Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பி.எஸ்.என்.எல்., முக்கிய சொத்துகளின் மதிப்பு ரூ.65,000 கோடியாக உயர்வு

Posted: 03 Aug 2017 08:31 AM PDT

புதுடில்லி:தொலைத் தொடர்பு சேவையை அளித்து வரும், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு சொந்தமான முக்கிய சொத்துகளின் மதிப்பு, 975 கோடி ரூபாயில் இருந்து, 65 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., தொலைபேசி, மொபைல் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சேவைகளை அளித்து வருகிறது. 2015 - 16ல் மேற்கொள்ளப் பட்ட பொதுத் துறை நிறுவனங்களின் செயல் பாடுகள் குறித்த ஆய்வின்போது, இந்தநிறுவ னம் 3,800 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கு வதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், சமீபத்தில், நிறுவனத்தின் சொத்துகளின் ...

தமிழக திட்டங்களுக்கு ஒப்புதல் ரயில்வே அமைச்சர் தகவல்

Posted: 03 Aug 2017 08:36 AM PDT

மதுரையிலிருந்து தென்மாவட்டங்களை உள்ளடக்கிய, மூன்று ரயில் தடங்களை, மின்மயத்துடன் கூடிய இரட்டைப் பாதைகளாக மாற்றுவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிஉள்ளது.இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுரேஷ் பிரபு, நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில், திருநெல்வேலி வழியாக, வாஞ்சி-- --மணியாச்சி இடையிலான ரயில் தடம், மின்மயமாக்கப்பட்ட இரட்டை பாதை யாக அமைப்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த, பொருளாதார விவகா ரங்களுக்கான மத்திய அமைச்சரவை, ஒப்புதல் வழங்கியுள்ளது. இது, 102 கி.மீ., நீளமுடையது; 1,003 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில், ...

தந்தை போல் அரவணைத்து வழிகாட்டிய பிரணாப்! கடிதத்தில் மோடி உருக்கம்

Posted: 03 Aug 2017 08:46 AM PDT

புதுடில்லி:நாட்டின் ஜனாதிபதியாக சிறப்பாக பணியாற்றியதை பாராட்டியும், மத்திய அரசுக்கு வழங்கிய வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித் தும், பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு எழுதிய கடிதத்தை, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

நாட்டின், 13வது ஜனாதிபதியாக பணியாற்றிய, மேற்கு வங்கத்தை சேர்ந்த, பிரணாப் முகர்ஜி யின் பதவிக் காலம், கடந்த மாதம், 24ல், நிறை வடைந்தது.காங்., கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவராக விளங்கிய பிரணாப், முன்னாள் பிரதமர்கள், இந்திரா, ராஜிவ், நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில், பல முக்கிய ...

கர்நாடகாவில் 2வது நாளாக 69 இடங்களில் 'ரெய்டு' தொடர்கிறது!

Posted: 03 Aug 2017 08:55 AM PDT

பெங்களூரு:குஜராத்தைச் சேர்ந்த, 44 எம்.எல். ஏ.,க்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள, கர்நாடக, காங்.,அமைச்சர், டி.கே.சிவகுமாருக்கு தொடர்புள்ள, 69 இடங்களில், நேற்றும் வரு மான வரி சோதனைகள் தொடர்ந்தன. இது வரை, 11.43 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப் பட்டு உள்ளது; நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை, அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர்.

குஜராத்தில், ஆக., 8ல் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில், காங்., தலைவர் சோனியாவின் அரசியல் செயலர் அஹமது படேல் போட்டியிடு கிறார். இந்நிலையில், காங்கிரசைச் சேர்ந்த, ஆறு எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தனர்; அதில், மூன்று பேர், பா.ஜ.,வில் இணைந்தனர். ...

அ.தி.மு.க., அணிகள் இணைப்பில் இழுபறி: குழப்பம் அதிகரிப்பு

Posted: 03 Aug 2017 10:36 AM PDT

அ.தி.மு.க., அணிகள் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்துள்ள நிலையில், இரு தரப்பினரும், ஒருவரை, ஒருவர் மீண்டும் வசைபாடத் துவங்கி உள்ளது, கட்சியில் குழப்பத்தை அதிகரித்துள்ளது.

அ.தி.மு.க., பன்னீர் அணி மற்றும் சசிகலா அணியை இணைக்க, சில மாதங்களுக்கு முன், சிலர் முயற்சித்தனர். இரு தரப்பிலும் பேச்சு நடத்த குழுவும் அமைக்கப்பட்டது. 'இரு அணிக ளும் இணைய, சசிகலா குடும்பத்தை, கட்சியில் இருந்து விலக்க வேண்டும். ஜெ., மறைவு குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்' என, பன்னீர் அணி நிபந்தனை விதித் தது. இதை, சசிகலா அணியினர் ஏற்கவில்லை.அதே நேரம், தொடர்ந்து ...

சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு தினகரன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை

Posted: 03 Aug 2017 10:39 AM PDT

புதுடில்லி:இரட்டை இலை சின்னம் பெற, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் மீது, போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரி கையை, டில்லி சிறப்பு நீதிமன்றம், பரிசீலனைக்கு எடுத்து கொண்டது.

அ.தி.மு.க.,வில், ஜெ., மறைவுக்கு பின் ஏற்பட்ட பிளவால், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, அ.தி.மு.க., சசிகலா அணி யின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன், தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன் றதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக் கில் கைது செய்யப்பட்ட, தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லி, ஜாமினில் விடுதலை யாகினர். லஞ்சம் ...

சசிகலாவுக்கு சிறப்பு சலுகையா? சட்டசபை குழு இன்று ஆய்வு

Posted: 03 Aug 2017 10:46 AM PDT

பெங்களூரு:பெங்களூரு சிறையில், அ.தி.மு.க., சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப் பட்டது குறித்து, கர்நாடக சட்டசபை பொது கணக்கு குழுவினர், இன்று அங்கு ஆய்வு செய்கின்றனர்.சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு தண் டனை பெற்று, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில், அ.தி.மு.க., சசிகலா, அவரது உறவி னர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் அடைக்கப் பட்டு உள்ளனர். சிறைத் துறை, டி.ஜி.பி.,யாக இருந்த சத்ய நாராயண ராவ், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்று, சிறையில், சசிகலா வுக்கு சிறப்பு சலுகை கள் செய்து கொடுத்ததாக, ஐ.பி.எஸ்.,அதிகாரி ரூபா குற்றஞ்சாட்டியிருந்தார்.ஜூலை, 21ல் நடந்த, ...

சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்த 4 அமைச்சர்களுக்கு...நோட்டீஸ்!

Posted: 03 Aug 2017 10:51 AM PDT

மதுரை:பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவை சந்தித்த நான்கு அமைச்சர்களை, தகுதி இழப்பு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு, 'நோட் டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்ததை தடுக்காத, முதல்வர் பழனிசாமி பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்த வர் தாமரைக்கனி. அ.தி.மு.க.,வில் போட்டியிட, 'சீட்' ஒதுக்காததால், தி.மு.க.,வில் இணைந்தார்; கடைசி வரை, தி.மு.க.,வில் இருந்தார். இவரது மகன் ஆணழகன், ...

துணை ஜனாதிபதி தேர்தல் சிறப்பம்சங்கள்

Posted: 03 Aug 2017 11:10 AM PDT

நாட்டின் 13-வது துணை ஜனாதிபதிக்கான தே்தல் நாளை (ஆக.,5-ல்) நடக்கிறது. அன்றே முடிவும் அறிவிக்கப்படும். பாஜசார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்கட்சிகள் சார்பில் கோபாலகிருஷ்ணன் காந்தியும் போட்டியிடுகின்றனர். துணை ஜனாதிபதி தொடர்பான சில சுவராஸ்யங்கள்.

இதுவும் ஜனாதிபதி தேர்தலைப் போல மறைமுக தேர்தல் தான். பார்லிமென்ட்டின் 2 சபைகளின் எம்.பி.,க்கள் மற்றும் நியமன எம்.பி.,க்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ஜனாதிபதி தேர்தலை போல எம்.எல்.ஏ., க்கள் வாக்களிக்க இயலாது. அதே போல நியமன எம்.பி.,களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கிடையாது. ...

இன்றைய(ஆக.,4) விலை: பெட்ரோல் ரூ.68.34; டீசல் ரூ.59.04

Posted: 03 Aug 2017 12:33 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.68.34காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.04காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,4) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 32 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.68.34 காசுகளாகவும், டீசல் விலை 27 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.59.04 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,4) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

சேகர் ரெட்டியை தமிழகத்திற்கு அறிமுகம் செய்தது யார்?

Posted: 03 Aug 2017 02:17 PM PDT

சென்னை : ''தமிழகத்திற்கு, சேகர் ரெட்டியை அறிமுகப்படுத்தியது, அமைச்சர் விஜயபாஸ்கர் தான்,'' என, அ.தி.மு.க., பன்னீர் அணியின், ஊடக ஒருங்கிணைப்பாளர், அஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
தவறு:
இது குறித்து அவர் கூறியதாவது: 'சேகர் ரெட்டியை தமிழகத்திற்கு, பன்னீர்செல்வம் தான் அறிமுகப்படுத்தினார்' என, அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்; அது, தவறானது. சேகர் ரெட்டியும், அமைச்சர் விஜயபாஸ்கரும், கல்லுாரி காலத்தில் இருந்தே, நெருங்கிய நண்பர்கள். அவர் தான், சேகர் ரெட்டியை தமிழக அரசியலுக்கு ...

'திருமணமானவரா, கன்னியா?': விண்ணப்பத்தில் சர்ச்சை

Posted: 03 Aug 2017 03:28 PM PDT

பாட்னா: 'நீங்கள் கன்னி கழியாதவரா?' என, பீஹார் மருத்துவக் கல்லூரி பணியாளர் நியமன விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்வியால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பீஹார் தலைநகர் பாட்னாவில், இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியில், பணியாளர் நியமனத்துக்கான உறுதிமொழி படிவத்தில், விண்ணப்பதாரரின் திருமண விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதில், 'திருமணமானவரா; வாழ்க்கை துணையை இழந்தவரா; கன்னி கழியாதவரா' என, கேட்கப்பட்டிருந்தது. அதாவது, ஆங்கிலத்தில், 'சிங்கிள்' என அச்சிடுவதற்கு பதில், 'விர்ஜின்' என, அச்சடிக்கப்பட்டிருந்தது. இது, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™