Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அதிரடி! 5 மற்றும் 8ம் வகுப்புக்கு கட்டாய தேர்வு

Posted: 27 Jul 2017 08:27 AM PDT

புதுடில்லி:''இனி, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சியடைய செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும்; ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, கட்டாய தேர்வு நடத்தப்பட வேண்டும்; இதற்கான மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்து வருகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது பற்றி ராஜ்யசபா வில் நேற்று, உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி னர். ...

சசிகலா மீது 'தாதா' கைதிகள் கோபம்?

Posted: 27 Jul 2017 08:29 AM PDT

பெங்களூரு: பெங்களூரு சிறையில், சிறப்பு சலுகை தடை செய்யப்பட்டுள்ளதால், அங்கு, ராஜபோக வாழ்க்கை நடத்தி வந்த, பிரபல தாதாக்கள், சசிகலா மீது கடும் கோபமடைந்து உள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக் கப்பட்டுள்ள, அ.தி.மு.க., சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சிறையில், அவ ருக்கு சலுகை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம், கர் நாடகாவில், பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, கர்நாடகா வில் உள்ள அனைத்து சிறைகளிலும், கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை கைதி களுக்கு ...

'தனி மனித சுதந்திரம் அடிப்படை உரிமையல்ல'

Posted: 27 Jul 2017 08:34 AM PDT

புதுடில்லி: 'தனி மனித சுதந்திரம், பன்முகத் தன்மை உடையது; அதனால், அதை ஒருவரது அடிப்படை உரிமையாக கருத முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

'ஆதார்' எண்ணை கட்டாயமாக்கும், மத்திய அரசின் உத்தரவுகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் நடந்து வருகின்றன; இதில், ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள, தனி மனித சுதந்திரம் என்ற உரிமையை மீறுவதாக உள்ளது என்றும், வழக்கு தொடரப்பட்டது.
கருத முடியாது:
தனி மனித சுதந்திரம், ஒருவரது அடிப்படை உரிமையா என்பது குறித்து, சுப்ரீம் கோர்ட் ...

மதுரையில் பிரதமர் மோடி - ஓ.பி.எஸ்., திடீர் சந்திப்பு

Posted: 27 Jul 2017 09:45 AM PDT

மதுரை : ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மதியம் மதுரை திரும்பிய பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி சந்தித்து பேசினர்.

நேற்று காலை ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை திறப்பதற்காக மதுரை வந்த பிரதமர் மோடியை கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் செல்லுார் ராஜு, உதயகுமார், எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை திரும்பி, சிறப்பு விமானத்தில் டில்லி செல்லும் வகையில் பிரதமரின் பயணத்திட்டம் இருந்தது. ஆனால் நேற்று மதியம் திடீரென முன்னாள் முதல்வர் ...

பீஹார் முதல்வராக ஆறாவது முறை நிதிஷ்குமார் பதவியேற்பு!

Posted: 27 Jul 2017 10:28 AM PDT

பாட்னா: முன்னாள் முதல்வர் லாலுவின், ஆர்.ஜே.டி., எனப்படும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளை கழற்றிவிட்டு, பா.ஜ.,வுடன் கைகோர்த்து, பீஹாரின் முதல்வ ராக, ஆறாவது முறையாக நேற்று பதவியேற் றார், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார், 66. பதவியை இழந்த விரக்தியில், லாலுவும், காங்கிரஸ் கட்சியினரும், 'குய்யோ முறையோ' என, கதறி கொண்டிருக்கையில், நிதிஷ்குமார் சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.

பீஹாரில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின், ஆர்.ஜே.டி., எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை அமைத்த ...

ராமாயணத்து அணில் போல் ஓர் அடி எடுத்து வையுங்கள்! 125 கோடி மக்களுக்கு பிரதமர் மோடி எழுச்சி அழைப்பு

Posted: 27 Jul 2017 10:40 AM PDT

ராமேஸ்வரம்: "ராமாயணத்தில் அணில் போல, 125 கோடி மக்களும், ஓர் அடி முன்னால் எடுத்து வைத்தால்,நாம் 125 கோடி அடி முன்னேறலாம். தமிழகத்திற்கு, என்ன உதவி வேண்டுமானா லும் செய்ய மத்திய அரசு தயார்,என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தேசிய நினைவ கத்தை, திறந்து வைத்த பிரதமர் மோடி எழுச்சியாக பேசினார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்தார். இதற்கான விழா, அங்கிருந்து 17 கி.மீ.,ல் உள்ள மண்டபம் தேசிய கடலோர காவல்படை குடியிருப்பு வளாகத்தில் நடந்தது.
இதில் பிரதமர் பேசியதாவது:
புண்ணிய பூமியான, ராமேஸ்வரம் மண்ணில் ...

சேலம் செல்ல விடாமல் தடுத்து கோவையில் ஸ்டாலின் கைது

Posted: 27 Jul 2017 10:47 AM PDT

கோவை: கோவையில் இருந்து சேலம் கச்சராயன் ஏரி துார் வாரும் பணியை பார்வை யிட சென்ற,தி.மு.க.,செயல் தலைவர் ஸ்டாலின், கணியூர் சுங்கச்சாவடியில், கைது செய்யப்பட்டார்.

முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்ட மான சேலம், இடைப்பாடியில் கச்சராயன் ஏரி உள்ளது. சில மாதங்களாக, தி.மு.க., சார்பில், ஏரியை துார் வாரும் பணி நடந்தது. இதற்கு போட்டியாக, அ.தி.மு.க., வினரும் துார் வாரி, மண்ணை அள்ளி சென்றனர். இதனால், தி.மு.க., - அ.தி.மு.க., வினர் இடையே மோதல் நிலவுகிறது.ஏரி துார் வாரும் பணியை பார்வையிடவும், 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி, தி.மு.க., சார்பில் ...

சசிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை

Posted: 27 Jul 2017 10:54 AM PDT

ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சசிகலா, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நீடிப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்க உள்ளது.

ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் பதவியில் நீடிப்பதை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சியின், வசீகரன் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார்.மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர், எம்.பி., - எம்.எல்.ஏ.,வாக தொடரும் தகுதியை இழப்பதாக, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. அதே போல், கோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்ட ...

'ஆன்லைன்' மணல் முன்பதிவில் தில்லாலங்கடி; பைக், கார் எண்களை பதிவு செய்து மோசடி

Posted: 27 Jul 2017 11:03 AM PDT

மணல் குவாரிகள் பிரச்னையை, 'ஆன்லைன்' முன்பதிவு மூலம் சமாளிக்கலாம் என, தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்த திட்டமே, மோசடிக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

லாரி எண்கள் மட்டுமன்றி, பைக், கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களின் எண்களை நம்பர் போர்டுகளாக மாட்டி, லாரிகளில், ஸ்டிக் கர்களாக ஒட்டி, மணல் அள்ளுகின்றனர். பின், அதை வெளி மாநிலங்களுக்கு கடத்துகின்றனர்.இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:குவாரிகளில் நாள் கணக்கில் காத்திருப்பதை தவிர்த்து, தினமும் லோடு எடுத்துச் செல்லும் வகையில், லாரி உரிமையாளர்கள், தங்கள் ...

துணை கலெக்டரானார் சிந்து : சந்திரபாபு நாயுடு

Posted: 27 Jul 2017 12:23 PM PDT

அமராவதி: பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்துவை துணை கலெக்டராக நியமித்து பணி நியமன ஆணையை வழங்கினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

ஆந்திரா மாநிலம் ஐதரபாத்தை சேர்ந்த பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து, 2016- ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மெரினுடன் நடந்த பைனலில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை கலெக்டராக நியமித்து அதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார். அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் இதற்கான ஆணையை ...

3 மாத சம்பளம் நன்கொடை: அதிபர் டிரம்ப் அசத்தல்

Posted: 27 Jul 2017 01:15 PM PDT

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன், மூன்று மாத சம்பளத்தை, கல்வித் துறைக்கு நன்கொடையாக வழங்கினார்.
நன்கொடை:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தேர்தல் பிரசாரத்தின் போது உறுதியளித்தபடி, தனக்கு கிடைக்கும் சம்பளத்தை, சமூக பணிகளுக்கு வழங்கி வருகிறார். பதவியேற்ற, ஜன., - மார்ச் வரையிலான சம்பளத்தை, மருத்துவ ஆராய்ச்சி பணிகளுக்கு வழங்கினார். இதை தொடர்ந்து, ஏப்., - ஜூன் வரையிலான, மூன்று மாத சம்பளத்தை, குழந்தைகளின் கல்வி பணிக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.
ரூ.67 லட்சம்:
இது ...

‛நாடகமாடுகிறார் ஸ்டாலின்': தம்பிதுரை

Posted: 27 Jul 2017 02:00 PM PDT

அவனியாபுரம்: 'நீட்' தேர்வில் ஸ்டாலின் நாடகமாடுகிறார்' என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: அப்துல் கலாம் நினைவு மண்டப விழாவை மங்கச்செய்யவே, தி.மு.க.,வினர் மனித சங்கிலி நடத்தினர். கலாம் இளைஞர்களின் வழிகாட்டி. அவருக்கு விழா எடுப்பதை பெருமையாக கருதுகிறேன். அந்த விழாவை திசை திருப்பவே தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். 'நீட்' தேர்வு முறை காங்.,-தி.மு.க., கூட்டணி ஆட்சியின் போது தான் வந்தது. அப்போதே தடுக்காத ஸ்டாலின், இப்போது போராட்டம் நடத்தி நாடகம் ஆடுகிறார், ...

புலிகள் மீதான தடை தொடரும்; ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு

Posted: 27 Jul 2017 02:45 PM PDT

பிரஸ்ஸல்ஸ்: விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி, ஐரோப்பிய யூனியன் கோர்ட் உத்தரவிட்ட நிலையில், 'அந்த தடை தொடரும்' என, ஐரோப்பிய யூனியன் அமைப்பு கூறியுள்ளது.

உத்தரவு:
விடுதலை புலிகள் அமைப்பு, 2009க்கு பின், எந்த வன்முறை செயலிலும் ஈடுபடாததால், அதன் மீதான தடையை நீக்கி, ஐரோப்பிய யூனியன் கோர்ட், நேற்று முன்தினம் உத்தரவிட்டது. தடை விலகியதால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் வங்கிப் பணம் விடுவிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டது.
தடை தொடரும்:
இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கை: ...

நாடு முழுவதும் டெங்குக்கு 36 பேர் பலி

Posted: 27 Jul 2017 03:45 PM PDT

புதுடில்லி: நாட்டில், டெங்கு பாதிப்புக்கு, 36 பேர் இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில், நடப்பு ஆண்டில், 5,013 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பட்டியல் வெளியீடு:
நாட்டில், வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, www.nvbdcp.gov.in என்ற இணையதளத்தில், மத்திய அரசு, மாதம் ஒருமுறை பதிவிட்டு வந்தது. தற்போது, 'டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால், பாதிப்புகள் குறித்து, அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது, யூனியன் பிரதேசங்களுடன் சேர்ந்து, டெங்கு பாதிப்புள்ள, 35 மாநில பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், டெங்கு ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™