Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மும்முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறுவது...செல்லாது! உச்ச நீதிமன்ற அமர்வு வரலாற்று சிறப்பு தீர்ப்பு

Posted: 22 Aug 2017 08:07 AM PDT

புதுடில்லி, 'முஸ்லிம்களில் மும்முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் நடைமுறை செல்லாது; இந்த நடைமுறை சட்டவிரோதமானது; அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது' என, உச்ச நீதிமன்றம், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வில், பெரும்பான்மையான நீதிபதிகள் தலாக் முறை செல்லாது என, தீர்ப்பு அளித்துள்ளனர்.

நிறுத்தி வைக்க வேண்டும்
முஸ்லிம்களில் மும்முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து, முஸ்லிம் அமைப்புகள், முஸ்லிம் பெண்கள் உட்பட பலர் வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை, ...

பழனிசாமிக்கு தினகரனின் 19 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு... வாபஸ்! தில்லாலங்கடி ஆரம்பம்

Posted: 22 Aug 2017 09:29 AM PDT

சென்னை, :'முதல்வர் பழனிசாமி மீது, அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், அவருக்கு அளித்து வந்த ஆதரவை, வாபஸ் பெறுகிறோம்' என, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், கவர்னர் வித்யாசாகர் ராவிடம், நேற்று கடிதம் அளித்தனர். அதன்பின், சென்னையில், தினகரன் வீட்டில் கூடி, பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்வராக்குவது குறித்து ஆலோசித்தனர். இந்த தகவல் தெரிந்ததும், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை, கோடிகளை கொடுத்து வளைக்க, ஆளும் தரப்பு தீவிரமாகி உள்ளது. பலத்தை நிரூபிக்க, இரு தரப்பினரும், தில்லாலங்கடி வேலைகளில் இறங்கியுள்ளதால், ...

நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கவர்னருக்கு ஸ்டாலின் கடிதம்

Posted: 22 Aug 2017 09:53 AM PDT

சென்னை, 'தமிழக சட்டசபையை கூட்டி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த, அ.தி.மு.க., அரசுக்கு, கவர்னர் உத்தரவிட வேண்டும். ''இல்லையென்றால், தி.மு.க., இந்த விவகாரத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்கும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

ஆதரவு இல்லை
சென்னை, அறிவாலயத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 22 பேர், 'முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு இல்லை' என, கவர்னரிடம் கடிதம் வழங்கி உள்ளனர். கவர்னர், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தர விடவேண்டும்; அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும், ...

'மாணவர்களுக்கு அழுத்தம் தராத பாடத்திட்டம் தேவை'

Posted: 22 Aug 2017 09:57 AM PDT

'பள்ளிக்கல்வி பாடத்திட்டம், மாணவர்களுக்கு அழுத்தம் தருவதாக இல்லாமல், மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும்' என, மாணவ மாணவியர் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கல்வி புதிய பாடத்திட்ட கருத்தறியும் கூட்டம் சென்னையில், நேற்று நடந்தது.இதில், மாணவ மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர் பேசியதாவது:
அன்னரத்னா, சென்னை அகர்வால் வித்யாலயா பள்ளி:
பாடங்கள் அதிகமாக உள்ளன; அதை குறைத்து மாணவர்களுக்கு, அழுத்தம் தராத, மகிழ்ச்சியான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். வெறும் சமன்பாடுகளை மட்டும் கற்றுத் தராமல், செய்முறை ...

ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் கலைத்திட்ட குழு தலைவர் தகவல்

Posted: 22 Aug 2017 10:03 AM PDT

சென்னை, ''வரும், ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி கலைத்திட்ட குழு தலைவர், அனந்த கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

புதிய பாடத்திட்டம் குறித்து, எட்டு மாவட்டங் களுக்கான கருத்தறியும் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற கலைத்திட்ட குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான, அனந்த கிருஷ்ணன் கூறியதாவது:தமிழக பள்ளிகளில், இதுவரை மதிப்பெண் பெறுவதற்காக மட்டும், பாடங்களை நடத்தி வந்துள்ளனர்.
தேசிய நுழைவு தேர்வு
அதனால், படிப்பின் மீது, மாணவர்களுக்கு ஈர்ப்புஇல்லாமல் ...

சசிகலாவுக்கு வசதிகள் கிடைத்தது எப்படி? உதவியவர் பெயரை வெளியிட்டார் ரூபா

Posted: 22 Aug 2017 10:14 AM PDT

புதுடில்லி, :சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் கிடைப்பதற்கு உதவியவரின் பெயரை, கர்நாடகாவின் முன்னாள் சிறைத் துறை, டி.ஐ.ஜி., ரூபா வெளியிட்டார்.

தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.'சிறைத் துறை அதிகாரிகளுக்கு, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து, சிறையில் சசிகலா, சொகுசு வசதிகளை பெற்றுள்ளார்' என, கர்நாடக சிறைத் துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா புகார் கூறியிருந்தார். ...

சொந்த வீடு இருக்கா. விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் வரும்

Posted: 22 Aug 2017 10:22 AM PDT

சொந்த வீடு வைத்திருந்தும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, வருமான வரித்துறை பரிசீலித்து வருகிறது.

மாத ஊதியம் வாங்குவோரின், வருமானத்திற்கு ஏற்ப, அந்தந்த அலுவலகத்திலேயே, வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால், மாத ஊதியம் பெறுவோர், வருமான வரித்துறையின் கண்ணில் இருந்து தப்ப முடியாது.
நடவடிக்கை

ஆனால், வீடு வாடகைக்கு விடுவோர், கார், வேன் போன்ற வாகனங்களை வாடகை மூலம் வருவாய் ஈட்டுவோர் என, சொந்த வருவாய் ஈட்டுவோரில் ...

'நீட்' விவகாரத்தில் மத்திய அரசு பல்டி அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு

Posted: 22 Aug 2017 10:27 AM PDT

புதுடில்லி, 'நீட்' எனப்படும், தேசிய அளவிலான, மருத்துவ பொது நுழைவுத்தேர்வு விவகாரத்தில், திடீர் திருப்பமாக, மத்திய அரசு 'பல்டி' அடித்துள்ளது.
'தமிழக அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை' என, மத்திய அரசு கைவிரித்துள்ளது.இதையடுத்து, மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உடனே நடத்தும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'தமிழகத்தில், மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மாநில கல்வி வாரியத்தின், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்' ...

சசியை நீக்க பொதுக்குழு கூடுமா?

Posted: 22 Aug 2017 10:38 AM PDT

ஜெ., மறைவுக்கு பின் 2016 டிச., 29ல், அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அதில் அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எதிராக பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி உருவானது. அவர்கள், 'அ.தி.மு.க., விதிகளின்படி, பொதுச்செயலராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது' என, அறிவிக்கக் கோரி, தேர்தல் கமிஷனில் மனு அளித்தனர்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்களும், சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிராக திரும்பினர். ஆக., 10ல் கூட்டம் நடத்தி, 'துணைப் பொதுச்செயலராக, தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது' என, தீர்மானம் ...

குழந்தைகள் பலி சம்பவத்தால் உ.பி.,- காங்.,கில் சுறுசுறுப்பு

Posted: 22 Aug 2017 12:34 PM PDT

லக்னோ: உ.பி., அரசு மருத்துவ மனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால், 71 குழந்தைகள் பலியான சம்பவம், சட்டசபைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த, காங்கிரஸ் கட்சியினருக்கு சுறு சுறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமோக வெற்றி :
உ.பி.,யில், ஏப்ரல் - மே மாதங்களில் நடந்த சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சமாஜ்வாதி கட்சியுடன், கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட, காங்., படு தோல்வியை சந்தித்தது. உ.பி.,யில், காங்.,கிற்கு, அரசியல் வாழ்வு அஸ்தமித்து போன நிலையில், கோரக்பூர் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால், ...

21 பெயர்கள்- 3 முகவரிகள் - பாக்.கில் தாவூத் பித்தலாட்டம்

Posted: 22 Aug 2017 01:29 PM PDT

இஸ்லாமாபாத்: பாக்.கில் 21 பெயர்கள், 3 முகவரிகளில் தாவூத் செயல்படுவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார். இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் பாக்.கில் பதுங்கியிருப்பதாக பல முறை ஆதாரத்துடன் கூறியும், பாகிஸ்தான் வழக்கம் போல், தங்கள் நாட்டில் இல்லை என மறுத்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் நிதி அமைச்சகம் , அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நிதி பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டவர்கள், அமைப்புகள் பட்டியலை ...

புதிய முதல்வர் யார்?: தினகரன் அணி ஆலோசனை

Posted: 22 Aug 2017 03:27 PM PDT

முதல்வர் பழனிசாமியை மாற்றி விட்டு புதிய முதல்வராக சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன் முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யலாம் என, தினகரன் அணியினர், சென்னையில் நேற்று ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.

19 பேர் :
தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் நேற்று ராஜ்பவன் சென்று, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, கடிதம் வழங்கினர். அதில் முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். கவர்னரை சந்தித்த பின் சென்னை, அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு சென்றனர். ...

உ.பி.,யில் ரயில் விபத்து; 10 பெட்டிகள் தடம் புரண்டன

Posted: 22 Aug 2017 04:11 PM PDT

லக்னோ: உ.பி.,யில் காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 100 பயணிகள் காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உ.பி., மாநிலம் ஆருய்யா அருகே காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. அதிகாலை 2.40 மணிக்கு மணிக்கு நடந்த இவ்விபத்தில் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், 100 பேர் காயமடைந்திப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் தெரியவில்லை, தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன் உ.பி.,யில், முசாபர் நகர் அருகே ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™