Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் திரிணமுல்... சுருட்டியது!

Posted: 17 Aug 2017 09:05 AM PDT

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில், ஏழு நகராட்சிகளுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், மொத்தமுள்ள, 148 வார்டுகளில், 140 வார்டு களில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆறு வார்டு களில் வென்றதுடன், பெரும்பாலான வார்டுகளில், பா.ஜ., இரண்டாவது இடத்தை பிடித்தது. காங்., 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. 2016ல் நடந்த சட்டசபை தேர்த லில், வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக, அவர் ஆட்சி ...

22 வரை மருத்துவ கல்வி அட்மிஷன் நிறுத்தி வைப்பு; 'நீட்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 17 Aug 2017 09:45 AM PDT

தமிழகத்தில் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை, வரும், 22ம் தேதி வரை நிறுத்தி வைக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'நீட்' எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வு ரேங்க் பட்டியல், மாநிலக் கல்வி வாரிய, 'மெரிட்' பட்டியல், மாநில கல்வி வாரியத்தில் படித்த எத்தனை பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றனர் உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்யவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'நீட்' எனப்படும் மருத்துவக் கல்வியில் சேருவ தற்கான நுழைவுத் தேர்வு, சமீபத்தில் நடத்தப் பட்டது. 'மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் படித் தவர்கள் இந்த நுழைவுத் தேர்வுக்கு தயாராக ...

ஜெ., மரணம் குறித்து... விசாரணை :முதல்வர் பழனிசாமி அதிரடி

Posted: 17 Aug 2017 09:57 AM PDT

ஜெயலலிதா மறைந்து, எட்டு மாதங்களுக்கு பின், அவரது மரணம் குறித்து விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக் கப்பட உள்ளது. அவர் வசித்த, சென்னை, போயஸ் தோட்ட வீடும் அரசுடமையாக்கப் படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசையும், அமைச்சர்களையும் மிரட்டும் தினகரன் கும்பலுக்கு பீதி ஏற்படுத்தும் விதமாக, இந்த அதிரடி அறிவிப்புகளை, நேற்று முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், . சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; டிச., 5ல், இறந்தார். ...

மோடி மீது ராகுல் பாய்ச்சல்; எதிர்க்கட்சிகளுடன் கைகோர்ப்பு

Posted: 17 Aug 2017 10:13 AM PDT

பா.ஜ.,வுக்கு எதிராக, பலமான கூட்டணியை உருவாக்கும் முயற்சியின் முதல் கட்டமாக, எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், நேற்று கூட்டினார். இதில், பிரதமர் மோடியை, கடுமையாக அவர் விமர்சித்தார்.

'நாட்டின் பன்முக கலாசாரத்தை காப்பாற்று வோம்' என்ற தலைப்பில், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம், நேற்று டில்லியில் நடந்தது. ஒரு கோடி வேலைஇதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில், காங்., துணை தலைவர் ராகுல் ...

'நடு ரோட்டில் நமாஸ் செய்யலாம்; கிருஷ்ண ஜெயந்தி கூடாதா?

Posted: 17 Aug 2017 10:15 AM PDT

லக்னோ:''நடு ரோட்டில் நமாஸ் செய்வதை தடுக்கமுடியாத போது, போலீஸ் ஸ்டேஷனில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதையும் தடுக்க முடியாது,'' என, உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள் ளது. சமீபத்தில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்தும்படி, போலீ சாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது; இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது குறித்து, லக்னோவில் நடந்த ஒருநிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: சமீபத் தில், சிவன் கோவில்களுக்கு செல்லும் கன்வர் ...

வி.ஏ.ஓ.,க்கள் வெளிநடப்பு: காலியானது பழனி திண்ணை

Posted: 17 Aug 2017 10:24 AM PDT

முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், கிராம உதவியாளர்கள் கோரிக்கை தொடர்பாக, முதல்வர் எந்த அறிவிப்பையும் வெளியிடாத தைக் கண்டித்து, கிராம உதவியாளர்கள், முதல்வருக்கு எதிராக கோஷமிட்டனர்.

கிராம நிர்வாகஅலுவலர்கள், கிராமஉதவியாளர் கள் மற்றும் நில அளவைத் துறை அலுவலர் சங்கங்களின் சார்பில், சென்னை, கலைவாணர் அரங்கில், நேற்று எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.விழாவில், வருவாய் துறை அமைச்சர் உதய குமார் பேசுகையில், ''உங்களின் கோரிக்கை தொடர்பாக, ...

சி.பி.ஐ., விசாரணை வேண்டும்! பன்னீர் அணி மீண்டும் வலியுறுத்தல்

Posted: 17 Aug 2017 10:27 AM PDT

'எங்களுடைய கோரிக்கைகள், முழுமையாக நிறைவேற்றப்படவில்லை' என, அ.தி.மு.க., - பன்னீர் அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதன் விபரம்:
எம்.பி., மைத்ரேயன்:
தர்ம யுத்தத்தின் முதல் கோரிக்கை, சசிகலா குடும்பத்தை, கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். கடந்த வாரம், முதல்வர் தலைமை யில், 27 நிர்வாகிகள் கையெழுத்திட்டு, தினகரனை வெளியேற்றுவதாக, தீர்மானம் நிறை வேற்றி உள்ளனர். அதேபோல், சசிகலாவையும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்து, தீர்மானம் நிறை வேற்ற வேண்டும்.2-வதாக, ஜெ., மரணம் குறித்து,சி.பி.ஐ., விசாரணை க்கு பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால், ஓய்வு பெற்ற ...

கர்நாடகா அணை கட்டலாம்: சுப்ரீம் கோர்ட்

Posted: 17 Aug 2017 10:54 AM PDT

புதுடில்லி:'காவிரியின் குறுக்கே, மேகதாது வில், தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகை யில், கர்நாடக அரசு, அணை கட்டலாம்' என, உச்ச நீதிமன்றம் நேற்று கூறியுள்ளது.

கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த, காவிரி நடுவர் மன்றம், 2007ல், இறுதித் தீர்ப்பு வழங் கியது; இதை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதற்கி டையே, காவிரியின் குறுக்கே, மேகதாது பகுதியில், கர்நாடகா அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகி றது; இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்ச ...

தனியார் நிறுவனத்திடம் சிக்கியுள்ள ரூ.1,000 கோடி நிலத்தை மீட்பதில் அலட்சியம்

Posted: 17 Aug 2017 10:57 AM PDT

ஜி.எம்.ஆர்., நிறுவனத்திடம் உள்ள, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை திரும்பப்பெற, மின் வாரியம் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை, பேசின்பிரிட்ஜ் அருகில், மின் வாரி யத்துக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அதில், 196 மெகாவாட் திறனில், எரிவாயு மின் நிலையம் அமைக்க, 29 ஏக்கர் நிலத்தை, ஜி.எம்.ஆர்., என்ற தனியார் நிறுவனத்திற்கு, மின் வாரியம், குத்தகைக்கு விட்டது; தனியார் மின்சாரத்தையும் கொள்முதல் செய்தது.மின் கொள்முதல் ஒப்பந்தம், 2015 பிப்ரவரியில் முடிந்தாலும், அந்த இடத்தை திரும்பப் பெறுவதில், மின் வாரியம் அலட்சியம் காட்டி வரு கிறது ...

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்

Posted: 17 Aug 2017 12:18 PM PDT

புதுடில்லி: ஏழைகளுக்கு, உயிர் காக்கும் மருந்துகளை மலிவு விலையில் வழங்குவதற்காக, அனைத்து அரசு பெட்ரோல் பங்க்குகளிலும், மருந்தகங்களை திறக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்தியில் அமைந்துள்ள, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, ஏழை, எளிய மக்களின் மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளை மலிவு விலையில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. உயிர் காக்கும் மருந்துகளை, மக்கள் எளிதாக வாங்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள, அனைத்து அரசு பெட்ரோல் பங்க்குகளிலும், மலிவு விலை மருந்தகங்களை திறக்க, அரசு திட்டமிட்டுள்ளது. இது ...

இன்றைய(ஆக.,18) விலை: பெட்ரோல் ரூ.70.76; டீசல் ரூ.60.30

Posted: 17 Aug 2017 01:26 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.76 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.30 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,18) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 6 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.70.76 காசுகளாகவும், டீசல் விலை 12 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.60.30 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,18) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்

Posted: 17 Aug 2017 02:15 PM PDT

மும்பை : விதிமுறைகளை மீறி, முன்னாள் ஜனாதிபதி, பிரதிபா பாட்டீலின் மகளுக்கு, ஆண்டுக்கு ஒரு ரூபாய் வாடகைக்கு, அரசு நிலம் ஒதுக்கப்பட்டது குறித்து, மஹாராஷ்டிர மாநில பொதுக் கணக்கு குழு கேள்வி எழுப்பி உள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட, பொதுக் கணக்கு குழுவின் அறிக்கையில், 2009ல், விதிமுறைகளை மீறி, ஆண்டுக்கு ஒரு ரூபாய் வாடகையில், முன்னாள் ஜனாதிபதி பிரதிபாவின் மகளுக்கு, நிலம் ஒதுக்கப்பட்டது அம்பலமாகி ...

இந்தியாவை கிண்டல் செய்யும் வீடியோ; சீன அரசு செய்தி நிறுவனம் விஷமம்

Posted: 17 Aug 2017 03:25 PM PDT

பீஜிங்: இந்தியா - சீனா இடையே உள்ள எல்லைப் பிரச்னையில், இந்தியாவை கிண்டல் செய்யும் வகையில், சீன அரசு செய்தி நிறுவனம், ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளது.சிக்கிம் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில், சாலை அமைக்க, சீனா முயன்றது. அதை, நம் படையினர், தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, இந்தியா - சீனா இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால், இரண்டு மாதங்களுக்கு மேலாக, எல்லைப் பகுதியில், இரு நாட்டுப் படைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பு:
அமைதி பேச்சுக்கு தயார் என, இரு நாடுகளும் கூறி வருகின்றன. 'இருவரும் படைகளை திருப்பிக் கொள்ளலாம்' என, நம் அரசு கூறி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™