Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


என் ஜென்டில்மேன் உண்மையானவராக இருக்கனும் : ஜாக்குலின் பெர்னாண்டஸ்

Posted:

அமிதாப் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக் நடித்த அலாதின் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். தற்போது பிஸியாக நடிகையா வலம் வரும் ஜாக்குலின், நடிப்பில் வெள்ளியன்று(ஆகஸ்ட் 24) "ஏ ஜென்டில்மேன்" படம் ரிலீஸாக உள்ளது. இப்படம் பற்றி நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டதாவது...

ஜென்டில்மேன் படத்தில் நடிக்க என்ன ...

தயாரிப்பாளரானார் மாதுரி தீட்சித்

Posted:

பாலிவுட்டின் மாஜி கனவுக்கன்னி மாதுரி தீட்சித். திருமணம், குழந்தை பிறப்பு என்று ஆன பிறகு சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்டவர் கடைசியாக 2014-ம் ஆண்டு வெளியான குலாப் கேங் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர்.

இந்நிலையில் இப்போது சினிமாவில் தயாரிப்பாளராக களம் இறங்குகிறார். ஆர்என்எம் என்ற தனது ...

மகேஷ்பாபுவை பிரமாண்டமாக தமிழில் களம் இறக்குகிறது லைகா

Posted:

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபுவின் பல படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவர் நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் ஸ்பைடர். தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். மகேஷ் பாபுவுடன் ரகுல் ப்ரீத்தி சிங், பிரியதர்ஷினி, உள்பட பலர் நடிக்கிறார்கள். பரத் மற்றும் ...

பேரன்பு படத்தில் மம்முட்டி மகளாக நடிக்கிறார் சாதனா

Posted:

ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர் சாதனா. இப்போது மீண்டும் ராம் இயக்கத்தில் பேரன்பு படத்தில் நடித்து வருகிறார். தங்க மீன்கள் படத்தில் ராமின் மகளாக நடித்தவர். இந்தப் படத்தில் மம்முட்டி மகளாக நடிக்கிறார். இதுகுறித்து சாதனா கூறியதாவது:

ராம் சார்தான் என்னை சினிமாவுக்கு அழைத்து ...

கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் : அஜித் தடுப்பாரா...?

Posted:

ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைத்துவிட்டார் நடிகர் அஜித். இருப்பினும் ரசிகர்கள், அஜித்தை கொண்டாடி வருகின்றனர். இன்று(ஆக., 24) அவரது விவேகம் படம் ரிலீஸாகி உள்ளது. நேற்று முதலே கொண்டாட்டங்களை தொடங்கிவிட்ட அஜித் ரசிகர்கள், தியேட்டர்களில் பட்டாசு, தோரணங்கள், பேனர், கட்-அவுட் என வைத்துள்ளனர்.

அதுமட்டுமல்ல பல தியேட்டர்களில் அஜித்தின் ...

அரசியல்வாதிகளை,அட்டாக் செய்யும் பிரகாஷ் ராஜ்!

Posted:

தமிழ் சினிமாவில், பிரகாஷ்ராஜுக்கு வில்லன் வேடங்கள் கொடுக்க, யாரும் முன்வராத நிலையில், தற்போது, தெலுங்கில், மகேஷ் பாபு நடிக்கும், பாரத் அனி நேனு என்ற படத்தில், வில்லனாக நடிக்கிறார். கதைப்படி, முதல்வராக நடிக்கும் மகேஷ் பாபுவுக்கும், பிரகாஷ்ராஜுக்குமிடையே ஏற்படும் வாக்குவாத காட்சிகளில், சில அரசியல்வாதிகளை, நேரடியாகவே, அட்டாக் ...

சினிமாவுக்கு வந்த சின்னத்திரை நடிகை!

Posted:

சின்னத்திரையில் தொகுப்பாளர்களாக இருந்த சிவகார்த்திகேயன் மற்றும் மா.கா.பா.ஆனந்த் உட்பட சிலர், சினிமாவில் நடிகர்களாகி வருகின்றனர். அவ்வரிசையில், கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்த, பிரியா பவானி ஷங்கரும், மேயாத மான் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில், கிராமத்து பெண்ணாக நடித்துள்ள பிரியா, ...

கொள்கையை மாற்றும் தமன்னா!

Posted:

முன்வரிசை கதாநாயகர்களுடன் மட்டுமே, டூயட் பாடுவேன்... என்ற கொள்கையை கடைப்பிடித்து வந்தவர் தமன்னா. ஆனால், விக்ரமுடன், நடிக்கும், ஸ்கெட்ச் படத்திற்கு பின், அவருக்கு புதிய படங்கள் இல்லை. அதனால், சில இளவட்ட இயக்குனர்களை அழைத்து, இரண்டாம் தட்டு கதாநாயகர்களுடன் நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளவர், தன் பட கூலியையும், 25 சதவீதம் ...

ரூ.1500 வரை விற்கப்பட்ட விவேகம் டிக்கெட் : நடவடிக்கை எடுக்கப்படுமா...?

Posted:

அஜித் - சிவா மூன்றாவது முறையாக இணைந்த விவேகம் படம் இன்று(ஆகஸ்ட் 24) உலகம் முழுக்க சுமார் 3000 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனம் வந்தாலும் அஜித்தின் ரசிகர்கள் விவேகத்தை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

அஜித்திற்கு ரசிகர் மன்றம் என்று எதுவும் கிடையாது. அப்படியிருந்தும் அவரது ரசிகர்கள், படம் வெளியாகும் ...

பாகுபலி - 2 படத்தின், 'ஆன்லைன்' விற்பனை!

Posted:

ராஜமவுலி இயக்கத்தில் உருவான, பாகுபலி - 2 படம், உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு, 1,700 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை புரிந்தது. அதையடுத்து, இப்போது, அப்படத்தின், 'ஆன்லைன்' உரிமையை, நெட்பிலிக்ஸ் என்ற நிறுவனம், 26.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதற்கு முன், இந்திய அளவிலான எந்த படமும், இவ்வளவு தொகைக்கு, விற்பனை செய்யப்பட்டதில்லை.

செப்டம்பர் 1ம் தேதி புரியாத புதிர் ரிலீஸ்

Posted:

3 வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி நடித்த படம் மெல்லிசை. அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்தார். இவர்களுடன் ரமேஷ் திலக், அர்ஜுன், சோனாயா தீப்தி நடித்தனர். சி.எஸ்.சாம் இசை அமைத்திருந்தார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி உள்ளார்.

இது ஒரு க்ரைம் திரில்லர் படம். விஜய் சேதுபதியும், காயத்ரியும் ...

அழகிய தமிழ் மகள் : ஜீ தமிழில் புதிய தொடர்

Posted:

டப்பிங் சீரியல்களுக்கு மதிப்பு குறைந்து வரும் நேரத்தில் நேரடி சீரியல்கள் மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்திருக்கிறது. அதிலும் ஒரு சினிமாவுக்குரிய பிரமாண்டத்துடன் சீரியல் தயாராக தொடங்கி உள்ளது. வருடக்கணக்கில் இழுக்காமல் குறுகிய காலத்தில் முடிந்து விடக்கூடிய விறுவிறுப்பான சீரியல்கள் வரத் தொடங்கி விட்டது.

அந்த வரிசையில் ...

காலா படப்பிடிப்பில் விபத்து: அருள்தாஸ் படுகாயம்

Posted:

ஒளிப்பதிவாளராக இருந்து நடிகரானவர் அருள்தாஸ். நீர்பறவை, சூது கவ்வும், சத்ரியன், நான் மகான் அல்ல, கதகளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ரஜினி நடிக்கும் காலா படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் தாதா ரஜினியின் அடியாளாக நடித்து வருகிறார்.

காலா படப்பிடிப்பு தற்போது பூந்தமல்லியை அடுத்துள்ள ஈவிபி பொழுது போக்கு ...

ஸ்பைடர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட பரிணிதி சோப்ரா

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ளது. ஆனால் இந்த படத்தை முதலில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நேரடியாக தயாரிக்க திட்டமிட்டார்களாம். அதனால் இந்தி நடிகை பரணிதி சோப்ராவை நாயகியாக புக் பண்ணியுள்ளனர். மகேஷ்பாபுவையும், அவரையும் வைத்து சில நாட்கள் ...

துருக்கியில் முகாமிட்ட கெளதம்மேனன்

Posted:

கமலை வைத்து கெளதம்மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தின் பெரும்பகுதி அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. அதையடுத்து தற்போது விக்ரமை வைத்து இயக்கி வரும் துருவநட்சத்திரம் படத்தையும் அமெரிக்காவில் சில காட்சிகளை படமாக்கினார்.

தற்போது துருக்கி, அபுதாபி உள்ளிட்ட சில நாடுகளில் லொகேசன் பார்த்து வந்து படப்பிடிப்பை முடுக்கி ...

சிரஞ்சீவி படத்தில் விஜய்சேதுபதிக்கு சான்ஸ் கிடைத்தது எப்படி?

Posted:

சிரஞ்சீவி நடிக்கும் சைரா படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வருவதால், தமிழ் மற்றும் இந்திக்கு பிரபலமான நடிகர்கள் வேண்டும் என்கிறபோதுதான் அமிதாப்பச்சனை முதலில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அவருக்கு இந்த படத்தில் சிரஞ்சீவியின் அப்பா வேடம் என்று கூறப்படுகிறது.

மேலும், தமிழ் சினிமாவைச் சேர்ந்த ஒரு பிரபல ...

சென்ட்டிமென்ட் நடிகையாகும் நயன்தாரா

Posted:

தமிழ் சினிமாவில் பத்து வருடங்களுக்கு மேலாகவும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த இவருக்கு சமீபகாலமாக முன்வரிசை நடிகர்களுடனான வாய்ப்புகள் இல்லை. அதன்காரணமாக, கதையின் நாயகியாக உருவெடுத்தார். ஆனால் டோரா எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் மறுபடியும் ...

சூரி எடுக்கும் புதிய முயற்சி

Posted:

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் சூரி. அதையடுத்து வேகமாக வளர்ந்து விட்ட அவரை சிலர் ஹீரோவாக நடிப்பதற்கும் கேட்டுக்கொண்டு வந்தனர். ஆனால், அதற்கு அவர் பிடிகொடுக்கவில்லை. அதேசமயம், ஒரு சேஞ்சுக்காக குணசித்ர வேடங்களிலும் அவ்வப்போது நடிக்க வேண்டும் என்கிற ஆசை சூரியின் மனதளவில் ...

ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு கமல் வரவேற்பு

Posted:

சென்னை : ஆதார் தொடர்பான வழக்கில் தனி மனித ரகசியம் அடிப்படை உரிமையே என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இதற்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுப்பற்றி கமல் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... "ஆதார் வழக்கில் தனி மனித ரகசியம் அடிப்படை உரிமை என சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதற்கு நீதிபதிகளுக்கு மக்கள் நன்றி சொல்ல ...

பிரியாமணிக்கு திருமணம்: மும்பை தொழில் அதிபரை மணந்தார்

Posted:

நடிகை ப்ரியாமணி தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் பெங்களூருவாசி. பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் பிரியாமணியை அடையாளம் காட்டியது அமீர் இயக்கிய பருத்தி வீரன் படம் தான். அந்தப் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அதன் பிறகு தெலுங்கு, மலையாளம், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™