Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கரன்சி நோட்டுகளை ஆய்வு செய்ய 50 இயந்திரங்கள் வாங்க திட்டம்

Posted: 30 Jul 2017 07:55 AM PDT

புதுடில்லி:செல்லாததாக அறிவிக்கப்பட்டவை உட்பட, அனைத்து ரூபாய் நோட்டு களை, பிரித்தல், எண்ணுதல் போன்ற பணிகளுக்காக, கரன்சியை ஆய்வு செய்யும், 50 இயந்திரங் களை வாங்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறியதாவது:
நாடு முழுவதும், ரிசர்வ் வங்கியின், 18 பிராந்திய அலுவலகங்களில் நிறுவு வதற்காக, 50 கரன்சி சோதிக்கும் இயந்திரங்கள் வாங்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்காக, உலகளவில், ஒப்பந்தங்களை, ரிசர்வ் வங்கி கோரியுள்ளது. இவ்வாறு பெறப்படும் இயந்திரங் கள்,கம்ப்யூட்டர் அடிப்படை யில், 'மைக்ரோபிராசசர்' ...

கொழுப்பு சத்துக்காக பவுடர் கலப்பது வழக்கம்; ஆவினை பின்பற்றும் தனியார் பால் நிறுவனங்கள்

Posted: 30 Jul 2017 08:35 AM PDT

தமிழக அரசின், 'ஆவின், நிறுவனமே, கொழுப்பு சத்து நிறைந்த பாலில், உணவு பாதுகாப்பு ஆணையம் அனுமதித்துள்ள அளவில், கொழுப்பு மற்றும் இதர சத்துக்களுக் காக, பால் பவுடரை கலக்கிறது.

'அனுமதி அளவில், பால் பவுடரை கலக்கும் தனியார் பால் நிறுவனங்கள் மீது மட்டும், கலப்படம்' என, அமைச்சர் குற்றம் சாட்டுவது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆவின் நிறுவனத்தால், மக்களின் பால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. அவற்றை தனியார் நிறுவனங்கள் தான் பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில், 'பால் கெடாமல் இருக்க, தனியார் நிறுவனங்கள், புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனத்தை ...

'ஆட்சியை அகற்ற தயங்க மாட்டோம்!'

Posted: 30 Jul 2017 08:55 AM PDT

சென்னை: 'முதல்வர் பழனிசாமி அரசுக்கு முடிவு கட்ட, தி.மு.க., என்றும் தயங்காது' என, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:

தி.மு.க.,வின் துார்வாரும் பணியை தடுத்து, அரசியல் செய்யும் முதல்வர் பழனிசாமி, 'தி.மு.க., அரசியல் செய்கிறது' என, வாய்க்கு வந்தபடி, அரசு விழாவில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.துார்வாரும் போது அகற்றப்படும் வண்டல் மண், சவுடு மண், விவசாயிகளுக்கு கொடுக்க ப்படுகிறது என்கிறார். யார், யாருக்கு கொடுக்க பட்டது; அவற்றை அள்ளிச் சென்றவர்களில், அ.தி.மு.க.,வினர் எத்தனைபேர்.தமிழகத்தில், 100 கோடி ரூபாய்க்கு ...

'நீட்' குழப்பத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி; வேளாண் படிக்க விண்ணப்பித்தோர் வேதனை

Posted: 30 Jul 2017 09:06 AM PDT

கோவை:'நீட்' குழப்பத்தால், மருத்துவம் படிக்க விரும்புவோர் மட்டுமின்றி, வேளாண் மாணவர் சேர்க்கைக்கு காத்திருக்கும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழக அரசின் குழப்ப அறிவிப்புகளால், வேளாண் படிப்புக்கு விண்ணப்பித்த, பல்லாயிரம் மாணவர்கள், கலை, அறிவியல் படிப்புகளில் சேர முடியாத, அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் அதன், 14 உறுப்புக் கல்லுாரிகள், 21 இணைப்பு தனியார் கல்லுாரி களில், 13 வகையான பாடப்பிரிவுகளில், மொத்தம், 2,820 இடங்கள் உள்ளன. இவற்றில், 2,360 இடங்கள், வேளாண் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும்; ...

ஜி.எஸ்.டி.,யால் அத்தியாவசிய பொருள் விலை குறைந்ததாக மோடி மகிழ்ச்சி!

Posted: 30 Jul 2017 09:41 AM PDT

புதுடில்லி:''அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளாகவே, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, பொருளா தாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது; இதன் மூலம், அத்தியா வசியப் பொருட்களின் விலையும் குறைந்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.

'மன் கீ பாத்' என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம், பல்வேறு பிரச்னைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். நேற்று, ஒலிபரப்பான நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கூறியதாவது:
வரி விதிப்பு முறை
ஜி.எஸ்.டி., எனப்படும் ...

தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் குஜராத் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கதறல்

Posted: 30 Jul 2017 09:49 AM PDT

பெங்களூரு:பா.ஜ.,வுக்கு பயந்து, பெங்களூரு சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள, குஜராத் மாநில, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கும்படி பிடி வாதம் பிடிப்பதால், காங்., மேலிடத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு, அடுத்த மாதம், 8ல், தேர்தல் நடக்கஉள்ளது. பா.ஜ., சார்பில், அதன் தேசிய தலைவர், அமித் ஷா, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானி, சமீபத்தில் காங்கிரசிலிருந்து வெளியேறிய, சங்கர்சிங் வகேலாவின் உறவினரான, பல்வந்த் சிங் ...

ஜி.எஸ்.டி.,யால் நாடு வளர்ச்சி அடையும்: அருண் ஜெட்லி நம்பிக்கை

Posted: 30 Jul 2017 10:36 AM PDT

சென்னை:''ஜி.எஸ்.டி., அமல்படுத்தியதால், மாநிலங்களின் வளர்ச்சியில் பாதிப்பு வராது. ஊழல் ஒழிந்து, நாடு அதிவேக வளர்ச்சி பெறும்,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்தார்.

சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., குறித்த மாநாடு, சென்னை பல்கலையில், நேற்று நடந்தது. இதில், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி பேசியதாவது:நாடு முன்னேற, சில கடின முடிவுகளை எடுப்பது கட்டாயம். பிரதமர் மோடியின் துணிச்சலான முடிவால், தற்போது,'ஒரேநாடு, ஒரே வரி' என்ற இலக்கை எட்ட முடிந்துள்ளது. அதனால், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், நாடு ஒன்றுபட்டு ...

மிரட்டல் விடுக்கும் தினகரனை அடக்க பழனிசாமி... வியூகம்

Posted: 30 Jul 2017 11:44 AM PDT

'அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணையா விட்டால், ஆக., 5ல், முக்கிய முடிவுகள் எடுக் கப்படும்' என, மிரட்டல் விடுத்துள்ள தினகரன், ஆக., 4ல், அ.தி.மு.க., தலைமையகம் செல்ல வும், பின், தமிழகம் முழுவதும், சுற்றுப்பயணம் செய்து, ஆதரவாளர்களை திரட்டவும் திட்டமிட்டுள்ளார்.

அதற்கு, 'செக்' வைக்கும் வகையில், கட்சி தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தால், அவரை கைது செய்து, சிறையில் அடைக்க, முதல்வர் பழனிசாமி, வியூகம் வகுத்துள்ளார். இதன் மூலம், ஆட்சி மட்டுமின்றி, கட்சியை யும், தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர, பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கான அதிரடி ...

ராஜ்யசபாவில் பா.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை

Posted: 30 Jul 2017 12:20 PM PDT

புதுடில்லி:லோக்சபாவில் மிகப் பெரும் பலத் துடன் உள்ள பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சில மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் ராஜ்யசபாவிலும் பெரும்பான்மையை நெருங்கியுள்ளது.

லோக்சபாவில் மொத்தமுள்ள 543 இடங்களில் பா.ஜ., 279 எம்.பி.,க்களுடன் தனிப் பெரும் கட்சியாகவும், கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 340 எம்.பி.,க்களுடன் அசைக்க முடியாத பலத்து டன் உள்ளது. அதே நேரத்தில் 12 நியமன உறுப் பினர்கள் உட்பட 245 எம்.பி.,க்களை உடைய ராஜ்யசபா வில்பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு போதிய பலம் இல்லை. ராஜ்யசபாவில் பெரும்பான்மைக்கு123 பேரின் ஆதரவு தேவை. பா.ஜ.,வுக்கு, 57 எம்.பி.,க்களே ...

போபர்ஸ் விவகாரம்: தகவல் கேட்கிறது பி.ஏ.சி.,

Posted: 30 Jul 2017 12:40 PM PDT

புதுடில்லி : போபர்ஸ் ஊழல் தொடர்பான காணாமல் போன கோப்புகள் பற்றிய அனைத்து தகவல்களையும் அளிக்கும்படி ராணுவ அமைச்சகத்துக்கு பொதுக் கணக்குக் குழு உத்தரவிட்டுள்ளது.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொடர்பாக சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த விவகாரம் தொடர்பாக பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி., பர்த்ருஹரி மஹ்தாப் தலைமையில் ஆறு உறுப்பினர் அடங்கிய பொதுக் கணக்குக்குழு ஆய்வு செய்து வருகிறது. சி.ஏ.ஜி., அறிக்கையில் உள்ள சில வரிகளை நீக்கலாம் என ராணுவ அமைச்சகம் அளித்த ...

இன்றைய(ஜூலை 31) விலை: பெட்ரோல் ரூ.67.78; டீசல் ரூ.58.53

Posted: 30 Jul 2017 01:51 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.78 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.53 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 31) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 27 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.67.78காசுகளும், டீசல் விலை 21 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.58.53 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை 31) காலை 6 மணி முதல் அமலுக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™