Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சீனா ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை; மத்திய அரசுக்கு குவியும் பாராட்டு

Posted: 31 Aug 2017 08:59 AM PDT

பீஜிங்: 'டோக்லாம் பிரச்னையில் மிகவும் விடாப்பிடியாக இருந்து, சுமுகத் தீர்வை எட்டி யதன் மூலம், ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்க மனப்பான்மைக்கு, இந்தியா, முட்டுக் கட்டை போட்டு உள்ளது' என, வெளிஉறவுத் துறை நிபுணர் கூறியுள்ளார்.

இந்தியா - சீனா - பூட்டான் இடையேயுள்ள டோக்லாம் பகுதிக்குள் நுழைந்து சாலை அமைக்கும் முயற்சியில், சீனா ஈடுபட்டது. அதை, நம் படைகள் தடுத்து நிறுத்தின.
சுமுக தீர்வு
இதனால், இரண்டு மாதங்களுக்கு மேலாக எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இரு நாட்டு படைகளும் எல்லையில் குவிக்கப் பட்டிருந்தன. தற்போது, இரு ...

சோனியா மருமகனுக்கு சிக்கல்; விசாரணையை துவக்கியது சி.பி.ஐ.,

Posted: 31 Aug 2017 09:11 AM PDT

ஜெய்ப்பூர்: அரசு நிலத்தை மோசடியாக வளைத்த புகாரில், காங்., தலைவர் சோனியா வின் மருமகன், ராபர்ட் வாத்ரா தொடர்புடைய நிறுவனம் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கி உள்ளது.

ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிகானிரில், 374 ஹெக்டேர் நிலம், மோசடி செய்து, போலியான பெயர்களில் பதிவு செய்யப்பட்டதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நில மோசடி
இதில், காங்., தலைவர் சோனியாவின் மரு மகனும், பிரியங்காவின் கணவருமான, ராபர்ட் வாத்ராவுக்கு தொடர்புடைய, 'ஸ்கைலைட் ஹால்பிடாலிட்டி' நிறுவனத் துக்கு, இதில் ...

செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின் அதிகம் டிபாசிட் செய்தது... யார்?

Posted: 31 Aug 2017 09:15 AM PDT

புதுடில்லி: ''இத்தனை ஆண்டுகளாக புழக்கத் தில் இருந்த பணம், யாருக்கு சொந்தம் என்ற மர்மத்தை, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு அம்பலப்படுத்தியுள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறினார்.

இதையடுத்து, வரி செலுத்தாமல், அதிக பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள் யார் என்ற மர்மம் விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, 2016, நவ., 8ல் வெளியானது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக அமல்படுத் தப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம், எவ்வளவு பணம் திரும்ப வந்தது என்ற கேள்வி எழுந்தது. நாட்டில் புழக்கத்தில் இருந்த ...

சில நாட்களில் ஆட்சி மாற்றம்; ஸ்டாலின் திடீர் நம்பிக்கை

Posted: 31 Aug 2017 09:26 AM PDT

சேலம்:''தமிழகத்தில் இன்னும் சில நாட்களில், ஆட்சி மாற்றம் ஏற்படும்; தி.மு.க., கொல்லைப் புறமாக ஆட்சி அமைக்காது,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

சேலத்தில் நடந்த கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத் தில், 2006 - 2011 வரையிலான கால கட்டத்தில், தி.மு.க., - காங்., - பா.ம.க., ஆதரவுடன் ஆட்சி செய்த போது, அ.தி.மு.க.,வினர் மைனாரிட்டி அரசு என, விமர்சித்தனர். மைனாரிட்டி அரசாக இருந்தாலும், மக்கள் நலனை பேணும் அரசாக, முழுமையாக, ஐந்து ஆண்டுகள் ஆட்சியை வழங்கியது. இன்றைய நிலையில், அரசுக்கு, அ.தி.மு.க., வைச் ...

பிறந்த நாளில் கட்சி துவக்கம்? தீவிர அரசியலில் இறங்குகிறார் கமல்

Posted: 31 Aug 2017 09:29 AM PDT

தன் பிறந்த நாளான, நவ., 7 முதல், தீவிர அரசியலில் இறங்குகிறார், நடிகர் கமல். புது கட்சி துவக்கம் குறித்த அறிவிப்பையும், அவர் அன்று வெளியிட திட்டமிட்டு உள்ளார்.

'தமிழக அரசின் அனைத்து துறைகளிலும், ஊழல் மலிந்துள்ளது; இந்த ஆட்சி தானாகவே கலையும்' என, ஆளுங்கட்சியை, கமல் விமர் சித்தார்.அவரது விமர்சனத்திற்கு, அமைச்சர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். தனியார், 'டிவி'யில், கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில், அடிக்கடி ஆளுங்கட்சியின் அரசியலை கேலி,கிண்டல் செய்யும் கருத்துக்களை கூறி வருகிறார்.'தேர்தல் நேரத்தில், உங்கள் கோபத்தை ...

தமிழகத்திலும் பரவுகிறது 'ப்ளூ வேல்' கொடூர விளையாட்டு ஆபத்து

Posted: 31 Aug 2017 10:26 AM PDT

உலகை கதிகலங்க வைத்துள்ள, கொடூர, 'ப்ளூ வேல்' விளையாட்டு, தமிழகத்திலும் பரவியுள் ளது. இந்த பயங்கர விளையாட்டில் பங்கேற் றுள்ள, 75 மாணவர்கள், தற்கொலை செய்யும் உந்துதலில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் கொடூரம் குறித்து, விழிப்பு ணர்வு ஏற் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீசார், வீட்டிலுள்ள சிறுவர்கள், இளம் வயதினரை கண்காணிக்கும்படி, பெற்றோருக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

கடந்த, 2013ம் ஆண்டில் இருந்து, உலகில், 100க்கும் மேற்பட்ட சிறுவர் மற்றும் இளம் வயதினரை, ஓசையின்றி தற்கொலைக்கு துாண்டியுள்ளது, 'ப்ளூ வேல்' என்னும், 'ஆன் லைன்' விளையாட்டு. இந்த கொடூர ...

மத்திய அமைச்சரவையில் மாற்றம்; அ.தி.மு.க.,வுக்கு இடம் கிடைக்கும்?

Posted: 31 Aug 2017 10:29 AM PDT

ஓரிரு நாட்களில் மாற்றப்பட உள்ள மத்திய அமைச்சரவையில், அ.தி.மு.க.,வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என, தெரிகிறது.

தமிழகத்தில், சசிகலா கும்பல் இல்லாத, அ.தி.மு.க., அணி உருவாக, பா.ஜ., விரும்பு கிறது. முதல்வர் பழனிசாமி - பன்னீர் செல்வம் அணிகள் இணைந்ததும், அவர்களுக்கு,தொலை பேசி மூலம், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித் ததே, அதற்கு சான்று. டில்லிக்கு செல்லும் போது, இருவரும்,சர்வ சாதாரணமாக, பிரதமரை சந்திக்கும் அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கம், அ.தி. மு.க.,வுக்கு விரைவில், அமைச்சரவையில் இடம் பெற்றுத் தரும் என, தெரிகிறது.இது குறித்து, பா.ஜ., ...

எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் சந்திப்பு! கூவத்தூர் கோரிக்கைகளுக்கு செயல் வடிவம்

Posted: 31 Aug 2017 10:37 AM PDT

தினகரன் அணி தரும் நெருக்கடியை சமாளிக்க, எம்.எல்.ஏ.,க்களை சரிகட்டும் முயற்சி, அ.தி. மு.க.,வில் துவங்கி உள்ளது. சென்னையில், நேற்று 7 மாவட்ட எம்.எல்.ஏ.,க்களை அழைத்து பேசிய முதல்வர் பழனிசாமி, அவர்களின் குறைகளை தீர்க்க உறுதி அளித்துள்ளார்.

தினகரன் அணி எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், முதல் வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, கடிதம் கொடுத்து உள்ளனர்.
ஏழு மாவட்டங்கள்
இவ்விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருவ தால், விரைவில் சட்டசபையை கூட்டி, மெஜா ரிட்டியை நிரூபிக்க, முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார். ...

இரட்டை இலை சின்னம் யாருக்கு? பன்னீர், சசி, தினகரனுக்கு, 'நோட்டீஸ்'

Posted: 31 Aug 2017 10:45 AM PDT

மதுரை:ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் தேர்தலை நடத்தி, வெற்றி பெறும் அணியிடம், இரட்டை இலை சின்னத்தை ஒப்படைக்க கோரிய வழக்கில், தலைமை தேர்தல் கமிஷனர், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன், சசிகலா, தினகரனுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

திருச்செந்துார், ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டு, கட்சி யின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலையை, தேர்தல் கமிஷன் முடக்கியது. காங்., - சமாஜ்வாதி கட்சிகளில் பிளவு ஏற்பட்ட போது, அதிக பெரும் பான்மை உள்ள ...

ஐதராபாத்தில் தொழில் மாநாட்டில் டிரம்ப் மகள் இவாங்கா பங்கேற்பு

Posted: 31 Aug 2017 01:28 PM PDT

சென்னை: ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில், இந்திய - அமெரிக்க அரசுகள் சார்பில், சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு, நவம்பரில் நடைபெறுகிறது. அதில், அதிபர் டிரம்பின் மகள், இவாங்கா தலைமையில், அமெரிக்க பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு:
இது குறித்து, அமெரிக்க துாதரக பொருளாதார பிரிவு அதிகாரிகள், நேற்று கூறியதாவது: இந்தியாவில், சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு நடத்த, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, ஐதராபாத்தில், நவ., 28 - 30 வரை, 'பெண்களுக்கு முதலிடம்; அனைவருக்கும் ...

சொகுசு விடுதியில் 2 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டம்?

Posted: 31 Aug 2017 02:29 PM PDT

புதுச்சேரி : புதுச்சேரி, சின்ன வீராம்பட்டினம், 'விண்ட் பிளவர்' சொகுசு விடுதியில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 20 பேர், 10 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கவர்னர் கைவிரித்த நிலையில், ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்டு, கிடைக்கவில்லை. இதனால், புதுச்சேரியில் தங்கியுள்ள, எம்.எல்.ஏ.,க்கள், விரக்தியின் உச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குடும்பத்தினரையும் சந்திக்க முடியவில்லை. தொகுதியிலும் எதிர்ப்பு கிளம்பி விட்டதால், 'மூட் அவுட்' ஆகியுள்ளனர்.இதனால், 'தொகுதிக்கும், வீட்டிற்கும் செல்ல வேண்டும்' என, அனுமதி கேட்டு நச்சரித்து ...

‛தமிழக சூழலில் கவர்னரே நீதிபதி': கிரண் பேடி

Posted: 31 Aug 2017 04:12 PM PDT

மதுரை: ''தமிழக அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப, சரியான முடிவை, தமிழக கவர்னர் எடுப்பார்; சவாலான இந்த சூழ்நிலையில், அவர் தான் சிறந்த நீதிபதி,'' என, புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி தெரிவித்தார்.

மதுரையில், நேற்று அவர் அளித்த பேட்டி: புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, நான் எப்போதும் செயல்பட்டதில்லை. ஒரு கவர்னருக்கு, அங்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ, அதற்கு உட்பட்டே செயல்படுகிறேன். சட்ட விதிகளுக்கு எதிராகவும் செயல்படவில்லை.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில், கவர்னர் எடுக்க வேண்டிய முடிவு குறித்து, நான் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™