Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ராணுவத்துக்கு நிதி அதிகாரம்! பிரதமர் மோடி அரசு தாராளம்

Posted: 28 Jul 2017 08:35 AM PDT

புதுடில்லி:முப்படைகளின் முக்கிய முகாம் களில் தேவையான பாதுகாப்பு வசதிகள் உள் ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு, முப்படை தளபதிகளுக்கு, நிதி அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் உள்ள யூரி ராணுவ முகாம், பஞ்சாபில் உள்ள பதன்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி னர். அதையடுத்து, நாடு முழுவதும், முப்படை களின் முகாம்களில் தேவையான பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆராய ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது.லெப்டினென்ட் ஜெனரல், பிலிப் கம்போஸ் தலைமையிலான இந்தக் குழு, ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை தளங்களில் ஆய்வு ...

மேலும் 2 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டம்; குஜராத்தில் தள்ளாடும் காங்.,

Posted: 28 Jul 2017 08:40 AM PDT

ஆமதாபாத்: குஜராத்தில், மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரசைச் சேர்ந்த மேலும், இரண்டு, எம்.எல். ஏ.,க்கள் பதவி விலகிஉள்ளனர்; இது, காங்., தலைவர் சோனியாவின் அரசியல் செயலரான, அஹமது படேலுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

தேர்தல்
குஜராத்தில்,மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, காங்., தலைவர் சோனியாவின் அரசியல் செயலர், அஹமது படேல் உட்பட மூன்று பேரின் பதவிக்காலம், ஆக., 18ல் முடி வடைகிறது. அதைஅடுத்து, மூன்று இடங்களுக் கான தேர்தல், ஆக., 8ல் நடக்க உள்ளது. பா.ஜ., சார் பில், தேசியத் தலைவர் அமித் ஷா, ஸ்மிருதி ...

'வரதட்சணை கொடுமை வழக்கில் விசாரிக்காமல் கைது செய்யாதீங்க!'

Posted: 28 Jul 2017 08:44 AM PDT

புதுடில்லி:''வரதட்சணை தடுப்பு சட்டம், தவ றாக பயன்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது; வரதட்சணை வழக்கில், விசாரணை நடத்தா மல், உடனடியாக யாரையும் கைது செய்யக் கூடாது,'' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

வரதட்சணை தடுப்பு சட்டத்தை, சிலர் தவறாக பயன்படுத்துவதாக, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள்,ஆதர்ஷ் குமார் கோயல், லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு .முன் நடந் தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:வரதட்சணை தடுப்பு சட்டம், தவறாக பயன்படுத் தப் படுவது கவலைஅளிக்கிறது. வரதட்சணை ...

பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம்;'பனாமா பேப்பர்ஸ்' வழக்கில் அதிரடி

Posted: 28 Jul 2017 09:01 AM PDT

இஸ்லாமாபாத்: ஊழல் செய்து வெளிநாட்டில் சொத்து குவித்ததாக, 'பனாமா பேப்பர்ஸ்' அம்பலப்படுத்தியது தொடர்பான வழக்கை விசாரித்த, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட், பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, 67, தகுதி நீக்கம் செய்து தீர்ப்பளித்தது.

அவர் மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க வும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து, நவாஸ் ஷெரீப் விலகியுள்ளார்.
குற்றச்சாட்டு
மத்திய அமெரிக்க நாடான, பனாமாவைச் சேர்ந்த ஒரு சட்ட ஆலோசனை நிறுவனம், போலி நிறுவனங்கள் பெயரில், வெளிநாடு களில் முதலீடு செய்ய உதவியதை, சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் ...

கிராமப்புற பணிக்கு வராத டாக்டர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'

Posted: 28 Jul 2017 10:22 AM PDT

கிராமப்புற மருத்துவமனைகளில், பணிக்கு வராத அரசு டாக்டர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி' போட, சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில், 13 அரசு மருத்துவக் கல்லுாரிக ளில், முதுநிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. இந்தக் கல்லுாரிகளில் முதுநிலை மருத்துவ படிப்பை முடிப்பவர்கள், இரண்டு ஆண்டுகள், கிராமப்புற அரசு மருத்துவ மனைகளில் பணி யாற்ற வேண்டியது கட்டாயமாகும். ஆனால், படிப்பை முடிக்கும் பல டாக்டர்கள், கிராமப்புற அரசு மருத்துவமனைகளில், ஓரிரு மாதங்கள் பணியாற்றி விட்டு, பின், பணிக்கு வராமல், 'டிமிக்கி' கொடுத்து விடுகின்றனர்.இந்தப் ...

'ஆன்லைன்' படிப்பிற்கு ஆதார் கட்டாயம் முறைகேட்டை தடுக்க மத்திய அரசு அதிரடி

Posted: 28 Jul 2017 10:29 AM PDT

'ஆன்லைன் படிப்புகளில் முறைகேடுகளை தடுக்க, மாணவர்களின் ஆதார் எண் மற்றும் வீடியோ பதிவு கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு சார்பில், தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., கல்லுாரிகளிலும், மற்ற பல்கலைகளிலும், ஆன்லைன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அதே நேரம், ஆன்லைன் படிப்புகளில், ஆள் மாறாட்டம் மற்றும் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.இதையடுத்து, மத்திய அரசின், பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், கல்லுாரிகள், பல்கலை கள் போன்றவற்றில், ஆன்லைன் ...

பீஹார் சட்டசபை நம்பிக்கை ஓட்டில் நிதிஷ் அரசு ... வெற்றி

Posted: 28 Jul 2017 10:36 AM PDT

பாட்னா:பீஹார் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டில், நிதிஷ் அரசு, 131 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றது. அரசுக்கு எதிராக, 108 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தனர்.

தமிழகத்தில் நடந்த கூவத்துார் பாணியில், எம்.எல்.ஏ.,க்களை அடைத்து வைக்காமல், நேர்மையாக நடைபெற்ற ஓட்டெடுப்பில், முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அரசு வென்றதன் மூலம், பீஹாரில் மூன்றாண்டுகளுக்கு பின், மீண்டும், தே.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது.பீஹாரில், முன்னாள் முதல்வர், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளு டன் இணைந்து, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசு ...

திவாகரன் - தினகரன் திடீர் கைகோர்ப்பு முதல்வர் பழனிசாமி அணியினர் கலக்கம்

Posted: 28 Jul 2017 10:44 AM PDT

எலியும், பூனையுமாக சமீபகாலம் வரை இருந்த, திவாகரனும், தினகரனும், திடீரென கை கோர்த்துக் கொண்டுள்ளது, முதல்வர் பழனி சாமி அணியினரிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க., பொதுச் செயலராக தன்னை அறிவித்துக் கொண்ட, சசிகலா சிறைக்கு சென்றதும், அவர் குடும்பத்தில், அதிகார போட்டி தலை துாக்கியது. சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும், அக்கா மகன் தினகரனுக்கும் இடையே, கடும் போட்டி ஏற்பட்டது. சசிகலா உதவியுடன், அ.தி.மு.க., துணை பொதுச்செயல ரான தினகரன், கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்; திவாகரனை ஒதுக்கினார்.இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் கமிஷன் ...

விரைவில் அடுத்தகட்ட போராட்டம்: ஸ்டாலின்

Posted: 28 Jul 2017 10:47 AM PDT

சென்னை:'நீட்' தேர்விலிருந்து விலக்கு அளிக் கக் கோரி, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங் களில் மனிதச் சங்கிலி போராட்ட மும், மாநிலம் முழுவதும், அடுத்த கட்ட போராட்டமும் விரை வில் நடக்கும் என, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:உதட்டளவில், 'நீட்' எதிர்ப் பைக் காட்டி விட்டு, உள்ளத்தின் ஆழத்தில் ஊறிக் கிடக்கும் அடிமைத்தனத்தை, தங்களின் டில்லி எஜமானர்களுக்கு வெளிப்படுத்தும் விதத்தில், அ.தி.மு.க.,ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதனால் தான், 'நீட்' தேர்வை எதிர்க்கும், தி.மு.க., நடத்திய மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி ...

ஆக.,7ல் கோட்டையை நோக்கி பா.ஜ., பேரணி: தமிழிசை

Posted: 28 Jul 2017 11:46 AM PDT

சென்னை: தமிழக பா.ஜ., சார்பில் வரும் 7-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை வலியுறுத்தி வரும் 7-ம் தேதி(ஆக., 7) கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும். நீட் தேர்வுக்கு ஒரு ஆண்டு காலம் அவகாசம் வழங்கியும், தமிழக மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திற்கும் கால அவகாசம் அளிக்கவில்லை. டில்லியில் நடைபெற்ற நீட் தேர்வு கருத்தரங்கில் எனது கருத்தை தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார். ...

மத போதகர் ஜாகிர் நாயக் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

Posted: 28 Jul 2017 01:41 PM PDT

புதுடில்லி: மதபோதகர் ஜாகிர் நாயக்கை தலைமறைவு குற்றவாளியாக என்.ஐ.ஏ .அறிவித்துளளது. வங்கதேச தலைநகர் தாகாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 22 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தில் தொடர்புள்ள இரு பயங்கரவாதிகள், மும்பையை சேர்ந்த பிரபல மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, ஜாகிர் நாயக் நடத்தி வரும் சர்ச்சைக்குரிய, 'பீஸ் டிவி' சேனலுக்கு, வங்கதேச அரசு தடை விதித்தது. இவர் மீது இந்தியாவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. துபாய் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™