Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சீனாவுக்கு 'செக்' வைக்க மத்திய அரசு... தீவிரம்!

Posted: 18 Aug 2017 08:56 AM PDT

புதுடில்லி: மின்சார பகிர்மானம் மற்றும் தொலை தொடர்பு துறைகளில், 'சைபர்' தாக்கு தலை தடுக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், இந்தத் துறைகளில் ஈடுபடும் வெளி நாட்டு நிறுவனங்களுக்கு, பல கட்டுப்பாடுகளை விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவை குறிவைத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

நம் நாட்டில் பல்வேறு தொலைத் தொடர்பு சேவை வழங்குவதிலும், மொபைல் போன் விற்பனையிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன; மின்சார பகிர்மான வசதிகள் வழங்குவதிலும் பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன.
மின் ...

பெட்ரோலுக்கு வரி குறைக்கணும்! மாநில அரசுகளுக்கு ஜெட்லி கடிதம்

Posted: 18 Aug 2017 08:57 AM PDT

புதுடில்லி: இயற்கை எரிவாயு உள்ளிட்ட, பெட்ரோலிய பொருட்கள் மீதான, 'வாட்' எனப் படும், மதிப்பு கூட்டு வரியை குறைக்கும் படி, மாநில முதல்வர்களுக்கு, மத்திய நிதியமைச் சர், அருண் ஜெட்லி கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும், ஒரே சந்தை; ஒரே வரி திட்டத் தின் கீழ், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி,ஜூலை,1ல் அமலுக்கு வந்தது. பெட்ரோலிய பொருட்கள், இந்த புதிய வரி திட் டத்தின் கீழ் சேர்க்கபடவில்லை;மாறாக,பழைய முறையில்,'வாட்' எனப்படும்,மதிப்பு கூட்டு வரிஉள்ளிட்ட பிற வரிகள் வசூலிக்கப்படுகின் றன. ஜி.எஸ்.டி., முறையில், ஒரு பொருள் தயாரிக்க பயன்படும் மூலப் ...

முதுநிலை மருத்துவம் படித்தும் பயனில்லை: பரிதவிக்கும் டாக்டர்கள்

Posted: 18 Aug 2017 09:10 AM PDT

இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில், பாடத் திற்கான அங்கீகாரம் காலவதியானதால், படிப்பை முடித்த டாக்டர்கள், மருத்துவ கவுன்சி லில் பதிவு செய்து, பணிக்கு செல்ல முடியா மல், பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ், சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இதில், 2011ல், 14 இடங்களுடன், எம்.டி., - எம்.எஸ்., என்ற, முதுநிலை மருத்துவ படிப்புகள் துவக்கப் பட் டன.இந்த படிப்புகளுக்கு, எம்.சி.ஐ.,என்ற, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி,2015ல் முடிந் தது.போதிய கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தாதது, போதிய பேராசிரியர்கள் ...

போயஸ் கார்டன் இல்லத்தை கைப்பற்ற அரசுக்கு கூடுதல் அதிகாரம்

Posted: 18 Aug 2017 10:07 AM PDT

ஜெயலலிதா வீட்டை கையகப்படுத்தும் விவ காரத்தில், அரசுக்கு கூடுதல் சட்ட அதிகாரம் உள்ளது என்றும், அதில், அவரின் வாரிசுகளின் உரிமை, வரம்புக்கு உட்பட்டது என்றும், சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மறைந்த முதல்வர், ஜெயலலிதா வாழ்ந்த, சென்னை, போயஸ் கார்டன் இல்லத்தை, பொது மக்கள் பார்வையிடும் வகையில், அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், 'எங்கள் கருத்தை கேட்டு முடிவெடுக்க வேண்டும்' என, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதனால், அந்த வீட்டை, அரசு கைப்பற்ற முடியுமா; வாரிசுகள் ...

அவசர சட்டம் என்ன ஆகும்: அமைச்சர் விஜயபாஸ்கர் மழுப்பல்

Posted: 18 Aug 2017 10:21 AM PDT

'நீட் தேர்வு குறித்த பிரச்னையில், இனியும் அவசர சட்டத்திற்கு அவசியம் இருக்குமா' என்ற கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளிக்க மறுத்தார். இதனால், அந்த சட்டத் தை அமல் படுத்துவதில் அரசு பின்வாங்கலாம் என தெரிகிறது.

'நீட்' எனப்படும், மருத்துவ படிப்புக்கான, பொது நுழைவுத்தேர்வில், ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க வழி செய்யும் சட்ட மசோதா வுக்கு, மத்திய அமைச்சகங்களின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இறுதிக்கட்ட சரிபார்ப்புக்கு பின், தமிழக அரசிடம் அளிக்கப்பட்டு, அவசர சட்டமாக பிறப்பிக்கப்பட வேண்டியதுதான் பாக்கி. மற்றபடி, அனைத்து ...

தமிழக அரசை கவிழ்க்க லண்டனில்... வியூகம்

Posted: 18 Aug 2017 10:34 AM PDT

தனிப்பட்ட பயணமாக, லண்டன் சென்றிருந்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை, அங்கு, தினகரனின் துாதர் சந்தித்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசைக் கவிழ்க்கவும், அதன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும், இருவரும் பேசியதாகத் தெரிகிறது. ஸ்டாலின் நாளை, லண்டனிலிருந்து திரும்பியதும், அதற் கான ஏற்பாடுகள் தீவிரமடையும் என, தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன. அ.தி.மு. க.,வின், 135 எம்.எல்.ஏ.,க்களில், தற்போதைய நிலவரப் படி, முதல்வர் பழனிசாமி அணியில், 104; தினகரன் அணியில், 20; பன்னீர்செல்வம் அணியில், 11 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
ஆலோசனை
முதல்வர் பழனிசாமி ...

பழனி - பன்னீர் அணிகள் இணைப்பு, 'புஸ்!'

Posted: 18 Aug 2017 10:38 AM PDT

முதல்வர் பழனிசாமியிடம் இருந்து, வெளிப் படையான அழைப்பு பன்னீருக்கு வராததால், அ.தி.மு.க., அணிகள் இணைப்பு நிகழ்ச்சி, அக் கட்சியினர் எதிர்பார்த்தபடி,நேற்று நடக்க வில்லை.

அ.தி.மு.க.,வில், சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கத்தை ஒழிக்க, தினகரன் மிரட்டலை தடுக்க, பன்னீர் அணியுடன் இணைய, பழனி சாமி அணியினர் முடிவு செய்தனர். இரு தரப்பி லும், ரகசிய பேச்சு துவங்கியது. பன்னீர் அணியினர் கோரிக்கையை ஏற்று, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப் பதாகவும், ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைப்பதாகவும் பழனி அணி அறிவித்தது.
வழிகாட்டுதல் ...

ஜெயலலிதா உயில் எழுதினாரா: தினகரன் புது சந்தேகம்

Posted: 18 Aug 2017 10:53 AM PDT

பெங்களூரு: ''ஜெயலலிதா இல்லம் அரசுடைமை ஆக்கப்படும் என அறிவித்திருப்ப தில் தவறில்லை. இது பற்றி அவர், ஏதேனும் உயில் எழுதி வைத்துள்ளாரா என்பதை அறிந்து, முறையாக அணுக வேண்டும். ''கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவை ஏற்பட்டால், எம்.எல்.ஏ.,க்களின் பலத்தை நிரூபிப்போம்,'' என்று, தினகரன் கூறியுள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா மரணம் குறித்து, நீதி விசாரணைக்கு உத்தர விட்டும், போயஸ் கார்டனில், ஜெயலலிதா வாழ்ந்த, 'வேதா' இல்லம்,அரசு உடமையாக்கப் படும் என்றும்,தமிழக முதல்வர், பழனிசாமி,நேற்று முன் தினம் ...

பார்லி., தேர்தலில் 350ஐ கைப்பற்ற முழு நேர ஊழியர்களை களமிறக்கும் பா.ஜ.,

Posted: 18 Aug 2017 10:57 AM PDT

புதுடில்லி: வரும், 2019 பார்லிமென்ட் தேர்த லில், 350 தொகுதிகளை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ள, பா.ஜ., விரிவான திட்டத் துடன், அதிரடி வியூகம் வகுத்துள்ளது. நாடு முழுவதும் பணியாற்றக்கூடிய, 600 முழுநேர ஊழியர்கள் படையை உருவாக்கி களமிறக்க, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

நரேந்திர மோடியை, பிரதமர் பதவிக்கு முன் னிறுத்தி, 2014ல் பார்லிமென்ட் தேர்தலை, பா.ஜ.,சந்தித்தது;அத்தேர்தலில், ஆட்சி அமைக்க, 272 இடங்கள் தேவை என்ற நிலை யில்,283 இடங்களை கைப்பற்றி,பெரும் பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது.தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மற்ற கட்சி களையும் அமைச்சரவையில் சேர்த்து, பா.ஜ., ஆட்சி ...

மழை வெள்ளத்தால் ரயில்வேக்கு ரூ.150 கோடி இழப்பு

Posted: 18 Aug 2017 12:42 PM PDT

புதுடில்லி: அசாம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், ரயில்வேக்கு, 150 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.ரயில்வே செய்தித் தொடர்பாளர், அனில் சக்சேனா கூறியதாவது: அசாம், மேற்கு வங்கம், பீஹார், உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில், நாள் ஒன்றுக்கு, 12 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்த மண்டலத்தில், 94 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய ரயில்வேயில், நாள் ஒன்றுக்கு, 5.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளுக்காக, ஐந்து கோடி ரூபாய் ...

இன்றைய(ஆக.,19) விலை: பெட்ரோல் ரூ.70.83; டீசல் ரூ.60.20

Posted: 18 Aug 2017 03:21 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.83 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.20 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,19) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 7 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.70.83 காசுகளாகவும், டீசல் விலை 10 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.60.20 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,19) காலை 6 மணி முதல் அமலுக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™