Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கள்ளத்தோணி

Posted: 25 Aug 2017 10:39 AM PDT


மாலை நேரத்து மழை பெருக்கிய
தெரு ஓடையில் பூவரசம் பூ ஒன்று
மிதந்து செல்கிறது
அது குடிசையைக் கடக்கையில்
ஐய்ய் என ஆசையாய்
கையிலெடுக்கிறது குழந்தை.
பூவின் கருவறையில்
பத்திரமாய் இருக்கிறது
கள்ளத்தோணி ஏறிவந்த
கட்டெறும்பு ஒன்று.
-
-------------------------------------
- செ.செந்தில்மோகன்
குங்குமம்

வீடு மாறுதல்

Posted: 25 Aug 2017 10:36 AM PDT

சின்ன பொருளில் ஆரம்பித்து பீரோ, ஃபிரிட்ஜ், பாத்திரம், டைனிங் டேபிள், கட்டில் என சுவரில் ஆடும் காலண்டர் வரை எடுத்துப் போயாகிவிட்டது. காலி வீட்டை வெறித்த மனைவி மெல்ல கூட்டுகிறாள் இருபது வருடத்து நினைவுகளை. மூத்தவனின் கரு உருவானது இரண்டாவதுக்கு சாமி கும்பிட்டது பெண் பிறக்காததால் அழுதது அம்மாவின் கடைசி மூச்சு பார்த்தது தீட்டுக்கு ஆறுதலாய்ச் சாய்ந்தது என ஒவ்வோர் அறையிலும் அவள் பாதுகாத்து வந்த ரகசியங்களை கூட்டிப் பெருக்கி அள்ளுகிறாள். சட்டென துளிர்த்த ஒரு சொட்டுக் கண்ணீரில் சிலிர்த்து ...

விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை)

Posted: 25 Aug 2017 10:35 AM PDT

விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) அவர் ஒரு விஞ்ஞானி! வயது 65; வீட்டிலிருந்து தினமும் ஆட்டோவில் வேலைக்குச் செல்வார்; அதேபோல அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு இன்னொரு ஆட்டோவில் வருவார்; ஆட்டோக்காரர் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவே கட்டணத்தைக் கொடுப்பார்; மீட்டர் போட்டால் 130 ரூபாய் தான் வரும் இவர் 200 ரூபாய் கொடுப்பார்! பிறருக்குக் கொடுத்து மகிழ்வதில் மனமும் உடலும் நன்றாக இருப்பதை அனுபவத்தில் கண்டவர்! மழை நேரம் என்றால் ஆட்டோக்காரர் கேட்காமலேயே ஐம்பது ரூபாயைக் கூடுதலாகக் கொடுப்பார்! டிராஃபிக்கில் ...

மேயாத மான்

Posted: 25 Aug 2017 10:16 AM PDT

''எனக்கே எனக்காக, மனதுக்கு உகந்ததாக படம் பண்ணணும்னு ஆசை. எல்லாக் கதையையும் சொல்லியாச்சோன்னு எப்பவும் ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருக்கும். 'அப்படியில்லை'ன்னு இந்தப் படம் பார்த்தால் தோணும். நம்மைச் சுற்றி அன்பு மட்டுமே இருந்த காலங்கள் எங்கே? எல்லாமே ஸ்டேட்டஸ் பார்த்துத்தான் வருது. வாழ்க்கையின் எல்லா கட்டங்களையும் இயந்திரமயமாக்கிட்டோம். எளிமையான மனிதர்களிடம் சந்தோஷமான தருணங்கள் நிறைய இருக்கிற படம்தான் இது. என் கைக் காசையெல்லாம் போட்டு 'மது'னு ஒரு குறும்படம் எடுத்திருந்தேன். இயக்குநர் கார்த்திக் ...

வாதாபி விநாயகர் எங்கேதான் உள்ளது ?

Posted: 25 Aug 2017 09:36 AM PDT

கலிங்கப்போரில் நடைபெற்ற மிகப்பெரிய மனிதஇனத்தின் அழிவைப்பார்த்து மனம் வருந்தி சமண மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறியமாமன்னர் அசோகரை வரலாறில் விரிவாக அனைவரும் படித்திருக்கிறோம் . ஆனால் அதற்க்கு சில நூற்றாண்டுகள் கழித்து தமிழ் நாட்டில் நடைபெற்ற அத்தகைய நிகழ்வை வரலாறு அழுத்தமாக கூற மறந்துவிட்டது . ஆனால் மனம் மாறிய அவர் மன்னரல்ல ,போரைவென்ற ,வெற்றிக்கு காரணமான தளபதி .அவர் பெயர் பரஞ்சோதி அவரே இந்த வாதாபி போருக்குப் பிறகு மனம் மாறி சிறுத்தொண்டர் என்று பெயர் பெற்று சிவனடியார் ஆனார் . கி.பி.642ல் ...

குளியல்!

Posted: 25 Aug 2017 09:05 AM PDT

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....! மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம். சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா... கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும். இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயண்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது. சோப்பு போடுவதற்கு ...

எளிய மருத்துவ குறிப்புகள்

Posted: 25 Aug 2017 08:56 AM PDT

காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை. – பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள். – பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். – தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி ...

அல்சர், உடல் சூடு, மற்றும் தாய்ப்பால் பெருக டிப்ஸ்

Posted: 25 Aug 2017 08:55 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம்(455)

Posted: 25 Aug 2017 08:40 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

கண்ணீர்

Posted: 25 Aug 2017 06:22 AM PDT

உறவுகள் தராத ஆறுதலை நீ தந்தாய்! என் கவலையை கலைய வருகிறாய்! என் மன வலியை நீயே குறைக்க வருகிறாய்! புலப்படாத காற்றைப் போல மறைந்திருக்கிறாய்! உன்னைப் போல் தோழனுமில்லை! உன்னைப் போல் துணையுமில்லை! என் இதய விசுப்பல் கேட்டு வார்த்தைக்கு முன் ஓடி வருகிறாய்! நடிக்கிறாள் என்ற பெயர் கொண்டு கண்களில் நீராய் வடிகிறாய்! கண்ணீராய்!!! -    கவிதா தினேஷ்குமார்

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)

Posted: 24 Aug 2017 10:26 PM PDT

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) சில வீடுகளில் பெண்கள், "வேண்டாம்! வேண்டாம் ! ஓட்டலில் எல்லாம் சாப்பாடு எடுக்கவேண்டாம் ! இதோ ஒரு நொடியில் நான் சமைத்துவிடுகிறேன் !" என்பார்கள் ; பிறகு அதை எடுங்கள் , இதை எடுங்கள் கணவரின் உயிரை எடுப்பார்கள்! இதற்கு ஓர் அடிப்படை இருக்கிறது ! அஃதாவது குடும்பத்தைச் சிதறவிடாமல் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க அவள் விரும்புகிறாள்! 'நீ ஒன்றும் இங்கு பெரிதில்லை' என்பதுபோன்ற கருத்து மற்றவர் மனங்களில் வரக்கூடாது ! தன்னைச் சுற்றியே எல்லாம் ...

இனிய விநாயக சதுர்த்தி தின வாழ்த்துகள்

Posted: 24 Aug 2017 10:20 PM PDT

இனிய விநாயக சதுர்த்தி தின வாழ்த்துகள்ரமணியன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™