Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'பிளக்சி பேர்' திட்டத்தால் கிடைத்த வருவாய்...ரூ.540 கோடி!

Posted: 06 Aug 2017 08:47 AM PDT

புதுடில்லி: ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களில், வரவேற்புக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றி அமைக்கும் திட்டத்தின் கீழ், கடந்த, 10 மாதங்களில், ரயில்வேக்கு, கூடுதலாக, 540 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

நிதிச்சுமையை குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளின் பலன், எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைந்துள்ளதால், ரயில்வே துறை உற்சாகம் அடைந்துள்ளது.இது குறித்து, ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாடு முழுவதும், 42 ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள், 46 சதாப்தி, 54 துரந்தோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில், 'பிளக்சி பேர்' எனப்படும், வரவேற்புக்கு ஏற்ப கட்டணங் ...

கம்யூ., ஆட்சியில் பெருகும் வன்முறை: கேரளாவில் அமைச்சர் அருண்ஜெட்லி அவேசம்

Posted: 06 Aug 2017 08:58 AM PDT

திருவனந்தபுரம்:''கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான, இடது ஜன நாயக முன்னணி ஆட்சிக்கு வரும் போதெல் லாம், வன்முறை தலைவிரித்தாடுகிறது,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி குற்றம்சாட்டினார்.

கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், பினராயி ஆட்சி அமைந்த பின், ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., தொண் டர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. சமீபத்தில், திருவனந்தபுரம் அருகே, ஆர்.எஸ். எஸ்., தொண்டர், ராஜேஷ், 34, படுகொலை செய்யப்பட்டார்.ஆளும் கட்சியான, மார்க்சிஸ்ட்டை சேர்ந்த தொண்டர்கள்தான், இதற்கு ...

நாளை ராஜ்யசபா தேர்தல்; அமித் ஷா ஆலோசனை

Posted: 06 Aug 2017 09:17 AM PDT

ஆமதாபாத்:குஜராத்தில், மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுடன், பா.ஜ., தலைவர் அமித் ஷா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

குஜராத்தில் காலியாகும் மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு, நாளை தேர்தல் நடக்க உள்ளது. இதில், பா.ஜ.,வின் சார்பில், அதன் தேசியத் தலைவர், அமித் ஷா, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, சமீபத் தில் இணைந்த, எம்.எல்.ஏ., பல்வந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்., சார்பில், அதன் தலைவர்,சோனியாவின் அரசியல் செயலர், அஹமது படேல் போட்டியிடுகிறார்.காங்கிரஸ் ...

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க., வியூகம்!

Posted: 06 Aug 2017 10:53 AM PDT

அ.தி.மு.க.,வில், முதல்வர் பழனிசாமி, பன்னீர் செல்வம், தினகரன் என, மூன்று அணிகள் உருவாகி, குழப்பம் ஏற்பட்டுள்ளதால், அந்தக் குழப்பத்தை சாதகமாக்க, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்;

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும், வியூகம் வகுத்துள்ளார். 'கோடிகள் குவிக்க, இது தான் சரியான தருணம்' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலரும், பேரம் பேசி வருகின்றனர். இதனால், தவித்து வரும், முதல்வர் பழனிசாமி, தி.மு.க.,வின் தந்திரத்தை முறியடித்து, ஆட்சியை தக்க வைக்க, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில், ...

கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., படிக்க கவுன்சிலிங்கில் மாணவியர் ஆர்வம்

Posted: 06 Aug 2017 10:57 AM PDT

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கம்ப்யூட்டர் சயின்ஸ் - ஐ.டி., பாடப்பிரிவுகளில், மாணவியர் அதிகம் பேர் சேர்ந்துள்ளனர். மாணவர்களை பொறுத்தவரை, மெக்கானிக்கல் பிரிவை, நிறைய பேர் தேர்வு செய்துள்ளனர்.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 518 கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, ஒற்றை சாளர கவுன் சிலிங், தமிழக அரசால் நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலை பேராசிரியர்கள் குழு மூலம், இந்த கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
பொது பாடப்பிரிவு
ஜூலை, 17ல், கவுன்சிலிங் துவங்கி, சிறப்பு பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. பொது பாடப்பிரிவு ...

ஜே.இ.இ., தேர்வர்கள் விண்ணப்பம் நிராகரிப்பு; அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில் குழப்பம்

Posted: 06 Aug 2017 11:06 AM PDT

மத்திய அரசின், ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங் களை, அண்ணா பல்கலையின், பி.ஆர்க்., கவுன்சிலிங் கமிட்டி நிராகரித்துள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 53 ஆர்க்கிடெக்சர் கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்புக்கு, தமிழக அரசின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க, 'நாட்டா' என்ற, தேசிய ஆர்க்கிடெக்சர் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின், 1,777 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதேபோல, சி.பி.எஸ்.இ., நடத்தும், ஜே.இ.இ., தேர்வில், ஆர்க்கிடெக்சர் தாளில் தேர்ச்சி பெற்றவர்களையும், பி.ஆர்க்., படிப்பில் சேர்க்க லாம் என, ...

விருதுக்கு ஆசிரியர்களை தேட உத்தரவு; முறைகேட்டை தடுக்க வலியுறுத்தல்

Posted: 06 Aug 2017 11:08 AM PDT

'தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள், நாடு முழுவதும் ஆசிரியர் தின மாக கொண்டாடப்படுகிறது. இதில், மாநிலங் களில் தனித்தனியாகவும், தேசிய அளவில் தனியாகவும், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, மாநில அளவில் விருது பெறு வோரின் பட்டியலை, வரும், 20க்குள், மாநில குழுவுக்கு அனுப்பும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்த உத்தரவில், ...

ரேஷன் பொருள் ஏற்றும் லாரிகளில் ஜி.பி.எஸ்., கருவி இனி கட்டாயம்

Posted: 06 Aug 2017 11:11 AM PDT

ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகை யில், அவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகளில், ஜி.பி.எஸ்., கருவியை பொருத்துவது கட்டாய மாக்கப்படுகிறது.

தமிழகத்தில், 51 இந்திய உணவு கிடங்குகள், 237 செயல் கிடங்குகள், 49 மொத்தக் கொள்முதல் கிடங்குகள், 1,800 நேரடி கொள்முதல் நிலையங் கள் உள்ளன. இவற்றுடன், 19 சர்க்கரை ஆலை கள், 1,453 தமிழ்நாடு குடிமைப் பொருள் கழகத் தின் ரேஷன் கடைகளும் உள்ளன.இவற்றில் இருந்து, லாரிகளில் உணவு பொருட்கள் ஏற்றிச் செல்லப்படும் போது, அவை கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.இதையடுத்து, இந்த லாரிகளில், ஜி.பி.எஸ்., பொருத்ததிட்டமிடப் பட்டது.முதற்கட்டமாக ...

நீதிபதிகளுக்கு தேசிய தேர்வு; மாநில ஐகோர்ட்கள் எதிர்ப்பு

Posted: 06 Aug 2017 11:14 AM PDT

புதுடில்லி: கீழ் கோர்ட்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு, தேசிய அளவிலான நீதித்துறை சேவை என்ற தேர்வை நடத்தும் மத்திய அரசின் ஆலோசனைக்கு, பல்வேறு மாநில ஐகோர்ட்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன; இரண்டு ஐகோர்ட்கள் மட்டுமே இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

பரிந்துரை
நாடு முழுவதும் உள்ள கீழ் கோர்ட்களுக்கு, 20 ஆயிரத்து, 502 நீதிபதி பணியிடங்கள் நிர்ண யிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 2015 டிச., 31 நிலவரப்படி, 4,452 நீதிபதி பணியிடங்கள் காலி யாக இருந்தன. நீதிபதிகள் நியமனத்துக்கு அந் தந்த மாநில ஐகோர்ட்கள் தனித்தனியாக தேர்வு களை நடத்தி ...

'நீட்' விவகாரத்தில் புதன் கிழமைக்குள் முடிவு: விஜயபாஸ்கர்

Posted: 06 Aug 2017 11:41 AM PDT

திருச்சி : ''நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில், புதன்கிழமைக்குள் முடிவு தெரியும்,'' என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், திருச்சி விமான நிலையத்தில், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, தமிழக அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாணவர்களின் நலனுக்காக, இந்த ஆண்டு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும். இது தொடர்பான தமிழக அரசின் அவசர சட்ட மசோதா, மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் அதை ...

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு மக்கள் விருப்பம்: செல்லூர் ராஜூ

Posted: 06 Aug 2017 03:08 PM PDT

மதுரை : ''அ.தி.மு.க., அணிகள் ஒன்றிணைய வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர்,'' என, அமைச்சர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை அருகே துவரிமானில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜூ கூறியதாவது: எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த போது, கருணாநிதி சந்தேகம் கிளப்பினார். மக்கள், எம்.ஜி.ஆரை பார்க்காமல் அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்தனர். அவர் வழியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்தார்.
கடந்த சட்டசபை தேர்தலில், எல்லா தொகுதிகளுக்கும் ஜெ., செல்ல இயலவில்லை. பல மாவட்டங்களுக்கு, ஒரு இடத்தில் பிரசாரம் செய்தார். ஜெ.,யை நம்பி மக்கள் ஓட்டு ...

இன்றைய(ஆக.,7) விலை: பெட்ரோல் ரூ.69.03; டீசல் ரூ.59.59

Posted: 06 Aug 2017 04:03 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69.03 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.59 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,7) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 15 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.69.03 காசுகளாகவும், டீசல் விலை 8 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.59.59 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,7) காலை 6 மணி முதல் அமலுக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™