Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காய்ந்து போகாத கவிதை மை

Posted: 27 Jul 2017 08:55 AM PDT

– மோதல் வேண்டாம் – மோதிய தீக்குச்சி மண்டை கருகி உடல் எரிந்து உயிர் இழந்தது – பொறுமை காத்த தீப்பெட்டிக்குச் சின்னச் சிராய்ப்பு – ——————— – செருக்கு – பருத்த உடம்புப் பலசாலி நான் சணைடக்கு அழைத்தது பலூன் – தொட்டுப் பார்த்தே தோற்கடித்தது குண்டூசி – ————————— – நிலவில் பிறந்த இருள் – பௌர்ணமி நிலவு குழந்தை பிறந்தது பிறவிக் குருடு! – —————————– பொ.கந்தசாமி காய்ந்து போகாத கவிதை மை – கவிதை தொகுப்பிலிருந்து

பெய்யும் மழையின் அழகு…!!

Posted: 27 Jul 2017 08:30 AM PDT

தோழி

Posted: 27 Jul 2017 06:02 AM PDT

இன்பமுறும் வேளையிலும் இனியவளே..
துன்பமுறும் வேளையிலும் தூயவளே ..
யான் செய்யும் பிழையினை எந்நிலையிலும்
     என் செவியடைய செய்யும் அன்பானவளே..
           யாவருக்கும் வேண்டுமடி
உன்னைப்போல் தோழியொருத்தி... குமரன்

மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –

Posted: 27 Jul 2017 05:54 AM PDT

தினமும் மூன்று என்று திட்டமிட்டு காரியங்களை செய்து வந்தால் அதிசயிக்கக் கூடிய வெற்றியை எட்டித் தொட்டிருக்கக் காண்பீர்கள். முடித்தாக வேண்டிய பணிகளில் முதல் மூன்றை தேர்வு செய்து முடியுங்கள் என்பது இதன் கருத்து. – வாழ்க்கையில் சின்னச் சின்ன விடயங்கள் கூட பெரிய பெரிய சந்தோசத்தை அள்ளித்தரக் கூடியவை. அன்றாட வாழ்வில் சின்னச்சின்ன விடயங்களை முடிப்பதன் மூலம் பெரிய சந்தோசத்தை அனுபவிக்க முடியும். – உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்களின் உள்ளேயுள்ள திசைகாட்டியின் வழியே நடவுங்கள். அதுதான் ...

ரூ.1500 மின்கட்டணமா.. ரேஷன் சலுகை ரத்து: கேரள அரசு அதிரடி

Posted: 27 Jul 2017 05:43 AM PDT

திருவனந்தபுரம்:  மாதம் ரூ.1500 மற்றும் அதற்கு மேல் மின்கட்டணம் செலுத்துபவர்களின்ரே ஷன் சலுகைகளை ரத்து செய்ய உள்ளதாக கேரள அரசு அதிரடியாக  அறிவித்துள்ளது. சம்பளம் ‛கட்': இதுதொடர்பாக கேரள அரசு தலைமைச் செயலாளர் நளினி பிறப்பித்த உத்தரவு: அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது ஆதார், ரேஷன் கார்டு, பான்கார்டு போன்றவற்றின் நகல்களை, தாங்கள் பணிபுரியும் அரசு அலுவலகங்களில் வரும் 31ம் தேதிக்குள் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு 1ம் தேதி சம்பளம் வழங்கப்படும். இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...

மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை..

Posted: 27 Jul 2017 02:16 AM PDT

மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. இறைவணக்கத்தில் ஈடுபட்டதன் காரணமாக மனைவியை மகிழ்விக்க முடியவில்லை என்று காரணம் கூறித் தப்பிக்கவும் முடியாது. இரவில் சில பகுதியை மட்டுமே இறைவணக்கத்துக்காக ஒதுக்கலாமே தவிர முழு இரவையும் வணக்கத்திலேயே கழித்துவிட அனுமதியில்லை. ஏனெனில் தனது துணைவிக்கு சுகமளிப்பதும் இறைவணக்கத்தின் பாற்பட்டதே. மனைவிக்கு பணம் அனுப்புவதும், நகை வாங்கிப் போட்டு அழகு பார்ப்பதும், கோடிக்கணக்கில் சொத்துக்களை அவள் பெயரில் வாங்கிக் குவிப்பதும் மனைவியை மகிழ்விப்பதாகவோ, ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 27 Jul 2017 02:08 AM PDT


-

-
-

குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை

Posted: 27 Jul 2017 02:05 AM PDT

பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?

Posted: 27 Jul 2017 02:00 AM PDT

ஜூலை 27, 2017 இல் 8:14 முப (ஆன்மிகம்) · தொகு [size=12] நேரிலும் கனவிலும் கருடனை தரிசிப்பது மிகவும் மங்களகரமான விஷயமாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. – திருவிழாக் காலங்களில் நாம் பெருமாளைப் பல்வேறு வாகனங்களில் தரிசித்தாலும், கருட வாகனத்தில் தரிசிப்பது என்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப் படுகிறது. – பெரிய திருவடி என்று போற்றப்பெறும் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுவதே தனி அழகும் கம்பீரமும்தான்! கருடவாகனத்தில் பெருமாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே இல்லை என்பது வைஷ்ணவர்களின் மாபெரும் ...

வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!

Posted: 27 Jul 2017 01:49 AM PDT

[size=12] அதிகம் செய்வது சிறந்தது என்ற கருத்தை மாற்றிக் கொண்டு, குறைவாக செய்வதில் நிறைய பலன் உண்டு என்று நினைத்து நடவுங்கள், வாழ்வில் மகிழ்ச்சி ஆரம்பித்துவிடும். – தேவையில்லாத விடயங்களை அங்குலம் அங்குலமாக யோசித்து, யோசித்து அலட்டிக் கொள்வதால் காலமும் நேரமும் விரயமாகிறதே அல்லாமல் வேறெதுவும் நடப்பதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். – அச்சத்தினால் ஒத்திப் போடும் பழக்கமே உங்கள் பகைவனாகும். அதை நிர்மூலம் செய்வதில்தான் வெற்றி தங்கியுள்ளது. – நமது மனோ நிலையில் பொதிந்துள்ள ஆற்றல்தான் முடிவைத் தீர்மானிக்கப் ...

கோபுரமான குளம்…!

Posted: 27 Jul 2017 01:40 AM PDT

– மாறுதல் – குப்பை கொட்டும் மனிதரைப் பார்த்து கோபப்பட்ட குளம் கோபுரமானது வீட்டு மனையாகி..! – மலர் மன்னன் – ————————- – தவம் – மறுபிறவி இருந்தால் காலணியாக அமைய வேண்டும் என்னை கருவில் சுமந்தவளை ஆயுள் முழுவதும் நான் சுமப்பதற்காக..! – சி.சிவசங்கரன் – ——————————

ஞாபக மறதி

Posted: 27 Jul 2017 01:37 AM PDT

ட்வைட் மார்ரோ என்கிற புகழ்பெற்ற அமெரிக்கத் தொழிலதிபருக்கு நினைவாற்றல் மிகவும் குறைவு. தனது பெயரைக்கூட மறந்துவிடக் கூடிய அளவுக்கு ஞாபக மறதி அவருக்குண்டு. – ஒருநாள் ஏதோ அலுவலாய் வெளியே கிளம்பியவர் பாதாள ரயில் ஒன்றில் ஏறினார். வண்டி புறப்பட்டு விட்டது. கண்டக்டர் வந்தார். "டிக்கட் வாங்கியிருக்கிறீர்களா, காட்டுங்கள்…" என்றார். – மார்ரோவுக்கு டிக்கட் வாங்கினோமா, வாங்க வில்லையா என்ற ஞாபகம்கூட இல்லை. எனினும் கோட்டுப் பை, சட்டைப்பை எல்லாம் தேடு தேடு என்று தேடினார். ஆனால் டிக்கட் அகப்படவில்லை. – கண்டக்டர் ...

பெருமை!

Posted: 27 Jul 2017 01:36 AM PDT

-காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணிபுரிந்து கொண்டிருந்த காலம் அது. – ஒரு நாள் தலை முடியை வெட்டி சீர் செய்வதற்காக கடைவீதிக்குச் சென்றார். – வீதியில் பெரும்பாலும் வெள்ளையர்களின் முடி அலங்கார நிலையங்களே இருந்தன. அவர்கள் யாரும் கருப்பரான காந்திக்கு முடி வெட்ட மறுத்தனர். – காந்தியடிகள் ஒரு கத்திரிக்கோல் வாங்கி, தானே முடியை வெட்டிக் கொண்டார். அவருக்குச் சரியாக முடி வெட்டத் தெரியாததால் தலை அலங்கோலமாகக் காணப்பட்டது. – அதைப் பொருட்படுத்தாமல், காந்தியடிகள் நீதிமன்றப் பணிக்குச் ...

பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?

Posted: 27 Jul 2017 01:29 AM PDT

நாடகத் தந்தை பெர்னார்ட்ஷா இறக்கும் வரையில் முகத்தில் தாடி வைத்திருந்தார். – ஒருசமயம் பத்திரிகை நிருபர் ஒருவருக்கு எதற்காக பெர்னார்ட்ஷா தாடி வைத்துக் கொண்டிருக்கிறார் என்ற சந்தேகம் தோன்றியது. – ஒருநாள், அந்த நிருபர் ஷாவை அணுகி, ""எதற்காக நீங்கள் தாடி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? தாடி வைத்துக் கொண்டிருப்பதால் என்ன லாபம்?" என்று கேட்டார். – அதற்கு பெர்னார்ட்ஷா, ""இளைஞரே, நான் முகச் சவரம் பண்ணிக் கொள்வதற்காகச் செலவிட்டிருக்க வேண்டிய நேரத்தில் நிச்சயமாக ஒரு நாடகமாவது எழுதியிருப்பேன்.. ...

அமுதம்!

Posted: 27 Jul 2017 01:28 AM PDT

- [size=12]பகவான் ராமகிருஷ்ணர், ஒருநாள் சீடர்களோடு உரையாடிக் கொண்டிருந்தபோது ஒரு வினா எழுப்பினார். – "சீடர்களே, நீங்கள் ஒரு ஈயின் உருவத்தைப் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் முன் ஒரு கோப்பையில் அமுதம் இருக்கின்றது. நீங்கள் என்ன செய்வீர்கள்..?' – சுவாமி விவேகானந்தர் எழுந்து, "அவசரப்பட்டு கோப்பையில் விழுந்து உயிரை விட்டுவிடாமல், கோப்பையின் விளிம்பில் அமர்ந்து அமுதத்தைப் பருகுவேன்…' என்றார். – அதற்கு ராமகிருஷ்ணர், "கோப்பையில் இருப்பதோ அமுதம். அதனை உண்பவர்களுக்கு மரணம் இல்லை. அப்படியிருக்க ...

கலாம் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

Posted: 27 Jul 2017 01:13 AM PDT

ராமேஸ்வரம், பேக்கரும்பில் உள்ள கலாம் நினைவு மணி  மண்டபத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.  - முதலில் கலாம் நினைவு மணி மண்டபத்துக்கு முன்புள்ள  தேசியக் கொடியை ஏற்றினார் மோடி. பிறகு முன்னாள்  குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்தில்  ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை  பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். - அடுத்ததாக கலாம் வீணை வாசிப்பது போன்ற சிலையைத்  திறந்துவைத்தார். அவருடன் தமிழக பொறுப்பு ஆளுநர்  வித்யா சாகர் ராவ், முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர்  வெங்கய்ய ...

சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு

Posted: 27 Jul 2017 01:03 AM PDT

தூர்தர்ஷன் லோகோவை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பழைய லோகோவுக்கு பதிலாக, புதிய சின்னத்தை வடிவமைக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. தூர்தர்ஷனின் மேல் இருக்கும் பழையகால நினைவுகளைப் பாதுகாக்கும் வகையிலும், இக்கால இளைஞர்களுடன் டிடிக்கான இணைப்பை ஏற்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. நாடு முழுவதும் 23 சேனல்களை ஒளிபரப்பி வரும் தூர்தர்ஷன், இதற்காக புதிய சின்ன வடிவமைப்புப் போட்டியை அறிவித்துள்ளது. இதில் வெற்றி பெறுவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இதுகுறித்துப் ...

இந்தியா 2017

Posted: 26 Jul 2017 10:25 PM PDT

அரசியல் வாதிகள் அயல்நாட்டுகாரர்கள் ஜனநாயக மக்கள் அடிமைகள் சுதந்திர இந்தியா!! மக்களிடம் கேட்டு எதுவும் நடப்பதில்லை கல்வி விலைஏறியது! வேலை இல்லை! சாலை வசதி இல்லை! குடிநீர் இல்லை! விவசாயம் இல்லை! மருத்துவம் தனியார் வசம்! பூமி வெப்பமயம்! பாலைவனம் விரிந்துவருகிறது! வரி திரும்ப வராது!! ஊழல் ஊரில் இல்லை அயல் நாடுக்கு கடத்தப்பட்டது!! பிச்சைகாரன் உண்டு! வெள்ளைகரனிடம் புரட்சி வெள்ளைவேட்டிமுன் புரட்சி இந்தியா 2017 shivasakthi


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™