Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


புரூஸ்லீ படத்திற்கு இசையமைக்கும் ஏஆர் ரஹ்மான்

Posted:

தமிழ் உள்ளிட்ட இந்திய படங்களையும் தாண்டி ஹாலிவுட் வரை சென்று சாதித்து ஆஸ்கர் விருது வென்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தொடர்ந்து இந்திய படங்கள் மட்டுமல்லாது ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இவர், புரூஸ்லீயின் வாழ்க்கை படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

பிரபல இயக்குநர் சேகர் கபூர், மறைந்த நடிகர் ...

புதுப்பேட்டை-2 எப்போது? - தனுஷ்

Posted:

தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் தனுஷ். இந்த படங்களில் புதுப்பேட்டை-2 படம் விரைவில் உருவாகயிருப்பதாக என்று முன்பு செய்திகள் வெளியாகி வந்தன. பின்னர் அதுகுறித்த பேச்சே இல்லை.

இந்தநிலையில் சமீபத்தில், பேஸ்புக்கில் ரசிகர்களின் ...

ஆண் குழந்தைக்கு தந்தையானார் பர்தீன் கான்

Posted:

குஷி(ஹிந்தி), பூட், பிடா, நோ என்ட்ரி, ஆர்யன், டார்லிங் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகர் பர்தீன் கான். இவருக்கு கடந்த 2005-ம் ஆண்டு நடாஷா மத்வானியுடன் திருமணம் நடந்தது. ஏற்கனவே இவர்களுக்கு தியானி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், நடாஷா மீண்டும் கர்ப்பமானார். இப்போது நடாஷா அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தனக்கு ஆண் ...

முதல்நாளில் ரூ.13.10 கோடி வசூலித்த டாய்லெட்

Posted:

அக்ஷ்ய் குமார் - பூமி பத்னேகர் நடிப்பில் ஒரு சமூக விழிப்புணர்வு படமாக வெளியாகியுள்ள படம் டாய்லெட் ஏக் பிரேம் கதா. வீட்டுக்கு வீடு கழிப்பறையின் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக வெளிவந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால் படத்தின் வசூலும் முதல்நாளில் சிறப்பாக இருக்கிறது. முதல்நாளில் ...

சஞ்சய் தத் மாதிரி ஒருவரை பார்த்தது இல்லை : விது வினோத் சோப்ரா

Posted:

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா. தற்போது இவர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தை தயாரித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய விது வினோத், சஞ்சய் தத் மாதிரி ஒரு நடிகரை நான் பார்த்தது இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், மனிதர்களில் மிகவும் தனித்துவமானவர் ...

பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் துல்கர் சல்மான்

Posted:

மலையாளம், தமிழை தொடர்ந்து, தற்போது நேரடி தெலுங்கு படமாக உருவாகும் 'மகாநதி' மூலம் தெலுங்கிலும் அடியெடுத்து வைத்துள்ளார் துல்கர் சல்மான். இந்தநிலையில் பாலிவுட்டில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கும் வாய்ப்பும் அவரை தேடி வந்துள்ளது. தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஆகர்ஷ் குரானா என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ...

மோகன்லால் யார்..? விடைசொல்லும் புதிய ஆப்..!

Posted:

இப்போதுதான் தொட்டதெற்கெல்லாம் 'ஆப்ஸ்' வந்துவிட்டதே, அந்தவகையில் மலையாள திரையுலகத்தில் முதன்முதலாக ஒரு நடிகரின் திரையுலக வரலாறை தெரிந்து கொள்வதற்காகவே ஒரு 'ஆப்' உருவாக்கப்பட்டுள்ளது என்றால் அது நடிகர் மோகன்லாலுக்காகத்தான். 'வேஷங்கள்' என பெயரிடப்பட்ட இந்த 'ஆப்'பை உருவாக்கி, மோகன்லாலின் இந்ததனை வருட திரையுலக ...

மஞ்சு வாரியர் சதி வலை” : திலீப் புகார்

Posted:

தற்போது சிறையிலிருக்கும் மலையாள நடிகர் திலீப் மீண்டும் ஜாமின் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்தமுறை ஜாமின் மனுவில் தனது மனைவி, போலீஸ் அதிகாரி சந்தியா, இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் ஆகியோரைப் பற்றி சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து தனது தரப்பு நியாயத்தை விளக்கியுள்ளாராம் திலீப். அதாவது மஞ்சு வாரியருடன் விவாகரத்து மனு செய்து பிரிந்த ...

அஞ்சாதேவுக்கு பிறகு அதிரடி வில்லனாக பிரசன்னா

Posted:

பைவ் ஸ்டார், அழகிய தீயே உள்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் பிரசன்னா. அப்படி அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் பின்னர் மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் வில்லனாக தனது ரூட்டை மாற்றினார் பிரசன்னா. அந்த படம் வெற்றி பெற்றி பெற்று பிரசன்னாவின் வில்லன் நடிப்பு பேசப்பட்டது.

அதனால் அதையடுத்து நாயகன், வில்லன், ...

திடீர் நடிகரான தயாரிப்பாளர் ஜேஎஸ்கே

Posted:

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ்குமாரும் ஒருவர். இரண்டு முறை தேசிய விருதுகளைப் பெற்ற தயாரிப்பாளர் இவர். ராம் இதற்கு முன் இயக்கி தேசிய விருதுகளை அள்ளிய தங்க மீன்கள் இவரது தயாரிப்பு தான். இப்போது இவர் மீண்டும் ராம் உடன் இணைந்து வெளியாகியுள்ள படம் தான் தரமணி. தயாரிப்பாளராக மட்டுமல்லாது ...

சிவாஜிக்கு மீண்டும் கடற்கரையில் சிலை : முதல்வருக்கு கோரிக்கை

Posted:

போக்குவரத்து இடையூறாக இருப்பதாக கூறி அகற்றப்பட்ட சிவாஜி சிலையை, மீண்டும் சென்னை கடற்கரை சாலையிலேயே நிறுவ வேண்டும் என முதல்வருக்கு தமிழ் திரையுலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிவாஜி சிலை விவகாரம் தொடர்பான கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் விக்ரமன், ஆர்கே செல்வமணி, சீமான் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். ...

அரை நிர்வாணம் டூ நிர்வாணம் : அடங்காத இஷா குப்தா

Posted:

ஹிந்தி நடிகை இஷா குப்தா, சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் அரை நிர்வாண போட்டோக்களை வெளியிட்டார், இதற்கே ரசிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், இப்போது சில நிர்வாணப் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார்.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆபாசமான 9 புகைப்படங்கள் அவர் பதிவேற்றம் ...

காயத்ரியை வேண்டுமென்றே காப்பாற்றினாரா பிக் பாஸ் ?

Posted:

ஓவியா கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் நிகழ்ச்சி மீதான நம்பகத் தன்மை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்த வாரத்தில் வைக்கப்பட்ட 'டாஸ்க்'குகள் மற்றும் அதற்காக அணிகளைப் பிரித்த விதம் ஆகியவற்றைப் பார்க்கும் போது அனைத்துமே திட்டமிடப்பட்டு, எழுதப்பட்டு, செயல்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் ...

விவேகம் படத்தின் பிசினஸ் எவ்வளவு தெரியுமா?

Posted:

வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்-சிவா கூட்டணி இணைந்துள்ள படம் விவேகம். வீரம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமை 34 கோடிக்குத் தான் விலைபோனது. வேதாளம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமை 42 கோடிக்கு பிசினஸ் செய்யப்பட்டது. அதோடு, வேதாளம் படம் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியடைந்ததால் படத்தை வாங்கியவர்கள் ...

அடுத்தடுத்து பிஸியாகும் சமுத்திரகனி

Posted:

ஒரு பக்கம் ஹீரோவாகவும் இன்னொரு பக்கம் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. விஐபி-2 படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்துள்ள சமுத்திரக்கனி, ரஜனியின் காலா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சுமார் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். எனவே காலாவில் நடிக்க கோடியில் சம்பளம் ...

பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும் கிராக்கி

Posted:

சின்ன பட்ஜெட் படங்களின் தொலைக்காட்சி உரிமையை வாங்க நாதியில்லை. இடைத்தரகர்கள் மூலமும், நேரடியாகவும் டிவி சேனல்களில் ஏறி இறங்குகின்றனர். சின்ன படங்களை வாங்குவதில்லை என்று வாசலோடு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இதற்கிடையில் சின்ன பட்ஜெட் படங்களை சேனல்கள் வாங்க வேண்டும் தயாரிப்பாளர்கள் சங்கம் சேனல்களுக்கு கோரிக்கை வைத்துக் ...

1 கோடியைக் கடந்த 'சர்வைவா'

Posted:

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிக்க அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் 'விவேகம்' படத்தின் 'சர்வைவா' சிங்கிள் பாடல் லிரிக் விடீயோ ஜுன் மாதம் 20ம் தேதி யு டியுபில் வெளியிடப்பட்டது. அதற்கு ஒரு நாள் முன்னதாகவே சாவன் இணையதளத்திலும் வெளியானது.

ராப் பாடல் வகையில் இனிமையான இசையுடன் ...

பிரபாஸின் சாஹோ படப்பிடிப்பு 180 நாட்கள் நடக்கிறது

Posted:

பாகுபலி-2 படத்தின் மெகா ஹிட்டுக்குப்பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ. தெலுங்கில் ரன் ராஜா ரன் என்ற ஹிட் படத்தை இயக்கிய சுஜீத் இந்த படத்தை இயக்குகிறார். பாகுபலி-2 படம் வெளியாகி பல மாதங்களாக ஓய்வெடுத்து வந்த பிரபாஸ் பின்னர் ஒரு பாடி பிட்னரை வைத்து தனது உடல் எடையையும் சற்று குறைத்து ஸ்டைலிசான தோற்றத்துக்கு மாறி விட்டார்.

மேலும், ...

'சர்வைவா' லைக்குகளைக் கடந்த 'ஆளப் போறான் தமிழன்'

Posted:

சமூக வலைத்தளங்களையும் உள்ளடக்கிய டிஜிட்டல் தளங்களில் யார் சாதனைகளைப் புரிவது என்பதில் விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் எப்போதுமே கடும் போட்டி இருக்கும். அஜித் ரசிகர்களுக்கு எப்போதுமே தாங்கள்தான் முன்னணியில் இருக்கிறோம் என்ற நினைப்பு இருக்கும். அப்படி அவர்கள் ஒவ்வொரு முறை சாதனை புரியும் போதும், அதை அடுத்து விஜய் ...

பிரியதர்ஷன் படத்தில் பார்வதி மேனன்

Posted:

தமிழில் பூ, மரியான், உத்தமவில்லன் ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி மேனன். குறிப்பாக, பூ படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்பிறகு தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்ற எதிபார்க்கப்பட்ட அவர், தான் எதிர்பார்த்த மாதிரியான கதைகள் அமையாததால் மீண்டும் மலையாளத்திற்கே சென்று விட்டார்.

இந்நிலையில், தற்போது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™