Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)

Posted: 20 Aug 2017 09:48 AM PDT

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) அவளுக்கு வயது 32 ! அவள் பெயர் குமுதா!திருமணம் ஆகவில்லை ! ஓர் ஆய்வு அறிஞரிடம் (அவருக்கு வயது 65)ஆய்வு மாணவியாகச் சேர்ந்தாள் ; ஆய்வு அறிஞரும் அம் மாணவிக்கு வெகு சிறப்பாக வழிகாட்டினார்; ஆய்வு முடியும் வேளையில், ஆய்வு அறிஞர் , எதற்கும் இருக்கட்டுமே என்று , தனது விசிட்டிங் கார்டை அம் மாணவிக்குக் கொடுத்து , "இதில் எனது blogspot முகவரி உள்ளது; எனது நூற்கள் பற்றிய விவரங்கள் இதில் உள்ளன; நேரம் கிடைத்தால் பாருங்கள்!" என்றார். ஒருவாரம் கழித்து , அவரின் ...

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!

Posted: 20 Aug 2017 09:37 AM PDT

வலையில் வசீகரித்தவை

Posted: 20 Aug 2017 09:35 AM PDT


-
உன்னுடன் கடந்த காலத்தை
இறந்த காலம் என்பதில்
உடன்பாடில்லை எனக்கு.
அது வாழ்ந்த காலம்
-
அரட்டை கேர்ள்
-------------------------
-
ஒரு மழை கொடுத்த நம்பிக்கையை எந்த அரசின்
எந்த நடவடிக்கையும் கொடுக்கவில்லை
-
--------------------------------------
நன்றி விகடன்


ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?

Posted: 20 Aug 2017 09:33 AM PDT

மருத்துவ முத்தம் தரவா...!

Posted: 20 Aug 2017 09:19 AM PDT

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)

Posted: 20 Aug 2017 09:14 AM PDT

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி) சில வீடுகளில் பெண்கள், "வேண்டாம்! வேண்டாம் ! ஓட்டலில் எல்லாம் சாப்பாடு எடுக்கவேண்டாம் ! இதோ ஒரு நொடியில் நான் சமைத்துவிடுகிறேன் !" என்பார்கள் ; பிறகு அதை எடுங்கள் , இதை எடுங்கள் கணவரின் உயிரை எடுப்பார்கள்! இதற்கு ஓர் அடிப்படை இருக்கிறது ! அஃதாவது குடும்பத்தைச் சிதறவிடாமல் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க அவள் விரும்புகிறாள்! 'நீ ஒன்றும் இங்கு பெரிதில்லை' என்பதுபோன்ற கருத்து மற்றவர் மனங்களில் வரக்கூடாது ! தன்னைச் சுற்றியே எல்லாம் ...

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்

Posted: 20 Aug 2017 07:44 AM PDT

# தன் உடலின் நீளத்தைப் போல இரண்டு மடக்கு பெரிய நாக்கு உள்ள விலங்கு பச்சோந்தி. # முன்னால், பின்னால், பக்கவாட்டில் என எல்லாப் பக்கமும் பறக்கும் திறன் கொண்ட பறவை தேன்சிட்டு. # நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை. # மணிக்குச் சுமார் 140 மைல் தூரத்தைத் தாவலின் மூலம் கடக்கும் விலங்கு கங்காரு. # உலகின் பெரிய உயிரினமாகக் கருதப்படும் நீலத் திமிங்கிலத்தின் நீளம் சுமார் 30 மீட்டர் வரை இருக்கும். - ;நன்றி - தி இந்து

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை

Posted: 20 Aug 2017 07:41 AM PDT


-

நன்றி - விகடன்

மீட்சி - கவிதை

Posted: 20 Aug 2017 07:35 AM PDT


-
சலசலத்து
நான் வாழ்ந்த பெரு வாழ்வை விடுத்து
பற்றற்ற துறவிபோல்
காற்றில் அசைந்து அசைந்து
நீருண்ட குளம் நோக்கி
வீழ்கிறது ஒரு பறந்த இலை

தவறி விழுந்த எறும்பொன்று
தன் வாழ்வின்
ஒட்டுமொத்தப் பிடிமானமாக
பற்றிக்கொண்டு ஏறிப் பயணிக்கிறது
இலை மீது
பழுத்த இலை
மெல்லத் துளிர் விடுகிறது!
-
------------------------
வெள்ளூர் ராஜா
நன்றி - விகடன்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Posted: 20 Aug 2017 07:08 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

நம்மைப் போல் - கவிதை

Posted: 20 Aug 2017 05:34 AM PDT

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !

Posted: 20 Aug 2017 04:32 AM PDT

'ரூட்' தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !

"ஒரு பல்கலைக் கழகத்தில் உயர் பதவி வகித்தார் அவர்; அது முடிந்ததும் இன்னொரு பல்கலைக்கழகத்து உயர் பதவிக்குப் போய்விட்டாரே எப்படி?"

"முதல் பதவிக்குப் போன அதே 'ரூட்'டில்தான் !"

"??!!.... ??!...."

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு

Posted: 19 Aug 2017 11:38 PM PDT

-
'ரஜினிதான் அடுத்த முதல்வர் என்ற முடிவுக்கு நிச்சயம்
தமிழகம் வந்து சேரும்' என்று காந்திய மக்கள்
இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியிருப்பது...
-
------------------

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்

Posted: 19 Aug 2017 11:26 PM PDT

- சங்கீதா 'குமுதா ஹேப்பி' தொடரில் ஒரு காட்சி. ரெபேக்கா சங்கீதா 'குமுதா ஹேப்பி' தொடரில் ஒரு காட்சி. புதுயுகம் தொலைக்காட்சியில் 'நட்சத்திர ஜன்னல்' சீசன் 2 நிகழ்ச்சி விநாயகர் சதுர்த்தியன்று (25-ம் தேதி) தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து, 27-ம் தேதி முதல் ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. முதல் சீசன் போலவே இந்த முறையும் நடிகை சங்கீதா தொகுத்து வழங்குகிறார். இளம் தலைமுறையினர், பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சி ...

கூழாங்கற்கள்...!!

Posted: 19 Aug 2017 09:41 PM PDT

இரண்டு கவிதைகள்.

1.
குழிப்புண்கள்
*
மேம்பாலத்தைக்
கடக்கும் போதெல்லாம்
பாலாற்று நதியைப்
பார்க்கிறது கண்கள்.
மணல் வாரி வாரி
எடுத்துள்ளதால்
உடம்பெல்லாம்
குழிப்புண்கள்.
*
2.
கட்டணம்
*.
நகராட்சி கட்டணக்
கழிப்பிடத்தில்
இலவசமாக
சிறுநீர் கழிக்கிறது
நாய்.
ந.க.துறைவன்.
*

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 19 Aug 2017 09:12 PM PDT

என் முகவரி

muthusimpu@gmail.com

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு

Posted: 19 Aug 2017 07:10 PM PDT

வாரணாசி, காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இருந்தும், துணைத்தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் இருந்தும் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் தொகுதிக்கு செல்வதில்லை என அதிருப்தியடைந்த சிலர் அவர்களுக்கு எதிராக சமீபத்தில் தனித்தனியாக 'காணவில்லை' என சுவரொட்டிகள் ஒட்டினர். இதன் தொடர்ச்சியாக தற்போது பிரதமர் மோடியை காணவில்லை என அங்குள்ள வாரணாசி தொகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. மோடியின் புகைப்படம் அடங்கிய ...

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்

Posted: 19 Aug 2017 07:00 PM PDT

உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசுக்கள், அவை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளில் முதலிடத்தில் உள்ளன. மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கு கொசுக்களே காரணம். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆக., 20ல், உலக கொசு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. எப்படி வந்தது 'அனாபெலஸ்' பெண் கொசுக்கள் மூலம் தான் மலேரியா நோய் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை 1897 ஆக., 20ல் கண்டுபிடித்தார் டாக்டர் ரொனால்டு ரோஸ். இவரது இந்த அரிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™