Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மின் நூல்கள்

Posted: 09 Jul 2017 02:01 PM PDT

என்னிடம் 2000த்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.. ஆனால் அவற்றை மின்னூலாக மாற்றத் தெரியவில்லை . மடிக்கணினியுமில்லை. ஆலோசனை ஏதாவது ? :வணக்கம்:


தாயுமான, தந்தையுமான ஹேடன் கிராஸ்.

Posted: 09 Jul 2017 12:43 PM PDT

தாயுமான, தந்தையுமான ஹேடன் கிராஸ். லண்டன்: இங்கிலாந்தில் பெண்ணாக பிறந்தவர் ஆணாக மாற ஆசைப்பட்டு அதற்குரிய அறுவை சிகிச்சையை செய்து ஆணாக மாறினார். தற்போது அவர் செயற்கை முறையில் விந்தணு தானத்தின் மூலம் கருத்தரித்து, பெண் குழந்தையை பெற்றுஎடுத்த சம்பவம் ஆச்சரியம் கலந்த அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டின் தென்கிழக்கு இங்கிலாந்துக்குட்பட்ட குளூசெஸ்ட்டர்ஷைர் பகுதியை சேர்ந்தவர் பைகே. பெண்ணாக பிறந்த இவர் இளம்வயதில் தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்ததால் நிரந்தரமாகவே ஆணாக மாற விரும்பினார். ...

அறிமுகம்

Posted: 09 Jul 2017 12:24 PM PDT

பெயர்:ராமசந்திரன்
சொந்த ஊர்:இடைப்பாடி
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:கூகுளை தேடலில்
பொழுதுபோக்கு:புத்தகம் வாசிப்பது.
தொழில்:கால்நடை உதவி மருத்துவர்
மேலும் என்னைப் பற்றி:யந்திரம் மற்றும் மந்த்ரம் பற்றியதேடல்    சித்தர்கள் மற்றும் சித்தமருத்துவம் ஆர்வம்

பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!!

Posted: 09 Jul 2017 12:22 PM PDT

- உலக நாடுகள் ஒன்றினைந்து எரிசக்திக்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் பிரான்ஸ் 2040-ல் பெட்ரோ, டீசல் வாகனங்களை தடை செய்ய போவதாக அறிவித்தது. இந்நிலையில் சீனாவின் டேடாங் என்ற இடத்தில் சோலார் பேனல்களை பாண்டா வடிவில் பிரம்மாண்டமான முறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பாண்டாவின் கருப்பு பகுதிகள் மோனோகிரிஸ்டலின் சிலிகான் சோலார் தகடுகளாலும், வெள்ளை மற்றும் க்ரே பகுதிகள் மெல்லிய ப்லிம் சோலார் தகடுகளாலும் நிரப்பப்பட்டுள்ளன. இந்த சோலார் தகடுகள் மூலம், 100 மெகாவாட் ...

மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு

Posted: 09 Jul 2017 12:19 PM PDT


-

படித்ததை பகிர்வோம்
-

minnol tharavirakkam agavillai

Posted: 09 Jul 2017 09:37 AM PDT

ஈகரை சொந்தங்களே நமது தளத்தில் நிறைய நூல்களின் தரவிறக்க சுட்டிகளை பயன்படுத்தும் போது this site is blocked as government of india instruction என்ற செய்தி தான் வருகிறது..புத்தகங்களை எவ்வாறு தரவிறக்கம் செய்வது என்று ஆலோசனை கூறுங்களேன் ..நன்றிகள் பல :வணக்கம்:

பத்திரிகை செய்திகளை பிடிஎப்-ஆக மாற்றி சமூக வலைதளங்களில் வெளியிட்ட பொறியாளர் கைது

Posted: 09 Jul 2017 04:01 AM PDT

பத்திரிகை செய்திகளை பிடிஎப் முறையில் மாற்றி சமூக வலைதளங்களில் வெளியிட்ட மென்பொறியாளரை போலீஸார் கைது செய்தனர். நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களின் செய்திகள் புத்தக வடிவிலேயே பிடிஎப் பைலாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. முறையான அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக செய்திகள் வெளியானதால், வார இதழ்களின் விற்பனை குறைந்தன. அதைத் தொடர்ந்து வார இதழ் களின் நிர்வாகிகள் சிலர் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய் வாளர் அன்பரசு தலைமையிலான ...

காவிரியை மாசுபடுத்தும் கர்நாடகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 09 Jul 2017 02:25 AM PDT

- கர்நாடகத்தில் காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் காவிரி கரையில் உள்ள சில நகரங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் அதிக அளவில் கலக்கின்றன. குறிப்பாக பெங்களூர் நகரின் 80 சதவீத கழிவுகளும், கழிவு நீரும் காவிரியில்தான் கலக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் ...

வறுமை காரணமாக மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயி

Posted: 09 Jul 2017 02:21 AM PDT

- சோகார்கா, மத்திய பிரதேச மாநிலம், சேகோர் மாவட்டம், பசந்த்புர் பங்கிரி கிராமத்தை சேர்ந்தவர் சர்தர் கஹ்லா. விவசாயியான இவருக்கு ராதிகா(14) மற்றும் குந்தி(11) என்ற இரு மகள்கள் உள்ளனர். வறுமை காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டில் உள்ளனர். விவசாய பணிகளை துவங்க வேண்டிய நிலையில் தனது நிலத்தை உழும் பணிக்கு சர்தாரிடம் சொந்தமாக மாடுகள் இல்லை. வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு அவருக்கு போதுமான நிதி இல்லை. இதனால், அவர் தனது இரண்டு மகள்களை ஏரில் கட்டி நிலத்தை உழுதார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ...

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் இங்கிலாந்து பிரதமருடன் மோடி சந்திப்பு

Posted: 09 Jul 2017 02:18 AM PDT

- ஹம்பர்க், ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசினார். அதன்படி ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, கனடா பிரதமர் ஜஸ்டின் டிரிடியூ ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்தார். முன்னதாக அவர் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்க ...

உத்தர பிரதேசத்தில் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி ஓடும் வெள்ளம்

Posted: 09 Jul 2017 02:16 AM PDT

- லக்னோ, உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காக்ரா மற்றும் ஷார்தா உள்ளிட்ட ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. கார்கா ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டிச் செல்வதால், நாக்ரா, காசிப்பூர், காரா சிங்னா உள்ளிட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் மாநிலத்தில் பிந்தா 75 மி.மீ, அயோத்யா 55 மி.மீ, பான்சி 41.4 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் ...

ஓசூர், நெய்வேலியில் இருந்து சிறிய விமானங்கள் இயக்க மத்திய அரசு சம்மதம்

Posted: 09 Jul 2017 02:15 AM PDT

சென்னை, ஓடு பாதை நீளத்தை அதிகரிக்க அரசு நிலம் கையகப்படுத்த வேண்டும்'' என்றார். அதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ''கடந்த 2 வாரத்திற்கு முன்பு மத்திய சிவில் போக்குவரத்து துறை அதிகாரிகள், முதல்–அமைச்சரை வந்து சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழ்நாட்டில் 6 இடங்களில் சிறிய விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது. சேலம், ஓசூர், நெய்வேலி ஆகிய 3 இடங்களில் சிறிய விமான சேவையை தொடங்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த விமானங்களில் 50 சதவீத ...

‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!’ – வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ்

Posted: 09 Jul 2017 01:44 AM PDT

- தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்று சொல்லியே தமிழ் உணர்வை மாண்டு போகச் செய்தவர்களே இங்கு அதிகம். ஆனால், குழந்தைகள் ஒருநாளும் பொய் சொல்லமாட்டார்கள். அதனால்தான் குழந்தைகளை நோக்கியே எப்போதும் பயணிக்கிறேன்' என நெகிழ்கிறார் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் துணைத் தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ். சென்னை, மேடவாக்கத்தில் அமைந்திருக்கிறது திருவள்ளுவர் தொடக்கப் பள்ளி. நன்கொடை, ஆங்கில வழிக் கல்வி என எந்தவித அடையாளமும் இல்லாமல், தமிழ் மொழியில் மட்டுமே இங்கு கல்வி வழங்கப்படுகிறது. பாவலேறு பெருஞ்சித்திரனாரின் ...

ஸ்வச் பாரத்

Posted: 08 Jul 2017 11:37 PM PDT

நகரச்சாலைகள் நரகச்சாலைகளாய் நீண்டு செல்கின்றன நல்வயதில் படித்த infinity யாய் நண்பன் கூறும் *முடிவிலி*யாய் இருபுறமும் அடைசலாய்க் கடைகள் சிறுகடைகள் பெரும்கடைகள் நடைபாதை தாண்டி நடுச்சாலையைத் தொடும்??? கடைகள் அதை அடுத்து அரசுகள் மாறி மாறி பணம் தின்ன மழை நீர்க்கால்வாய்கள் மாறிய சாக்கடைகளாய் மிஞ்சிய இடங்களில் மிதிவண்டிகளும் பொதி வண்டிகளும் சுத்தமான சாலைகளில் அசுத்தக் குப்பைகளை சிதறிய படி செல்லும் துப்புரவு வாகனங்கள் போதாக்குறைக்கு திரீ ரோஸஸ் பேனர் கடைகளும் சுகுனா ...

செய்திகள் சொல்கின்றன...!!

Posted: 08 Jul 2017 11:31 PM PDT

* 1. சமூகநல திட்டங்களைப் பெறும் பயனாளிகளிடம் ஆதார் எண் கட்டாயப்படுத்தி கேட்கக் கூடாது. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் திட்டவட்டம். மத்திய அரசு ஆதார் வேணும்கிறது. உச்ச நீதிமன்றம் கேட்கக் கூடாது என்கிறது. இவர்களுக்குள் அதிகார விளையாட்டுப் போட்டி கம்பீரமா நடக்கிறது. 2. ஆர்.கே. நகர் தேர்தலுக்காக தள்ளிப் போட முடியாது. டிடிவி. தினகரன் மீதான வழக்குகள் தினமும் விசாரிக்கப்படும். எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. தொகுதியிலும் இருப்பார். நீதிமன்றத்திலும் இருப்பார். குற்றவாளியை விசாரணை செய்துகிட்டே ...

உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்!

Posted: 08 Jul 2017 11:16 PM PDT

அலுவலகத்தில், கணவருக்கு தொழில் தொடர்பாக பெரிய பிரச்னை; மனிதர், துவண்டு போய், தொய்ந்த முகத்துடன், வீடு திரும்புகிறார். 'என்னங்க ஒரு மாதிரியா இருக்கீங்க?' 'அதெல்லாம் ஒண்ணுமில்ல…' 'எத்தனை வருஷமா உங்களோட குடும்பம் நடத்துறேன்; எனக்கு தெரியாதா உங்களப் பத்தி… சும்மா சொல்லுங்க…' 'சொன்னா, பெரிசா தீர்த்து வச்சுடுவியாக்கும்… பேசாம இரு; சும்மா, நீ வேற குடையாதே…' 'யாருகிட்டயாவது பகிர்ந்துக்குங்க; மனசுலயே வச்சுக்கிட்டு பாரம் ஏத்திக்காதீங்க…' – இப்படி, நீண்டு கொண்டு போன உரையாடலில், ...

கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா?

Posted: 08 Jul 2017 08:07 PM PDT

- எல்லா பிரச்னைக்கும் தீர்வு, இறைவனிடமே உள்ளது. அவரை, நாம் தெரிந்து வழிபட்டாலும், தெரியாமல் வழிபட்டாலும் அருள் மழை பொழிய, அவர் தவறுவது இல்லை. பழனவேலி எனும் ஊரில், பட்டினசாமி என்ற வியாபாரி இருந்தார்; பணக்காரரான இவர், முற்பிறவியின் தீவினையால், செல்வங்கள் எல்லாம் இழந்து, வறியவர் ஆனார். சொந்த பந்தங்களும் அவரை விட்டு விலகினர். இதனால், தன் மனைவியுடன், காட்டை அடைந்து, அங்கு கிடைக்கும் காய் – கனி மற்றும் கிழங்குகளை உணவாக உண்டு, வாழ்ந்து வந்தார். சிறிது காலத்திற்கு பின், அங்கிருந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™