Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல்... இன்று!

Posted: 04 Aug 2017 08:49 AM PDT

புதுடில்லி:நாட்டின், துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபாவின் தலைவராக உள்ள, ஹமீது அன்சாரியின் பதவிக் காலம், வரும், 10ல் நிறைவடைவதை முன்னிட்டு, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், இன்று நடக்கிறது. இதில் பதிவாகும் ஓட்டுகள் உடனே எண்ணப்பட்டு, இன்று இரவே முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின், புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், இன்று நடக்கிறது. எம்.பி.,க்கள் ஓட்டளிப்பதற்காக, பார்லி., வளாகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. 2007ல், துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற, ஹமீது அன்சாரி, 2012ல் துணை ஜனாதிபதியாக ...

குஜராத்தில் ராகுல் சென்ற கார் மீது கல்வீச்சு

Posted: 04 Aug 2017 09:38 AM PDT

தனீரா:குஜராத்தில், வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற, காங்., துணைத்தலைவர் ராகுலின் கார் மீது, சிலர் கற்களை வீசி, தாக்குதல் நடத்தினர்.

குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலை மையிலான,பாஜ.,ஆட்சி நடக்கிறது. தொடர்ந்து பெய்த பலத்த மழையால், குஜராத்தில், பல பகுதிகள், வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, காங்., துணைத்தலைவர் ராகுல் பார்வையிட்டு வரு கிறார். பனாஸ்கந்தா மாவட்டம், லால் சவுக் பகுதியில் வெள்ள பாதிப்பை நேற்று பார்வை யிட்ட பின், காரில், தனீராவில் ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டுள்ள இடத்துக்கு சென்று ...

பழனிசாமி அரசை எதிர்த்து பன்னீர் அணியினர்... போராட்டம்

Posted: 04 Aug 2017 10:03 AM PDT

முதல்வர் பழனிசாமி அரசை கண்டித்து, அ.தி.மு.க., பன்னீர் அணியினர், சென்னையில், 10ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.சொந்த கட்சியினரே,எதிர்க் கட்சியாகும் வினோதம் அன்று, அரங்கேற உள் ளது.அன்றைய போராட்டத்திற்கு,மாநிலம் முழுவதும் உள்ள கட்சியினரை வரவழைத்து, அணிகள் இணையாது என்பதை உறுதிபடுத்த வும், பன்னீர் அணி திட்டமிட்டு உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க., வானது, சசிகலா அணி, பன்னீர் அணி என, இரண்டாக பிளவுபட்டது. இரு அணிகளையும் இணைக்க, இரு தரப்பிலும், சிலர் முயன்றனர். ஆனால், பழனிசாமி அணியினர், முதல்வர் பதவி, பொதுச்செயலர் பதவி என, ...

அ.தி.மு.க., பொதுச்செயலர் தேர்தல் கமிஷன் விளக்கம்

Posted: 04 Aug 2017 10:13 AM PDT

சென்னை:'அ.தி.மு.க., பொதுச்செயலர் மற்றும் துணைப் பொதுச்செயலர் யார்' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட் கப்பட்ட கேள்விக்கு, 'அ.தி.மு.க., நிர்வாகிகள் விவகாரம் நிலுவையில் உள்ளது' என, தேர்தல் கமிஷன் பதில் அளித்துள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். அவர் சிறை செல்லும் முன், கட்சி தன் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற் காக, தன் அக்கா மகன் தினகரனை, துணைப் பொதுச் செயலராக நியமித்தார்.
'கட்சி விதிகளின்படி, அ.தி.மு.க., பொதுச் செய லர், முறையாக தேர்தல் நடத்தப்பட்டு, தொண் டர்களால் தேர்வு ...

கட்சி அலுவலகம் செல்வதை யாரும் தடுக்க முடியாது: தினகரன்

Posted: 04 Aug 2017 10:17 AM PDT

சென்னை:''நான்,கட்சி அலுவலகம் செல்வதை, யாரும் தடுக்க முடியாது; தேவைப்படும் போது செல்வேன்,'' என, தினகரன் தெரிவித்தார்.

சென்னையில், நேற்று அவர் கூறியதாவது:அ.தி.மு.க.,வில் ஏற்கனவே நிறைய நிர்வாகி கள் இருந்தாலும், 2019 லோக்சபா தேர்தலில், மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற் காக, சிறப்பாக செயல்படக் கூடியவர்களுக்கு, புதிய பொறுப்புகளை வழங்கி உள்ளோம். அணிகள் இணைப்பிற்கு, நான் இடையூறாக இருப்பதாக, நண்பர்கள் கூறியதால், 60 நாட்கள் ஒதுங்கி இருந்தேன். ஆனால், அவர்களால் இணைய முடியவில்லை. எனவே, கட்சி பணியை துவக்கி உள்ளேன்.
சர்வ அதிகாரம்
பொதுக்கூட்டம் ...

எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு சரியா? மனசாட்சியை கேட்க கோர்ட் அறிவுரை

Posted: 04 Aug 2017 10:20 AM PDT

மதுரை:'வறட்சி பாதித்து, விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையில், சம்பளம் உயர்வு சரியா என்பதை, தங்களின் மனசாட்சிப் படி எம்.எல்.ஏ.,க்கள் முடிவு செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, இது தொடர்பான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் வறட்சியால் விவசாயம் பாதித்து உள்ளது. கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை.மின்வாரியம், போக்கு வரத்து உட்பட பல துறைகளில் கடன் சுமை அதி கரித்து ...

விரைவில் தி.மு.க., ஆட்சி சொல்கிறார் ஸ்டாலின்

Posted: 04 Aug 2017 10:22 AM PDT

சென்னை:தி.மு.க.,ஆட்சிவிரைவில் அமையும் என, அக்கட்சியின் செயல் தலைவர்,ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: தென் மாநில நதி நீர் இணைப்பு சங்க தலைவர், அய்யாக்கண்ணு தலைமையில், ஏற்கனவே, 41 நாட்கள், டில்லியில், பல்வேறு போராட்டங்களை விவசாயி கள் நடத்தினர்; அவர்களை பிரதமர் மோடி சந்திக்க வில்லை. கொடுத்த வாக்குறுதியை, முதல்வர் பழனிசாமியும் காப்பாற்றவில்லை. தற்போது, 19வது நாளாக, டில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் விவசாயிகள் பற்றி கவலைப்படாத அரசு உள்ளதால், டில்லியில் போராட்டம் நடத்தினாலும், எந்த பலனும் இருக் காது ...

மின் இணைப்பு இல்லாத 37 சதவீத பள்ளிகள்

Posted: 04 Aug 2017 10:36 AM PDT

புதுடில்லி:'நாடு முழுவதும், 37 சதவீதத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில், மின் இணைப்பு இல்லை' என்ற அதிர்ச்சி தகவலை, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜ்யசபாவில், எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா அளித்த பதில்: தகவல்கள்ஆண்டுதோறும், கல்வி தொடர்பான ஆய்வுகளை, கல்வி திட்ட மிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல் கலை கழகம் நடத்துகிறது. அதில், பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்த தகவல்கள், கல்விக்கான மாவட்ட தகவல்தொகுப்பில் இருந்து திரட்டப் படுகிறது.இந்த ஆண்டு மார்ச் வரையில், பள்ளிகளில் ...

காற்றாலையில் 10 கோடி யூனிட் மின்சாரம் முதன்முறையாக வாரியம் கொள்முதல்

Posted: 04 Aug 2017 10:39 AM PDT

காற்றாலைகளில் இருந்து, முதன்முறையாக, 10 கோடி யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின் வாரியம் புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில், 7,855 மெகாவாட் திறனில், காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. ஆண்டுதோறும், மே - செப்., வரை, காற்றாலை களில் இருந்து, அதிக மின்சாரம் கிடைக்கும். அந்த மின்சாரத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் விலைக்கு, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. காற்றாலைகளில் எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என, முன்கூட்டியே கண்டறியும் தொழிற்நுட்பத்தை, அதன்உற்பத்தியாளர்கள் ஏற்படுத்தி உள்ளனர். இத னால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, ...

விபத்தில் முடிந்த சாகசம்: 2,000 அடி பள்ளத்தில் விழுந்து 2 இளைஞர்கள் பலி

Posted: 04 Aug 2017 01:25 PM PDT

மும்பை: மஹாராஷ்டிராவில், அம்போலி மலைப் பாதையில், 2,000 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து, இரு வாலிபர்கள் இறந்தனர்.

மஹாராஷ்டிராவில், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கோல்காப்பூரில் உள்ள, கோழிப் பண்ணை ஒன்றில் பணியாற்றும் ஏழு வாலிபர்கள், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, அம்போலி காட், மலை வாசஸ்தலத்துக்கு சென்றனர். அப்போது, இரு வாலிபர்கள் மட்டும், மேற்கு தொடர்ச்சி மலையில் ஏறினர். மற்றவர்கள், வேண்டாம் என, தடுத்தும் கேட்காமல் ஏறினர்.
சாகசம்:
உச்சிப்பகுதிக்கு சென்ற அவர்கள், ...

ரூ.10க்கு தக்காளி விற்பனை; உ.பி., - காங்., அசத்தல்

Posted: 04 Aug 2017 03:21 PM PDT

லக்னோ: தக்காளி விலை உயர்வால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உ.பி., மாநில சட்டசபை வளாகத்துக்கு வெளியே, கிலோ, 10 ரூபாய்க்கு, காங்., தொண்டர்கள் தக்காளி விற்றதால் பரபரப்பு நிலவியது.

கடும் உயர்வு:
நாடு முழுவதும், ஆண்டுக்கு, 1.8 கோடி டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. தக்காளி உற்பத்தி செய்யும் மாநிலங்களான, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ம.பி., மேற்கு வங்கம், ஒடிசா ஆகியவற்றில், மழை, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், தக்காளி விலை, கிலோ, 100 ரூபாயை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™