Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நீரிலிருந்து மேலேறும் ஆகாயவிமானம்

Posted: 10 Aug 2017 03:02 PM PDT

நீரிலிருந்து மேலேறும் ஆகாயவிமானம்ரஸ்சிய விமானம் இது.

ரமணியன்

என் வங்கி சேமிப்பு 28 ஆயிரம் ரூபாய்! – சாருஹாசன்

Posted: 10 Aug 2017 10:49 AM PDT

- உங்க வழக்கறிஞர் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ் சம்பவம் ஏதாவது இருக்கா? – சாருஹாசன் பேட்டியில் சொன்னது: நிறைய இருக்கு ,என் அனுபவத்தில் ஒரு கேஸ் நடந்தது. கிராமத்தில் ஒருவன் வீட்டுக்கு முன்னால இருந்த மரத்தை இன்னொருவன் நைட்டோ நைட்டா வெட்டிக் கொண்டு போய் விட்டான். ஒருத்தன் வீட்டுக்கு முன்னால இருக்கும் மரத்தை வெட்டிட்டா அது பெரிய அவமானம். அந்த கேஸ் என்கிட்ட வந்தது. வெட்டி எடுத்துப் போனவனை உடைந்துபோன வாளை அங்கேயே போட்டுவிட்டு போய்விட்டான். நான் மரம் அறுத்தவன் சார்பா ஆஜராகி வாதாடினேன். மரத்துக்கு ...

கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்

Posted: 10 Aug 2017 08:49 AM PDT

ஆவரேஜ் இளைஞன் அகிலம் புகழுபவனாக மாறுவதே 'கூட்டத்தில் ஒருத்தன்.' மொத்த குடும்பத்திலும் உபயோகம் இல்லாதவராக மதிப்பிடப்படுகிறார் அசோக் செல்வன். எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தாலும் பெரிய அளவிற்கு எட்ட முடியவில்லை. அதற்கான சூட்சுமம் அறியாமல் இருக்கும் அவரை, அப்பா முதற்கொண்டு கரித்துக் கொட்டுகிறார்கள். இடையில் ஸ்டேட் டாப்பராக வெற்றி பெறும் பெண் மேல் காதல் வர அசோக் செல்வனிடம் அதிரடியாக சில மாற்றங்கள். பிரியா ஆனந்தின் கேள்விகள் அவரை மாற்றிப் போடுகின்றன. தாழ்வுமனப்பான்மை கொண்ட அசோக் ...

தென்னங்கீற்று !

Posted: 10 Aug 2017 08:38 AM PDT

1975-ல் வெளிவந்த இந்த திரைப்படம் 25 வயதான பிறகும் பருவமடையாத ஒரு பெண்ணின் வாழ்க்கையை நடைமுறை சிக்கல்களுடன் விவாதிக்கிறது. ஒரு பெண் 25 வயதில் திருமணம் ஆகாமல் இருப்பதே பெரும் சுமையாக நினைக்கும் சமூகம் நம்முடையது. இந்த சூழலில் வயதிற்கு வராமல் இருந்தால் ? கதாப்பாத்திரங்கள் அதன் போக்கிலேயே இருக்க அனுமதிக்கப்படுகின்றன. யாருக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. யாரையும் எதிர்மறையாக காட்டவில்லை. சூழல்களைக் கொண்டே கதை நகர்கிறது. நடிகை சுஜாதாவிற்கு பொருத்தமான கதாப்பாத்திரம் (வசுமதி ) . நல்ல நடிப்பு. ...

சுஜாதா கதை தொகுப்புகள் [PDF FULL COLLECTIONS]

Posted: 10 Aug 2017 08:35 AM PDT

சுஜாதா கதை தொகுப்புகள் [PDF FULL COLLECTIONS]
தொகுப்பு 1

சுட்டி

தொகுப்பு 2

சுட்டி

---
நன்றி - தமிழ்ப்ரீபுக்ஸ் வலைப்பூ

தமிழருக்கு சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள் மறுப்பு பிணராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு

Posted: 10 Aug 2017 07:16 AM PDT

நெல்லை சமூகரெங்கபுரத்தை அடுத்த மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். அந்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்து ஒன்றில் சிக்கிய முருகனுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதனால் பல மணிநேரம் அலைக்கழிக்கப்பட்ட முருகனின் உயிர் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரிந்தது. இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க கொல்லம் சுற்று வட்டாரத்தில் உள்ள 7 மருத்துவமனைகளுக்கு கேரள மனித உரிமைகள் ...

துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து

Posted: 10 Aug 2017 07:12 AM PDT

ஐதராபாத்: துணை கலெக்டராக பான்ட்மின்டன் வீராங்கனை சிந்து நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பி.வி.சிந்து, 2016- ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக கடந்த ஜூலை மாதம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சிந்துவுக்கு துணை கலெக்டர் பணி நியமன ஆணை வழங்கினார். இதையடுத்து நேற்று விஜயவாடாவில் உள்ள நில நிர்வாக தலைமை கமிஷனர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். - ------------------------------------- தினமலர்

வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!

Posted: 10 Aug 2017 04:32 AM PDT

நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த சில் மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இவர்களது திருமணம் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி, கோவவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இவர்களது திருமண அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.  - ----------------------- தமிழ் வெப்துனியா

எடப்பாடி அணி தீர்மானம் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை

Posted: 10 Aug 2017 02:29 AM PDT

சென்னை, டி.டி.வி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது. டி.டி.வி தினகரனால் கட்சியின் எந்த பதவியையும் வகிக்க முடியாது   என எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க தலைமை கழகத்தில்  நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டதும் ஓ.பி.எஸ். முகாம் பரபரப்படைந்தது. ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த  ஆலோசனை கூட்டத்தில் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். ...

தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை

Posted: 10 Aug 2017 02:01 AM PDT

- விக்ரம் வேதா'வில் விஜய் சேதுபதியின் இளைய சகோதரராக நடித்த கதிரை சுலபத்தில் மறக்க முடியாது. அந்தப் படத்தில் அவருக்கு ஏற்படும் பரிதாபகரமான முடிவு படம் பார்ப்பவர்களை நிச்சயம் அசைத்துப் பார்க்கும். பாந்தமான நடிப்பை வெளிப் படுத்துவதாக கதிரை விமர்சகர்கள் பாராட்டுகின்றனர். இது வரை சாந்தமான பாத்திரங்களில் தோன்றிய அவர், தற்போது 'சத்ரு' என்ற புதுப் படத்தில் விறைப்பான காவல்துறை அதிகாரியாகத் தோன்றுகிறார். இது முழுநீள அதிரடிப் பட மாம். திகில் நிறைந்த சம்பவங்களால் கோர்க்கப்பட்டிருக்கும் திரைக்கதை விறுவிறுப்பாக ...

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்

Posted: 10 Aug 2017 02:00 AM PDT

சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் போன்ற சமூக பிரச்சினைகளை அலசிய படங்களை டைரக்டு செய்தவர், எஸ்.ஏ.சந்திரசேகரன். இவர், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவருடைய வேடம் ஏற்று நடிக்கிறார். இதுபற்றி எஸ்.ஏ.சந்திர சேகரன் கூறுகிறார்:- பொதுமக்களின் நலனுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது நல வழக்குகளை தொடர்ந்தவர், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. அப்படி அவர் தொடர்ந்த பல வழக்குகளில் மக்களுக்கு சாதகமான பல அதிரடி தீர்ப்புகளையும் வாங்கி தந்தவர். அந்த ...

மணிரத்னம் படத்தில் விஜய் சேதுபதி!

Posted: 10 Aug 2017 01:58 AM PDT

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில்
ஒருவரான விஜய் சேதுபதி தற்போது கருப்பன், 96,
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி
ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்து இவர் மணிரத்னம் டைரக்‌ஷனில், ஒரு புதிய
படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

இந்த படத்துக்கு ஒரு வருடம் 'கால்ஷீட்' வேண்டும்
என்று மணிரத்னம் கேட்டு இருக்கிறார்.
விஜய் சேதுபதியும் அதற்கு சம்மதித்து இருக்கிறார்!

—————————
தினத்தந்தி

‘‘மனைவியுடன் வலுக்கட்டாய தாம்பத்ய உறவு, குற்றம் அல்ல’’ சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

Posted: 10 Aug 2017 01:35 AM PDT

இந்திய தண்டனை சட்டத்தின் 375–வது பிரிவில், 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் வலுக்கட்டாயமாக தாம்பத்ய உறவு கொள்வது கற்பழிப்பு குற்றம் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. - இந்நிலையில், இந்த பிரிவு, அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று அறிவிக்கக்கோரி, ஒரு தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், '15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்களின் விருப்பத்துக்கு ...

- பொடி வகைகள் - அவள் விகடன்

Posted: 09 Aug 2017 11:48 PM PDT

முல்லா கதை.

Posted: 09 Aug 2017 08:27 PM PDT

உடன் இருத்தல்…!! " எனக்குக் குழந்தை பிறக்கும் சமயத்தில் என் கணவர் என்னுடன் இருபபதற்கு அனுமதிப்பீர்களா..? " என்று பிரசவ வலியில் இருந்த மேரி, டாக்டரிடம் கேட்டாள். " ஓ… அவர் இருக்கலாமே… குழந்தை பிறக்கும்போது அதனுடைய அப்பா இருக்க வேண்டும் என்பதில் எனக்கும் கூட நம்பிக்கை உண்டு…" என்று டாக்டர் பதிலளித்தார். " எனக்கு அது நல்ல யோசனையாகத் தெரியவில்லை. அவருக்கும் என் கணவருக்கும் அவ்வளவாக ஒத்துவராது… " என்று சொன்னாள் மேரி. ஆதாரம் ; ஓஷோவின் – " கிளச்சியாளன் ஆன்மிகத்தின் ஆதார சுருதி " நூல் பக்கம் ...

‘புளூ வேல்’ கேமுக்கு தடை: பினராயி விஜயன் வேண்டுகோள்

Posted: 09 Aug 2017 07:51 PM PDT

திருவனந்தபுரம்:
கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்ததாவது:

சிறுவர்களை தற்கொலைக்கு துாண்டும், 'புளூ வேல்'
ஆன்லைன் விளையாட்டிற்கு, மத்திய அரசு தடை விதிக்க
வேண்டும்.

இந்த விளையாட்டின் மூலம், உலகம் முழுவதும், 4,000 குழந்தைகள்
தற்கொலை செய்துள்ளனர். நம் நாட்டிலும், இதன் தாக்கம்
அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
-------------------
தினமலர்

தமிழுக்கு அங்கீகாரம் எங்கே? தம்பிதுரை திடீர் ஆவேசம்!

Posted: 09 Aug 2017 07:39 PM PDT

லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தில் பங்கேற்ற, துணை சபாநாயகர், தம்பிதுரை பேசியதாவது: நாடு, சுதந்திரம் பெற, அனைத்து மொழிகளைச் சேர்ந்த மக்களும் போராடியுள்ளனர். குறிப்பிட்ட ஒரு மொழிக்கு மட்டும் முன்னுரிமை தருவதற்கு பதில், அனைத்து மொழிகளையும் சமமாக நடத்துவது, பார்லிமென்டின் கடமை. நாட்டின் அனைத்து மொழிகளையும், பிராந்திய மொழிகளாக மட்டும் அங்கீகரிக்காமல், தேசிய மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும். தமிழ், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும், அலுவல் அந்தஸ்து கிடைக்கும் ...

தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

Posted: 09 Aug 2017 06:50 PM PDT

தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி - புதுடெல்லி, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்து உள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. கர்நாடகம் மற்றும் கேரள அரசுகள் தரப்பிலான வாதங்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™