Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்?

Posted: 05 Aug 2017 03:54 PM PDT

ஆடி மாதம் பூமாதேவி அவதரித்த மாதமாகவும்  கூறப்படுகிறது. கிராம தெய்வங்களுக்கு ஆடி மாதத்தில் சிறப்பு  வழிபாடுகள் நடத்துவதும், கோயில்களில் கூழ்  ஊற்றுவதும் வழக்கம். சூரியன் தன் கதிர்வீச்சு திசையை ஆறு மாதங்களுக்கு  ஒருமுறை மாற்றுகிறது.அதன்படி ஆடி மாதத்தில்  சூரிய கதிர்கள் திசை மாறுகிறது.  இந்தியாவைப் பொறுத்தவரை உஷ்ணம் நிறைந்த  கோடைக் காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர்காலமாக  மாறுகிறது. இத்தருணத்தில் வைரஸ் போன்ற  கிருமிகளால் ஏற்படும் நோய்கள் அதிக அளவில்  பரவும் என்பது அறிவியல் சொல்லும் ...

கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன்

Posted: 05 Aug 2017 03:46 PM PDT

பழமையான ஆலயங்களுள் ஒன்றாகத் திழ்கிறது,  நன்னிலம் வேணுகோபால சுவாமி கோயில். நன்னிலம் தேவாரத் தலம், இங்குள்ள மதுவனேஸ்வரர்  கோயில் பாடல் பெற்றது. இக்கோயிலுக்கு கிழக்கே கூப்பிடு தூரத்தில் உள்ளது இந்த வேணுகோபால சுவாமி  கோயில்,  சமீப காலத்தில் திருப்பணி கண்டு புதுப் பொலிவுடன்  விளங்கும் கோயில், உள்ளே நுழைந்தால் பெரிய  மண்டபம், இது பக்தர்கள் வசதிக்காக தற்போது கட்டப் பட்டதாம். ஒரே சுற்றுப் பிராகாரம் ரொம்ப விசாலம்.  முன் மண்டபத்தில் முதலில் தென்படுவது பலிபீடம்,  அடுத்து கருடாழ்வார், கூப்பிய ...

ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணம்! மழைக்காக ம.பி.,யில் வினோதம்

Posted: 05 Aug 2017 03:36 PM PDT

போபால், ம.பி.,  கடும் வறட்சியால் வாடும் இந்துாரில், நல்ல மழை பொழிய  வேண்டி, இளைஞர்கள் இருவர், ஒருவரையொருவர்  திருமணம் செய்தனர். இதில், வழக்கமான திருமணத்தின்  போது நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான்  தலைமையிலான ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் பல  மாவட்டங்களிலும், இந்த ஆண்டு, சராசரி மழைப்பொழிவை விட,  மிகக் குறைவாகவே மழை பெய்ததால், கடும் வறட்சி நிலவுகிறது.  விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், உணவுப்  பொருள் ...

ராஜ்யசபாவில் காங்கிரசை முந்திய பா.ஜ.,

Posted: 05 Aug 2017 03:32 PM PDT

புதுடில்லி:  ம.பி.,யிலிருந்து ஒரு எம்.பி., தேர்வானதன் மூலம் ராஜ்யசபாவில்  காங்கிரசை பா.ஜ., முந்தியது. மத்திய அமைச்சராக இருந்த  அனில் மாதவ் தாவே காலமானதைத் தொடர்ந்து மத்திய  பிரதேசத்தில் நடந்த ராஜ்யசபா இடைத்தேர்தலில் பா.ஜ.,வின்  சம்பாத்யா உயிகி வெற்றி பெற்றுள்ளார்.  இதன் மூலம் பா.ஜ.,வின் பலம் ராஜ்யசபாவில் 58 ஆக  அதிகரித்துள்ளது. இருப்பினும், அங்கு பா.ஜ.,வுக்கு  பெரும்பான்மை இன்னும் கிடைக்கவில்லை. அடுத்து நடைபெற  உள்ள தேர்தல்கள் மூலம் அக்கட்சியின் பலம் அதிகரிக்க  வாய்ப்பு உள்ளது. தற்போது ...

ஆக.11-ல் பதவியேற்கிறார் வெங்கையா

Posted: 05 Aug 2017 03:29 PM PDT

புதுடில்லி:  துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள  வெங்கையா நாயுடு வரும் 11-ம் தேதி காலை 11 மணிக்கு  பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  முன்னதாக வெங்கையாவின் சொந்த மாவட்டத்தில்  அவரது உறவினர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை  பரிமாறி கொண்டனர். - ------------------------------------தினமலர்

தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி

Posted: 05 Aug 2017 01:22 PM PDT

டொமைன் எனப்படும் களப்பெயரானது ஒரு வலைத்தளத்தைக் குறிக்கப்பயன்படும் வலை முகவரியாகும் (உதா: eegarai.net)  .com போல .in, .org, என பல துணைக்களப்பெயர்களும் உள்ளன. இவை எல்லாம் ASCII குறியீட்டு முறையைப் பின்பற்றுகின்றன எனவே அதில் ஆங்கில எழுத்தும் பிற குறியீடு மட்டும் இருப்பதால் பொதுவாக ஆங்கிலத்திலேயே இப்பெயர்கள் இருக்கும். அக்டோபர் 2009ல் ஐகன் (ICANN) மூலம் அங்கீகரிக்கப்பட்டு முதன்முதலாக மார்ச் 2010ல் பிறமொழி களப்பெயர்கள் DNS root zoneல் பதிவேற்றப்பட்டது. அதன் பின்னர் யாவரும் 60திற்கும் மேற்பட்ட பிற மொழிகளில் ...

பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்தவர் அமைச்சரானார்

Posted: 05 Aug 2017 12:39 PM PDT

\இஸ்லாமாபாத்:  கடந்த 20 வருடங்களுக்கு பின் இந்து மதத்தை சேர்ந்த  ஒருவர் பாகிஸ்தான் அமைச்சராக பதவியேற்று  கொண்டார். ஊழல் புகார் காரணமாக பாகிஸ்தான் பிரதமராக இருந்த  நவாஸ் ஷெரீப்பை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தகுதி  நீக்கம் செய்தது. இதனையடுத்து ஷாகித் கான் அப்பாசி  புதிய பிரதமராக நேற்று பதவியேற்று கொண்டார்.  அவருடன் 47 பேர் அமைச்சர்களாக்கப்பட்டனர்.  அவர்களி்ல 19 பேர் இணையமைச்சர்கள்.  அதிபர் மம்னூன் ஹூசைன் பதவிப்பிரமாணம் செய்து  வைத்தார்.  இந்து மதத்தை சேர்ந்த தர்சன் ...

திரு ayyasami ram அவர்களை பிறந்த தின வாழ்த்துகள் கூறி வாழ்த்துவோம் --

Posted: 05 Aug 2017 12:11 PM PDT

திரு ayyasami ram அவர்களை பிறந்த தின வாழ்த்துகள் கூறி வாழ்த்துவோம் -- இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்   திரு ayyasami ram அவர்களே   நலமும் வளமும் என்றும்   உம்முடன்  இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ரமணியன்

நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு !

Posted: 05 Aug 2017 08:37 AM PDT

நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு ! ஒருவர் ஒரு நகைசுவைச் செய்தியைக் கூறினால் , நாம் சிரிக்கிறோம் ! ஆனால் இப்படித்தான் எல்லோரும் சிரிக்கிறார்கள் என எண்ணுகிறீர்களா? இல்லை ! ஒரு செய்தியில் ஒளிந்துகொண்டிருக்கும் நகைச்சுவையை எல்லோரும் கண்டறிவதில்லை! எனக்குத் தெரிந்த ஓர் அதிகாரி ! அவர் கோப்புகள்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும்போது , சில நேரங்களில் மற்ற அலுவலர்களுக்குச் சிரிப்பு வரும் ! ஆனால் யாராவது சிரித்துவிட்டால், கூடச் சேர்ந்து சிரிக்க அவருக்குத் தெரியாது! மாறாகக் கோபப்படுவார் ! 'என்ன சிரிக்கிறீர்கள்?' ...

வாழ்க்கை – ஒரு பக்க கதை

Posted: 05 Aug 2017 06:20 AM PDT

நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு

Posted: 05 Aug 2017 06:19 AM PDT

போபால்: ம.பி.,யில் குழந்தைகள் படிப்பதை ஊக்குவிக்கும் வகையில், குடிசைப் பகுதியில் வசிக்கும் 5ம் வகுப்பு மாணவி, தனது வீட்டில் நூலகம் நடத்தி வருகிறார். இதனையறிந்த முதல்வர் சவுகான் நேரில் சென்று பாராட்டி நிதியுதவி செய்தார். 2 மணி நேரம்: மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது துர்கா நகர். சேரி பகுதியான இங்கு வசிக்கும் முஷ்கன் அகிர்வர்,11 என்பவர் நூலகம் நடத்தி வருகிறார். கடந்த வருடம், 25 புத்தகங்களுடன் துவக்கப்பட்ட இந்த நூலகம், தினமும் பள்ளி ...

விளையாடலாம் வர்ரீங்களா?

Posted: 05 Aug 2017 05:48 AM PDT


விளையாடலாம் வர்ரீங்களா?

"கார்ட்ஸ் விளையாடலாம் வர்ரிங்களா?"
"அந்த ஆட்டம் தெரியாதுங்களே!"
"அட சீட்டு விளையாடலாம் வர்ரீங்களா?"
"சீட்டுன்னா விளையாடலாம் ; அதுக்கென்ன?"

நெல்லி ரெசிபிஸ்

Posted: 05 Aug 2017 05:41 AM PDT

இல்லறம் – ஒரு பக்க கதை

Posted: 05 Aug 2017 05:36 AM PDT"யாரு சொன்னா…வீடு எல்லாரும் கட்டலாம்.
குடும்பம்கற அமைப்பை கை விடாம..
இதுதான் சாதனை. வாங்க வீட்டுக்குப் போகலம்"
அரவணைத்தாள் வைதேகி.

--------------------------------
சூர்யகுமாரன்
நன்றி- குமுதம்

சவுதி அரேபியாவில் கடற்கரை ஓட்டலில் பெண்கள் நீச்சல் உடை அணிய அனுமதி

Posted: 05 Aug 2017 05:35 AM PDT

ரியாத்,  சவுதி அரேபிய அரசு நவீன பொருளாதார திட்டத்தை  அமல்படுத்தியுள்ளது. அதற்கான புதிய திட்டங்கள்  அறிவிக்கப்பட் டுள்ளன.  அதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை மேம்படும்  என கருதுகிறது.  புதிய திட்டத்தின் கீழ் சவுதி அரேபியாவில் செங்கடலின்  கடற்கரையில் அதிநவீன சொகுசு ஓட்டல் கட்டப்படுகிறது.  மிக பிர மாண்டமாக அதிக பொருட் செலவில் கட்டப்படும்  இந்த ஓட்டல் திட்ட வரையறைகளை பட்டத்து இளவரசர்  முகமது பின் சல்மான் நேற்று வெளியிட்டார். அப்போது இந்த கடற்கரை ஓட்டலில் நடைமுறைப்  படுத்தப்பட ...

மறுக்கோளிப் பயல்!

Posted: 05 Aug 2017 02:29 AM PDT

மறுக்கோளிப் பயல்! எங்கள் காரைக்குடிப் பகுதியில் , 'இவன் சரியான மறுக்கோளிப் பயல்' என்று அடிக்கடி சொல்வார்கள் ! 'மறுக்கோளி' என்றால்? 'மறுக்கம்' என்றால் 'மயக்கம்' என்று பொருள் ! 'மறுக்கம்' எனும் இச் சொல் 'மயக்கம்' என்ற இப் பொருளில் பரிபாடலில் வருகிறது ! ஆகவே , மறுக்கம் + கோளி = மறுக்கங் கோளி = மறுக்கோளி! அஃதாவது – 'மயக்கம் கொண்டவன்' என்பது பொருள்! கொள் + இ= கொளி 'கொளி' என்பதே 'கோளி' என வந்தது!~ ; 'ஆதி நீழல்' என்ற இலக்கணப்படி இப்படி ஆகும் !! கோளி= கொண்டவன் மறுக்கோளி ...

பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ;

Posted: 04 Aug 2017 11:07 PM PDT

டி.டி.வி.தினகரன் கொடுத்த பதவியை ஆளும் கட்சி  எம்.எல்.ஏ., பழனி ஏற்க மறுத்துள்ளார். அதே நேரத்தில்,  தினகரனின் அறிவிப்புகளை அமைச்சர் ஜெயக்குமார்  கலாய்த்துள்ளார். முதல்வர் பழனிசாமி அணியினரும் ஓ.பன்னீர்செல்வம்  அணியினரும் இணை, டி.டி.வி.தினகரன் கொடுத்த  60 நாள் கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதனிடையே,  கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருவார் என்ற  பரபரப்பு முதல்வர் பழனிசாமி அணியினருக்கு இருந்த  நிலையில், நேற்றிரவு திடீரென செய்தியாளர்களைச்  சந்தித்த தினகரன், கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை  அறிவித்தார். தனக்கு ...

பரிசை நன்கொடையாக அளித்த சிறுவனுக்கு பிரதமர் வாழ்த்து

Posted: 04 Aug 2017 11:03 PM PDT

- புதுடில்லி: சர்வதேச போட்டியில் தனக்கு கிடைத்த பரிசுத் தொகைக்கான காசோலையை, பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக சமர்ப்பித்த, மூன்றாம் வகுப்பு மாணவனை, பிரதமர், நரேந்திர மோடி வாழ்த்தினார். குவைத்தில் வசிக்கும் ரித்திராஜ் குமார், அங்குள்ள இந்திய பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். சமீபத்தில், கல்வி ஆய்வுக்கான ஆஸ்திரேலிய கவுன்சில் நடத்திய, சர்வதேச பெஞ்ச் மார்க் டெஸ்ட் போட்டியில், கலந்து கொண்ட ரித்திராஜ் குமாருக்கு, 18 ஆயிரம் ரூபாய் பரிசாக கிடைத்தது. இந்த பரிசுத் ...

சென்னையில் 10-ந்தேதி தமிழக அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணி ஆர்ப்பாட்டம்

Posted: 04 Aug 2017 07:12 PM PDT

சென்னை எடப்பாடி பழனிசாமி அரசை எதிர்த்து போராட்டத்தையும்  ஓ.பன் னீர்செல்வம் அறிவித்துள்ளார். - மக்கள் பிரச்சினையை முன்வைத்து தமிழகம் முழு வதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். - சென்னையில் 10-ந்தேதி எடப்பாடி பழனிசாமி  அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.  - இதற்காக தமிழகம் முழுவதுமுள்ள கட்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்து உள்ளார்.  ஒரு பக்கம் தினகரனால் நெருக்கடி, இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ். அணியால் தலைவலி என எடப்பாடி அணியினர் கடும் ...

துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடக்கிறது வெங்கையா நாயுடுவுக்கு வெற்றி வாய்ப்பு

Posted: 04 Aug 2017 07:11 PM PDT

புதுடெல்லி, துணை ஜனாதிபதி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.  பா.ஜனதா வேட்பாளரான வெங்கையா நாயுடுவுக்கு வெற்றி  வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தொடர்ந்து 2-வது முறையாக துணை ஜனாதிபதி பதவியை  வகித்து வரும் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் 10-ந் தேதி  முடிவுக்கு வருகிறது.  எனவே புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான  தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக  கூட்டணி வேட்பாளராக, முன்னாள் நகர்ப்புற வளர்ச்சி மற்றும்  தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரியான ...

ரூ.10க்கு தக்காளி விற்பனை; உ.பி., - காங்., அசத்தல்

Posted: 04 Aug 2017 07:00 PM PDT

லக்னோ:  தக்காளி விலை உயர்வால், மக்கள் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உ.பி., மாநில சட்டசபை  வளாகத்துக்கு வெளியே, கிலோ, 10 ரூபாய்க்கு,  காங்., தொண்டர்கள் தக்காளி விற்றதால் பரபரப்பு  நிலவியது. கடும் உயர்வு: நாடு முழுவதும், ஆண்டுக்கு, 1.8 கோடி டன் தக்காளி  உற்பத்தி செய்யப்படுகிறது. தக்காளி உற்பத்தி செய்யும்  மாநிலங்களான, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா,  ம.பி., மேற்கு வங்கம், ஒடிசா ஆகியவற்றில், மழை,  வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்,  உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.  இதனால், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™