Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


வேகமெடுக்கிறது பாடத்திட்ட மாற்றம் ஆசிரியர்களுக்கும் கற்பிக்கப்படும்

Posted: 25 Aug 2017 06:30 AM PDT

புதிய பாடத்திட்ட தயாரிப்புடன், ஆசிரியர்களுக் கான கற்பித்தல் முறையை மாற்றவும், அவர்க ளின் பயிற்சிக்கு, புதிய விதிகள் அடங்கிய புத்தகம் தயாரிக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், 14 ஆண்டுகள் பழமையான, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம்; ஏழு ஆண்டு கள் பழமையான, 1 - 10ம் வகுப்பு வரையிலான, பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. இதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட் டையன் தலைமையில், உயர்மட்டக் குழுவும், அண்ணா பல்கலையின் முன்னாள் துணை
வேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையில், பாடத்திட்டத்துக்கான கலைத்திட்டக் குழுவும் அமைக்கப்பட்டு ...

தமிழக மின் வாரிய செயல்பாடு மத்திய அரசு பாராட்டு

Posted: 25 Aug 2017 06:32 AM PDT

நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் வாரியம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை, மத்திய அரசு பாராட்டி உள்ளது.

தமிழகத்தில், 2008ல், மின் பற்றாக்குறை ஏற்பட்டதால், மின் தடை அமல்படுத்தப்பட்டது. இதை, சாதகமாக பயன்படுத்தி, தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம், உபகரணங்கள், நிலக்கரி வாங்கியதால், மின் வாரியத்திற்கு, கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.வட சென்னை விரிவாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட புதிய மின் நிலையங்களில் இருந்து, 2014முதல், கூடுதல் மின்சாரம் கிடைத்ததால், மின் தடை அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.
2015 ஜன., முதல், இதுவரை, அதிக விலை மின்சாரம் ...

'முத்தலாக் நடைமுறை செல்லும்!'முஸ்லிம் மத தலைவர் கருத்து

Posted: 25 Aug 2017 07:13 AM PDT

ஐதராபாத்'மூன்று முறை, 'தலாக்' கூறி விவா கரத்து பெறும் முறை தவறு, பாவச் செயல்; ஆனால், மூன்று முறை தலாக் கூறி, விவா கரத்து பெறுவது செல்லும்' என, ஜமாயித்தே உலாமா ஹிந்த் அமைப்பின் தெலுங்கானா, ஆந்திரா பிரிவு தலைவர் கூறியுள்ளார்.

பாவச் செயல்
'முஸ்லிம்களின், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறை, சட்டவிரோத மானது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.இந்நிலையில், முஸ்லிம் மதத் தலைவர்கள் அடங்கிய, முஸ்லிம்களின் சமூக - மத அமைப்பான, ஜமாயித்தே உலாமா ஹிந்த் அமைப்பின், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ...

தேரா சச்சா சவுதா' ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக...வன்முறை! ராம் ரஹீம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் வெறிச்செயல்

Posted: 25 Aug 2017 08:25 AM PDT

பஞ்ச்குலா'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர், குர்மீத் ராம் ரஹீம் சிங், 60, பலாத் கார வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தால், ஆத்திரமடைந்த அவருடைய ஆதரவாளர்கள், வன்முறையில் ஈடுபட்டனர்.

ஹரியானா, பஞ்சாப், டில்லி மாநிலங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில், 31 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். போலீஸ் வாகனங்கள் உட்பட பொது சொத்து கள் சேதப்படுத்தப்பட்டன. ஹரியானாவில், முதல்வர், மனோகர் லால் கட்டார் தலைமை யிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள சிர்சாவை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டு வருகிறது, தேரா சச்சா சவுதா அமைப்பு. இதன் தலைவரான, குர்மீத் ராம் ரஹீம் ...

இந்த ஆட்சி இனியும் நீடிக்க கூடாது: ஸ்டாலின்

Posted: 25 Aug 2017 09:42 AM PDT

சென்னை, ''குதிரை பேர ஆட்சியை தக்கவைக்க, பித்தம் பிடித்து அலைகின்றனர். இதை, நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

சென்னை அறிவாலயத்தில், அவர் அளித்த பேட்டி:அரசியல் காழ்ப்புணர்வோடு, 'குட்கா' விவகாரத்தில், சட்டசபை உரிமைக் குழு கூட் டப்படுகிறது. முதல்வர் பழனிசாமி ஆட்சி, மெஜாரிட்டியை இழந்துவிட்டது.தார்மீக உரிமையை இழந்திருக் கிற நிலையில், இந்த அரசு இப்படி செயல்படு வதே தவறானது. குட்கா விவகாரத்தில், சட்ட சபையில், அதை நான் காட்டியது உண்மை.பின், சென்னை உட்பட, அனைத்து மாவட்டங்களிலும், ...

தி.மு.க., மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்... அச்சம்

Posted: 25 Aug 2017 09:44 AM PDT

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை உரிமைக் குழு, வரும், 28ல் கூடும் என அறிவிக்கப்பட்டிருப்பது, தி.மு.க.,வுக்கும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தடை செய்யப்பட்ட, 'குட்கா' போதைப் பொருளை, சட்டசபைக்குள் எடுத்து வந்த விவகாரத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட வாய்ப்பு உள்ளதால், பழனிசாமி அரசை கவிழ்க்கும் முயற்சிக்கு, முட்டுக்கட்டை விழுந்துள்ளது.சட்டசபை கூட்டத்தொடர், ஜூன், 14ல் துவங்கி, ஜூலை, 19ல் நிறைவடைந்தது. கடைசி நாளில், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் உரையாற்றி னார். அப்போது, ஸ்டாலின் ...

சட்டசபையில் பலப்பரீட்சைக்கு கவர்னர் உத்தரவிடுவாரா அடுத்த வியூகம் குறித்து இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., ஆலோசனை

Posted: 25 Aug 2017 10:13 AM PDT

ஆட்சி கவிழ்ப்பில்,தினகரன் அணிஎம்.எல்.ஏ.,க் கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று சென்னை வருகிறார்.

எதிர்க்கட்சிகளின்கோரிக்கையை ஏற்று, சட்ட சபையில், பலப்பரீட்சையை சந்திக்கும்படி, முதல்வர் பழனி சாமிக்கு, அவர் உத்தரவிடு வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.எனவே, அடுத்த வியூகம் குறித்து, சென்னையில், நேற்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர்தலைமையில், அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.அ.தி.மு.க.,விற்கு,சட்டசபையில், 135 எம்.எல். ஏ.,க்கள் உள்ளனர். அவர்களில்,19 பேர், தினகரன் அணியில் உள்ளனர். அவர்கள், முதல்வர் பழனி ...

ஜெ., நியமித்தவர்கள் நீக்கம்: தினகரன் தினமும் அறிவிப்பு

Posted: 25 Aug 2017 10:23 AM PDT

அ.தி.மு.க.,வில் குழப்பத்தை ஏற்படுத்த, ஜெ., நியமித்த நிர்வாகிகளை நீக்கி, அந்த பொறுப்பு களில், தினகரன், தன் ஆதரவாளர்களை நியமித்து வருகிறார்.

தினகரன், நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:தர்மபுரி மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து, அமைச்சர் அன்பழகன் விடுவிக்கப்பட்டு உள்ளார். மாவட்ட, எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் ராஜேந்திரன், மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், மேற்கு மாவட்டம்என, அமைப்பு ரீதியாக, இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது. கிழக்கு மாவட்டத்தில், ஆத்துார், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ...

நட்சத்திர ஓட்டலில் குடியேறிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்

Posted: 25 Aug 2017 10:57 AM PDT

புதுச்சேரி:தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், கடற்கரை சொகுசு விடுதியை காலி செய்து, புதுச்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் குடியேறினர்.

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், புதுச்சேரி, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை கிராமத்தில் உள்ள, 'தி விண்ட் ப்ளவர்' சொகுசு விடுதியில், நான்கு நாட்களாக தங்கி இருந்தனர்.விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை யால், ஏற்கனவே சொகுசு விடுதியில், புக்கிங் செய்தவர்கள் வர துவங்கினர். எம்.எல்.ஏ.,க்களுக்கு, நேற்று வரை மட்டுமே இடம் அளித்திருந்த விடுதி நிர்வாகம், காலி செய்யுமாறு கூறியது.இதையடுத்து, நேற்று பகல், 12:15 ...

பான்- ஆதார் இணைப்புக்கு 31 வரையே அவகாசம்

Posted: 25 Aug 2017 02:25 PM PDT

புதுடில்லி: 'பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட, வரும், 31ம் தேதி வரையிலான காலக்கெடு நீட்டிக்கப்படாது என, ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

தீர்ப்பு :
'பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், 31ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. ஆதார் தொடர்பான வழக்கில், தனிமனித சுதந்திரம், அடிப்படை உரிமை என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதனால், ஆதாரை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
காலக்கெடு:
இது குறித்து, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™