Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


லோக்சபா, சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த...ஆலோசனை! மத்திய அரசின் செலவு கணிசமாக குறைய வாய்ப்பு

Posted: 14 Aug 2017 09:18 AM PDT

புதுடில்லி, :வரும் ஆண்டு நடக்கவுள்ள சில மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களுடன், லோக்சபா தேர்தலையும் சேர்த்து நடத்த, மத்திய அரசு வட்டாரத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், அரசுக்கு பெரியளவில் நிதிச்சுமை குறையும் என கூறப்படுகிறது.லோக்சபா தேர்தலையும், மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல்களையும், வெவ்வேறு சமயத்தில் நடத்துவதால், நிர்வாக சீர்குலைவு ஏற்படுவதாகவும், பெரியளவில் நிதி இழப்பு நிகழ்வதாகவும், பிரதமர், நரேந்திர மோடி கருதுகிறார்.
நிதி இழப்பை தவிர்க்கலாம்
இதை, பல கூட்டங்களில், வெளிப்படையாக அவர் ...

'நீட்' தேர்வுக்கு ஓராண்டு விலக்கு முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகலாம்

Posted: 14 Aug 2017 09:22 AM PDT

'நீட்' தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க வகை செய்யும், தமிழக அரசின் சட்ட வரைவு மசோதாவை ஏற்ற, மத்திய உள்துறை அமைச்சகம், மற்ற அமைச்சகங்களுடன், ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால், இது குறித்து முக்கிய அறிவிப்பு, நாளை வெளியாகலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படும், பொது நுழைவுத் தேர்வான, 'நீட்'டிலிருந்து விலக்கு அளிக்கும்படி, தமிழக அரசு, மத்திய அரசை, தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. இதைத் தொடர்ந்து, 'ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு தயார்' என, மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமன், சமீபத்தில் ...

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு விரைவில் இறுதி வடிவம்: ஜெயகுமார்

Posted: 14 Aug 2017 09:58 AM PDT

சென்னை:''அ.தி.மு.க., அணிகள் இணைப்பு தொடர்பாக, பல கட்டங்களில் பேச்சு நடத்தப்பட்டு, செயல் வடிவம் பெற்றுள்ளது. அது, இறுதி வடிவம் பெற உள்ளது. விரைவில், நல்ல முடிவு எட்டப்படும்,'' என, நிதி அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

டில்லியில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமரை சந்தித்த பின், சாதகமான பதிலை தெரிவித்துள்ளார். எனவே, கட்சி ஒன்றுபடும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜெ., கட்டிக்காத்த இயக்கம், எந்த விதத்திலும் உடையக் கூடாது என்ற அக்கறையில், பிரதமர் கருத்து கூறினால், அது தவறில்லை. அதற்கு, உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது.முதல்வர் குறித்து, ...

கார்த்தி சிதம்பரம் மீது மத்திய அரசு பிறப்பித்த நோட்டீசுக்கு... தடையில்லை!

Posted: 14 Aug 2017 10:16 AM PDT

புதுடில்லி:'முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கு எதிராக,மத்திய அரசு பிறப்பித்த, 'கண்காணிக்கப்படும் நபர்' என்ற உத்தரவுக்கு தடையில்லை' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 'டிமிக்கி' கொடுக்காமல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது, சி.பி.ஐ., ஊழல் வழக்கு பதிவு செய்தது. வெளிநாட்டைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, மத்திய அரசின் அன்னிய முதலீட்டு வாரியம், 2007ல் அனுமதி அளித்தது.
அப்போது மத்திய ...

அனைத்தையும் பேசினேன்: பன்னீர் செல்வம் பேட்டி

Posted: 14 Aug 2017 10:26 AM PDT

''தமிழக அரசியல் நிலவரங்கள் உட்பட, அனைத்து விஷயங்களையும், பிரதமரிடம் பேசினேன்,'' என, தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், டில்லி வந்திருந்தனர். இவர்களில், முதல்வர் மட்டும், அன்றே, சென்னை திரும்பிய நிலையில், பன்னீர்செல்வம் டில்லியிலேயே தங்கினார்; இது, அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
பயணத்தை மாற்றிய பன்னீர்
ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய ...

பழனிசாமி அணி அடக்கப்படுவர்! தினகரன் எச்சரிக்கை

Posted: 14 Aug 2017 10:39 AM PDT

மதுரை, ''ஜெயலலிதா இருக்கும்போது 'நவ துவாரங்களை' மூடி இருந்தவர்கள், தற்போது தறிகெட்ட நிலையில் ஓடுகின்றனர். அவர்கள் அடக்கப்படுவர். ஜெ., பாதையில் செல்லும் வரை இந்த ஆட்சிக்கு பாதிப்பில்லை,'' என முதல்வர் பழனிசாமிக்கு, தினகரன் மிரட்டல் விடுத்துள்ளார்.அ.தி.மு.க., சசிகலா அணியின் துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், மதுரையில் நேற்று கூறியதாவது:

அழைப்பிதழ் கொடுத்தோம்.மேலுார் பொதுக்கூட்டம் மாநாடாக மாறிவிட்டது. விழாவிற்கு இடையூறு செய்யும் வகையில் தமிழக அரசு செயல்பட்டது. விழாவில்பங்கேற்க அமைச்சர்கள் உள்ளிட்ட ...

காங்., செயல் தலைவராகிறார் பிரியங்கா?

Posted: 14 Aug 2017 10:53 AM PDT

புதுடில்லி: காங்கிரசில் மாற்றங்கள் வரும் என, நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் நிலையில், அதன் தலைவர் சோனியாவின் மகள், பிரியங்காவை, கட்சியின் செயல் தலைவராக நியமிக்க, முயற்சிகள் நடந்து வருகின்றன.

கடந்த, 2014 லோக்சபா தேர்தல் மற்றும் அதை தொடர்ந்து நடந்த பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில், காங்., தோல்வியை சந்தித்தது. 'துணைத் தலைவர் ராகுலை, கட்சித் தலைவராக உயர்த்த வேண்டும்' என, மூத்த தலைவர்கள் பலரும் கூறி வருகின்றனர். கட்சித் தலைவர் பொறுப்பை, ராகுல் ஏற்பார் என, பேசப்பட்டு வந்தது.
சோனியா முன்வைத்ததார்
இந்நிலையில், கட்சியின் தலைவர் சோனியாவின் ...

மல்லையாவை அடைக்க மும்பை சிறை தயார்?

Posted: 14 Aug 2017 11:14 AM PDT

புதுடில்லி,:'வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர், விஜய் மல்லையா, 61, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அவரை அடைத்து வைக்க, மும்பையில் உள்ள, ஆர்தர் சாலை சிறை, பாதுகாப்பு மிக்கதாக இருக்கும்' என, அரசு உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த, மதுபானத் தொழிலதிபர், விஜய் மல்லையா. இவர், விமான சேவை நிறுவனம் நடத்த, வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்த கடனை திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு தப்பி ஓடினார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து ...

பாதுகாப்பு தளவாட உற்பத்தி தற்சார்பை நோக்கி முன்னேறுகிறது:அருண் ஜெட்லி

Posted: 14 Aug 2017 11:56 AM PDT

வல்லரசு நாடுகளில் ஒன்றாக மாற விரும்பும் நாடு, பாதுகாப்புத் தேவைக்கான தளவாடங்களுக்கு இறக்குமதியை நம்பி, உள்நாட்டிலேயே தயாரித்தல் அல்லது பாதுகாப்புத் தளவாடத் தொழில் ஆதாரத்தை உருவாக்குவதை, புறக்கணித்து விட முடியுமா... நிச்சயமாக முடியாது. நாட்டின் நீண்டகாலப் பாதுகாப்பு திட்டமிடலுக்கான அணுகுமுறையில், உள்நாட்டிலேயே பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்தல் அல்லது பாதுகாப்புத் தளவாடத் தொழில் ஆதாரத்தை உருவாக்குதல் அவசியம்.

பெருமளவுக்கு இறக்குமதியை மட்டுமே நம்பி இருப்பது, பாதுகாப்புக் கொள்கை மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா ஆற்ற ...

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது - டி.எம்.இ., தகவல்

Posted: 14 Aug 2017 12:07 PM PDT

சென்னை : ''தமிழக அரசு மருத்துவ மனைகளில், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை,'' என, டி.எம்.இ., எனப்படும், மருத்துவக் கல்வி இயக்குனர், எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமை : அரசியலமைப்பு அமர்வுக்கு வழக்கு மாற்றம் செல்லுமா?

Posted: 14 Aug 2017 01:02 PM PDT

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகள், சலுகைகள் அளிக்கும், 'சட்டப் பிரிவு 35ஏ'வை எதிர்த்து தொடரப்பட்டு உள்ள வழக்கை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய

அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றத் தயாராக இருப்பதாக, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சட்டப் பிரிவு சேர்ப்பு : ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களுக்கு, சிறப்பு உரிமைகள், சலுகைகள் அளிக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தில், 35ஏ சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
அதன் விதிகளின்படி, ஜம்மு - காஷ்மீர் குடிஉரிமை பெற்றுள்ள பெண், வேறு மாநிலத்தவரை
திருமணம் செய்தால், சொத்துரிமையை ...

வட கொரியாவுடன் போர் வரலாம் : சி.ஐ.ஏ., அதிகாரி கணிப்பு

Posted: 14 Aug 2017 01:53 PM PDT

வாஷிங்டன்: 'வட கொரியாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு, தற்போது அதிகம் உள்ளது' என, அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான, சி.ஐ.ஏ.,யின் உயர்அதிகாரி தெரிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி, கிழக்காசிய நாடான வட கொரியா, அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஐ.நா., பொருளாதார தடை விதித்த பின்னும், அணு ஆயுதத் தயாரிப்பை வேகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவை தாக்குவோம் என்றும் வடகொரியா மிரட்டி வருகிறது.
இது தொடர்பாக, அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான, சி.ஐ.ஏ., யின் இயக்குனர் மைக் போம்பியோ, ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது: ...

சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற மாநிலங்களுக்கு உத்தரவு

Posted: 14 Aug 2017 02:56 PM PDT

புதுடில்லி: 'சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை அடையாளம் பார்த்து, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடிதம் :
இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கூறியுள்ளதாவது:பல நாடுகளுடன், நாம் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறோம். அங்குள்ள பிரச்னைகளால், பலர் அத்துமீறி நுழைந்து, சட்டவிரோதமாக நம் நாட்டில் தங்கி வருகின்றனர்.இதுபோல் சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை, பயங்கரவாத அமைப்புகள், தங்கள் ...

இன்றைய(ஆக.,15) விலை: பெட்ரோல் ரூ.70.40; டீசல் ரூ.60.32

Posted: 14 Aug 2017 03:33 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.53காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.27 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,15) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 13பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.70.53காசுகளாகவும், டீசல் விலை 5 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.60.32 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,15) காலை 6 மணி முதல் அமலுக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™