Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கோகுலாஷ்டமி

Posted: 14 Aug 2017 09:15 AM PDT

எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் பூமியில் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுவேன். கொடியவர்களை அழித்து பக்தர்களைக் காப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகம்தோறும் அவதரிப்பேன், என்பது கீதைநாயகன் கிருஷ்ணரின் அருள்வாக்கு. தர்மநெறி தவறி நடந்த கொடிய அரசர்களிடம் இருந்து உலகைக் காப்பதற்காக குருசேக்ஷத்திர யுத்தத்தை நடத்தினார். முழுமுதற்கடவுளாகிய மகாவிஷ்ணுவே கிருஷ்ணராக வசுதேவரின் மகனாகப் பிறந்தார். இந்த நாளையே கோகுலாஷ்டமி நாளாக ஜென்மாஷ்டமி நாளாக இந்துக்கள் கொண்டாடி ...

கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்!

Posted: 14 Aug 2017 08:44 AM PDT

- இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஸ்வின்ப்ரூக்  அணிக்கெதிரான போட்டியில் டோர்செஸ்டர் ஆன் தேம்ஸ்  கிரிக்கெட் கிளப் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில்  35 ரன்கள் தேவைப்பட்டது. முதலில் பேட் செய்த ஸ்வின்ப்ரூக்  அணி நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்தது.  இதையடுத்து, களமிறங்கிய டோர்செஸ்டர் அணி 44 ஓவரில்  7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரை  மிஹாய் கியூகஸ் வீச, அதை 54 வயதான ஸ்டீவ் மெக்கம்ப்  எதிர்கொண்டார். கடந்த 20 வருடங்களாக டோர்செஸ்டர் அணிக்காக ...

[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Posted: 14 Aug 2017 08:29 AM PDT

அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் வேண்டும். அவர் எழுதிய "சிவா trilogy" இல் உள்ள 2 புத்தகங்கள் வேண்டும். யாராவது இருந்தால் பதிவிடவும். 3'ம் பாகம் இன்னும் தமிழில் வெளி வர வில்லை

1. மெழுக'வின் அமரர்கள் - The Immortals of Meluha
2.நாகர்களின் ரகசியம் - The Secret of the Nagas

மிக்க நன்றி.

செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்

Posted: 14 Aug 2017 08:18 AM PDT

குஜராத் மாநிலத்தில் செயல்படும் ஹரேகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷ்யாம் தோலாக்கியா. இவர் நிறுவனத்தின் மதிப்பு 6000 கோடி ரூபாயாகும், இதோடு கணேஷ்ராம் வைர வியாபாரமும் செய்து வருகிறார். இவரின் மூத்த மகன் திராவ்யா தோலக்கியா (21) கடந்த ஆண்டு தந்தையின் உத்தரவை ஏற்று ஒரு மாதம் பல்வேறு கடைகளில் வேலை செய்து, சொற்ப வாடகை கொண்ட அறையில் ஏழை மக்களுடன் தங்கி பல்வேறு அனுபவங்களை பெற்றார். அதே போல கணேஷ்ராமின் இளைய மகன் ஹிதார் தோலாக்கியாவும் ஒரு மாதம் ஏழையாக வாழ்ந்து பார்த்துள்ளார். ...

ஞாபக மறதியைப் போக்க வழி !

Posted: 14 Aug 2017 07:23 AM PDT

ஞாபக மறதியைப் போக்க வழி !

மகன் – ஞாபக மறதியைப் போக்க ஒரு ஸ்லோகம் சொல்லித்தந்தியேப்பா, , அதில் மூணு வரி ஞாபகம் இருக்கு நாலாவது வரி என்ன? சொல்லுப்பா!

தந்தை – நாலாவது வரி …… அது … ஞாபகம் இல்லியே!

மகன் - ?!... ?!... ?! …

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின

Posted: 14 Aug 2017 07:05 AM PDT

புதுடெல்லி,  ரஷியாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற சர்வதேச  அளவிலான ராணுவ டாங்கிகள் போட்டியில் ரஷியா,  இந்தியா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளின் டாங்கிகள் க லந்து கொண்டன.  இதில் இந்தியாவின் சார்பில் அர்ஜூனா டாங்கிகள் பங்கு  கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி–90 ரக  டாங்கிகள் கலந்து கொண்டன.  இவை ரஷியாவில் தயாரான டாங்கிகள் ஆகும். ஆரம்பகட்ட சுற்றுகளின் போது இந்திய டாங்கிகள் சிறப்பாக  இயங்கிய போதிலும், இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றின்  போது, அவற்றில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது. ...

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  

Posted: 14 Aug 2017 06:58 AM PDT

பெயர்:மு.தமிழ்ச்செல்வி  
சொந்த ஊர்: காஞ்சிபுரம்
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: எனக்கு நாவல் படிக்கும் பழக்கம் உண்டு . அப்போது இந்த வலைத்தளம் பற்றி தெரியும் .
பொழுதுபோக்கு: புத்தகம் படிப்பது.
தொழில்:  
மேலும் என்னைப் பற்றி:

மனைவி அமைவதெல்லாம் இறைவன்..........

Posted: 14 Aug 2017 06:57 AM PDT

மனைவி அமைவதெல்லாம் இறைவன்..........



நன்றி முகநூல்.
ரமணியன்

படத்தை ஜூம் பண்ணிப்பார்க்கவும்

நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டம்

Posted: 14 Aug 2017 03:41 AM PDT

'நீட்' தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் அவசர சட்ட மசோதா, இன்று (திங்கட்கிழமை) மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த அவசர சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், தமிழகத்துக்கு 'நீட்' தேர்வில் இருந்து ஓர் ஆண்டு விலக்கு அளிக்கும் உத்தரவை கவர்னர் வித்யாசாகர் ராவ் பிறப்பிப்பார். அப்படி உத்தரவு கிடைத்ததும், இந்த ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும். ...

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்

Posted: 13 Aug 2017 10:04 PM PDT

நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது;- தமிழ்நாட்டுக்குள் அத்தனை விமானசேவையிலும்,தமிழிலும் அறிவிப்பு இருத்தல்,நலம் இண்டிகோ கோவை சென்னை விமானத்தில் உழைப்பால் உயர்ந்த வணிக மக்கள் பயணம் செய்கின்றனர். அறிவிப்புகள் தமிழில் இருப்பின் நலம். என கூறி உள்ளார். தமிழ்நாட்டுக்குள் அத்தனை விமானசேவையிலும்,தமிழிலும் அறிவிப்பு இருத்தல்,நலம்.4 the convenience of people who can't u.stand Hindi &English — Vivekh actor (@Actor_Vivek) August 12, 2017 இண்டிகோ கோவை சென்னை ...

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு

Posted: 13 Aug 2017 09:25 PM PDT

சிம்லா, இமாசல பிரதேச மாநிலத்தில் நேற்று முன்தினம் திடீர் மேக வெடிப்பு காரணமாக இடைவிடாது பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு இடையே மணாலியில் இருந்து காத்ராவுக்கு 40 பேருடன் ஒரு அரசு பஸ்சும், மணாலியில் இருந்து சம்பாவுக்கு 30 பேருடன் மற்றொரு அரசு பஸ்சும் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. வழியில் பயணிகள் யாரும் ஏறினார்களா என்பது குறித்து தகவல் இல்லை. இவ்விரு பஸ்களும் மண்டி–பதன்கோட் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தன. வழியில், இவ்விரு பஸ்களும் பயணிகள், டிரைவர்கள், கண்டக்டர்கள் ...

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை

Posted: 13 Aug 2017 07:12 PM PDT

புதுடில்லி : அண்டை நாடான சீனாவில் உள்ள விமான நிலையத்தில், விமான நிறுவன ஊழியர்களால், இந்தியப் பயணியர் அவமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடக்கிறது. இந்தியா - சீனா இடையே, டோக்லாம் எல்லைப் பிரச்னையால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், சீன விமான ஊழியர்களால், இந்திய பயணியர் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அமெரிக்காவில் செயல்படும், பஞ்சாப் சங்கத்தின் செயல் இயக்குனர், சத்னாம் சிங் சாசல், வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™