Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எம்.எல்.ஏ.,க்கள் கடத்தப்படுவதாக ராஜ்யசபாவில் காங்., கடும் அமளி

Posted: 31 Jul 2017 07:30 AM PDT

புதுடில்லி: குஜராத்தில், காங்., - எம்.எல்.ஏ.,க்களை, போலீசார் கடத்துவதாகவும், ராஜ்யசபா, எம்.பி., பதவிக்கான தேர்தலில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, ஓட்டு போடும்படி மிரட்டுவதாகவும், ராஜ்யசபாவில் நேற்று, காங்., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், சபை, சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

குஜராத்தில், ராஜ்யசபா, எம்.பி.,க்கள் மூவரின் பதவிக்காலம் முடிவதை அடுத்து, ஆக., 8ல், தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், இரு இடங்களில் வெற்றி பெறுவதற்கு, போதிய, எம்.எல்.ஏ.,க்கள், ஆளும், பா.ஜ.,வுக்கு உள்ளனர்.
காங்., உறுப்பினர்கள் கடும் அமளி
மூன்றாவது, ...

பதவி விலக மாட்டேன்!: அமித் ஷா திட்டவட்டம்

Posted: 31 Jul 2017 07:37 AM PDT

லக்னோ: ''ராஜ்யசபா எம்.பி., யாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், கட்சித் தலைவர் பதவிலியிருந்து விலகும் எண்ணம் இல்லை,'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உ.பி., மாநிலம், லக்னோவில், செய்தியாளர்களிடம், அமித் ஷா பேசியதாவது:பீஹாரில், எந்த கூட்டணி யையும், கட்சியையும் நாங்கள் உடைக்கவில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானோருடன் இணைந்து செயல்பட, நிதிஷ் குமார் விரும்பவில்லை. அதனால் தான், அவர் பதவி விலகினார்; நாங்கள் அவரை ஆதரித்தோம்.
கட்சிப்பணி தொடரும்
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கும், கட்சித் தலைவர் பதவிக்கும் ...

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்... ரத்து! விலையை ஏற்ற மத்திய அரசு உத்தரவு

Posted: 31 Jul 2017 09:08 AM PDT

புதுடில்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும், 14.2 கிலோ எடையுள்ள, சமையல், 'காஸ்' சிலிண்டருக்கு மானியம் வழங்குவதை நிறுத்தும் வகையில், அதன் விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை, படிப்படியாக குறைத்து, 2018 மார்ச்சுக்குள், மானியத்தை முழுமையாக ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இதற்காக, சமையல் காஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
விலை மாற்றம்
இது குறித்து, ...

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க., இடம் பெறுகிறது?

Posted: 31 Jul 2017 09:11 AM PDT

அ.தி.மு.க.,வுக்கு, மத்திய அமைச்சரவையில் இடம் தர, பா.ஜ., முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, 'லேடியா - மோடியா' என, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும், மல்லுக்கட்டின. முடிவில், பா.ஜ.,வுக்கு மத்தியிலும், அ.தி.மு.க.,வுக்கு தமிழகத்திலும், மாபெரும் வெற்றி கிடைத்தது. அதனால், உணவு பாதுகாப்பு திட்டம், உதய் திட்டம், ஜி.எஸ்.டி., சட்ட மசோதா போன்றவற்றை, ஜெயலலிதா தொடர்ந்து கடுமையாக எதிர்த்தார்.
தலைகீழாக மாறின.
மோடியும், அவரும் தனிப்பட்ட முறையில், நட்பு பாராட்டினாலும், பார்லிமென்டில், அ.தி.மு.க.,வினர், பல்வேறு பிரச்னைகளை ...

அமைச்சர் மீது குண்டர் சட்டம்: ஸ்டாலின் ஆவேசம்

Posted: 31 Jul 2017 09:38 AM PDT

திருச்சி: ''குட்கா விவகாரத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன், கமிஷனராக இருந்த, ஜார்ஜ் ஆகியோரை தான், முதலில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட, 10 பேர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளனர்.
கைது செய்ய வேண்டும்
அவர்களை நேற்று சந்தித்து, ஆறுதல் கூறிய, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டி:'குட்கா' விவகாரத்தில், ...

தலைமை செயலகத்தில் தினகரன் ஆதரவாளர்கள், அமைச்சர்களுக்கு மிரட்டல்!

Posted: 31 Jul 2017 09:53 AM PDT

தலைமைச் செயலகத்தில், நேற்று அமைச்சர்களைச் சந்தித்த தினகரன் ஆதரவாளர்கள், 'தினகரனுக்கு ஆதரவு கொடுங்கள்; இல்லையெனில், ஆட்சி பறிபோகும்' என, கொக்கரித்ததோடு, மிரட்டலும் விடுத்துள்ளனர்.

மேலும், 'மாவட்ட, ஒன்றிய, நகர செயலர்கள் அனைவரும், வரும், 5ம் தேதி, கட்சி தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டும்' என, தினகரன் தரப்பு கடிதம் அனுப்பி உள்ளதால், என்ன செய்வது என தெரியாமல், நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.அ.தி.மு.க., சசிகலா அணியானது, முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, இரண்டாக பிளவுபட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் பெற, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர ...

பொது வினியோக திட்டத்தில் மாற்றமில்லை! தமிழக அரசு திட்டவட்டம்

Posted: 31 Jul 2017 10:02 AM PDT

சென்னை: ''தமிழகத்தில், தற்போது செயல்பாட்டில் உள்ள, பொது வினியோக திட்டத்தில், எவ்வித மாற்றமும் இல்லை; அனைவருக்கும், வழக்கம் போல பொருட்கள் வழங்கப்படும்,'' என, தமிழக உணவுத்துறை அமைச்சர், காமராஜ் தெரிவித்தார்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்ட விதிகளில், 'வருமான வரி, தொழில் வரி செலுத்தும் குடும்பங்கள்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள்; அரசு ஊழியர்கள்; ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்; ஆண்டு வருமானம், ஒரு லட்சத்திற்கு மேல் இருப்போருக்கு, ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படாது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விபரம், தமிழ்நாடு அரசிதழிலும் ...

காங்கிரசில் கமல்?: காத்திருக்கிறது தலைவர், எம்.பி., பதவி

Posted: 31 Jul 2017 10:29 AM PDT

நடிகர் கமல், காங்கிரஸ் கட்சியில் இணைந்தால், அவருக்கு, தமிழக காங்., தலைவர் பதவியும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்க, அகில இந்திய காங்., துணைத் தலைவர் ராகுல், பச்சைக் கொடி காட்டியுள்ளார். அரசியலில் குதிக்க ஆலோசித்து வரும் ரஜினியை வீழ்த்த, காங்., இந்த முடிவை எடுத்துள்ளது.

லோக்சபா தேர்தல், 2019ல், நடக்க உள்ளது. இதில், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, காங்., விரும்புகிறது. இதற்காக, மாநில வாரியாக, கட்சியை பலப்படுத்தும் வியூகங்களை, ராகுலின் அரசியல் ஆலோசனை குழு வகுத்து வருகிறது.
காங்கிரசில் சேர்க்கலாம்
மேலும், செப்டம்பரில் நடக்க உள்ள ...

'நீட்' தேர்வு: அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: 85 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து உறுதியானது

Posted: 31 Jul 2017 10:51 AM PDT

சென்னை: மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 85 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.

மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீதம்; சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு 15 சதவீதம் என ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ., மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். மனுக்களை நீதிபதி ரவிச்சந்திரபாபு விசாரித்தார். தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து புதிய தகுதி பட்டியலை ...

பீஹாரில் பா.ஜ.,வுடன் கூட்டணி : மவுனம் கலைத்தார் சரத் யாதவ்

Posted: 31 Jul 2017 12:28 PM PDT

புதுடில்லி: ''பீஹாரில் அமைத்திருந்த மெகா கூட்டணி உடைந்தது, துரதிருஷ்டவசமானது, ஏற்றுக் கொள்ள முடியாது,'' என, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் முதல்வர் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணி அரசு இருந்தது. லாலுவின் மகனும், துணை முதல்வருமான, தேஜஸ்வி மீது, சி.பி.ஐ., ஊழல் வழக்கைத் தொடர்ந்தது. அதையடுத்து, துணை முதல்வர் பதவியில் இருந்து விலகும்படி, தேஜஸ்விக்கு, முதல்வர் நிதிஷ் குமார் நெருக்கடி கொடுத்தார். ஆனால், அதை தேஜஸ்வி, லாலு ஏற்கவில்லை. ...

'மரபணு மாற்றப்பட்ட கடுகு ஒரு மாதத்துக்குள் முடிவு'

Posted: 31 Jul 2017 01:40 PM PDT

புதுடில்லி: 'மரபணு மாற்றப்பட்ட கடுகை அனுமதிப்பது தொடர்பான பிரச்னையில், ஒரு மாதத்துக்குள் முடிவு எடுக்கப்படும்' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மரபணு மாற்றப்பட்ட கடுகை, வர்த்தக ரீதியில் பயன்படுத்தும் வகையில், அதை பயிரிட்டு பரிசோதிக்கும் முடிவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது.
'இந்த பிரச்னையில், மத்திய அரசு, திடமான கொள்கையை எப்போது அறிவிக்கும்' என, அமர்வு கேள்வி எழுப்பியிருந்தது.இந்த வழக்கு, நேற்று ...

பாக்., இடைக்கால பிரதமர் மீது ரூ.2,200 கோடி ஊழல் வழக்கு

Posted: 31 Jul 2017 02:35 PM PDT

இஸ்லாமாபாத் : ஊழல் வழக்கில், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து, நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோலியத் துறை அமைச்சர், ஷாகித் காகன் அப்பாஸி மீது, 2,200 கோடி ரூபாய் ஊழல் வழக்கு உள்ளது, தற்போது தெரியவந்துள்ளது.
தகுதி நீக்கம்:
ஊழல் செய்து, வெளிநாடுகளில் சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப்பை, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தகுதி நீக்கம் செய்து சமீபத்தில் தீர்ப்பளித்தது. அதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து அவர் விலகினார். ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™