Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மத்திய அமைச்சரவை விரைவில்... மாற்றம்!

Posted: 23 Aug 2017 07:51 AM PDT

மத்திய அமைச்சரவை, விரைவில் மாற்றிய மைக்கப்பட உள்ளது.அமைச்சரவை மாற்றத் தின்போது, தென் மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க.,வும் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளதால்,அந்த கட்சிக்கும் அமைச் சரவையில் இடம் அளிக்கப்படும் வாய்ப்பு உள் ளது.பிரதமர்,மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை,இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் மாற்றியமைக்கப்பட உள்ளது. இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு இடையே, மத்திய அமைச்சரவை மாற்றி ...

ஓ.பி.சி., கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு

Posted: 23 Aug 2017 07:56 AM PDT

புதுடில்லி:ஓ.பி.சி.,எனப்படும் இதர பிற்பட்டோர் பிரிவினரில், 'கிரீமிலேயர்' எனப்படும் வசதி படைத்தவர்கள், சலுகைகளை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பை, 6 லட்சம் ரூபாயில் இருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:கல்வி,வேலைவாய்ப்பு போன்றவற்றில்ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்பட்டோர் பிரிவினருக்குஇடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.இந்தபிரிவை சேர்ந்த உயர் வருமான பிரிவினர், இட ...

எம்.எல்.ஏ., வீட்டுக்கு சென்று வந்தாரா சசிகலா?

Posted: 23 Aug 2017 08:05 AM PDT

பெங்களூரு: கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, ஓசூர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வீட்டு க்கு சென்று வந்ததாக, அம்மாநில, டி.ஐ.ஜி., ரூபா, ஊழல் தடுப்புக் குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, கர்நாடகா தலை நகர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில், அவருக்கு சிறப்பு வசதிகள், சலுகைகள் அளிக்கப்படுவதாக, சிறைதுறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா புகார் கூறியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ...

அமைச்சர்கள் உட்பட பலரின் கட்சி பதவி பறிப்பு! அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட தினகரன் அறிவிப்பு

Posted: 23 Aug 2017 08:53 AM PDT

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதினகரன், அ.தி.மு.க.,நிர்வாகிகளை நீக்கியும், தன் ஆதர வாளர்களை, புதிய நிர்வாகிகளாக நியமித்தும், தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

'அ.தி.மு.க., துணைப் பொதுச்செயலராக, தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது. அவர் வெளியிடும் அறிவிப்புகள், அ.தி.மு.க.,வை கட்டுப்படுத்தாது' என, ஜெ.,வால் நியமிக்கப் பட்ட நிர்வாகிகள் மற்றும் முதல்வர் உட்பட, 27 பேர் கையெழுத்திட்டு, தீர்மானம் நிறைவேற்றி னர்.
இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள தினகரன், தனக்கு எதிராக உள்ள, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை,கட்சிப் பதவியில் இருந்து நீக்குவதாகவும், ...

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சொகுசு விடுதியில் குதூகலம்

Posted: 23 Aug 2017 08:59 AM PDT

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஆடம்பர சொகுசு விடுதியில் தங்கியுள்ள, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 'வாக்கிங்' மசாஜ், ஸ்விம்மிங், மது விருந்து, அசைவ உணவுகள் என, குதுாகலமாக பொழுதை கழித்து வருகின்றனர்.

பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பை தொடர்ந்து, சசிகலா, தினகரன், அவர்களது உறவினர்கள் தனித்து விடப்பட்டுள் ளனர்.தினகரனுக்கு, ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற தாக, கடிதம் அளித்து உள்ளனர்.அதையடுத்து, இந்த எம்.எல். ஏ.,க்கள் 19 பேரையும், பாதுகாப்பாக ஒரே இடத்தில் ...

சுப்ரீம் கோர்ட்டில் சசிகலாவின் மறு சீராய்வு மனு... தள்ளுபடி!

Posted: 23 Aug 2017 10:10 AM PDT

புதுடில்லி:சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து அளிக்கப் பட்ட தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி, சசிகலா தாக்கல் செய்த மனுவை,உச்சநீதி மன்றம் நேற்று, தள்ளுபடி செய்தது; இதனால், அவருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனை, மீண்டும் உறுதி செய்யபட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரான, மறைந்த, ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த, பெங்களூரு, விசாரணை நீதிமன்றம், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து, ...

ரயில்வே அமைச்சர் ராஜினாமா? சுரேஷ் பிரபு முடிவை ஏற்க பிரதமர் தயக்கம்

Posted: 23 Aug 2017 10:17 AM PDT

புதுடில்லி:ஐந்து நாட்களில், உ.பி.,யில், 2 ரயில் விபத்துகள் நடந்து உள்ள நிலையில், அதற்கு தார்மீக பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்வதாக, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். காத்திருக்கும்படி, பிரதமர் மோடி கூறியுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. முசாபர் நகரில், சமீபத்தில், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்தனர்; 156 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், அவ்ரியா மாவட்டத்தில், கைபி யாத் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று தடம் புரண்ட தில், 100 பேர் காயமடைந்தனர். ...

ஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் சவால்

Posted: 23 Aug 2017 10:36 AM PDT

பெரம்பலுார்:''ஜெ., ஆன்மா எங்களோடு இருக் கும் வரை, ஆட்சியை அசைக்கமுடியாது,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.

அ.தி.மு.க., அணிகள் இணைப்புக்கு பின், முதல் அரசு விழாவாக, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, அரியலுாரில் நேற்று மாலை நடந்தது. சபாநாயகர் தனபால் தலைமை வகித்தார். முதல்வர் பழனிசாமிபேசியதாவது:மக்கள், நம் பக்கம் இருக்கின்றனரா என்பதை விட, நாம் மக்கள் மனதில் இருக்கிறோமா என்பதே இப்போதைய நிலையாக உள்ளது. என்னை நம்பிய மக்களுக்கு, எதையும் எதிர் பாராமல், ஜெ., ஆசியோடு தொடர்ந்து உழைப் பேன்.ஆட்சிக்கும், கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் துடிக்கின்றனர். ஜெயலலிதா ...

தினகரனால் நெருக்கடி: முதல்வர் ஆலோசனை

Posted: 23 Aug 2017 10:39 AM PDT

தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டலை சமாளிப் பது குறித்தும்,அவரது அணியில் உள்ள, எம்.எல். ஏ.,க்களை இழுப்பது குறித்தும், முதல் வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், சசிகலா குடும்பத்தினர், ஆட்சியையும், கட்சியையும், தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க, பகீரத பிரயத் தனத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர் உதவியுடன், ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளனர். கவர்னரை சந்தித்து, 19 பேரும், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, கடிதம் கொடுத்துள்ளனர். இதனால், அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ...

சர்ச்சை பேச்சு: ஜெகன் மீது தேர்தல் ஆணையம் வழக்கு

Posted: 23 Aug 2017 12:16 PM PDT

ஐதராபாத்: இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது வன்முறையை தூண்டும் விதமாக பேசிய ஒய்.எஸ்.ஆர்.,காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சை பேச்சு:
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நந்தியால் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. கடந்த 3-ம் தேதி நடந்த பிரசாரத்தில் ஒய்.எஸ்.ஆர்.,காங்., தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பொய்யான தேர்தல் வாக்குறுதி தந்த முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பொது இடத்தில் வைத்து சுட்டு கொன்றால் தவறு இல்லை என்றார்.
வழக்குப்பதிவு:
வன்முறையை தூண்டும் விதமாக ...

‛பாக்., மீது மீண்டும் வான்வழி தாக்குதல்': அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

Posted: 23 Aug 2017 01:00 PM PDT

வாஷிங்டன் : ''பாகிஸ்தான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதலை தொடங்கும்'', என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

ஒபாமா ஆட்சியின்போது, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை குறிவைத்து, அமெரிக்க ராணுவம் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இப்போது டிரம்ப் அரசு, பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடினமான நகர்வை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் காவஜா முகமது ஆசிப் விரைவில் வாஷிங்டன் செல்வார் என ...

'நெட்' தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்

Posted: 23 Aug 2017 01:40 PM PDT

'பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவில், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2016 வரை, ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது. இனி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான, 'நெட்' தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. இதற்கு, ஆக., 11ல் ஆன்லைன் பதிவு துவங்கியது; செப்., 12 வரை பதிவு செய்ய, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்ப ...

விளம்பரங்களில் நடிக்க நடிகர், நடிகையர் நடுக்கம்!

Posted: 23 Aug 2017 02:45 PM PDT

சென்னை: ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து விளம்பரங்களில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் நடுக்கம் அடைந்துள்ளனர்.

ஜான்சன் அண்டு ஜான்சன் சோப் மற்றும் பவுடரை பயன்படுத்திய பெண், புற்றுநோய்க்கு ஆளானது தொடர்பாக நடந்த வழக்கில், அந்நிறுவனத்திற்கு, 2,600 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, வணிக ரீதியான விளம்பரங்களில் நடிப்பதற்கு, நடிகர், நடிகையர் மத்தியில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது போன்ற பிரச்னைகளில் சிக்காமல் இருக்கவே, ரஜினி, அஜித், ராஜ்கிரண் உள்ளிட்ட சில நடிகர்கள், எத்தனை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™