Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஸ்டாலின், தினகரன் இணைந்து கூட்டணி ஆட்சி: சாமி கணிப்பு

Posted: 27 Aug 2017 03:10 AM PDT

சென்னை: தமிழகத்தில் திருப்புமுனையாக ஸ்டாலின், தினகரன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பார்கள் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பரமணிய சாமி கூறியுள்ளார். தமிழக ஆளும் அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், தினகரன் தலைமையில் ஒரு அணியுமாக செயல்பட்டு வருகின்றன. முதல்வர் மீது நம்பிக்கை இழந்து விட்டோம். முதல்வரை மாற்ற வேண்டும் என தினகரன் தரப்பினர் கவர்னரிடம் கடிதம் வழங்கியுள்ளனர். இந்நிலையில் திமுகவினர் இன்று கவர்னரை சந்தித்து சட்டசபையை கூட்ட வேண்டும் என கடிதம் வழங்கியுள்ளனர். முதல்வர் பெரும்பான்மை இழந்து விட்டார் என்றும் எடுத்து ...

சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும்... தப்ப முடியாது!

Posted: 27 Aug 2017 08:16 AM PDT

புதுடில்லி: ''அரசியல், மதம் ஆகிய விஷயங் களில், எந்த நம்பிக்கையின் அடிப்படையிலும் வன்முறைகள் நடப்பதை ஏற்க முடியாது; சட்டத்தை கையில் எடுப்போர் கடுமையாக தண்டிக்கப்படுவர், ''என, பிரதமர், நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், 'மன் கீ பாத்' என்ற பெயரில், ரேடியோ மூலம், உரை நிகழ்த்தி வருகிறார். இம்மாத நிகழ்ச்சி, நேற்று ஒலிபரப்பானது.தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவனான குர்மித் ராம் ரஹீம், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என, நீதிமன்றம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அவனது அமைப்பைச் சேர்ந்தவர்கள், பஞ்சாப், ஹரியானா, ...

'குடும்பத்தினரை பார்ப்பது எப்போது?' தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் புலம்பல்!

Posted: 27 Aug 2017 09:03 AM PDT

புதுச்சேரி: புதுச்சேரியில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க் களை வழிநடத்திய தங்கதமிழ் செல்வன், தொகுதி பக்கம் சென்று விட்டதால், 'நாம் மட்டும் எத்தனை நாட்கள் இங்கேயே தங்கி இருப்பது' என, பிற எம்.எம்.ஏ.,க்கள் விரக்தியில் உள்ளனர்.

புதுச்சேரி, சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள, 'தி விண்ட் பிளவர்' என்ற ஆடம்பர ரிசார்ட்டில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், 22ம் தேதி தங்க வைக்கப்பட்டனர். விடுமுறை நாட்களில், அந்த விடுதி ஏற்கனவே, புக்கிங் செய்யப்பட்டதால், அங்கிருந்து புறப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள், நுாறடி சாலையில் உள்ள, 'சன்வே மேனர்' என்ற மூன்று நட்சத்திர ...

அ.தி.மு.க., ஆட்சி கவிழும்: ஸ்டாலின் பேச்சு

Posted: 27 Aug 2017 09:15 AM PDT

திருவாரூர்:''அ.தி.மு.க., அரசு தானாக கவிழும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

திருவாரூர் அருகே, கொரடாச்சேரியில், நேற்று நடந்த திருமண விழாவில் அவர் பேசியதாவது:முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என, 19, எம்.எல்.ஏ.,க்கள், தனித்தனியாக, கவர்னரிடம் மனு கொடுத்துள்ளனர். மேலும், தினமும் ஓரிரு, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக தெரிவிக்கின்றனர். எனவே, உடனே சட்டசபையை கூட்டி,பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும்.சட்டசபையை கூட்ட, கவர்னர் உத்தரவிடா விட் டால், ஜனாதிபதியிடம் முறையிடுவோம். அதிலும், பலன் இல்லையெனில், ...

 தமிழக அரசியலில் இன்று முதல் அதிரடி ஆட்டம் எதிர்பாா்ப்பு!

Posted: 27 Aug 2017 10:01 AM PDT

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி துாக்கி யுள்ள நிலையில், தமிழக அரசியலில் இன்று முதல் அதிரடி ஆட்டம் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

.தி.மு.க., தலைமையகத்தில், இன்று நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலர் பதவியை பறிக்க, முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், தலைமை செயலகத்தில், சட்டசபை உரிமை குழு கூடி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கிறது. இந்த இரு கூட்டங்களிலும் எடுக்கப்படும் முடிவுகள், தமிழக அரசியலில் புயலை கிளப்ப லாம் என்பதால், ஆளும் கட்சி ...

ஒரே சமயத்தில் தேர்தல்: 'நிடி ஆயோக்' ஆதரவு

Posted: 27 Aug 2017 10:18 AM PDT

புதுடில்லி: வரும், 2024 முதல், நாடு முழுவதும், லோக்சபா, சட்டசபை தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்த, 'நிடி ஆயோக்' அமைப்பு, ஆதரவு தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு, திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை அளித்து வரும் அமைப்பான, 'நிடி ஆயோக்' சமீபத்தில், அறிக்கை ஒன்றை, மத்திய அரசிடம் சமர்ப் பித்துள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டின் நலன் கருதி, 2024 முதல், நாடு முழுவதும் ஒரே சமயத்தில், லோக்சபா, சட்டசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்; இந்த தேர்தல்களை, இரு கட்டமாக நடத்த லாம். இதை நிறைவேற்ற, ஒரு சில மாநிலங் களில் சட்டசபைத் தேர்தல்களை முன் கூட்டியோ ...

'ஜன்தன், ஆதார், மொபைல் இணைப்பு சமுதாய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன'

Posted: 27 Aug 2017 10:27 AM PDT

புதுடில்லி:''ஜன்தன், ஆதார், மொபைல் இணைப்பு மூலம் மிக பெரிய சமுதாயபுரட்சியை நோக்கி, நாம் பயணிக்கிறோம்,'' என, மத்திய நிதிஅமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்தார்.

ஜன்தன் திட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, 'பேஸ்புக்' சமூகவலைதளத்தில் வெளி யிட்டு உள்ள பதிவில் கூறியுள்ளதாவது:ஒரு நாடு, ஒரு சந்தை, ஒரே வரி என்ற கோஷத்தோடு,ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; அதன் மூலம், ஒரே சந்தை உருவாகிஉள்ளது.நாட்டு மக்களை, நிதி, பொருளாதாரம், டிஜிட்டல் ...

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வருமா? துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விளக்கம்

Posted: 27 Aug 2017 10:41 AM PDT

சென்னை:''மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்துஒற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை உருவாக்க முடியும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 68, தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலையில் நடந்த, 'புதிய இந்தியாவை உருவாக்குவோம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றார்.
ஒப்பந்தம்
மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:வேளாண்மைக்கும், உற்பத்திக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறி விட்டு, வெளிநாட்டு பொருட்களை இந்தியாவில் அனுமதிப்பது ஏன்?சர்வதேச வர்த்தக அமைப்பில் நாம் ...

தேசிய அளவில் மெகா கூட்டணி: பீஹாரில் சரத் யாதவ் சூளுரை

Posted: 27 Aug 2017 10:46 AM PDT

பாட்னா:''பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு எதிராக பீஹாரில் அமைத்ததைப் போல், தேசிய அளவில் மெகா கூட்டணியை அமைப்போம்,'' என, ஐக்கிய ஜனதா தள அதிருப்தி தலைவர், சரத் யாதவ் கூறினார்.

பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவ் நேற்று நடத்திய, 'பா.ஜ.,வை விரட்டுவோம், நாட்டை காப்பாற்றுவோம்' என்ற தலைப்பிலான பேரணியில், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.பீஹாரில், பா.ஜ.,வுடன் கூட்டணி அரசு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, ஐக்கிய ஜனதா தளத்தின் அதிருப்தி தலைவர் சரத் யாதவ் இந்த பேரணியில் பங்கேற்றார். கட்சியின் ...

முதல்வர் பழனிசாமியிடமிருந்து மாவட்ட செயலர் பதவி பறிப்பு

Posted: 27 Aug 2017 10:55 AM PDT

சென்னை:சேலம் புறநகர் மாவட்ட செயலர் பதவியிலிருந்து, முதல்வர் பழனிசாமியை நீக்கி விட்டு, முன்னாள் எம்.எல்.ஏ., - எஸ்.கே. செல்வத்தை, அப்பதவிக்கு நியமித்துள்ளதாக, தினகரன் நேற்று அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க.,வில், இரு அணிகள் இணைந்த பின், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல் வமும், இணை ஒருங்கிணைப் பாளராக, முதல் வர் பழனிசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில்,பொதுகுழுவை கூட்டி, சசிகலாவை கட்சியை விட்டு நீக்குவதற்கான நடவடிக்கையில், ஒருங்கிணைப்புக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில்,பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்வகித்து வரும் ...

புதிய இந்தியாவை உருவாக்க உழையுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

Posted: 27 Aug 2017 11:54 AM PDT

புதுடில்லி: புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் தெளிவான கொள்கையுடன் உழையுங்கள் என அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஒவ்வொரு அமைச்சகங்களில் முதன்மை நிலை மற்றும் செயலாளர்களுடன் பிரதமர் மோடி பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு அமைச்சகமும் இதுவரை ஆற்றியுள்ள பணிகள், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்ற விதம் தொடர்பாக அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.
அடுத்தடுத்து ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் செயல்படுத்த வேண்டிய ...

'சர்ஜிகல் ஸ்டிரைக்' இதற்கு முன் நடந்ததா?

Posted: 27 Aug 2017 02:47 PM PDT

புதுடில்லி: 'சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும், ராணுவத்தின் துல்லியமான அதிரடி தாக்குதல் நடவடிக்கைகள், இதற்கு முன் நடந்ததற்கான எந்த ஆவணங்களும், ஆதாரங்களும் இல்லை' என, ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த, பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும் துல்லியமான தாக்குதலை, நம் ராணுவம், 2016, செப்., 29ல் நடத்தியது. இதில், அந்த முகாம்கள் அழிக்கப்பட்டன; 20க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் குறித்தும், இதற்கு முன் நடந்த தாக்குதல்கள் ...

ரூ.70 ஆயிரம் கோடியை வசூலிக்க பொதுத்துறை வங்கிகள் அதிரடி

Posted: 27 Aug 2017 04:06 PM PDT

புதுடில்லி: வாங்கிய கடனை, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத, 5,954 பேரிடம், 70 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் நடவடிக்கைகளை, பொதுத்துறை வங்கிகள் மேற்கொண்டுள்ளன.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2016 - 17 நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத நபர்கள், பாக்கி வைத்துள்ள தொகை, 92 ஆயிரத்து, 376 கோடி ரூபாய். முந்தைய, 2015 - 16 நிதியாண்டில், இந்த தொகை, 76 ஆயிரத்து, 685 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த, 2017, மார்ச், 31 வரை, கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத, 5,954 பேரிடம், 70 ஆயிரம் கோடி ரூபாய் கடனை ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™