Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பா.ஜ.,வுடன் தேசியவாத காங்., கைகோர்ப்பு?: மத்திய அமைச்சராகிறார் சரத் பவார்

Posted: 28 Aug 2017 07:20 AM PDT

புதுடில்லி: பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில், விரைவில், தேசியவாத காங்., இணைய உள்ளது.

மத்திய அமைச்சரவை, இந்த வாரம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், அதில், தேசியவாத காங்., தலைவர், சரத் பவாருக்கு இடம் அளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. வரும், 2019ல் நடக்கும் லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில், பா.ஜ., இறங்கியுள்ளது.
பா.ஜ., அழைப்பு விடுத்தது.
சமீபத்தில், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், தே.ஜ., கூட்டணியில் மீண்டும் இணைந்தது; தே.ஜ., கூட்டணியில், பா.ஜ., ...

ஆட்சியை கவிழ்க்க முயற்சி : தி.மு.க., மீது முதல்வர் குற்றச்சாட்டு

Posted: 28 Aug 2017 07:50 AM PDT

''துஷ்ட சக்திகளுடன் இணைந்து, ஆட்சியை கவிழ்க்க, தி.மு.க., முயற்சிக்கிறது; அதை தடுத்து நிறுத்த வேண்டும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது.
எக்கு கோட்டை
கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''அ.தி.மு.க.,வை எக்கு கோட்டையாக, ஜெ., உருவாக்கி வைத்திருந்தார். அதை வீழ்த்த, பலரும் முயற்சிக்கின்றனர்.
''நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, அதை முறியடிக்க வேண்டும், ஜெ., வழியில், அனைவரும் ...

அவங்களே கவுந்திருவாங்க: ஸ்டாலின்

Posted: 28 Aug 2017 07:53 AM PDT

விருத்தாசலம்: ''இந்த அரசை, நாங்கள் கவிழ்க்க தேவையில்லை; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களே கவிழ்த்து விடுவர்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

விருத்தாசலத்தில் நேற்று நடந்த திருமண விழாவில், ஸ்டாலின் பேசியதாவது:முதல்வர் பழனிசாமி அரசு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு, தி.மு.க., சார்பில், கவர்னரிடம் இரண்டு முறை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.ஜனநாயக முறைப்படி, சபையை கூட்ட, சபாநாயகருக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும். ஆனால், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., அணிகளை சேர்த்து வைக்க, மும்பையிலிருந்து, மூன்று நிகழ்ச்சிகளை ரத்து செய்து, சென்னைக்கு ...

நீக்கவோ, நியமிக்கவோ தினகரனுக்கு அதிகாரமில்லை!: அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் அதிரடி தீர்மானம்

Posted: 28 Aug 2017 08:42 AM PDT

சென்னை: 'ஜெயலலிதாவால் அங்கீகரிக் கப்பட்ட நிர்வாகிகளை நீக்கவோ, புதிதாக சிலரை நியமிக்கவோ, தினகரனுக்கு எவ்வித உரிமையோ, தகுதியோ கிடையாது' என, முதல்வர் பழனிசாமி தலைமையில், நேற்று நடந்த, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பரபரப்பான சூழலில், அ.தி.மு.க., தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நேற்று அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. காலை, 10:05 மணிக்கு கூட்டம் துவங்கியது. அவைத் தலைவர் மதுசூதனன், தலைமை வகித்தார்.
கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:
• ...

டோக்லாமிலிருந்து இந்திய - சீன படைகள் வாபஸ்! 2 மாதமாக நிலவி வந்த நெருக்கடிக்கு தீர்வு

Posted: 28 Aug 2017 09:21 AM PDT

புதுடில்லி: இரு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த, டோக்லாம் எல்லை பிரச்னைக்கு, சுமுக தீர்வு காணும் வகையில், இரு நாடுகளும், படைகளை திரும்பப் பெறுவதென, முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா - சீனா - பூட்டான் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில், சாலை அமைக்க, சீனா முயன்றது; இதற்கு, நம் படைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்த பணிகளை நிறுத்தின. அதை தொடர்ந்து, சிக்கிம் எல்லையில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இரு நாட்டு படைகளும், அங்கு குவிக்கப்பட்டன.
ஜூன், 16ல் துவங்கிய இந்த பிரச்னைக்கு, தீர்வு காணும் வகையில், துாதரக உறவுகள் ...

'செக்ஸ்' சாமியாருக்கு 20 ஆண்டு சிறை; ஹரியானா, பஞ்சாபில் பலத்த பாதுகாப்பு

Posted: 28 Aug 2017 10:17 AM PDT

ரோதக்: பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவன், குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு, 20 ஆண்டு சிறை தண்டனையும், 30 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள சிர்சாவை தலைமையிடமாக வைத்து, செயல்பட்டு வருகிறது, தேரா சச்சா சவுதா அமைப்பு.
பெண் துறவிகள் புகார்
இதன் தலைவனான, குர்மீத் ராம் ரஹீம் சிங், ௫௧, தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக, இரண்டு பெண் துறவிகள் புகார் கூறியிருந்தனர். கடந்த, 2002ல், ...

செப்., 12 ! அ.தி.மு.க., பொதுக்குழு கூடும் தேதி அறிவிப்பு: சசிகலா, தினகரனை நீக்க மும்முரம்

Posted: 28 Aug 2017 10:33 AM PDT

அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் செப்., 12ல் சென்னையில் கூடுகிறது. இக்கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் கட்சி பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட உள்ளனர். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை அழைக்கும் ஏற்பாடுகள் நேற்று இரவோடு இரவாக துவங்கின.

அ.தி.மு.க.,வில், பன்னீர் - பழனிசாமி அணியினர், சமீபத்தில் இணைந்தனர். இவர்கள், சசிகலா குடும்பத்தை, கட்சியில் இருந்து முழுமையாக நீக்க, முடிவு செய்துள்ளனர். 'கட்சி விதிகளின்படி, சசிகலா, பொதுச்செயலராக தேர்வு செய்யப்படவில்லை. எனவே, அவர் நியமனம் ...

ஸ்டாலின் உட்பட 21 பேருக்கு உரிமை குழு, 'நோட்டீஸ்'

Posted: 28 Aug 2017 10:46 AM PDT

தடை செய்யப்பட்ட, 'குட்கா' போன்ற புகையிலை பொருட்களை, சட்டசபைக்கு எடுத்து வந்தது தொடர்பாக, ஸ்டாலின் உட்பட, 21 தி.முக., - எம்.எல்.ஏ.,க்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, சட்டசபை உரிமைக் குழு முடிவு செய்துள்ளது.

தமிழக சட்டசபை உரிமைக் குழு கூட்டம், நேற்று மாலை, 5:00 மணிக்கு, சென்னை, கோட்டையில் உள்ள, சட்டசபை வளாகத்தில், துணை சபாநாயகர், ஜெயராமன் தலைமையில் கூடியது. இக்குழுவில், துணை சபாநாயகர் உட்பட, மொத்தம், 17 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், எதிர்க்கட்சி தலைவர்ஸ்டாலினும், தினகரன் அணியில் உள்ள, மூன்று அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும், நேற்றைய கூட்டத்தில் ...

கோவை 'ஸ்மார்ட் சிட்டி' சி.இ.ஓ., ராஜினாமா; விதிமுறை தளர்வால் கிளம்பிய சர்ச்சை முடிவு

Posted: 28 Aug 2017 10:51 AM PDT

கோவை: கோவை, 'ஸ்மார்ட் சிட்டி' நிறுவன, சி.இ.ஓ., - முதன்மை செயல் அலுவலராக பணிபுரிந்த, அ.தி.மு.க., முன்னாள், எம்.எல்.ஏ., ராஜு மகள் சுகன்யா, பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

மத்திய - மாநில அரசுகளின் நிதியுதவி பெற்று, கோவையை பொலிவுபெற்ற நகரமாக மாற்ற, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஐந்து ஆண்டுகளில், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதன் முதன்மை செயல் அலுவலர் பதவிக்கு, ஆக., முதல் தேதி, நேர்காணல் நடத்தப்பட்டது. 21 பேர் விண்ணப்பித்ததில், 17 பேர் பங்கேற்றதாக, முதலில் மாநகராட்சி தெரிவித்தது. பின், மேலும் ஒருவர் சேர்க்கப்பட்டு, 18 ...

அசல் ஓட்டுனர் உரிமம்: ஐகோர்ட்டில் முறையீடு

Posted: 28 Aug 2017 12:52 PM PDT

சென்னை: வாகன ஓட்டிகள் செப்., 1 முதல், அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கும்படி பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

வாகன ஓட்டுனர்கள் அனைவரும், அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'டிராபிக்' ராமசாமி முறையிட்டு, நீதிமன்றம் முன்வந்து, வழக்கை விசாரிக்கும்படி, நேற்று கோரினார். மனு தாக்கலாகும் பட்சத்தில் விசாரணை செய்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
வாகன ஓட்டிகள் அனைவரும், செப்., 1 முதல், அசல் ஓட்டுனர் உரிமத்தை ...

சீன பட்டாசு மீது நடவடிக்கை உச்ச நீதிமன்றம் கேள்வி

Posted: 28 Aug 2017 01:16 PM PDT

புதுடில்லி, தீபாவளி பண்டிகைக்காக டில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் 50 லட்சம் கிலோ வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலால் ஆச்சரியம் அடைந்த நீதிபதிகள் 'இந்திய ராணுவத்திடம் இருப்பதை விட அதிகளவில், வெடிபொருட்கள் டில்லியில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது' என்றனர். சீன பட்டாசுகளை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்றும் நீதிபதிகள் கேள்வி ...

'மக்கள் விருப்பங்களை நிறைவேற்ற சிறகுகளை அளித்தது மத்திய அரசு'

Posted: 28 Aug 2017 01:39 PM PDT

புதுடில்லி, ''ஜன்தன் திட்டத்தால், நாட்டில், கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்களை நிறைவேறும் வகையில், மத்திய அரசு, சிறகுகளை அளித்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.பிரதமர், நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான, ஜன்தன வங்கி கணக்கு துவங்கி, மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது:ஜன்தன் திட்டம் துவங்கி, மூன்று ஆண்டுகள் முடிந்துள்ளன. இத்திட்டத்தால் பயனடைந்துள்ள, கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக, ஏழைகளுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். ஜன்தன் திட்டம், ...

பிரியங்கா விரைவில் 'டிஸ்சார்ஜ்'

Posted: 28 Aug 2017 02:58 PM PDT

புதுடில்லி: 'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், காங்., தலைவர் சோனியாவின் மகள், பிரியங்காவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.காங்., தலைவர் சோனியாவின் மகள், பிரியங்கா, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 23ல், டில்லி, கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், பிரியங்காவுக்கு காய்ச்சல் குறைந்து உள்ளதாகவும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கும் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™