Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காவிரி நீர் குறித்து மன்னர் பரம்பரை வாரிசின் கருத்தால் சர்ச்சை!

Posted: 02 Aug 2017 09:32 AM PDT

காவிரி நதி நீர் பங்கீட்டில், தமிழகத்திற்கு, கர்நாடக அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வரும் நிலையில், ''காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, ஆங்கிலேயர் காலத்தில் கையெழுத்தான, பழைய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும்,'' என, மைசூரு மன்னர் பரம்பரை வாரிசாக தத்தெடுக்கப்பட்ட, யதுவீர் கிருஷ்ண தத்த சாமராஜ உடையார் கருத்து தெரிவித்துள் ளார். சர்ச்சைக்குரிய இந்த கருத்தால் கொதிப்படைந்துள்ள தமிழக விவசாயிகள், இதில், அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கூறியுள்ளனர்.

கர்நாடகாவில், காங்., கட்சியை சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். இந்த ...

சிறையில் முறைகேடு: ரூபாவிடம் ரகசிய விசாரணை

Posted: 02 Aug 2017 09:37 AM PDT

பெங்களூரு:பெங்களூரு மத்திய சிறையில், நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வினய்குமார் தலைமை யிலான குழுவினர், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், டி.ஐ.ஜி., ரூபாவிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா, பெங்களூரு மத்திய சிறையை ஆய்வு செய்து, சிறையில் சட்ட விரோத சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை அனுபவிக்கும், அ.தி. மு.க., சசிகலா, முத்திரைத்தாள் மோசடி வழக் கின் தெல்கி போன்றோருக்கு, வி.ஐ.பி., சலுகை கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக, உயர் ...

ராஜ்யசபா தேர்தல்: கவுரவ பிரச்னை

Posted: 02 Aug 2017 10:00 AM PDT

குஜராத் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெறுவது காங்கிரஸ் மூத்த தலைவர், அஹமது படேலை விட, கட்சித் தலைவர் சோனியா வுக்கு மிகப் பெரிய கவுரவப் பிரச்னையாக அமைந்துள்ளது.

முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ள குஜராத்தில், மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு, வரும், 8ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில், இரண்டு இடங்களுக்கு போட்டியிடும், பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானியின் வெற்றி ஏற்கனவே உறுதியாகியுள்ளது.இந்நிலையில், தொடர்ந்து நான்காவது முறை யாக, குஜராத்தில் இருந்து ராஜ்யசபா வுக்கு தேர்வாகும் நோக்கத்துடன், ...

அமைச்சர் விஜயபாஸ்கர் பதவிக்கு மீண்டும் சிக்கல்

Posted: 02 Aug 2017 10:09 AM PDT

குட்கா விவகாரத்தில் சிக்கிய, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக் களை, வருமான வரித்துறை முடக்கியதால், அவரது அமைச்சர் பதவிக்கு, மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி யில் பணம் வினியோகம் நடந்ததாகக் கூறி, வருமான வரித் துறையினர் அவர் வீட்டில், 'ரெய்டு' நடத்தியபோதும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இப்போது, அவரை அமைச்சர வையில் இருந்து வெளியேற்றும்படி, கட்சி யினரிடமிருந்தே, முதல்வருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அரசியல் குழப்பங்கள் தீர்ந்த பின், முதல்வர் ...

கர்நாடக அமைச்சருக்கு சொந்தமான 39 இடங்களில் 'ரெய்டு'; வரி ஏய்ப்பு வழக்கில் வருமான வரி துறை அதிரடி

Posted: 02 Aug 2017 10:20 AM PDT

பெங்களூரு:வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில், கர்நாடக மின் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, டி.கே.சிவகுமாருக்கு, 55, சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட, டில்லி மற்றும் கர்நாடகாவில் உள்ள, 39 இடங்களில், வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

பெங்களூருக்கு அருகே உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள, குஜராத்தைச் சேர்ந்த, 44 காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்களுக்கு தேவை யான வசதிகளை செய்து தந்து வரும் நிலை யில், சிவகுமார் மீதான இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யசபா தேர்தல்
பா.ஜ., ஆளும், குஜராத் மாநிலத்தில் காலியா ...

பழனிசாமி தடாலடி: பம்முகிறார் தினகரன்

Posted: 02 Aug 2017 10:41 AM PDT

முதல்வர் பழனிசாமியின், தடலாடி நடவடிக்கையால், தினகரன் பதுங்க துவங்கி உள்ளார்.

முதல்வர் பழனிசாமி அணியினரால், ஓரம் கட்டப்பட்ட, சசிகலாவின் அக்கா மகன் தினகரன், கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர,5ம் தேதி, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வர திட்டமிட்டார். இதை அறிந்த முதல்வர் பழனிசாமி, 'கட்சி அலுவலகம், தன் கட்டுப்பாட்டில் உள்ளது' என்பதை, தினகரனுக்கு உணர்த்த முடிவு செய்தார்.இதற்காக நேற்று முன்தினம்,அமைச்சர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை, கட்சி அலுவலகத்தில் கூட்டினார். இதில், தினகரன் ஆதரவு நிர்வாகிகளும் பங்கேற் றனர். கூட்டத்தில், ...

'நோட்டா'வுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் ஏற்பு

Posted: 02 Aug 2017 10:48 AM PDT

புதுடில்லி: குஜராத்தில் நடக்கவுள்ள, ராஜ்யசபா, எம்.பி., தேர்தலில், 'நோட்டா' பயன்படுத்தப்படு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

குஜராத்தில், பா.ஜ., வைச் சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இங்கு, ஆக., 8ல், ராஜ்யசபா, எம்.பி., தேர்தல் நடக்க உள்ளது. மூன்று எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்காக நடக்கும் இந்த தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் கள், மூன்று பேர் மற்றும் காங்., வேட்பாளர் ஒருவர் போட்டியிடுகின்றனர். இதில், அந்த மாநில, எம்.எல். ஏ.,க்கள் ஓட்டளித்து,எம்.பி.,க்களை தேர்வு செய்வர். ...

'அடிப்படை தகவல்கள் அளிப்பது சுதந்திரத்தை மீறுவதாகாது'

Posted: 02 Aug 2017 11:04 AM PDT

புதுடில்லி:'தற்போதைய நவீன தொழிற்நுட்ப யுகத்தில், வெளிப்படைத் தன்மை முக்கியம்; ஒருவரது அடிப்படை தகவல்களை அளிப்பது, தனிநபர் சுதந்திரத்தை மீறுவதாகாது' என, சுப்ரீம் கோர்ட்டில், குஜராத் அரசு கூறியுள்ளது.

'ஆதார்' எண்ணை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்குகளை, சுப்ரீம் கோர்ட் விசாரிக் கிறது. அதில், 'ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது, ஒருவரது தனிநபர்சுதந்திரத்தை மீறும் நடவடிக்கை' என, தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய, சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரிக்கிறது.இதில், குஜராத் மாநிலத்தின் சார்பில், மூத்த வழக் கறிஞர் ராகேஷ் திவேதி, நேற்று ...

புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை இரண்டு வாரங்களில் தாக்கல்

Posted: 02 Aug 2017 11:07 AM PDT

தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு அறிக்கை, இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்க ளுக்கு, 13 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப் படவில்லை. அதனால், பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர்வ தற்கான நுழைவு தேர்வுகளில், தேர்ச்சி பெற முடிவதில்லை. எனவே, பாடதிட்டத்தை மாற்ற, கல்வியாளர் களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்தனர். இதை யடுத்து, ஒன்று முதல், பிளஸ் 2 வரை புதிய பாடத் திட்டத்தை உருவாக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு சார்பில், சென்னையில், ஜூலை, 20ல், ...

நிதிஷ் உறவுக்கு ‛குட்பை': புதிய கட்சி துவக்க சரத்யாதவ் ஆயத்தம்

Posted: 02 Aug 2017 11:47 AM PDT

புதுடில்லி: பீஹாரில் பா.ஜ.,வுடன் நிதிஷ்குமார் கைகோர்த்த விவகாரத்தில் அதிருப்தியுடன் உள்ள ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவர் சரத் யாதவ், கட்சியை விட்டு வெளியேறி புதிய கட்சி துவக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பீஹாரில் , ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங். என மெகா கூட்டணி அமைந்தது. இக்கூட்டணி சட்டசபைதேர்தலில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தார்.

துணை முதல்வர் தேஜஸ்வி மீதான ஊழல் விவகாரத்தை காரணமாக வைத்து கூட்டணியை உடைத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் இரவோடு இரவாக ...

தமிழகத்தில் 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு

Posted: 02 Aug 2017 12:32 PM PDT

சென்னை : 'வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில், ஒரு வாரம் வெயில் வாட்டிய நிலையில், மூன்று நாட்களாக, பரவலாக மழை பெய்கிறது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில், அதிகபட்சமாக, 15 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. நேற்று, சென்னை நகரில் பரவலாக மழை பெய்ததில், மாலை வரை, 1.5 செ.மீ., பதிவானது. மாலை, பல இடங்களில், லேசான மழை தொடர்ந்தது. இந்த மழை தொடரும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.
இது ...

இன்றைய(ஆக.,3) விலை: பெட்ரோல் ரூ.68.02; டீசல் ரூ.58.77

Posted: 02 Aug 2017 01:55 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.68.02காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.77காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,3) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 24 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.68.02 காசுகளாகவும், டீசல் விலை 22 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.58.77 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,3) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

டில்லியில் நெரிசல் பகுதியில் வாகனம் நிறுத்த ரூ.2,500 கட்டணம்

Posted: 02 Aug 2017 03:36 PM PDT

புதுடில்லி: புதுடில்லியில், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில், 'அபராத' வாகன நிறுத்துமிடங்களை அமைக்க, டில்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசல் மற்றும் சட்டவிரோத வாகன நிறுத்தங்களை கட்டுப்படுத்த, புதிய வாகன நிறுத்துமிட கொள்கையை டில்லி மாநகராட்சி நிர்வாகம் தயாரித்துள்ளது.
வடக்கு டில்லி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள தெருக்களை தேர்ந்தெடுத்து, ...

நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது

Posted: 02 Aug 2017 03:56 PM PDT

சென்னை: காமராஜர் சாலையில் இருந்த நடிகர் சிவாஜி சிலை அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட சிலை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறு:
நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவச் சிலை சென்னை மெரினா கடற்கரை எதிரில், காமராஜர் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நிறுவப்பட்டிருந்தது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சிலையை அகற்றும்படி கோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அகற்றப்படும் சிவாஜி சிலை, அடையாறு அருகே கட்டப்படும் சிவாஜி ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™