Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பாடத்திட்டத்துக்கு கருத்து தெரிவிக்க ஆசிரியர்கள், மாணவர்கள் ஆர்வம்

Posted: 10 Aug 2017 07:49 AM PDT

பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை அறிய, முதல்வன் பட ஸ்டைலில்,பள்ளிகளில் கருத்து அறியும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில், ஆசிரியர்களும், மாணவர்களும், தங்களின் கருத்துக்களை எழுதி போட்டு வருகின்றனர்.

தமிழகத்தில், பிளஸ் ௨ வரையிலான பாடத்திட்டம், பல ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையன், செயலராக உதயசந்திரன் ஆகியோர் பதவியேற்ற தும், பாடத்திட்டத்தை மாற்ற நடவடிக்கைஎடுக்கப் பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1க்கு, புதிய பாடத்திட்டம் அமலாக உள்ளது. ...

துணை ஜனாதிபதி அன்சாரிக்கு ராஜ்யசபாவில் புகழாரம்

Posted: 10 Aug 2017 08:06 AM PDT

புதுடில்லி: துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும், ஹமீது அன்சாரிக்கு, ராஜ்யசபாவில் நேற்று, பல்வேறு கட்சித் தலை வர்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.

கடந்த, 10 ஆண்டுகளாக, துணை ஜனாதிபதி யாக இருந்த, ஹமீது அன்சாரி, 80, பதவிக் காலம், நேற்றுடன் முடிந்தது. ராஜ்யசபாவின் தலைவராகவும் இருந்த அவருக்கு, ராஜ்யசபா வில் நேற்று,கட்சிகளின் தலைவர்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.
பிரதமர், நரேந்திர மோடி பேசியதாவது:
இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்த அனுபவம், ராஜ்யசபாவை மிகச் சிறப்பாக நடத்த, அவருக்கு உதவியது. பல ...

'நீட்' தேர்வு முடிவை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Posted: 10 Aug 2017 09:32 AM PDT

புதுடில்லி: 'நடப்பு ஆண்டு, நீட் தேர்வு முடிவு களை ரத்து செய்ய முடியாது' என, உச்ச நீதி மன்றம் மறுத்து விட்டது.

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க் கைக்கான 'நீட்' தேர்வு, மே மாதம் நடந்தது. ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிராந்திய மொழி களில் நடத்தப்பட்ட இத்தேர்வில், வெவ்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டதாக, மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.நீட் தேர்வு முடிவை ரத்து செய்ய வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில், மாணவர்கள் சார்பில், வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமிதவ் ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு ...

பீஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் உடைகிறது?

Posted: 10 Aug 2017 09:55 AM PDT

பாட்னா: பீஹாரில், ஆளும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சல் அதிகரித்து வரும் நிலையில், கட்சி இரண்டாக உடைவது உறுதியாகியுள்ளது. கட்சித் தலை வர் பதவியில் இருந்து, முதல்வர், நிதிஷ் குமாரை நீக்குவது குறித்து, கட்சியின் முன் னாள் தலைவர், சரத் யாதவ், ஆதரவாளர் களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பீஹாரில், முதல்வர், நிதிஷ்குமார் தலைமை யில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. முன்னதாக, 2014 லோக் சபா தேர்தலின்போது, பா.ஜ., தலைமையி லான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து, ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது.
ஊழல் ...

விரட்டியடிப்பு! தினகரனை துணை பொதுச்செயலராக நியமித்தது செல்லாது

Posted: 10 Aug 2017 10:09 AM PDT

அ.தி.மு.க.,வில் இருந்து, தினகரனை விரட்டி யடிக்கும் விதமாக, அவரை துணை பொதுச் செயலராக நியமித்தது செல்லாது என, முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், திடீர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

அவருக்கு, கட்சி நிர்வாகிகளை நியமிக்க, எந்த அதிகாரமும் இல்லை என்றும், தடலாடியாக அறிவித்துள்ளனர். இதன் வாயிலாக, தினகரனை வெளியேற்றி விட்டு, பன்னீர் அணியை இணைக்க, முதல் அச்சாரம் போட்டுள்ளனர்.முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றது முதல், தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத் தினரை, மெல்ல ஓரங்கட்டும் முயற்சியில் இறங்கினார். அதற்கு, அமைச்சர்கள், எம்.எல். ஏ.,க்களின் ...

அணிகள் இணையுமா: பன்னீர்செல்வம் பேட்டி

Posted: 10 Aug 2017 10:30 AM PDT

சென்னை: ''அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு குறித்து, அதிகாரபூர்வமாக எந்த தகவ லும் எங்களுக்கு வரவில்லை,'' என, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் கூறியதாவது: ஆறு மாதங்களுக்கு முன், நாங் கள் தர்ம யுத்தத்தை துவக்கினோம். அப்போது கூறப்பட்ட கருத்துக்களை, தீர்மான மாக கொண்டு வந்துள்ளனர். பாதிவந்துள்ளனர்; மீதி வரட்டும்; அதன்பின், எங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கிறோம். எங்களின் முந்தைய நிலைப்பாட்டில், எந்த மாற்ற மும் இல்லை. இதுவரை பேச்சு நடத்த, அதிகாரபூர்வ மாக எந்த தகவலும் இல்லை. இரு அணிகளும் ...

கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் 'ஆப்பரேஷன்'; பழனிசாமி அணியினருக்கு தினகரன் எச்சரிக்கை

Posted: 10 Aug 2017 10:58 AM PDT

சென்னை:''கட்சிக்கு விரோதமாக யார் செயல் பட்டாலும், அறுவை சிகிச்சை செய்ய தயங்க மாட்டேன்,'' என, தினகரன் தெரிவித்தார்.

இது குறித்து, தஞ்சாவூரில், அவர் கூறியதாவது: பொதுச்செயலர் சசிகலா கூறியதால், முதல்வ ராக பொறுப்பேற்ற பழனிசாமி, எப்போது தேர் தல் கமிஷன் தலைவரானார் என, தெரிய வில்லை. அவர்கள் தீர்மானம் நிறைவேற்றிய, லெட்டர் பேடில், அ.தி.மு.க., தலைமைச் செயலகம் என, உள்ளது; 'அ.தி.மு.க., அம்மா' என, இருக்க வேண்டும். இது, தேர்தல் கமிஷன் விதி மீறல். யாராவது தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்தால், முதல்வர் முதல், அனைத்து அமைச் சர்களும், பதவியில் இருந்து இறங்க நேரிடும். ...

தண்ணீரை வீணடிக்கிறது கர்நாடகா! உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வாதம்

Posted: 10 Aug 2017 11:24 AM PDT

'ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்வதற்கு, தமிழகத்தைவிட, கர்நாடகாவுக்கு கூடுதல் நீரை, காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கி யுள்ளது. முறையான பயிர் திட்டங்கள் இல்லா மல் தண்ணீரை, கர்நாடகா வீணடிக்கிறது' என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.

காவிரி நதிநீரைப் பங்கிட்டு கொள்வது குறித்து, காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகா உள்ளிட்டவை, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகளை, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம். கன்வில்கர் அமர்வு விசாரித்து வருகிறது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான ...

அனுமதி பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கேள்வி

Posted: 10 Aug 2017 12:10 PM PDT

சென்னை:'அரசு அனுமதி பெறாத பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை நடக்கும் போது, அதி காரிகள் விரைந்து ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில், அரசு அனுமதியின்றி துவங்கப்பட்ட பள்ளியில், 200 மாணவர்கள் படித்து வந்தனர். அந்த மாணவர்களை, வேறு பள்ளிகளில் சேர்க்க, அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதை எதிர்த்து, பள்ளி நிர்வாகம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.தஞ்சையில் உள்ள, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், 'அனுமதி கேட்டு, பள்ளி ...

இன்றைய(ஆக.,11) விலை: பெட்ரோல் ரூ.69.68; டீசல் ரூ.59.98

Posted: 10 Aug 2017 12:25 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69.68 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.98 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,11) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.69.68 காசுகளாகவும், டீசல் விலை 18 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.59.98 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,11) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

எங்கள் ஆட்சி சிறப்பாகவே உள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்

Posted: 10 Aug 2017 01:01 PM PDT

சென்னை: ‛அரசும், அமைச்சர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்; எங்கள் ஆட்சி சிறப்பாக உள்ளது' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது: ஆளும் அரசும், அமைச்சர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர்கள் செயல்படவில்லை என்றால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள். வறட்சியிலும் மக்கள் எங்களுக்கு வரவேற்பு அளிக்கின்றனர். எங்கள் ஆட்சி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, முதல்வர் பழனிசாமி ...

குஜராத்தில் ஆட்சி அமைப்போம்: அஹமது படேல்

Posted: 10 Aug 2017 01:52 PM PDT

காந்திநகர்: ‛குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்., கட்சி ஆட்சியை பிடிக்கும்' என ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற அஹமது படேல் தெரிவித்தார்.
நன்றி:
குஜராத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் காங்., கட்சி சார்பில், அஹமது படேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், தனக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ராஜ்யசபா தேர்தல் மிகவும் கடினமாக இருந்தது. இதுபோன்ற தேர்தலை என் வாழ்நாளில் சந்தித்ததில்லை. எனக்கு ஓட்டளித்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் ...

அரசு பள்ளியில் மது விருந்து: விசாரணைக்கு உத்தரவு

Posted: 10 Aug 2017 03:15 PM PDT

லக்னோ: உத்தர பிரதேசத்தில், அரசுப் பள்ளியில், மது விருந்துடன், பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்தப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மது விருந்து:
சகோதரத்துவத்தை வலியுறுத்தும், ரக் ஷா பந்தன் பண்டிகை, 7ல், நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வட மாநிலங்களில், அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உ.பி., மாநிலம், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள, ஒரு கிராமத்தின் தலைவர், தன் மகனின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டார். அங்குள்ள, அரசு தொடக்கப் பள்ளியின் சாவியை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™