Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இது வாட்ஸ் அப் கலக்கல்

Posted: 04 Aug 2017 04:03 PM PDT


நன்றி-தினமலர்
-

இரவு - ஒரு பக்க கதை

Posted: 04 Aug 2017 09:16 AM PDT

கவித்துளிகள்

Posted: 04 Aug 2017 07:56 AM PDT

 அறுந்த செருப்பில் மெல்ல நடக்கிறது தைப்பவனின் வாழ்க்கை – * கண் திறக்கப்பட்டது கண்கள் மூடிய புத்தர் சிலைக்கு கை நிறைய பணம் – * வாங்க முடியவில்லை விற்ற வாழ்க்கையை மது நிரம்பிய கோப்பை தீர்ந்துபோனது வாழ்க்கை – * தோலுரித்து தொங்கவிடப்பட்ட பசித்த ஆட்டின் வாயில் பாதிகடித்த இலைகள் – ———————- – கோவை.நா.கி.பிரசாத் நன்றி – குங்குமம்

பயண இலக்குகள் – கவிதை

Posted: 04 Aug 2017 07:54 AM PDT

- இருசக்கர வாகனத்தில் நான் ஆகாயத்தில் ஒரு காக்கை சாலையில் பேருந்து வேறு வேறு திசைக்கோட்டில் பயணித்தோம் – என் இலக்கு தெரிகிறது எனக்கு காக்கையின் இலக்கும் பேருந்தின் இலக்கும் தெரியவில்லை – ஆகாய காக்கை என் மேல் மோதி பேருந்தின் முகப்பில் தூக்கி எறியப்படும் வரை தெரிந்திருக்கவில்லை வெவ்வேறு பயணங்களின் இலக்கு ஒரு விபத்தாகவும் இருக்கும் என்று – ———————— – இளந்தென்றல் திரவியம் நன்றி-குங்குமம்

இறப்பை பதிவு செய்ய ஆதார் கட்டாயம்

Posted: 04 Aug 2017 07:49 AM PDT

புதுடில்லி: வரும் அக்டோபர்1 முதல் இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. காஸ் மானியம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.  இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தீர்ப்பு ஒத்திவைத்தது. தொடர்ந்து, பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு: வரும் அக்டோபர் 1 முதல் இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம். ஆதார் ...

எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு ரத்து கோரிய மனு தள்ளுபடி

Posted: 04 Aug 2017 04:52 AM PDT

மதுரை:  தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்ட  சம்பள உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி  மதுரை ஐகோர்ட் கிளையில் ரமேஷ் என்பவர்  பொது நல வழக்கு தொடர்ந்தார்.  இதனை விசாரித்த கோர்ட், தமிழகத்தின் நிலை  குறித்து மனுதாரர் கூறியதை ஆதாரமாக தாக்கல்  செய்யவில்லை.  சட்டரீதியான கருத்துகள் முன் வைக்கப்படவில்லை  எனக்கூறி, தள்ளுபடி செய்தது. தினமலர்

இனியேனும் போராடு

Posted: 04 Aug 2017 04:49 AM PDT----
படித்ததில் பிடித்தது

குடிஹாரன்’னு சொல்லுங்க…!

Posted: 04 Aug 2017 04:47 AM PDT

அவன் டிரிங்ஸ் அடிச்சுட்டு பைக் ஓட்டும்போது காது கிழியற மாதிரி ஹாரன் அடிப்பான்! – குடிஹாரன்'னு சொல்லுங்க…! – கே.அருள்சாமி – ————————————————- – எதுக்கு கல்யாணத்துக்கு கிளம்பறதுக்கு முன்னாடி சந்தனம், குங்குமத்தை நெத்தி நிறைய அப்பிக்கச் சொல்றீங்க? – ஏழு மணி முகூர்த்தத்துக்கு ஒன்பது மணிக்கு போறோம். வேறொரு கல்யாணத்துக்கு போயிட்டு வந்ததா காரணம் சொல்லத்தான்! – எஸ்.பிரபுமதி – —————————————— – ஏன் பொற்காசுகளை வேண்டாம்னு சொல்கிறீர் புலவரே…? – நாளைக்கே திருப்பிக் கேட்பீர்கள், சோறு ...

ஏன் வதைக்க வேண்டும்

Posted: 04 Aug 2017 04:45 AM PDT

– தனிமையை வருடிச் சென்ற இராக்குருவியின் பாடலில் எழுத இயலாச் சோகம் இழையோடிக் கரைந்தது – அடர்இருளின் புதைகுழிக்குள் மூழ்கியும் மூழ்காமலும் கிடந்த பொழுதில் மனதிற்குள் கீறல்கள் வரைந்துபோனது அப்பாடல் தாளலயத்திற்குள் அடங்கா அப்பாடலுக்குள் விழுந்த ஞாபகங்கள் தகிக்கத் தொடங்கின. – எதற்குப் பாடிச்செல்ல வேண்டும் அப்பறவை இந்நேரம் எனும் வலைக்குள் அகப்பட்டு அப்படியும் இப்படியும் புரண்டுபார்த்தும் அகப்படவில்லை விடையேதும். – அதன்போக்கில் அது பாடித்தான் சென்றது என்னை ஏன் வதைக்கவேண்டும் இரவும் ...

அருளே திருளே – கவிதை

Posted: 04 Aug 2017 04:44 AM PDT

தன்னோடு தான் புலம்பிக்கொண்டே தைப்பவனின் வயித்தெரிச்சலுக்கு காதுமலர்த்திக் கிடக்கிறது உதிரிச்செவ்வரளி பலகையிடுக்கில் கிளைத்துப்பூத்து சாம்பலுதிர்க்கும் ஊதுவத்தி நதிக்கரை மரத்தடி என்றொரு பொய்யை சாக்கடை மேல் விரிக்கப் பார்க்கிறது கழற்றிக் கொடுத்துவிட்டு சுகமாய் கடித்தடத்தை வருடியபடி அட்டணங்காலிட்டமர்ந்திருக்கிறார் பாபா 'சும்மாவேனும் சொல்லுங்கள் சாயிநாதா அவன் காதோர பீடித்துணுக்கு நிம்மதிப் பெருமூச்சாக எவ்வளவு நேரமாகும்?' – ———————- – ஜான் சுந்தர் நன்றி-குங்குமம்

விக்ரம் வேதா – திரைப்பட விமரிசனம்

Posted: 04 Aug 2017 04:42 AM PDT

குங்குமம் விமர்சனக்குழு தாதாக்களை வேட்டையாடும் என்கவுன்ட்டர் மாதவனின் துப்பாக்கி, விஜய் சேதுபதியை பழிவாங்கியதா என்பதே 'விக்ரம் வேதா!' சட்டத்துக்கு இடையூறாக இருப்பவர்களைச் சாமர்த்தியமாக செக் வைத்து போட்டுத் தள்ளுகிறார் மாதவன். அதை கேள்வி கேட்க விடாமல் செய்கிறார். – இத்தகையவர்களை பூமிக்கு பாரம் என்று முடித்து வைப்பவருக்கு இப்போது கிடைப்பது ரவுடி விஜய் சேதுபதியை சுட்டுத் தள்ளுகிற வேலை. – நண்பர்களின் துணை கொண்டு, ரகசியமாக அவர் வேட்டையாட நினைக்க, சேதுபதியே நேரில் ஆஜராகிறார். வேதாளம் ...

தமிழ்த் திரையுலகில் ‘மீசையமுறுக்கு’ செய்திருக்கும் புதுமை

Posted: 04 Aug 2017 04:40 AM PDT

ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்த 'மீசையமுறுக்கு' திரைப்படம், தமிழ்த் திரையுலகில் ஒரு புதுமையை நிகழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகில் எப்போதுமே ஒரு படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்பே, அதன் இசை உரிமையை பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டு கைப்பற்றி விடுவார்கள். அந்நிறுவனத்தின் சமூகவலைதள பக்கங்களில் தான் டீஸர், ட்ரெய்லர், பாடல்கள் உருவான விதம் உள்ளிட்ட வீடியோ பதிவுகள் வெளியாகும். வசூலில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் 'மீசையமுறுக்கு' திரைப்படம் வெளியாகும் வரை, அதன் இசை உரிமையை தயாரிப்பு ...

VELA RAMAMOORTHY NOVELS NEEDED

Posted: 04 Aug 2017 03:22 AM PDT

அன்புடையீர்
சம கால எழுத்தாளர் திரு வேல ராமமூர்த்தி அவர்களுடைய நாவல்கள் கிடைக்குமா ... நன்றி

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 04 Aug 2017 02:04 AM PDT

என் முகவரி

muthusimpu@gmail.com

வாழ்த்தலாம் வாங்க ayyasami ram அவர்களை .

Posted: 04 Aug 2017 01:14 AM PDT

வாழ்த்தலாம் வாங்க ayyasami ram அவர்களை .

30000 பதிவுகள்-ஒவ்வொன்றும் ஒரு விதம்
தேடிப்பிடித்தே  பதிவிடும் தேனீயோ நீர்?

வாழ்த்துகள் ராம் அவர்களே.!    ரமணியன்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் யார்? ஆர்.டி.ஐ கேள்விக்கு அதிர்ச்சி பதில்

Posted: 04 Aug 2017 01:08 AM PDT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர்,  அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்டார்  சசிகலா.  - சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் அவர் குற்றவாளியாக  அறிவிக்கப்பட்டு தற்போது சிறைத் தண்டனையில் உள்ளார்.  - அதன் பின்னர் அந்த கட்சி உடைந்து தற்போது மூன்று  அணியாக உள்ளது. இந்நிலையில், சென்னை தியாகராய  நகரை சேர்ந்த சுவாமிநாதன் கல்யாணசுந்தரம் என்பவர்  ஆர்.டி.ஐ மூலம் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்டிருந்தார்.  அதில், தேர்தல் ஆணையத்தை பொறுத்த வரை அ.தி.மு.க.  பொதுச் செயலாளர் ...

தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்

Posted: 04 Aug 2017 01:01 AM PDT

அகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படுவதில்லை. பின் இங்கு பௌத்த தொல்லியல் ஆய்வுகள் என்ற தலைப்பின் நோக்கம் பௌத்த தடயங்கள் பாதுகாப்பதில் தொல்லியல் துறை, அரசு, வரலாற்று அறிஞர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றும் பொதுமக்கள் தம் முன்னோர்களின் வரலாற்று தடயங்களை தமக்கு பின் வரும் தலைமுறை அறிந்துக்கொள்ள பாதுகாக்க வேண்டும் என்றும் இவர்கள் எல்லோரையும் விட பௌத்தர்கள் கூடுதல் பொறுப்புமிக்கவராக ...

அரசுக்கு 45,119 கோடி கடன் எம்.எல்.ஏ.க்கள் சம்பள உயர்வை எதிர்த்து மனு

Posted: 03 Aug 2017 11:03 PM PDT

மதுரை:  மதுரை, பழைய மாகாளிப்பட்டி ரோட்டை சேர்ந்த  கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல்  செய்த மனு:தமிழகத்தில் கடும் வறட்சி  ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள், கடனை செலுத்த  முடியாமல் நூற்றுக்கணக்கானோர் தற்கொலை  செய்துள்ளனர்.   அரசின்  பல்வேறு துறைகள் ஊழலில் மலிந்துள்ளதாக  ஆய்வுகள் கூறுகிறது. போக்குவரத்து கழக நிதி  நெருக்கடியை சமாளிக்க ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல்   தேவைப்படுகிறது.  இந்நாள், முந்நாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள்,  ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என பலர் மீது குற்றச்சாட்டுகள்,  வழக்குகள் ...

தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்தது மின்வாரியம்

Posted: 03 Aug 2017 08:14 PM PDT

ஆண்டிபட்டி: நடிகர் தனுஷின் கேரவனுக்கு மின்சாரம் திருடப்பட்ட சம்பவம், ஆண்டிபட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகர் தனுஷ், தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே சங்கராபுரத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். அங்கு வறட்சியால்  தற்கொலை செய்து கொண்ட 130 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். இதனிடையே, ஆண்டிபட்டி அருகே  தேக்கம்பட்டி, முத்துரங்கபுரத்தில் உள்ள தனது குலதெய்வம் கோயிலான கஸ்தூரிமங்கம்மாள் கோயிலுக்கு தனுஷ் நேற்று வந்தார். அவரது மனைவி  ஐஸ்வர்யா, ...

சசிகலாவுக்கு சிறப்பு சலுகையா? சட்டசபை குழு இன்று ஆய்வு

Posted: 03 Aug 2017 08:12 PM PDT

பெங்களூரு: ஜூலை, 21ல் நடந்த, கர்நாடக சட்டசபை பொது கணக்கு குழு  கூட்டத்தில், 'சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தது  உண்மை தான்' என, சிறைத் துறை அதிகாரிகள் ஒப்புக்  கொண்டனர்.  அப்போது, சிறை முறைகேடுகளை தடுப்பது குறித்து எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கை பற்றி, 15 நாட்களில் அறிக்கை அளிக்க,  அதிகாரிகளுக்குஉத்தரவிடப் பட்டது. இந்த அறிக்கையை, இன்று நடக்கும் கூட்டத்தில், சிறைத் துறை  அதிகாரிகள் தாக்கல் செய்ய உள்ளனர். அதை தொடர்ந்து,  சட்டசபை பொது கணக்கு குழு தலைவர், ஆர்.அசோக்  தலைமையிலான ...

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(9--10}-- 11

Posted: 03 Aug 2017 12:20 PM PDT

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}ரமணியன்

படம் முகநூல் நன்றி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™