Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை)

Posted: 28 Aug 2017 09:39 AM PDT

காதலாவது கத்தரிக்காயாவது ! (ஒருபக்கக் கதை) பம்பாயின் வெளிப்புறத்தில் அமைந்திருந்தது அப் பள்ளிக்கூடம். அதில் மிஸ்ரா என்றொரு இந்திப் பண்டிட் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். சேர்ந்த புதிதில் வேட்டி சட்டைதான் போட்டிருந்தார். சில நாட்களில் அங்கே ஆங்கில ஆசிரியை ஒருத்தி (அவள் பேர் மேரி) புதிதாகச் சேர்ந்தாள் வேலைக்கு. மிஸ்ராவின் அறையிலிருந்து பார்த்தால் மேரி தங்கியிருக்கும் அறை தெரியும். மிஸ்ரா மாலை நேரங்களில் அவரது அறை வாசலில் நிற்க, மேரி அவளது அறை வாசலில் நிற்க இருவர் பார்வைகளும் பொருந்தின! பார்வைகள் ...

பேரவை உரிமை குழு கூட்டம் நிறைவு; ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்

Posted: 28 Aug 2017 08:01 AM PDT

சென்னை, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்கு குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க கூறி நோட்டீஸ் அனுப்புவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் பொழுது தடை செய்யப்பட்ட குட்காவை கடந்த ஜூலை 19ந்தேதி பேரவைக்குள் கொண்டு வந்தனர் என கூறி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவை உரிமை குழு கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், ...

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Posted: 28 Aug 2017 07:50 AM PDT

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1 முகப்புரை குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் . ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை. திருவள்ளுவரைப்போலவே ...

போதையில் போருக்கு போன மன்னர்…

Posted: 28 Aug 2017 07:03 AM PDT

ஒவ்வொரு நாளும் செய்யும் வேலை!

Posted: 28 Aug 2017 07:02 AM PDT

ஒவ்வொரு நாளும் செய்யும் வேலை!

மானேஜர் - பத்து நாளா நானும் பார்க்கிறேன்! கொடுத்த வேலையைச் செய்யாமல் வேறு ஏதோ டைப் செய்துகொண்டிருக்கியே?அப்படி என்ன டைப் அடிக்கிறாய்?

கிளார்க் – ஒவ்வொரு நாளும் என்ன வேலை செய்கிறேன் என்று டைப் அடிக்கிறேன் சார்!

மானேஜர் - ?! ….?!.... ?! …

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 28 Aug 2017 06:56 AM PDT


-

-
-

வேட்கை

Posted: 28 Aug 2017 06:45 AM PDT

அந்த பெரிய கார்ப்பரேட் ஹாஸ்பிடலின் வாசலில் ட்ராஃபிக் மொத்தமும் வலது புறம் ஒதுங்கியது.  சைரன் அடித்தபடி ஆம்புலன்ஸ் திரும்பியது. பின்னாலேயே அதன் வேகத்தை தொடர்ந்தபடி ராஜேஷ் பைக்கில் நுழைவதை பார்த்தேன்.  அவன் கன்னம் துடைத்ததை நான் கவனிக்க தவறவில்லை.  அப்படின்னா அவன் அப்பா இல்லை அம்மாக்கு ஏதாச்சும்….? "ராஜேஷ்!" என்று என் குரல் சன்னமாய் வெடித்தது.  பைக்கில் பில்லியனில் இருந்த என் புது மனைவி, "என்னங்க ராஜேஷ்னு ஏதோ சொன்னீங்க?" என்று கேட்க ஆம்புலன்ஸை துரத்திய ராஜேஷ் பற்றி அவளிடம் கொஞ்சம் குறிப்பு ...

மன்னரை திட்டிப் பாடி பொற்கிழி பெற்ற புலவர்…!!

Posted: 28 Aug 2017 06:42 AM PDT

நம் மன்னர் மிகவும் எளிமை! – அதற்காக அந்தப்புரத்தை குடிசையிலா வைத்திருப்பது…! – கஸ்தூரி – ——————————- – பதுங்கு குழி தோண்டுறப்ப மக்கள் ரொம்பவும் எதிர்ப்பு காட்டுறாங்களே , ஏன்? – ஹைட்ரோகார்பன் எடுக்கத்தான் குழி தோண்டுறாங்கன்னு யாரா வதந்தி பரப்பி இருக்காங்க, மன்னா! – கிருத்திகா – ———————————- – புலவரே! மன்னரை திட்டிப் பாடினீர், மன்னர் சவுக்கடிதானே கொடுத்தார்… ஆனாலும் உமக்கு எப்படி பொற்கிழி கிடைத்தது? – மகாராணி கொடுத்தார் அமைச்சரே…! – குமாரவேல் – ———————————- வாரமலர்

மனைவி வந்த உடனே கண்ணைக் கசக்குறீங்களே…ஏன்?

Posted: 28 Aug 2017 06:41 AM PDT

நீங்க ஏன் உங்க மனைவி வந்த உடனே கண்ணைக் கசக்குறீங்க? - நான்தான் சொன்னேனே! என் மனைவி எனக்கு தூசி மாதிரின்னு... - வி.சாரதிடேச்சு ------------------------------------- - வீட்டிற்கு வர்ற விருந்தாளிகளை விரட்டறதுக்கு என்ன வழி வெச்சிருக்கே? - அப்ப மட்டும் என் மனைவி சமைப்பா...! - திருப்பூர் கிச்சா - --------------------------------------- பிச்சை எடுப்பவர்: - அம்மா, தாயே பழைய வேட்டி சட்டை செல்போன் இருந்தா போடுங்க தாயே...! - வஸந்தி சிவராஜ் - ----------------------------------------- - இதுதான் ...

மனிதன் எப்போது ஞானியாவான்...?

Posted: 28 Aug 2017 06:40 AM PDT

சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!* பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!* தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!* பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!* இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!* *பக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.!* செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!* வேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.!* பிரம்மச்சரியத்தோடு *பக்தி* ...

யவனிகா - ஒரு பக்க கதை

Posted: 28 Aug 2017 06:38 AM PDT

நீதிபதியின் சுத்தியல்!

Posted: 28 Aug 2017 06:38 AM PDT

நீதிபதியின் சுத்தியல்!

ஆசிரியர் - "அருணாசலம்! எங்கே நீ எழுதிய கவிதையைப் படி ?"

மாணவன் – " கண்டக்டர் ! கண்டக்டர் ! கண்டக்டர்!
கண்டக்டரிடம் விசிலைக் கேட்டேன்!
ஆசிரியர்! ஆசிரியர்! ஆசிரியர் !
ஆசிரியரிடம் சாக்பீஸ் கேட்டேன் !
நீதிபதி! நீதிபதி! நீதிபதி!
நீதிபதியிடம் சுத்தியல் கேட்டேன்!"

ஆசிரியர்- ?! .. ?! ..?! ….

சென்னையில் புதிய ரூ.200, 50 நோட்டுக்கள் விநியோகம்

Posted: 28 Aug 2017 02:55 AM PDT


-
சென்னை :
சென்னை ரிசர்வ் வங்கியில் புதிய ரூ.200, ரூ.50 நோட்டுக்கள்
இன்று விநியோகம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நோட்டுக்கள் ஏடிஎம்.,களில் புழக்கத்திற்கு வர
மேலும் சில நாட்கள் ஆகும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

———————————
தினமலர்

மகனிடம் திருட்டு:டுவிட்டரில் கதறிய சுகாசினி

Posted: 28 Aug 2017 02:20 AM PDT

சென்னை : பிரபல டைரக்டர் மணிரத்னம் - நடிகை சுகாசினி தம்பதியின் மகன் நந்தன். இத்தாலியின் பெலின்னோ நகரில் நந்தனின் பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டு விட்டதாகவும், அவர் வெனிஸ் விமான நிலையத்திற்கு வர யாராவது உதவி செய்யுமாறும் நடிகை சுகாசினி நேற்று (ஆக.,27) இரவு 7 மணியளவில் டுவிட்டரில் பதிவிட்டார். தனது மகனின் இருப்பிடம் மற்றும் மொபைல் போன் எண்ணை குறிப்பிட்டிருந்த சுகாசினி, உதவிய செய்ய முடிந்தவர்கள் மட்டும் தனது மகனை தொடர்பு கொள்ளுமாறும், மற்றவர்கள் வீணாக போன் செய்து மகனின் ...

117 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு

Posted: 28 Aug 2017 02:14 AM PDT

சென்னை: சென்னை, ராயபேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்தது. இதன் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி பொதுக்குழு தேதி, இடம் முறையாக அறிவிக்கப்படும். 117 எம்.எல்.ஏ.,க்கள், பெரும்பான்மையான எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர். நமது எம்.ஜி.ஆர்., பத்திரிகை, ஜெயா டிவி ஆகியவற்றை சட்டப்படி மீட்க, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - ------------------------------------------ தினமலர்

உடைந்த நிலாக்கள் - பா விஜய் மின்நூல் இருந்தால் பகிருங்களேன்

Posted: 27 Aug 2017 09:32 PM PDT

உடைந்த நிலாக்கள் - பா விஜய் மின்நூல் மூன்று பாகங்கள் மின்னூல் இருந்தால் பகிருங்களேன்.

இந்த புத்தகம் நூல் வடிவில் எங்கு கிடைக்கும்.

நன்றி

கொடுப்பினை! – கவிதை

Posted: 27 Aug 2017 07:16 PM PDT

மனித வாழ்வில் எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு விதத்தில் கொடுத்து வைத்திருக்க வேண்டும்… மனை, மனைவி மகன், மருமகன் மகள், மருமகள், சம்மந்தி மாமியார், மாமனார்… சொந்த பந்தம் உற்றார் உறவினர் சுற்றம் நட்பு… உண்மையான ஊழியர்கள் அன்பு காட்டும் முதலாளி பண ஆசையற்ற மருத்துவர்… நல்ல வாகனம் நல்ல ஓட்டுனர் வழக்கறிஞர், ஆடிட்டர்… இத்தனைக்கும் கொடுத்து வைத்திருந்தாலும் எத்தனை பேருக்கு கொடுத்து வைத்திருக்கிறது… சிரித்துக் கொண்டே இறப்பதற்கு! – —————————– 'சொல்கேளான்' ஏ.வி.கிரி, சென்னை. நன்றி- ...

அ.தி.மு.க. எம்.எல்.ஏ-எம்.பி.க்கள் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது

Posted: 27 Aug 2017 07:12 PM PDT

சென்னை, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 7 மாத காலமாக இரண்டாக பிளவு பட்டு நின்ற அ.தி.மு.க., கடந்த 21-ந் தேதி இணைந்தது. இரு அணிகளை வழிநடத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்தனர். இதையடுத்து, அ.தி.மு.க.வை வழிநடத்த 15 பேர் கொண்ட குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். தற்காலிகமாக கட்சியை வழிநடத்தவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான இந்த குழு அமைக்கப்பட்டது. எனவே, ...

அரசியல் கார்ட்டூன்

Posted: 27 Aug 2017 07:02 PM PDT

'சர்ஜிகல் ஸ்டிரைக்' இதற்கு முன் நடந்ததா?

Posted: 27 Aug 2017 06:45 PM PDT

புதுடில்லி: 'சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும், ராணுவத்தின் துல்லியமான அதிரடி தாக்குதல் நடவடிக்கைகள், இதற்கு முன் நடந்ததற்கான எந்த ஆவணங்களும், ஆதாரங்களும் இல்லை' என, ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த, பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும் துல்லியமான தாக்குதலை, நம் ராணுவம், 2016, செப்., 29ல் நடத்தியது. இதில், அந்த முகாம்கள் அழிக்கப்பட்டன; 20க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் ...

திருடவே முடியாது : ஆதார் திட்டவட்டம்

Posted: 27 Aug 2017 05:57 PM PDT

புதுடில்லி: யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம், ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக வந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது. நாடு முழுவதும், 115 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள், அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வால் திருடப்படுவதாக, சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியானது.இதை, ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது. இதுகுறித்து, ஆதார் ஆணையம் வெளியிட்ட அறிக்கை விபரம்: 'பயோமெட்ரிக்' முறையில் ...

ரூ.70 ஆயிரம் கோடியை வசூலிக்க பொதுத்துறை வங்கிகள் அதிரடி

Posted: 27 Aug 2017 05:55 PM PDT

புதுடில்லி: வாங்கிய கடனை, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத, 5,954 பேரிடம், 70 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் நடவடிக்கைகளை, பொதுத்துறை வங்கிகள் மேற்கொண்டுள்ளன. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2016 - 17 நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத நபர்கள், பாக்கி வைத்துள்ள தொகை, 92 ஆயிரத்து, 376 கோடி ரூபாய். முந்தைய, 2015 - 16 நிதியாண்டில், இந்த தொகை, 76 ஆயிரத்து, 685 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த, 2017, மார்ச், 31 வரை, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™