Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை :கமல்

Posted: 01 Aug 2017 09:50 AM PDT

சென்னை: ‛முந்தி செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை' என என நடிகர் கமல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள், கமலை கடுமையாக விமர்சித்தனர். பா.ஜ., தலைவர்களும் கமல்ஹாசனை கமலை விமர்சித்தனர்.
ஊழல் புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு ஊழல் புகாரை தெரிவியுங்கள் என கமல் மக்கள் மற்றும் ரசிகர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியானதுமே அமைச்சர்களின் இணையபக்கங்கள் ...

சமையல் 'காஸ்' விலை உயர்வுக்கு பார்லி.,யில் எதிர்ப்பு!

Posted: 01 Aug 2017 08:28 AM PDT

புதுடில்லி:சமையல் காஸ் மானியத்தை ரத்து செய்யும் வகையில், சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு மாதமும் உயர்த்தும், மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, பார்லிமென்ட்டில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 'ஏழைகளை பாதிக்கும் இந்த விலை உயர்வைக் கைவிட வேண்டும்' என, எம்.பி.,க்கள் கடும் கோஷமிட்டனர்.

நான்கு ரூபாய்
'சமையல் காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை, 2018, மார்ச்சில் நிறுத்தும் வகையில், சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என, பெட்ரோலியத் துறை ...

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மொத்த சொத்தும் முடக்கம்

Posted: 01 Aug 2017 10:16 AM PDT

'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டில்லியில் முகாமிட்டுள்ள நிலையில்,அவருக்கு சொந்தமான, குவாரி உள்ளிட்ட மொத்த சொத்துகளையும், வருமான வரித்துறை முடக்கி உள்ளது. அவரின், 92 ஏக்கர் நிலங்களையும் கையகப்படுத்தி உள்ளது.

சென்னையில், 'குட்கா' ஆலை நடத்திய, மாதவ்ராவ் உட்பட, சிலரது வீடுகளில், 2016 ஜூலை, 8ல், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சிக்கிய டைரியில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பதற்காக, 2015ல் இருந்து, அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் மத்திய கலால் துறை ...

வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.2,350 கோடி வெள்ள நிவாரண நிதி அறிவிப்பு

Posted: 01 Aug 2017 10:37 AM PDT

கவுகாத்தி:வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள, 2,350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான, அசாம், அருணாசல பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில், பருவமழை தீவிரம் அடைந் ததை அடுத்து, சில நாட்களில், கனமழை கொட்டி தீர்த்தது.இதையடுத்து, பிரம்மபுத்ரா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், இந்த மாநிலங்களில், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான சாலைகள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதால், போக்கு வரத்து கடுமையாக ...

நிதிஷ் பதவியை பறிக்க வழக்கு; விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் ஏற்பு

Posted: 01 Aug 2017 10:43 AM PDT

புதுடில்லி:பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரை, எம்.எல்.சி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு,விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கு
பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் நிதிஷ் குமார், எம்.எல்.சி., எனப்படும்,மாநில சட்ட மேல் சபை உறுப்பினராக உள்ளார். இந் நிலையில், நிதிஷ்குமார் மீதுகொலை வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரி, ...

'பெரா' வழக்கில் தினகரன் மீது மீண்டும் குற்றச்சாட்டு பதிவு

Posted: 01 Aug 2017 10:47 AM PDT

சென்னை:அன்னிய செலாவாணி மோசடி வழக்கில், சசிகலா அக்கா மகன் தினகரன் மீது, மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சசிகலாவின் அக்கா மகன் தினகரன். பிரிட்ட னில் உள்ள, 'பார்க்லேஸ்' வங்கியில், 1.04 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, பிரிட்டன் பவுண்ட் களை, 'டிப்பர் இன்வெஸ்ட் மென்ட்' என்ற நிறுவனத்தின் பெயரில், சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளார் என, 1996ல், அன்னிய செலாவணி மோசடி வழக்கை, அமலாக்கத் துறை பதிவு செய்தது. அதே போல, ஐரோப்பிய நாடுகளில் ஓட்டல் துவங்க, மூன்று நிறுவனங்கள் பெயரில், 'பார்க்லேஸ்' வங்கியில், சட்ட ...

பினாமியிடம் கொடுத்த ரூ.246 கோடி 'அம்போ'

Posted: 01 Aug 2017 10:49 AM PDT

வருமான வரித்துறையிடம் சிக்கிய, 246 கோடி ரூபாயை தரும்படி, அ.தி.மு.க., - வி.வி.ஐ.பி., தன் பினாமியை நச்சரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, 2016 நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், 'டிபாசிட்' ஆன தொகை குறித்து, வருமான வரித்துறை ஆய்வு நடத்தி யது. இதனடிப்படையில் தான், கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர் கள் சிக்கினர்; 1,000கோடி ரூபாய்க்கு மேல், வரி ஏய்ப்பும் கண்டறியபட்டு, வரி வசூலிக்க பட்டது. இப்படி நடத்தப்பட்ட சோதனையில், சேலம், அ.தி.மு.க. பிரமுகர் ...

ஆட்சி தொடர ஒற்றுமை தேவை: முதல்வர் பழனிசாமி பேச்சு

Posted: 01 Aug 2017 10:58 AM PDT

'ஆட்சி சிறப்பாக நடைபெறவும், தொடரவும், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்' என, கட்சி நிர்வாகிகள் ஆலோச னைக் கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி வலியுறுத்தினார்.

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று மாலை, முதல்வர் பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்ற, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது: 'இந்த ஆட்சி, 10 நாட்கள் கூட நீடிக்காது; நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கவிழ்ந்து விடும்; தொடர்ந்து செயல்பட முடியாது' என, அனைவரும் கூறினர். அதை பொய்யாக்கி, ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறோம். ஜெ., அறிவித்த ...

குடிமராமத்து திட்டம்: அரசு நிதி வீணடிப்பு

Posted: 01 Aug 2017 11:03 AM PDT

அரசியல்வாதிகள் தலையீட்டால், ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து திட்டப் பணிகளை முறையாக செயல்படுத்தாமல், அரசு நிதி வீணக்கப்பட் டு உள்ளது.

தமிழகத்தில், ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து திட்டத்தை, முதல்வர் பழனிசாமி காஞ்சிபுரத்தில் துவக்கி வைத்தார்.
ரூ.100கோடி
மாநிலம் முழுவதும், 1,519 ஏரிகளை, 100 கோடி ரூபாய் செலவில், புனரமைக்கும் பணிகள் துவங்கின. இதற்காக, பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், குடிமராமத்து திட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளன. ஆனால், முறையாக ...

காஸ் மானியம் ரத்து கூடாது ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted: 01 Aug 2017 11:05 AM PDT

சென்னை:'காஸ் சிலிண்டர் மானியம் ரத்து மற்றும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக்கொள்ள அளித்துள்ள அனுமதியை, மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:
காஸ் சிலிண்டர் வைத்திருக்கும் அனைவரும், ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு முதலில் அறிவித்தது. பின், ஆண்டிற்கு, 12 சிலிண்டர்கள் மானிய விலை யில் வழங்கப்படும் என, கெடு விதித்தது. தற்போது, மானியத்தை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளது. இது, ஏழை, எளிய மற்றும் நடுத்தரகுடும்பங் களின் தலையில், ...

ஆசிய நாடுகளில் வெள்ள பெருக்கு அபாயம்: பருவநிலை ஆய்வில் தகவல்

Posted: 01 Aug 2017 01:25 PM PDT

சென்னை: 'பருவநிலை மாற்றத்தால், ஆசிய நாடுகளில், அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது; இதில், சென்னை மாநகரும் அடங்கும்' என, ஜெர்மன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.ஜெர்மன் நாட்டில் இயங்கும், 'போட்ஸ்டேம்' என்ற, பருவநிலை மாற்றத்துக்கான ஆய்வு நிறுவனம், 2050ம் ஆண்டு வரையிலான முன் கணிப்பு ஆய்வுகளை மேற்கொண்டது.

அதில், கூறப்பட்டுள்ளதாவது: உலக அளவில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம், ஆசிய நாடுகளில் அதிக வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில், போதிய மழை இருக்காது. ஆனால், இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் வெள்ளம் ...

பிளாஸ்டிக் பயன்பாடு; டில்லி மாநில அரசுக்கு குட்டு

Posted: 01 Aug 2017 01:51 PM PDT

புதுடில்லி: தடையை மீறி, பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கண்டு கொள்ளாத, டில்லி அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். ஜன., 1ல், டில்லி, என்சிஆர்., எனப்படும், தேசிய தலைநகர் பிராந்தியம் ஆகியவற்றில், பயன்படுத்தி துாக்கி எறியத்தக்க, பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்ததுடன், பிளாஸ்டிக் குப்பைகளை போடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, டில்லி அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்வது ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™