ஈகரை தமிழ் களஞ்சியம் |
- போடி, நீ தான் லூசு...!
- ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
- போதை குறையாமல் இருக்க….!!
- அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
- கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
- நல்லதோர் வீணை செய்தே –
- அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
- ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
- தாஜ்மகால் அழகுதான்…
- ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
- ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
- அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
- ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
- நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
- ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
- பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
- மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
| Posted: 17 Aug 2017 09:06 AM PDT ஓவர் ஸ்பீடுல புக் பண்ணி ஒருத்தன்கிட்டே மாமூல் வாங்கினது மனசுக்குள்ளே குறுகுறுக்குதா, ஏன்? - அவன் ஓட்டிக்கிட்டு வந்த்தது ரோடு இஞ்சினாச்சே! - வெ.சீதாராமன் - -------------------------------------------- - ஏன் நகைக்கடைக்குள்ளே புகுந்து திருடினே? - தங்கம் விற்கிற விலைக்கு வாங்கவா முடியும், அதனாலதான் யுவர் ஆனர்...! - ஆதிநாராயணன் - ------------------------------------------ - அந்த கட்சி ஆபிஸ் முன்பு கடை போட்டேன், நல்ல வியாபாரம்! - என்ன கடை போட்டே? - அதுவா, கத்திக்கடை! - அனார்கலி - ------------------------------------------ |
| Posted: 17 Aug 2017 08:57 AM PDT ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1 முகப்புரை குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் . ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை. திருவள்ளுவரைப்போலவே ... |
| Posted: 17 Aug 2017 08:00 AM PDT ![]() |
| Posted: 17 Aug 2017 05:28 AM PDT இதென்னடா உன் சிலேட்டிலே வாத்தியார் அரை சைபர் போட்டிருக்காரு..? – ஆமாம், நான் முழு சைபர் வாங்கினவனை விட மோசமா எழுதி இருக்கேனாம்…!! – எம்.மாரிமுத்து – —————————————- |
| கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Posted: 17 Aug 2017 05:16 AM PDT நெல்லை பாரதி நன்றி- வண்ணத்திரை 8-9-2014 ————— - கொடுமுடியில் குடிசை வீட்டில் பிறந்து, வறுமையில் வளர்ந்த கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் என்கிற கே.பி.சுந்தராம்பாள், பின்னாளில் அதே ஊரில் சொந்தத் திரையரங்கம் கட்டும் அளவுக்கு உயர்ந்தார். - ![]() |
| Posted: 17 Aug 2017 05:08 AM PDT படம் : பாரதி (2000) பாடல்- மகாகவி பாரதியார் இசை : இளையராஜா பாடியவர்கள் : இளையராஜா, மனோ – ——————————— நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி – எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். – வல்லமை தாராயோ, – இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி – நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? – தசையினைத் தீசுடினும் – சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், நசையறு மனங்கேட்டேன் – நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன் ... |
| அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு! Posted: 17 Aug 2017 04:40 AM PDT புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி முதல் முறையாக துவங்கி உள்ளது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட கப்பல், ஒடிசா மாநிலத்திற்கு செப்., மாத இறுதியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரச்னை என்ன? ஓ.பி.இ.சி., எனப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள், உற்பத்தி அளவை குறைத்துள்ளன. இதனால், அதிக கந்தகதன்மை கொண்ட கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதற்கு மாற்றாக, அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு இருந்த, 40 ஆண்டுகால தடையை, 2015ம் ஆண்டு டிசம்பர் ... |
| ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் Posted: 17 Aug 2017 04:36 AM PDT சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் திடீரென நிருபர்களை தலைமை செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்தப்பில் ஜெ., மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அவர் நிருபர்களிடம் தெரிவித்தார். முன்னதாக அவர் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இவர் நிருபர்களிடம் பேசுகையில்; முன்னாள் முதல்வர் ஜெ., உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி 05. 12.2016 ல் இறந்தார். இது பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ஓய்வு ... |
| Posted: 17 Aug 2017 04:31 AM PDT - தாஜ்மகால் அழகுதான்… உன்னைவிடவா? – யாழ்போல் நூலகம் மறுக்கும் நூல் – உள்ளிருக்கும் ஒன்று உணர்ந்து நில் நம்பிக்கை – கல்விக் கோவில் பளிச்சிடும் உண்டியல் கடவுள்? – சுவர்களில் மலரும் கிறுக்கல் ஓவியம் விடுமுறை நாட்கள் – ———————— கவிவாணன் சிறகு முளைத்த பூக்கள் – தொகுப்பிலிருந்து |
| ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook Posted: 16 Aug 2017 11:39 PM PDT ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக... The Secret Tamil Ebook தரவிறக்கம் செய்ய |
| ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள் Posted: 16 Aug 2017 10:14 PM PDT - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் |
| அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர் Posted: 16 Aug 2017 06:51 PM PDT வாரணாசி: உ.பி.,யில், அரசு பள்ளியை தத்தெடுத்ததுடன், வாரந்தோறும் சனிக்கிழமையன்று, பள்ளிக்கு வந்து வகுப்பெடுக்கும் கலெக்டரை, பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். உ.பி.,யில், உள்ள வாரணாசியில், எல்.டி., கல்லுாரி வளாகத்தில் துவங்கப்பட்ட மாதிரி பள்ளியில், சுவாமி விவேகானந்தர், இரு மாதங்கள் தங்கியிருந்தார். இந்த பள்ளியை, வாரணாசி கலெக்டர், யோகேஷ்வர் ராம் மிஸ்ரா தத்தெடுத்துள்ளார். சனிக்கிழமைதோறும், மாணவர்களுக்கு, இரண்டு மணி நேரம் பாடம் நடத்துகிறார். இவரது வகுப்பில், மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கின்றனர். இது ... |
| ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு Posted: 16 Aug 2017 06:49 PM PDT கோவை: கோவையில் இருந்து, இரு கன்டெய்னர் லாரிகளில், செல்லாத ரூபாய் நோட்டுகள், சென்னைக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. மத்திய அரசு, '500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, 2016ல் அறிவித்தது. செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தவர்கள், வங்கிகளில், 'டிபாசிட்' செய்தனர். இவ்வாறு சேகரிக்கப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்படுகின்றன. கோவையில் உள்ள அனைத்து ஆக்சிஸ் வங்கி கிளைகளில், 900 கோடி ரூபாய்க்கு, செல்லாத ரூபாய் நோட்டுகள் சேர்ந்தன. இவை, நேற்று, சென்னை ரிசர்வ் ... |
| நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு Posted: 16 Aug 2017 06:45 PM PDT அபுஜா, நைஜீரியா நாட்டில் 2002–ம் ஆண்டு முதல் போகோஹரம் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் ஒரே நோக்கம், அங்கு மத அடிப்படையிலான ஒரு அரசாங்கத்தை அமைப்பதுதான். இதற்காக அந்த அமைப்பினர் 2009–ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிற ஆயுதப்போராட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர். அந்த அமைப்பில் ஆண்களுடன், பெண்களும் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக சமீபத்தில் அமெரிக்காவை ... |
| ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு Posted: 16 Aug 2017 06:41 PM PDT புதுடெல்லி, இன்றைக்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விளையாட்டு, 'புளூ வேல்'. அதாவது, தமிழில் நீல திமிங்கலம் என்று சொல்லப்படும் இந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவர்களின் உயிருக்கே உலை வைக்கிறது. இந்த விளையாட்டு மொத்தம் 50 நாட்கள் நீள்கிறது. விளையாடும் நபர்களுக்கு ஆரம்பத்தில் எளிதான இலக்குகள் விதிக்கப்பட்டு, கடைசி நாளான 50–வது தினத்தன்று 'தற்கொலை செய்துகொள்' என்று நிபந்தனை விதிக்கிறது. அந்த புகைப்படத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விளையாட்டு மிதப்பில் ... |
| பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன Posted: 16 Aug 2017 06:40 PM PDT சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் மும்பையில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானம் தரை இறங்க முடியாததால் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது. அதேபோல் தோகாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானமும் தரை இறங்க முடியாமல் திருவனந்தபுரத்துக்கு திருப்பிவிடப்பட்டது. மேலும் டெல்லி, கொல்கத்தா, மதுரை, புனே, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டியது மற்றும் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டியது என 18 விமானங்கள் அரை மணி நேரத்தில் இருந்து ... |
| மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும் Posted: 16 Aug 2017 06:39 PM PDT கடலூர், கடலூரில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். இதை ஒரு கதையின் மூலம் கூறினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். ஒரு காட்டில் இருக்கும் ஒரு பெரிய ஆலமரம், தனது நிழலில் ஒதுங்கும் பறவை, விலங்கு, மனிதர்களிடம் எப்போதும் தனது பெருமையை கூறிக்கொண்டு இருக்கும். ஒரு நாள் முனிவர் ஒருவர் அந்த மரத்தடியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது வழக்கம் போல் அந்த முனிவரிடம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

