Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எல்லையில் சீனா தொடர்ந்து பிடிவாதம் 'டென்ட்' அடித்தது இந்திய ராணுவம்

Posted: 09 Jul 2017 08:58 AM PDT

புதுடில்லி:இந்தியா - சீனா இடையே சிக்கிம் மாநில எல்லையில் ஏற்பட்டுள்ள எல்லை பிரச்னையில், சீனா, தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால், அதை சமாளிக்க, நம் வீரர்கள், முகாம் அமைத்து, அங்கு தங்கியுள்ளனர்.

இந்தியா - சீனா - பூட்டான் எல்லையில் உள்ள டோகாலாம் பகுதியில், சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டது.
பதற்றம்
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பணி களை, நம் ராணுவம் முறியடித்தது. இதனால், கடந்த சில வாரங்களாக,எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.'கடந்த, 2012ல், ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்தப் பகுதியில், எந்த மேம்பாட்டு பணிகளும் ...

மருத்துவ மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றுவது கட்டாயம்!

Posted: 09 Jul 2017 09:11 AM PDT

மருத்துவ மாணவர்கள், கிராமப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் கொண்டு வர, ஹரியானா அரசு திட்டமிட்டுள்ளது.

ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர்,அனில் விஜ், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:ஹரியானாவில், தற்போது, 1,700 பேருக்கு ஒரு டாக்டர் என்ற விகிதத்தில் மருத்துவ சேவை உள்ளது.இதை, 1,000 பேருக்கு, ஒரு டாக்டர் என உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக, மருத்துவ மாணவர்கள், இரண்டு ஆண்டுகள் கிராமப் பகுதிகளில் பணியாற்ற ...

ஜி.எஸ்.டி.,யால் மொத்த உற்பத்தி திறன் உயரும்; மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நம்பிக்கை

Posted: 09 Jul 2017 10:28 AM PDT

சென்னை: ''ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்துள்ளதால், உள்நாட்டு மொத்த உற்பத்தி திறனான, ஜி.டி.பி., உயரும்,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., மற்றும் வர்த்தக அமைப்புகள் சார்பில், சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி.,குறித்த விளக்கக் கூட்டம்,சென்னை, கலைவாணர் அரங்கில், நேற்று நடந்தது.
இதில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், வெங்கையா நாயுடு பேசியதாவது:
ஜி.எஸ்.டி., நடைமுறை, ஒரே நாளில் வந்து விடவில்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்த போதே, இதற்கான ஆயத்த பணிகள் துவங்கின. 17 ஆண்டுகளாக, இந்த வரி ...

'காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்காதீங்க!'

Posted: 09 Jul 2017 10:33 AM PDT

சென்னை:'எண்ணுார் காமராஜர் துறை முகத்தை, தனியார் மயமாக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துங்கள்' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரிக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதத்தின் விபரம்: காமராஜர் துறைமுகத்தின், 16வது ஆண்டறிக்கை, 2016ல் வெளியானது. அதில், துறைமுகத்தை உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன், மெகா துறைமுகமாக்கி, இந்தியாவின் கிழக்கு நுழைவாயிலாக தரம் உயர்த்தவேண்டும் என்பதை, 'விஷன்' எனவும்,சர்வதேச தரத்திற்கு துறைமுக சேவை வழங்க வேண்டும் என்பதை, 'மிஷன்' எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது.ஆனால் ...

நடப்பாண்டு வருமான வரி இலக்கு ரூ.9.8 லட்சம் கோடி நிர்ணயம்

Posted: 09 Jul 2017 10:43 AM PDT

மத்திய அரசின், கறுப்பு பண ஒழிப்பு மற்றும் பணமதிப்பு மறு சீரமைப்பு நடவடிக்கைக்குப் பின், நாட்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக, வருமான வரித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதிகரிப்பு
வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், நடப்பு நிதியாண்டான, 2017 - 18ல், வருமான வரி வசூல் இலக்கு, 9.8 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, முதல் காலாண்டில், நாட்டின் மொத்த வருமான வரி வசூல், 1.42 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.இது, 2016 - 17 நிதியாண்டுக்கான முதல்காலாண்டை காட்டிலும், 14.5 ...

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சம்பள விவகாரம்... வெடிக்கிறது!

Posted: 09 Jul 2017 11:02 AM PDT

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்த வலியுறுத்தியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர்.

இது தொடர்பாக நாளை நடக்கும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான 'ஜாக்டோ - ஜியோ' கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் 2003ல் நடத்திய போராட்டம் தமிழக அரசை ஸ்தம்பிக் கச் செய்தது. பின் 2016ல் இந்த அமைப்பினர் மீண்டும் போராட்ட அறிவிப்பு வெளியிட்டு 2 நாட்கள் போராட்டம் நடத்தினர். ...

'ஜி - 20' மாநாட்டில் இந்தியாவுக்கு பாராட்டு

Posted: 09 Jul 2017 11:12 AM PDT

ஹம்பர்க்: நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சிக் கான நடவடிக்கைகள், தொழிலாளர் சீர்திருத் தங்கள், உலக பொருளாதார வளர்ச்சிக்கான ஆதரவு உள்ளிட்ட பல காரணங்களுக்காக, 'ஜி - 20' மாநாட்டில், இந்தியாவுக்கு, பிற உறுப்பு நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

உலகின் பெரிய பொருளா தார சக்திகளாக விளங்கும், 20 நாடுகள் இணைந்து, 'ஜி - 20' அமைப்பு ஏற்படுத்தி உள்ளன. இதில், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட, 20 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
நிறைவேற்றம்
இந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, ஜெர்மனியில், ஹம்பர்க் ...

துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்? எதிர்க்கட்சிகள் நாளை ஆலோசனை

Posted: 09 Jul 2017 11:15 AM PDT

ஜூலை:ஜனாதிபதி தேர்தலை போலவே, துணை ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடு வது என, காங்., தலைமையிலான, எதிர்க்கட்சி கூட்டணி முடிவு செய்துள்ளது. வேட்பாளர் யார் என்பது, நாளை நடக்க உள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந் தெடுக்கும் தேர்தல், வரும், 17ல் நடக்கிறது. இதில், மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையி லான, தே.ஜ., கூட்டணி சார்பில், ராம்நாத் கோவிந்த்;காங்.,தலைமையிலான,அன்சாரியின்17 எதிர்க் கட்சிகள் கூட்டணி சார்பில், மீரா குமார் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில், துணை ஜனாதிபதி ...

'டெபிட்' கார்டு மூலம் மணல் விற்பனை; பொதுப்பணி துறை தீவிரம்

Posted: 09 Jul 2017 11:19 AM PDT

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம், மணல் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை, பொதுப்பணித் துறையினர் துவக்கி உள்ளனர்.

தமிழக அரசு, மே மாதம் முதல், நேரடி மணல் விற்பனையில் ஈடுபட்டு உள்ளது. இதற்கான இணையதள சேவையும் துவங்கி உள்ளது. பொதுப்பணித் துறையின் கீழ் இயங்கும் நீர்வளத் துறையினர், மணல் குவாரிகளை நிர்வகித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும், 75 குவாரிகளை திறக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை, 30 குவாரிகளுக்கு அனுமதி கிடைத்து உள்ளது.ஆனால், பொதுப்பணித் துறை ஊழியர்களின் ஆர்வமின்மை, இயந்திரதட்டுப்பாடு, உள்ளூர் மக்கள் பிரச்னை ...

'டுவென்டி-20': இந்தியாவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

Posted: 09 Jul 2017 12:10 PM PDT

ஜமைக்கா: 'டுவென்டி-20' போட்டியில் எவின் லீவிஸ் சதமடித்து கைகொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், ஒரு சர்வதேச 'டுவென்டி-20' போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 எனக் கைப்பற்றி, கோப்பை வென்றது. இன்று இரு அணிகள் மோதும் ஒரு 'டுவென்டி-20' போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கார்லஸ் பிராத்வைட், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. ...

'மீண்டும் உலக போர்': வட கொரியா மிரட்டல்

Posted: 09 Jul 2017 01:11 PM PDT

சியோல்: 'தென் கொரியாவுடன் இணைந்து, அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதன் மூலம், மீண்டும் ஒரு உலகப் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது' என, வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, சர்வ தேச நாடுகளின் எதிர்ப்பு மற்றும் ஐ.நா., பொருளாதார தடையை மீறி, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. சமீபத்தில், அமெரிக்காவின் அலாஸ்கா வரை சென்று தாக்கி அழிக்க கூடிய, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது.
இதற்கு பதிலடியாக, தென் கொரியா கடல் பகுதியில், அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து, அமெரிக்க படைகள் கூட்டாக, போர் ...

பெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூலை-10) எவ்வளவு?

Posted: 09 Jul 2017 02:09 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.25 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.44 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை- 10) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், விலையை விட 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.66.25 காசுகளும், நேற்றைய டீசல் விலையை விட 25 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.57.44 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-10) காலை 6 மணி முதல் அமலுக்கு ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™