Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


முடிந்தால் கட்சியை உடைக்கட்டும்! சரத் யாதவுக்கு நிதிஷ் சவால்

Posted: 20 Aug 2017 06:20 AM PDT

பாட்னா:''ஐக்கிய ஜனதா தளம் கட்சியை, முடிந்தால் உடைக்கட்டும்; கட்சியில் மூன்றில், இரு பங்கு ஆதரவை, சரத் யாதவ் நிரூபிக்கட் டும்,'' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான, நிதிஷ் குமார் சவால் விடுத்துள்ளார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசில் பங்கேற்கும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம் இணையவுள்ளது. பா.ஜ., வுடன் சேர்ந்ததற்கு, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவரான, சரத் யாதவ், கடும் எதிர்ப்பு ...

பழனிசாமி திட்டப்படி அ.தி.மு.க., அணிகள் இன்று இணைப்பு... 'அமாவாசை...'

Posted: 20 Aug 2017 09:44 AM PDT

இரு தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சில், சுமுக தீர்வு எட்டப்பட்டுள்ளதால், அமாவாசை தின மான இன்று, முதல்வர் பழனிசாமி திட்டப்படி, அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைகின் றன. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு, அமைச்சரவையில் முக்கிய இலாகா தர திட்ட மிடப்பட்டுள்ளது. அதற்காக, தினகரன் ஆதரவு அமைச்சர்கள் சிலரின் இலாகாக்களை பறிக்க, பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

இணைப்பிற்கு முன், கட்சியின் மாநில நிர்வாகி கள் கூடி, சசிகலாவை பொதுச்செயலர் பதவி யில் இருந்து நீக்கும் தீர்மானத்தை நிறை வேற்ற உள்ளனர்.ஜெ., மறைவுக்குப் பின், முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி என, ...

உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டது... ஏன்?

Posted: 20 Aug 2017 09:53 AM PDT

புதுடில்லி:'உ.பி.,மாநிலம், முசாபர்நகர் அருகே, ரயில் இருப்புப் பாதை பராமரிப்பு பணியால், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி இருக்கலாம்' என, ரயில்வே மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புரியில் இருந்து, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் நோக்கிச் சென்ற உத்கல் எக்ஸ்பிரஸ், நேற்று முன்தினம், உ.பி.,யின், முசாபர்நகர் அருகே, தடம் புரண்டு விபத்துக் குள்ளானது.இதில், 23 பயணியர் உயிரிழந்தனர்; 97 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டுள்ளனர்; அவர்களில், 26 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ...

5 நட்சத்திர ஓட்டல் வேண்டாம் அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு

Posted: 20 Aug 2017 09:55 AM PDT

புதுடில்லி:ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்கு வதையும், பொதுத்துறை நிறுவனங்களிடம் அனுகூலம் பெறுவதையும் தவிர்க்கும்படி, மத்திய அமைச்சர்களுக்கு, பிரதமர், நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பின், சிறிது நேரம் இருக்கும்படி, அமைச்சர்களிடம் கூறிய பிரதமர் மோடி, அவர்களுக்கான உத்தரவை படித்து காண்பித்தார்.அப்போது, ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதையும், பொதுத்துறை நிறுவனங்களி டம் அனுகூலங்கள் பெறுவதையும் தவிர்க்கும் படி, அமைச்சர்களுக்கு, மோடி உத்தர விட்ட தாக தகவல்கள் ...

குமரி முதல் டில்லி வரை நதிகள் பாதுகாப்பு பேரணி ஜக்கி வாசுதேவ் பேட்டி

Posted: 20 Aug 2017 10:25 AM PDT

ஜக்கி வாசுதேவ் தலைமையில், ஈஷா யோகா மையம் நதிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை செப்., 4ல் கன்னியாகுமரியில் துவக்குகிறது. 16 மாநிலங்கள் வழியாக 7,000 கி.மீ., செல்லும் இந்தப் பேரணி, அக்., 2ல் டில்லியில் முடிவடைகிறது.

பிரதமர் மோடியிடம் நதிகளுக்கு புத்துயிர் அளிக்கும் சிறப்பு செயல்திட்ட வரைவை ஜக்கி வாசுதேவ் அளிக்கிறார். பேரணிக்கு அந்தந்த மாநில முதல்வர்கள், கவர்னர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.
பேரணி குறித்து ஜக்கி வாசுதேவ் தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
கன்னியாகுமரியில் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ...

'மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி'

Posted: 20 Aug 2017 10:27 AM PDT

போபால்:''மத்தியில், பிரதமர் மோடி தலைமை யில் ஆட்சி அமைந்தபின், நாட்டின் பொருளா தாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது,'' என, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா கூறினார்.

மத்திய பிரதேசத்தில், முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக் கிறது. போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அமித்ஷா பேசியதாவது:மத்தியில்,
மன்மோகன் சிங் தலைமையில் இருந்த, ஐ.மு., கூட்டணியின், 10 ஆண்டு கால ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம் முடங்கி போயிருந்தது. நரேந்திர மோடி, பிரதமராக பொறுப்பேற்றபின், பொருளாதா ரம் வளர்ச்சியடைந்து வருகிறது. உலகில், பொருளாதாரம் வேகமாக ...

சிதறும் துதிபாடிகள் தினகரன் அதிர்ச்சி

Posted: 20 Aug 2017 10:45 AM PDT

இரு அணிகள் இணைப்பு பேச்சு சுமுகமாக முடிந்துள்ளதால், தினகரன் அணியிலிருந்த, எட்டு, எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் பழனிசாமி அணிக்கு ஓட்டம் பிடித்துள்ளதால், தினகரன் அதிர்ச்சி அடைந்துஉள்ளார்.

சமீபத்தில், மதுரை மேலுாரில், தினகரன் அணி நடத்திய, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், 20 எம்.எல்.ஏ.,க்கள், ஆறு எம்.பி.,க்கள் பங்கேற் றனர். தன்னிடம் உள்ள, 20 எம்.எல்.ஏ.,க்களின் மூலம், முதல்வர் பழனிசாமி அரசுக்கு, நெருக்கடி தரலாம் என, தினகரன் கருதினார்.நேற்று முன்தினம், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில், அவரது அணியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், 12 ...

ஜனநாயக ரீதியில் அ.தி.மு.க., அரசு விரைவில் வீழ்த்தப்படும்: ஸ்டாலின்

Posted: 20 Aug 2017 10:49 AM PDT

சென்னை:'அ.தி.மு.க., அரசு, விரைவில், ஜன நாயக ரீதியில் வீழ்த்தப்படும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
பழைய பென்ஷன் திட்டத்தை, மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் கள், நாளை போராட்டம் அறிவித்து உள்ளனர். அவர்க ளின் கோரிக்கைகளை பற்றி கவலைப் படாமல், இரு அணிகளை இணைத்து, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள, முதல்வர் பழனிசாமி கவனம் செலுத்துகிறார்.போராட்டம் நடத்தும் நிலைக்கு, அரசு ஊழியர்களை தள்ளாமல், 'ஜாக்டோ - ஜியோ' உள்ளிட்ட, அரசு ஊழியர் சங்கங்களை உடனே ...

10 நாட்களில் மாணவர் சேர்க்கை மருத்துவ கவுன்சில் கெடுபிடி

Posted: 20 Aug 2017 10:53 AM PDT

'நீட்' தேர்விலிருந்து, தமிழக அரசுக்கு இன்னும் விலக்கு கிடைக்காத நிலையில், வரும், 31க் குள் மாணவர் சேர்க்கையை முடிக்க, இந்திய மருத்துவ கவுன்சில், 'கெடு' விதித்து உள்ளது.

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.இந்தத் தேர்வின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களிலும், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது. தமிழகத்தில் மட்டும், இன்னும் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.'நீட்' தேர்விலில்இருந்து தமிழகத்திற்கு விலக்கு தர, உச்சநீதி மன்றம் மறுத்து விட்டது. அதனால், 'நீட்' தேர்வுக்கு விலக்கு ...

ம.பி.,யில் அரசு பணிகளில் பெண்களுக்கு 33 சதவீதம்

Posted: 20 Aug 2017 12:34 PM PDT

போபால்: ''மத்திய பிரதேசத்தில், அரசு பணிகளில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும்,'' என, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
முக்கியத்துவம்:
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நேற்று அவர் பேசியதாவது: புதிய இந்தியாவையும், புதிய மத்திய பிரதேசத்தையும் உருவாக்க, பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்து வருகிறார். பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க, பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.
33% ...

பி.எஸ்.எப்., வீரர்களின் மனஅழுத்தம் குறைக்க திட்டம்

Posted: 20 Aug 2017 02:55 PM PDT

புதுடில்லி: பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், தற்கொலை செய்வதை தடுக்கும் நோக்கில், அவர்களது உடல், மன நலனை மதிப்பீடு செய்யும் ஆய்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அதிக மன அழுத்தம்:
நாட்டின் எல்லை பாதுகாப்பு படையில், 2.65 லட்சம் வீரர்கள் உள்ளனர். வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளுடனான, நம் நாட்டின் எல்லைப் பகுதிகளை பாதுகாக்கும் பணிகளை, எல்லை பாதுகாப்பு வீரர்கள் மேற்கொள்கின்றனர். இந்த வீரர்கள், அதிக மன அழுத்தத்துக்கு ஆளாவதும், தற்கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நோக்கில், எல்லை பாதுகாப்பு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™