Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'மெஜாரிட்டி'யை நிரூபிக்க அவசியமில்லை! தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மனு வெத்துவேட்டு

Posted: 26 Aug 2017 06:02 AM PDT

முதல்வர் பழனிசாமி மீது, நம்பிக்கை இழந்து விட்டதாக, அதிருப்தி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள், 19 பேர், கவர்னரிடம் மனு அளித்து உள்ளனர்.

இந்த கடிதத்தின் அடிப்படையில், பெரும் பான்மையை நிரூபிக்க, சட்டசபையை கூட்ட வேண்டும் என, அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.அரசு, அமைச்சரவை யின் மீது நம்பிக்கையில்லை எனக்கூறாத பட்சத்தில், சட்ட சபையை கூட்ட வேண்டிய அவசியமில்லை என, கருதப்படுகிறது.சட்டசபை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தலைவ ராக, பழனிசாமி தேர்ந்தெடுக்கப் பட்டதை தொடர்ந்து, அவரை ஆட்சி அமைக்க, கவர்னர் அழைப்பு விடுத்தார். பின், சட்டசபையிலும், நம்பிக்கை ...

தடை நீங்கியது தெரியாமல் செயல்பட்ட அணிகள்

Posted: 26 Aug 2017 06:07 AM PDT

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக மட்டுமே, அ.தி.மு.க., பெயரை, இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த, இரண்டு அணியின ருக்கும், தேர்தல் கமிஷன் தடை விதித்தது. தேர்தல் ரத்தான பிறகும், இரு தரப்பினரும், 'அம்மா' மற்றும், 'புரட்சி தலைவி' அணி என்ற, பெயர்களில் இயங்கி வந்தது புதிராக உள்ளது.

அ.தி.மு.க.,வுக்கு, பொதுச்செயலரை தேர்ந் தெடுக்கும் வரை, சசிகலாவை, பொதுச் செயல ராக நியமித்து, ௨௦௧௬ டிசம்பரில் நடந்த பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின், சசிகலா நியமனத்தை எதிர்த்து, தேர்தல் கமிஷனில், பன்னீர்செல்வம் தலைமையிலான அணியை சேர்ந்த மதுசூதனன் உள்ளிட்டோர் மனு ...

லாலு பேரணியில் பங்கேற்காமல் தலைவர்கள்... ஓட்டம்!

Posted: 26 Aug 2017 06:51 AM PDT

பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவ் நடத்தும், பா.ஜ.,வுக்கு எதிரான பேரணி யில் பங்கேற்க, எதிர்க்கட்சித் தலைவர்கள் தயக்கம் காட்டுவதால், தேசிய அரசியலில், அவர், தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 2015ல் நடந்த சட்டசபை தேர்தலில், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றன; இந்த கூட்டணியில், காங்கிரசும் இடம் பெற்றது.இதையடுத்து, பீஹார் முதல்வராக நிதிஷ் குமார் ...

மத்திய அரசின் நெருக்கடி, ஆய்வுகளால் தமிழக அதிகாரிகள்... கலக்கம்  

Posted: 26 Aug 2017 08:30 AM PDT

தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச் சித் துறையில்,பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், வளர்ச்சித் திட்டங் கள் ஆய்வு என்ற பெயரில், மத்திய அரசு அதி காரிகளின் கண்காணிப்பு அதிகமாக உள்ளதும், பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் உட்பட, பல விஷயங்களில், நெருக்கடி தருவதும், தமிழக அரசு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதற்கேற்ற வகையில், பிரதமர் மோடிக்கு மிகவும் நம்பகமானவராக கருதப்படும், துணை முதல்வர் பன்னீர்செல்வம், இந்த துறைக்கு பொறுப்பேற்றிருப்பதும், அவர்களை பீதியடைய செய்துள்ளது.நாடு முழுவதும், 'ஸ்மார்ட் ...

வாகன ஓட்டுனர்கள், 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருப்பது...கட்டாயம்

Posted: 26 Aug 2017 10:12 AM PDT

'வாகனம் ஓட்டுவோர், 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருக்க வேண்டும்' என்ற அரசின்உத்த ரவு, செப்டம்பர், ௧ம் தேதி முதல் கட்டாயமாகி றது. மீறுவோர் மீது, சட்ட நடவடிக்கை பாயும் என, காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில், டூ - வீலர், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு என, தனித்தனி லைசென்ஸ் வழங்கப்படுகிறது. அவை, ஆர்.டி.ஓ., எனப்படும், வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன. லைசென்ஸ் பெறுவதற்கு முன், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், எல்.எல்.ஆர்., என்ற, பழகுனர் உரிமம் பெற வேண்டும். பின், ஒரு மாதம் கழித்து, லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கலாம்.அப்போது, விண்ணப்பதாரர் ...

கலவரத்தை வேடிக்கை பார்த்த ஹரியானா அரசுக்கு... கண்டிப்பு!

Posted: 26 Aug 2017 10:19 AM PDT

பஞ்ச்குலா:'தேரா சச்சா சவுதா' ஆன்மிக அமைப்பு தலைவன், குர்மீத் ராம் ரஹிம் சிங், 51, பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, வன்முறை பரவி யதை தடுக்கத் தவறிய ஹரியானா அரசை, பஞ்சாப் - ஹரியானா மாநில உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. மத்திய அரசுக் கும், சரமாரியான கேள்விகளை எழுப்பியது.

ஹரியானாவில், முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சியும், பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமை யிலான, காங்., ஆட்சியும் நடக்கிறது. இந்த மாநிலங்களில், 'தேரா சச்சா சவுதா' என்ற ஆன்மிக அமைப்பு, பிரபலமாக விளங்குகிறது. இந்த அமைப்பின் ...

பழைய நிர்வாகிகளுக்கு வலை

Posted: 26 Aug 2017 10:23 AM PDT

அ.தி.மு.க.,வில் பொறுப்பில் இல்லாத பழைய நிர்வாகிகளிடம், கட்சிப் பதவி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, இழுக்கும் முயற்சியில் தினகரன் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

ஜெ., மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களுக்கு பின், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., அணிகள் இணைந்து, மன்னார்குடி கும்பலை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஆசை வார்த்தை
இரு அணிகளும் இணைந்து விட்டதால், தினகரன் தரப்புக்கு, கட்சியில் தொண்டர்கள் பலம் இல்லை;முக்கிய நிர்வாகிகளும் இல்லை. இதனால்,மாவட்டம்தோறும் பலத்தை நிரூபிக்க, தினகரன் ஆதரவாளர்கள் புது ...

சி.ஐ.ஏ., வசம் ஆதார் தகவல்கள்? பரபரப்பு தகவல் அம்பலம்

Posted: 26 Aug 2017 10:38 AM PDT

மும்பை:'ஆதார்' தகவல்களை அணுகும் தொழில்நுட்பம், அமெரிக்காவின் உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வுக்கு கிடைத்து உள்ளதாக வெளியான பரபரப்பு தகவலை, அரசு அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.

நாடு முழுவதும், 115 கோடி பேரின் தனித் தகவல்கள், ஆதார் ஆணையத்தால் சேகரிக்கப் பட்டு, அடையாள அட்டைகள் வழங்கபட்டுள் ளன. ஆதார் அட்டைகளை வழங்கி வரும்,யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடை யாள அட்டை ஆணையத்துக்கு, 'பயோமெட்ரிக்' எனப் படும், தகவல் சேகரிப்பு தொழில் நுட்பத்தை, சி.எம்.டி., எனப்படும், 'கிராஸ் மேட்ச்டெக்னாலஜிஸ்' நிறுவனம் வழங்கி வருகிறது.அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனம், அமெரிக் காவின் உளவு ...

சட்டசபையில் பலப்பரீட்சை: அ.தி.மு.க.,வில் திக்... திக்...

Posted: 26 Aug 2017 11:08 AM PDT

சட்டசபையில், மீண்டும் நம்பிக்கை ஓட்டெ டுப்பை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம், அ.தி.மு.க., வட்டாரத்திலும், தி.மு.க., - எம்.எல். ஏ.,க்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவரோ என்ற கவலை, எதிர்க்கட்சி வட்டாரத்திலும் எழுந்துள்ளது.

போர்க்கொடி
சட்டசபையில், 122 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்த, ஆறு மாதங் களு க்கு பின், முதல்வர்பழனிசாமி அணி, பன்னீர் செல்வம் அணியுடன், 22ம் தேதி இணைந்தது. அதை ஏற்காமல், தினகரன் போர்க் கொடி துாக்கியுள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவிக் கும், 19 எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், முதல்வரை பதவி நீக்கக் கோரி, கவர்னரிடம் மனு கொடுக் ...

'ஆன் - லைனில்' விண்ணப்பிப்பதில் சிக்கல் 10 லட்சம் மனை உரிமையாளர்கள் அதிருப்தி

Posted: 26 Aug 2017 11:41 AM PDT

ஒன்றுக்கு மேற்பட்ட சர்வே எண்கள் உடைய மனைகளை வரன்முறை செய்ய, 'ஆன் - லைன்' திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாததால், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மனை உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.
தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டத்தை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மே, 4ல் அறிவித்தது. இதில், மனை உரிமையாளர்கள், மனைப்பிரிவு உரிமையாளர்கள், நவ., 3க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும், 13 லட்சம் அங்கீகாரம் இல்லாத மனைகள் இருக்கும் நிலையில், இதுவரை, 5,000த்துக்கும் குறைவான மனுக்களே வந்துள்ளன.கருத்து ...

அஞ்சலகங்களில் விரைவில் ஆதார் மையம்

Posted: 26 Aug 2017 12:50 PM PDT

ஆதார் விபரங்கள் தொகுக்கும் பணியும், திருத்தங்கள் செய்யும் பணியும் மீண்டும், அஞ்சல் துறை வசமாகிறது. தமிழக அஞ்சலங்களில், இதற்கான பிரத்யேக மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

நாட்டில் குறைந்தது, 182 நாட்கள் வசித்த ஒருவர், ஆதார் அட்டை பெறலாம். இது, ஆரம்பத்தில் அஞ்சலகங்களில் வழங்கப்பட்டது; பின், தனியார் வசம் சென்றது.இதுவரை, 100 கோடி பேர் ஆதார் எண் பெற்று உள்ளனர். தினமும், மூன்று லட்சம் பேர் வரை, ஆதார் விபரங்களை
திருத்தம் செய்து வருகின்றனர்.
ஆதார் தொகுப்பு தனியார் வசம் உள்ளதால், தனிநபரின் ரகசியங்கள் திருட்டு போவதாக குற்றச் சாட்டு ...

தமிழகத்தில் 10 பல்கலைகளுக்கு தொலைநிலை கல்வி அனுமதி, 'கட்'

Posted: 26 Aug 2017 02:32 PM PDT

தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை மற்றும் மதுரை காமராஜர் உட்பட, 10 பல்கலை
களுக்கு, தொலைநிலை கல்விக்கான அனுமதி கிடைக்கவில்லை. அதனால், பல்கலை நிர்வாகத்தினர் குழப்பமடைந்து உள்ளனர்.
15 லட்சம் பேர்
தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில், 13 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றின் உறுப்புக் கல்லுாரிகளில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளும், பல்கலைகளில் நேரடியாகவும், தொலைநிலை கல்வியிலும்,பல்வேறு படிப்புகளும் நடத்தப்படுகின்றன.மாநிலம் முழுவதும், தொலைநிலை கல்வியில் மட்டும், ஆண்டுக்கு, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™