Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அ.தி.மு.க., இரு அணியினரின் இணைப்பு தோல்வி... ஏன்? 'முதல்வர் பதவி எனக்கே' என பழனிசாமி பிடிவாதம்

Posted: 29 Jul 2017 05:59 AM PDT

'முதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டேன்; பொதுச் செயலர் பதவியும் எனக்கே வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால், அ.தி.மு.க., இரு அணி களின் இணைப்பு பேச்சு, தோல்வியில் முடிந் துள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் கிடுக்கிப் பிடி போடுவதால், உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டிய நெருக்கடி, தமிழக அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.

'அ.தி.மு.க.,வில், இரு அணிகளும் இணைந்தால் தான், இரட்டை இலை சின்னம் கிடைக்கும்; தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவே, இரு அணிகளும் இணைய வேண்டும்' என, முதல்வர்
பழனிசாமியிடம்,அமைச்சர்கள் சிலர் வலியு றுத்தி ...

இளைஞர் அணிக்கு புது ரத்தம் பாய்ச்சுது பா.ஜ.,

Posted: 29 Jul 2017 06:57 AM PDT

இளைஞர் அணிக்கு புத்துயிரூட்டும் வகையில், 40 வயதை கடந்தவர்களை ஓரங்கட்டி விட்டு, இளைஞர்களை பொறுப்புகளில் நியமிக்கும் அதிரடி முடிவை, பா.ஜ., எடுத்துள்ளது.

தேசிய அளவில் கட்சியை கட்டமைப்பதில், தற்போது, பா.ஜ.,வுக்கு நிகரான கட்சி இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. லோக்சபா தேர்தலில், சமூக வலைதளங்களை, பா.ஜ., மிகச் சிறப்பாக பயன்படுத்தியது. தொடர்ந்து, கட்சியை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள, அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கட்சியில், 75 வயதை கடந்த, மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை ஓரங்கட்டியதில் துவங்கி, அமித் ஷாவை, எம்.பி.,யாக்கியது ...

நெருங்கும் ம.தி.மு.க., வரவேற்கும் தி.மு.க., ஸ்டாலின் வியூகம் எடுபடுமா?

Posted: 29 Jul 2017 07:14 AM PDT

'பொதுக்கூட்டங்களில், ம.தி.மு.க.,வை விமர்சிக்க வேண்டாம்' என, பேச்சாளர்களுக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் உத்தர விட்டுள்ளதும், அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வு களும், தி.மு.க.,விடம், ம.தி.மு.க., நெருக்கம் காட்டி வருவதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளன.

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பேரன், அருள்நிதி திருமண விழா, 2016 சட்டசபை தேர்தலுக்கு முன், சென்னை, அறிவாலயத்தில் நடந்தது. அதில், பங்கேற்ற வைகோவிற்கு உரிய மரியாதை தராமல் அலட்சியப்படுத்தி யதால், தி.மு.க., கூட்டணியில், வைகோ இடம் பெற மறுத்து விட்டார்.
தேர்தல் நேரத்தில், மூன்றாவது அணியையும் உருவாக்கினார். இதனால், ...

வரி ஏய்ப்பாளர்களை கண்டுபிடிக்க வரித்துறை... அதிரடி! சமூக வலைதளங்களை பயன்படுத்த திட்டம்

Posted: 29 Jul 2017 07:28 AM PDT

புதுடில்லி, வரி ஏய்ப்பாளர்களை கண்டறிய, வங்கிகளை மட்டும், இனி, வருமான வரித் துறை நம்பியிருக்கப் போவதில்லை. 'இன்ஸ்டா கிராம்' போன்ற சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி, வரி ஏய்ப்பாளர்களை கண்டு பிடிக்க, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

வருமான வரி வசூலிக்க, பல்வேறு நடவடிக்கை களை, மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆனாலும், எதிர்பார்த்த அளவு, வருமான வரி வசூலாவதில்லை என்பது தான் உண்மை.
கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டு வர, பல சலுகை திட்டங்களை, அரசு அறிவித்தது. ஆனால், அதிலும், எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை. வரி ஏய்ப்பாளர்களின் எண்ணிக்கை, கணிசமாக ...

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவுக்கு லாலு... தூண்டில்! நிதிஷ் குமாருக்கு நெருக்கடி கொடுக்க வியூகம்

Posted: 29 Jul 2017 08:32 AM PDT

பாட்னா,பீஹார் அரசியலில், சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்களால், முதல்வர் நிதிஷ் குமார் மீது, கடும் அதிருப்தியில் இருக்கும், ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர், சரத் யாதவை, தன் பக்கம் இழுக்க, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலை வர், லாலு பிரசாத் யாதவ், துாண்டில் வீசியுள் ளார். இதன்மூலம், நிதிஷ் குமாருக்கு நெருக்கடி கொடுக்க, அவர், வியூகம் வகுத்து வருகிறார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும்,முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் யாதவ், 2004 - 09ல், ரயில்வே அமைச்சராக ...

'ஆகாஷ்' ஏவுகணைகள் நம்ப முடியாதவை சி.ஏ.ஜி., அறிக்கையில் அம்பலம்

Posted: 29 Jul 2017 09:34 AM PDT

புதுடில்லி: 'உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, நிலத்திலிருந்து, வான் நோக்கி தாக்கக்கூடிய, 'ஆகாஷ்' ஏவுகணைகளில், மூன்றில் ஒரு பங்கு, நம்ப முடியாதவை; பயன்படுத்த இயலாதவை' என, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் கூறியுள்ளது.

நாட்டின் வடகிழக்கு மாநிலமான, சிக்கிமில் உள்ள, டோகோலாம் பகுதியில் சாலை அமைக்க, சீன ராணுவம் மேற்கொண்ட முயற் சியை, நம் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அந்த பகுதியை, சீனா சொந்தம் கொண்டாடி வருவ தால், பதற்றம் நிலவுகிறது.'சீனாவுடன் மோதல் ஏற்பட்டால், பதிலடி தருவ தற்காக, உள்நாட்டில் தயாரான, ஆகாஷ் ஏவுகணைகள் பயன்படுத்தப்படும்' என, ...

குஜராத் காங்.,கில் துவங்கியது கூவத்தூர் 'பார்முலா!'சபாஷ்

Posted: 29 Jul 2017 10:44 AM PDT

பெங்களூரு:குஜராத் மாநில காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள், 40 பேர், பா.ஜ.,வுக்கு ஓட்டம் பிடிப்பதை தடுக்கும் வகையில், கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில், கூவத்துார் பாணியில், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில், விரைவில் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலுக்காக, பா.ஜ., வகுத்துள்ள வியூகத்துக்கு பயந்து, காங்., துணைத் தலைவர் ராகுல், கட்சி யின், எம்.எல்.ஏ.,க்களை தக்க வைக்க, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், வரும், ஆக., 8ல், மூன்று ராஜ்யசபா, எம்.பி., ...

சிறிய பிழை இருந்தாலும் வருமான வரி படிவம் நிராகரிப்பு

Posted: 29 Jul 2017 10:49 AM PDT

வருமான வரி கணக்கு தாக்கலில் சிறு தவறு கள் இருந்தாலும், அந்த மனுக்களை வருமான வரித்துறை நிராகரிக்கிறது. தவறுகளை, திருத்தம் செய்ய, 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது.

இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:வருமான வரித்துறை,ஒவ்வொரு பிரிவினருக்கும், கணக்கு தாக்கல் செய்ய, தனித்தனி படிவங்களை தயாரித்துள் ளது. சிலர், தங்களுக்குரிய படிவத்தை சமர்ப்பிக் காமல், தவறான படிவத்தில் கணக்கு தாக்கல் செய்து விடுகின்றனர். அது போன்ற படிவங்கள் நிராகரிக்கப்படுகின்றன.சமீபத்தில், ஒருவருக்கு, அலுவலகத்தில் தரப்பட்ட, படிவம் - 16ல் இருந்த ...

கேரளா, கர்நாடகாவுக்கு மணல் கடத்தல் தனிப்படை அமைத்து தடுக்குமா அரசு?

Posted: 29 Jul 2017 11:04 AM PDT

சென்னை:தமிழகத்தில் இருந்து, பிற மாநிலங் களுக்கு, மணல் கடத்தல் தொடர்வதால், தமிழ கத்தில் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதை தடுக்க, தமிழக அரசு தனிப்படைகள் அமைத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு, பொதுப்பணித்துறை மூலம், நேரடி யாக மணல் விற்பனையில் ஈடுபட்டுள் ளது. ஆனால், குவாரிகளில் இருந்து, தேவைக்குஏற்ப மணல் வினியோம் செய்ய முடிய வில்லை.
தட்டுப்பாடு
குறைவாக வினியோகிக்கப்படும் மணலும், தேசிய உரிமம் பெற்ற லாரி மூலம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங் களுக்கு கடத்தப் படுவதால், தமிழகத்தில், ...

முதல்வர் அலுவலக செயலர்கள் மாற்றம்

Posted: 29 Jul 2017 11:52 AM PDT

சென்னை: முதல்வர் அலுவலக செயலர் உட்பட, நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

• முதல்வர் அலுவலக, இரண்டாம் நிலை செயலராக பணிபுரிந்த, சிவ்தாஸ் மீனா, மத்திய அரசு பணிக்கு மாற்றலாகி சென்றுள்ளார். எனவே, மூன்றாம் நிலை செயலராக இருந்த, விஜயகுமார், இரண்டாம் நிலை செயலராக மாற்றப்பட்டுள்ளார்
• நிதித்துறை செலவின செயலர், செந்தில்குமார், முதல்வர் அலுவலக மூன்றாம் நிலை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சிவ்தாஸ் மீனா கவனித்து வந்த பணிகளை கவனிப்பார்
• தொல்லியல் துறை கமிஷனர் சித்திக், நிதித்துறை செலவின ...

இன்றைய(ஜூலை 30) விலை: பெட்ரோல் ரூ.67.51; டீசல் ரூ.58.32

Posted: 29 Jul 2017 12:38 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.51 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.32 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 30) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 14 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.67.51 காசுகளும், டீசல் விலை 12 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.58.32 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை 30) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Posted: 29 Jul 2017 01:33 PM PDT

வாஷிங்டன்: ''வடகொரியா, ஆபத்தான வகையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிஉள்ளார்.

கிழக்காசிய நாடுகளில் ஒன்றான, வடகொரியா, கடந்த ஒரு மாதத்தில், இரண்டாவது முறையாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் பயங்கர ஏவுகணை சோதனையை, நேற்று முன்தினம் நடத்தியது.ரஷ்யா, ஈரான், வட கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக, புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க, அமெரிக்க பார்லிமென்ட், சமீபத்தில் ஒப்புதல் அளித்ததற்கு மறுநாள், இந்த சோதனையை, வடகொரியா நிகழ்த்தி உள்ளது.
இது ...

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை: பதற்றம்

Posted: 29 Jul 2017 02:03 PM PDT

திருவனந்தபுரம்; கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் மர்ம கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார். இதனால்அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ், 34 , ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு 9 மணி அளவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருவனந்தபுரம் அருகே ஸ்ரீகார்யம் என்ற பகுதியில் வந்த போது அவரை வழி மறித்த 15 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது. இதில் அவரது கைகள் துண்டாகின. பலத்த காயங்களுடன் தனியார் ...

'ஆதார் - பான்' விபரம் இணைப்பதில் சிக்கல் ; வருமான வரி தாக்கலுக்கு அவகாசம்?

Posted: 29 Jul 2017 02:49 PM PDT

'ஆதார்' கார்டை, 'பான்' கார்டுடன் இணைப்பதில் சிக்கல் உள்ளதால், பலர் வருமான வரி தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டு முதல், ஆதார் எண் இருந்தால் தான், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், ஜூலை, 1 முதல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன், பான் கார்டு எண்ணை, கட்டாயமாக இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்பின், ஆதார் அட்டை வாங்காதிருந்த, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் மையங்களை முற்றுகையிட துவங்கினர். இதனால், சில வாரங்களாக ஆதார் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™