Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


முடிவுகளை விரைந்து எடுங்கள்; அதிகாரிகளுக்கு மோடி, 'அட்வைஸ்'

Posted: 24 Aug 2017 07:20 AM PDT

புதுடில்லி:''முடிவுகளை விரைந்து எடுக்க வேண்டும்; நேர்மையான, நல்ல நோக்கத்துடன் கூடிய முடிவுக்கு அரசு ஆதரவு அளிக்கும்,'' என, அதிகாரிகளுக்கு,பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி யாற்றும், 70 கூடுதல் செயலர்கள், இணைச் செயலர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் மிகவும் பின்தங்கியுள்ள,100 மாவட்டங் களை தேர்ந்தெடுத்து, அவற்றை மேம்படுத்த அதி காரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அப்போது தான், பல்வேறு வளர்ச்சி ...

200 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் கிடைக்கும்

Posted: 24 Aug 2017 07:23 AM PDT

புதுடில்லி: பணத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில்,வெளிர் மஞ்சள் நிறத்தில்,200 ரூபாய் நோட்டுகள், இன்று முதல் புழக்கத்துக்கு வருகின்றன.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், 2016 நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி, 'புழக்கத்தில் இருந்த, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, புதிதாக, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.இருப்பினும் பணத் தட்டுப்பாடு குறைய வில்லை; சில்லரை கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. இதைஅடுத்து, 200 ரூபாய் நோட்டு களை அறிமுகம் செய்வதற்கான அரசாணை, ...

தேசிய நெடுஞ்சாலை மதுக்கடை, 'பார்'களுக்கு தடை இல்லை!

Posted: 24 Aug 2017 07:51 AM PDT

புதுடில்லி: 'மாநகர் மற்றும் நகர்ப்புறங்களில், நெடுஞ்சாலைகளை ஒட்டிய பகுதிகளில், உரிமம் பெற்று மது விற்பனையில் ஈடுபடு வோருக்கு எந்தவித தடையும் விதிக்கப்பட வில்லை' என, உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், 500 மீட்டருக்குள் மதுக்கடைகள் செயல்படுவதற்கு தடை விதித்து, உச்ச நீதிமன்றம், 2016, டிச.,15ல் தீர்ப்பு அளித்தது. இந்தாண்டு, ஏப்., 1 முதல் இது நடைமுறைக்கு வந்தது.
குழப்பம்
இந்நிலையில், இந்த தடை குறித்து, உச்ச நீதி மன்றம் நேற்று முன்தினம் அளித்த விளக்கம்:பெருநகரங்கள், நகரங்கள், கிராமங்களை ...

கலவரத்தை தூண்ட சசி சொந்தங்கள் சதி? மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்

Posted: 24 Aug 2017 08:17 AM PDT

முதல்வர் பழனிசாமி அரசை கவிழ்க்க சதி திட்டம் தீட்டி வரும், சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள், கலவரத்தை துாண்ட திட்டமிட்டு இருப்பதால், போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பன்னீர் அணி, சசிகலா அணி என, பிளவு பட்டது. தற்போது, இரு அணிகளும் இணைந்து விட்டன.
எதிர்ப்பு
முதல்வராக பழனிசாமியும், துணை முதல்வ ராக பன்னீர்செல்வமும், அரசை வழிநடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், சசிகலாவால், துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்ட தினகரன் ஆதரவாளர்கள், தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், ௧௯ பேரை, ...

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மீது கட்சி தாவல் சட்டம்... பாய்கிறது?

Posted: 24 Aug 2017 08:45 AM PDT

முதல்வர் பழனிசாமி தலைமையில், நேற்று நடந்த தீவிர ஆலோசனைக்கு பின், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 19 பேரை தகுதி நீக்கம் செய்யும்படி, சபாநாயகர் தனபாலுக்கு, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளார்.

அதனடிப்படையில், கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, 19 பேருக்கும், சபாநாயகர், 'நோட்டீஸ்' அனுப்பி யுள்ளார். ஆட்சியை தக்கவைக்க, இந்த அதிரடி வியூகத்தை, முதல்வர் பழனிசாமி தரப்பினர் வகுத்துள்ளனர்.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 135 பேரில், 19 பேர் தினகரன் அணியில் உள்ளனர். அ.தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற,
கூட்டணி ...

மாணவர் சாபத்தால் ஆட்சிக்கு ஆபத்து! ஸ்டாலின் ஆவேசம்

Posted: 24 Aug 2017 09:09 AM PDT

சென்னை:''மாணவர்களின் சாபத்தால், இந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

'நீட்' தேர்வு விவகாரத்தில், மத்திய, மாநில அரசு களை கண்டித்து, எதிர்க்கட்சிகள் சார்பில், சென்னையில் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, ஸ்டாலின் தலைமை வகித்தார்.சட்டசபை காங்., தலைவர், கே.ஆர்.ராம சாமி, வி.சி., தலைவர் திருமாவளவன், முஸ்லிம் லீக் தலைவர்காதர் மொய்தீன், இ.கம்யூ., மூத்த தலைவர் நல்ல கண்ணு, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஸ்டாலின் பேசியதாவது:
தி.மு.க., ...

தனி மனித சுதந்திரம் அடிப்படை உரிமையே! 'ஆதார்' வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 24 Aug 2017 10:03 AM PDT

புதுடில்லி: 'ஆதார்' தொடர்பான வழக்கில், 'தனி மனித சுதந்திரம் என்பது, அரசி யலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமையே' என, உச்ச நீதிமன்றம், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

பல்வேறு அரசு நலத் திட்டங்கள், மானியங்கள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை குறிப்பிடுவதை கட்டாயமாக்கும்,மத்திய அரசின் உத்தரவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அந்த மனுக்களில் கூறப்பட்டதாவது:ஒருவரது தனிப்பட்ட விபரங்கள் என்பது, தனி மனித சுதந்திரம்; அது, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமை. ஆதார் பதிவுக்காக, மக்கள் ...

'க்யூரேட்டிவ்' மனு: சசிகலாவின் கடைசி ஆயுதம்

Posted: 24 Aug 2017 10:09 AM PDT

'மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடைசியாக, 'க்யூரேட்டிவ்' மனு தாக்கல் செய்ய, சசிகலாவுக்கு வாய்ப்பு உள் ளது. அதிலும், அவருக்கு நிவாரணம் கிடைக் குமா என்பது சந்தேகமே' என, சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனையை, பெங்க ளூரு சிறப்பு நீதிமன்றம் விதித்தது. ஜெ., மரணத்தை தொடர்ந்து, ஜெ., மீதான மேல் முறையீட்டு வழக்கை கைவிட்டு, மற்றவர் களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, சசி கலா ...

சசி சொத்து முடக்கம்: அரசு அடுத்த 'மூவ்'

Posted: 24 Aug 2017 10:48 AM PDT

அடுத்த கட்டமாக, நீதிமன்றம் விதித்த, அபராத தொகைக்கு ஈடாக, சசிகலாவின் சொத்துகளை முடக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஜெ., முதல்வராக இருந்த போது, வருமானத் திற்கு அதிகமாக, சொத்து குவித்த வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம், அவருக்கு, 100 கோடி ரூபாய் அபராதமும், நான்கு ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, தலா, நான்கு ஆண்டு சிறை தண்டனையும்,10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெ., இறந்து விட்டதால்,அவருக்கு எதிரான வழக்கை, உச்ச நீதி மன்றம் கைவிட்டது.மற்ற மூவருக்குமான தண்டனையை உறுதிசெய்தது. அபராத தொகையை வசூலிக்கவும் ...

சேலம், கடலூர், சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் பணியிடமாற்றம்

Posted: 24 Aug 2017 11:41 AM PDT

சென்னை: சேலம், கடலூர் மற்றும் சிவகங்கை மாவட்ட கலெக்டர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் பணியிடமாற்றம் செய்யப்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தின் புதிய கலெக்டராக ரோகிணி ஆர்.பாஜிபாக்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த ராஜேஷ் பணியிடமாற்றம் செய்யப்பட்டு தொழில் வர்த்தக துறையின் கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாவட்டத்தின் புதிய ...

பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்: ஆன்மிக தலைவர் குர்மீத் வேண்டுகோள்

Posted: 24 Aug 2017 01:14 PM PDT

சண்டிகர்:சட்டத்தை மதித்து பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என 'தேரா சச்சா சவுதா' ஆன்மிக அமைப்பின் தலைவர், குர்மீத் ராம் ரஹீம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.தேரா சச்சா சவுதா ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் மீதான, பாலியல் வன்முறை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரியானவில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.15 ஆண்டுகளாக நடக்கும் இந்த வழக்கின் வாதங்கள் முடிந்த நிலையில், ஹரியானா மாநிலம், பஞ்ச்குலாவில் உள்ள, சிறப்பு, ...

இந்தியா - பாக்., நேரடி பேச்சு: அமெரிக்கா வலியுறுத்தல்

Posted: 24 Aug 2017 03:25 PM PDT

வாஷிங்டன் : 'காஷ்மீர் பிரச்னையில், இந்தியாவும், பாகிஸ்தானும், நேரடியாக பேச்சு நடத்தி, சுமுக தீர்வு காண வேண்டும்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் பிரச்னை தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், ஹெதர் நர்ட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: காஷ்மீர் விவகாரத்தால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இதுதொடர்பாக, இரு நாடுகளும் நேரடி பேச்சு நடத்த வேண்டும். ஆப்கானிஸ்தான் விவகாரத்துடன், காஷ்மீர் பிரச்னையை இணைத்து, அணுக முடியாது. காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்காவின் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™