Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை திரட்ட லாலு... தீவிரம்! பேரணியில் பங்கேற்க மம்தா, அகிலேஷ் சம்மதம்

Posted: 21 Aug 2017 09:28 AM PDT

பாட்னா: வரும், 2019ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், மத்தியில் ஆளும், பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கூட்டணியின் வலிமையை உணர்த்தும் வகையில், பீஹார் தலைநகர் பாட்னாவில், பிரமாண்ட பேரணிக்கான ஏற்பாடுகளை, லாலு பிரசாத் யாதவின், ராஷ்ட்ரீய ஜனதா தளம் செய்து வருகிறது. பேரணியில் பங்கேற்க, உ.பி., முன்னாள் முதல்வர், அகிலேஷ், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி சம்மதம் தெரிவித்துள்ளனர்.

பிரமாண்ட கூட்டணி
பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், ஆட்சியில் இருந்த மகா கூட்டணியில் ...

அஹமது படேல் வெற்றியை எதிர்த்து பா.ஜ., வழக்கு

Posted: 21 Aug 2017 09:31 AM PDT

ஆமதாபாத்: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் செயலர் அஹமது படேல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் பதிலளிக்கும்படி, தேர்தல் கமிஷன், அஹமது படேல் உள்ளிட்டோருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, ஆமதாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில், ராஜ்யசபாவின் மூன்று இடங்களுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.

ஓட்டு செல்லாது
இதில், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் வெற்றி பெற்றனர். மூன்றாவது இடத்துக்கு கடும் போட்டி நிலவியது. அதில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் செயலர் அஹமது ...

மனதில் இருந்த பாரம் குறைந்தது: இணைப்புக்கு பின் பன்னீர் நெகிழ்ச்சி

Posted: 21 Aug 2017 10:03 AM PDT

சென்னை: ''மனதில் இருந்த பாரம் குறைந்து விட்டது,'' என, பன்னீர்செல்வம் தெரிவித்தார். அ.தி.மு.க., அணிகள் இணைப்பு நிகழ்ச்சியில், பன்னீர்செல்வம் பேசியதாவது:

எங்களை யாரும் பிரிக்க முடியாது. நாங்கள் அனைவரும், ஒரு தாய் மக்கள். இணைப்பிற்கு, முழு ஒத்துழைப்பு தந்த, முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இனி வரும் காலங்களில், அனைவரும் ஒன்றாக இருந்து, ஜெ.,யின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
பாரம் குறைந்துவிட்டது
அணிகள் இணைப்பால், மனதில் இருந்த பாரம் குறைந்து விட்டது; கருத்து வேறுபாடுகள் நீங்கி விட்டன. இந்த இணைப்பு, வரலாற்று ...

நண்பேன்டா...! அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைப்பு; மன்னார்குடி சொந்தங்கள் ஆதிக்கம் முடிந்தது

Posted: 21 Aug 2017 10:19 AM PDT

ஆறு மாதங்களாக பிரிந்திருந்த அ.தி.மு.க., வின் இரு அணிகளும் நேற்று 'நண்பேன்டா' எனக்கூறி இணைந்தன. அதனால் கட்சியில் மன்னார்குடி சொந்தங்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது; பன்னீர் நடத்திய தர்ம யுத்தத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. கட்சியை வழிநடத்த 15 பேர் குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

ஜெ., மறைவுக்கு பின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற துடித்த சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கினார். அவருக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும், அ.தி.மு.க.,வினர் திரண்டனர். எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் என பலரும், ...

தினகரன் எம்.எல்.ஏ.,க்களால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுமா?

Posted: 21 Aug 2017 10:29 AM PDT

அ.தி.மு.க., பன்னீர் அணி, பழனிசாமி அணி, தினகரன் அணி என மூன்றாக பிளவுபட்டது. நேற்று பன்னீர் மற்றும் பழனிசாமி அணிகள் இணைந்தன. இரு அணியினரும் இணைந்து சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு முழுமையாக விலக்க முடிவு செய்துள்ளனர்.

இரு அணிகள் இணைந்தாலும் ஆட்சி பெரும்பான்மைக்கு போதுமான எம்.எல்.ஏ.,க்கள் இல்லை. அ.தி.மு.க.,விற்கு 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்; இவர்களில் 20 பேர் தினகரன் அணியில் உள்ளனர். சமீபத்தில் மதுரை மாவட்டம் மேலுாரில் நடந்த தினகரன் பொதுக்கூட்டத்தில் 20 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். அவர்களில் 13 பேர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து, 'தினகரன் அழைத்ததால் ...

அமித் ஷா பயணம் மீண்டும் ஒத்திவைப்பு: அணிகள் இணைப்பு காரணமா?

Posted: 21 Aug 2017 10:41 AM PDT

பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, தமிழகத்தில் சுற்றுப்பயணத்தை நாளை துவங்க, அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், அவரது வருகை, திடீரென ரத்தாகி உள்ளது, கட்சியினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., பலம் குறைவாக உள்ள மாநிலங்களில், அமித் ஷா சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினரை சந்தித்து வருகிறார். அப்பயணம், காஷ்மீரில், ஏப்., 29ல் துவங்கியது. ஜூனில், புதுச்சேரி சென்றார். தமிழகத்தில், ஆக., 22 - 24 வரை, சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என, அறிவிக்கப் பட்டது. அதன்படி, சென்னையில் இரு நாட்கள் ...

பைகளுடன் சிறையில் சசி: வீடியோவால் பரபரப்பு

Posted: 21 Aug 2017 10:46 AM PDT

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா, தன் உறவினர், இளவரசியுடன், கையில் பைகளுடன், வெளியிலிருந்து சிறைக்குள் நுழைவது போன்ற, 'வீடியோ' வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, அவரது உறவினர்கள், இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.சிறையில், சசிகலாவுக்கு, 'டிவி' உட்பட, நவீன வசதிகளுடன் அறைகள் ஒதுக்கப்பட்டுஉள்ளதாக, சமீபத்தில், வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊழல் தடுப்பு பிரிவு
இந்நிலையில், சசிகலாவும், இளவரசியும், ...

துணை முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்பு; பாண்டியராஜனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி

Posted: 21 Aug 2017 11:02 AM PDT

தமிழகத்தின் துணை முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம், நேற்று பொறுப்பேற்றார். அவரது அணியைச் சேர்ந்த பாண்டியராஜன், புதிய அமைச்சராக பொறுப்பேற்றார்.

ஜெ., மறைவுக்கு பின், முதல்வரான பன்னீர்செல்வம், பிப்., 5ல், பதவியை ராஜினாமா செய்தார். அவரது தலைமையில், புதிய அணி உருவானதால், அ.தி.மு.க., பிளவுபட்டது. அப்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த பாண்டியராஜன், பன்னீர் அணிக்கு தாவியதால், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.தற்போது, இரு அணிகளும் இணைந்ததை தொடர்ந்து, பன்னீர்செல்வத்திற்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவருக்கு, நிதி, வீட்டுவசதி மற்றும் ...

ஆட்சி தொடரக் கூடாது : ஸ்டாலின்

Posted: 21 Aug 2017 11:50 AM PDT

சென்னை 'அ.தி.மு.க., ஆட்சி தொடரக் கூடாது என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.சென்னை அறிவாலயத்தில், நேற்று, அவர் அளித்த பேட்டி:

'முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி, ஊழல் மிகுந்த ஆட்சி' என்றவர், பன்னீர்செல்வம். 'பன்னீர் முதல்வராக, அமைச்சராக இருந்தபோது தான், சேகர் ரெட்டியையும், ஊழலையும் அறிமுகப்படுத்தினார்' என்றார், முதல்வர் பழனிசாமி. இப்போது, இரு ஊழல் சாம்ராஜ்ஜியங்களை நடத்தி வரும், இருவரும் இணையும் சூழல் வந்துள்ளது. அதைத்தான் நாங்கள் ஏற்கெனவே, 'இருவரும் ஒரேகுட்டையில் ஊறிய மட்டைகள்' என்றோம்.இன்று, ...

ரூ.50 இல்லை; குழந்தை பலி

Posted: 21 Aug 2017 12:27 PM PDT

ராஞ்சி : ஜார்க்கண்டில், 50 ரூபாய் இல்லாததால், 'சிடி' ஸ்கேன் எடுக்க முடியாமல், ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

தலையில் காயம்:
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியை சேர்ந்த, சந்தோஷ் குமாரின், ஒரு வயது ஆண் குழந்தைக்கு, தலையில் காயம் ஏற்பட்டது. அங்குள்ள தன்னாட்சி அந்தஸ்து பெற்ற, ராஜேந்திரா மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக குழந்தையை அழைத்துச் சென்றார்.குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், அதே மருத்துவமனையில் உள்ள, ஸ்கேன் மையத்தில், 1,350 ரூபாய் செலுத்தி, 'சிடி' ஸ்கேன் எடுக்க அறிவுறுத்தினர்.
பலி:
ஸ்கேன் மையத்திற்கு சென்ற சந்தோஷ் குமார், ...

சி.பி.ஐ., அதிகாரிகள் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

Posted: 21 Aug 2017 01:14 PM PDT

புதுடில்லி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்காத, சி.பி.ஐ.,யின் செயல்பாட்டிற்கு, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.பல்வேறு மாநிலங்களில் நடந்த, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான வழக்குகளை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் குறித்த விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை; இதில், சி.பி.ஐ.,யின் செயல்பாடு, அதிருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.இது குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதி, மதன் பி லோகுர் தலைமையிலான அமர்வு கூறியதாவது:நிலக்கரி சுரங்க ஊழல் ...

கர்நாடகாவில் மீண்டும் காங்., அரசு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது

Posted: 21 Aug 2017 02:00 PM PDT

பெங்களூரு, 'கர்நாடகாவில், மீண்டும் காங்கிரஸ் அரசு அமையும்; பா.ஜ., இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்' என, கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இங்கு, 2018 துவக்கத்தில், 225 தொகுதிகள் உடைய சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது.தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடந்தால், அங்கு யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறித்து, 'சி - போர்' என்ற அமைப்பு ஆய்வு நடத்தி, கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
ஜூலை, 19 முதல், ஆகஸ்ட், 10 வரை நடந்த இந்தக் கருத்துக்கணிப்பின் போது, ...

2 குழந்தைகளுக்கு மேல் கூடாது: அசாமில் வருகிறது புதிய சட்டம்

Posted: 21 Aug 2017 03:27 PM PDT

கவுஹாத்தி: பெருகி வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதை கட்டுப்படுத்தும் சட்டம் உட்பட, பல நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக, அசாம் அரசு தெரிவித்துள்ளது.
அதிரடி:
அசாமில், முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, மக்கள் தொகை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை, மாநில அரசு எடுத்து வருகிறது. 'இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது' என, அதிரடியாக அறிவிக்கப்பட்டது.
புதிய ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™