அணியுடன் புதுக்கூட்டணியை உருவாக்கி அடுத்த சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டுள்ள தாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறிய தாவது: ரஜினியின் புதுக்கட்சிக்கான, சட்ட விதி களை தயாரிக்கும் பணிகளில் டில்லியில் பா.ஜ., மேலிடம் ஈடுபட்டுள்ளது. அவரது கட்சியின் கொடியும் சின்னமும் தயாராகி விட்டது; பெயர் மட்டும் இன்னும் முடிவாக வில்லை. மூன்று நாள் பயணமாக வரும் 22ம் தேதி தமிழ கம் வரும் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, நடிகர் ரஜினியை சந்தித்துப் பேச திட்ட ...

அயோத்தி வழக்கில் திடீர் திருப்பம்

Posted: 08 Aug 2017 10:54 AM PDT

புதுடில்லி: 'அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு சற்று தொலைவில் மசூதியை கட்டலாம்' என ஷியா முஸ்லிம் வாரியம், உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதி மன்றத்தில் நடந்து வருகின்றன. 'ஏழு ஆண்டு களாக நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கோரிக்கை வைத்தார். இதையடுத்து 'வரும் 11ம் தேதி ...

'பார்ட் டைம்' அமைச்சராக செயல்படும் விஜயபாஸ்கர்

Posted: 08 Aug 2017 11:24 AM PDT

சென்னை:அமைச்சர் விஜயபாஸ்கரால் சுகாதார துறையை முழுநேரப் பணியாக கவனிக்க முடியவில்லை. அவர், பகுதி நேர அமைச்சராக செயல்படுகிறார்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில்,'டெங்கு' பாதிப்பு அதிகமாக உள்ளதை,சுகாதாரதுறை செயலர், ராதாகிருஷ்ணன் பகிரங்கமாகஒப்புக் கொண்டிருக்கிறார். 'தமிழகத் தில், டெங்கு கட்டுப் பாட்டில் உள்ளது; யாரும் பீதியடைய வேண்டியதில்லை' என, சட்டசபையில்,
அமைச்சர் விஜய பாஸ்கர் அளித்த வாக்குறுதி பொய் என்பது புரிந்து விட்டது; அவரது சாயம் வெளுத்து விட்டது.அமைச்சர் விஜயபாஸ்கரால், ...

குஜராத் ராஜ்யசபா தேர்தல்: 2 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு செல்லாது என அறிவிப்பு

Posted: 08 Aug 2017 11:51 AM PDT

புதுடில்லி: கடும் இழுபறிக்கிடையே குஜராத் ராஜ்யசபா தேர்தல் நடந்தது. இதில் திடீர் திருப்பமாக பா.ஜ.வுக்கு காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் அளித்த ஓட்டு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் காங். வேட்பாளர் அகமது பட்டேல் மீண்டும் எம்.பி.யாகவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.குஜராத்தில், காலியாக மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் இன்று நடந்தது. இதில், பா.ஜ., சார்பில், அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். மூன்றாவது இடத்துக்கு, காங்கிரஸ் சார்பில், அந்த கட்சி தலைவர் சோனியாவின் அரசியல் செயலர், அஹமது படேல் ...

குஜராத் ராஜ்யசபா தேர்தல்: காங்கிரசின் அகமது படேல் வெற்றி

Posted: 08 Aug 2017 01:32 PM PDT

காந்திநகர்: குஜராத் மாநில ராஜ்யசபா தேர்தலில் பல்வேறு குழப்பங்களுக்கிடையே காங்கிரசின் அகமது படேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானி மற்ற இரு இடங்களில் வெற்றி பெற்றனர்.

வியூகங்கள்:
குஜராத் மாநிலத்தில் 3 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜ.,சார்பில் அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானி ஆகியோரின் வெற்றி உறுதியானது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் காங்.,சார்பில் அகமது படேல், பா.ஜ., சார்பில் காங்., கட்சியிலிருந்து பா.ஜ.,வுக்கு தாவிய, பல்வந்சிங் நிறுத்தப்பட்டார். ...

‛சட்டப்படி எதிர்கொள்வோம்': குஜராத் முதல்வர் விஜய் ரூபானி

Posted: 08 Aug 2017 03:27 PM PDT

காந்திநகர்: ‛தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது; இதனை சட்டப்படி எதிர்கொள்வோம்' என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்தார்.

குஜராத்தில் விஜய் ரூபானி தலைமையிலான பா.,ஜ., ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு நடைபெற்ற 3 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.,வின் அமித்ஷா, ஸ்மிரிதி இரானி மற்றும் காங்கிரசின் அகமது படேல் வெற்றி பெற்றனர். முன்னதாக காங்., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இருவர் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தனர். இதனையடுத்து இரு ஓட்டுகளை செல்லாததாக அறிவிக்கக்கோரி காங்., தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™