Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


டெங்குவை ஒழிப்பது சாத்தியமில்லை: அலட்சியம் காட்டினால் ஆபத்து

Posted: 25 Jul 2017 08:25 AM PDT

தமிழகத்தில், 'டெங்கு' பாதிப்பு வேகமாக பரவி வரும் சூழலில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அலட்சியம் காட்டினால், உயிர் பலிகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

20 பேர் இறப்பு :
நாடு முழுவதும், மூன்று மாதங்களாக, டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அறிவிப்பின்படி, அதிகபட்சமாக கேரளாவில், 11 ஆயிரத்து, 581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 20 பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்ததாக, தமிழகத்தில், 4,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஒருவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மாதமாக பாதிப்பு ...

முதலில் மின் வெட்டை சரி செய்யுங்க!: வாரியம் மீது மக்கள் பிரதிநிதி குற்றச்சாட்டு

Posted: 25 Jul 2017 08:27 AM PDT

சென்னை: ''முதலில் மின் பிரச்னையைச் சரி செய்யுங்கள்; புகார் கொடுத்தால், தீர்வே கிடைப்பதில்லை,'' என, குடிமக்கள் பாதுகாவலர் அமைப்பின் தலைவர், ரவிச்சந்திரன் கூறினார்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் கட்டணம் நிர்ணயம் குறித்து, சென்னை, தி.நகரில் உள்ள, வாணி மகாலில், பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. ஆணைய தலைவர், அக் ஷய குமார், உறுப்பினர்கள், ராஜகோபால், பிரபாகர் ராவ் ஆகியோர் கருத்து கேட்டனர்.
இதில் பங்கேற்றவர்கள் பேசிய விபரம்: வெளிப்படை மற்றும் லஞ்சத்திற்கு எதிரான இயக்க தலைவர், துாயமூர்த்தி: மின் வாரியத்தில் நடந்த, ஒரு ...

'சிறை தண்டனையை ரத்து செய்யுங்க!': ஜனாதிபதியிடம் கர்ணன் கோரிக்கை

Posted: 25 Jul 2017 08:45 AM PDT

கோல்கட்டா: கோல்கட்டா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட, ஆறு மாத சிறை தண்டனையை ரத்து செய்யும்படி, ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள, ராம்நாத் கோவிந்திடம் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த கர்ணன், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்ட அவருக்கு, சுப்ரீம் கோர்ட்டின், ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஆறு மாத சிறை தண்டனை விதித்தது.
சிறை
தலைமறைவாக இருந்த கர்ணன், ஜூன், 20ல், கோவையில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர், கோல்கட்டாவில் உள்ள, அமைதிக்கான ...

புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ராம்நாத் கோவிந்த் நெகிழ்ச்சி! குடிசையிலிருந்து மாளிகைக்கு வந்ததாக உருக்கம்

Posted: 25 Jul 2017 09:18 AM PDT

புதுடில்லி: ''வேற்றுமையில் ஒற்றுமை தான் நம் பலம்; ஏழை, எளிய மக்கள் முன்னேற்றம் காண்பதற்கு, அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் தரப்பட வேண்டும். சாதாரண மண் குடிசையில் வசித்த நான், இப்போது, நம் நாட்டின் முதல் குடிமகனாகி விட்டேன்; இது தான், நம் நாட்டின் சிறப்பு,'' என, ஜனாதிபதியாக பதவியேற்ற பின், தன் முதல் உரையில், ராம்நாத் கோவிந்த், நெகிழ்ச்சியுடன் பேசினார்.

நாட்டின், 14வது ஜனாதிபதியாக, ராம்நாத் கோவிந்த், 71, நேற்று பதவியேற்றார். அவருக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பார்லி., மைய மண்டபத்தில் நடந்த கோலாகல விழாவில், ...

லாலு மகன் பதவி விலக நிதிஷ் கெடு! பீஹார் அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு

Posted: 25 Jul 2017 09:49 AM PDT

பாட்னா: பீஹாரில், ஊழல் வழக்கில் சிக்கியுள்ள, துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான, தேஜஸ்வி, வரும், 28க்குள், பதவியை ராஜினாமா செய்யும்படி, முதல்வர் நிதிஷ் குமார் கெடு விதித்துள்ளார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக, முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான, லாலு பிரசாத் யாதவின் மகன், தேஜஸ்வி யாதவ், 28, உள்ளார்.
கடந்த, 2004 - 09ல், மத்தியில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி நடந்த போது, லாலு பிரசாத் யாதவ், ரயில்வே ...

மருத்துவத்திற்கான 'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு முழு விலக்கு கிடைக்கும்?

Posted: 25 Jul 2017 10:17 AM PDT

மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான 'நீட்'தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு கோரி எப்போதும் இல்லாத வகையில் மாநிலத்தில் இருந்து மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்திய நிலையில் தி.மு.க., - எம்.பி.,க்களும் மத்திய அமைச்சர்களை சந்தித்துநெருக்கடி கொடுத்துள்ளனர்.இதனால் 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு புதிய ஜனாதிபதி விரைவில் ஒப்புதல் அளிப்பார் என, கூறப்படுகிறது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் மாணவர் ...

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வினியோகம்; பெரம்பலூர் டாப்; சென்னை மந்தம்

Posted: 25 Jul 2017 10:23 AM PDT

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பெற, கிராம மக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், சென்னை மக்கள் தொடர்ந்து அலட்சியமாக உள்ளனர். தமிழக அரசு, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்கும் திட்டத்தை, ஏப்ரல், 1ல் துவக்கியது. இதற்காக, ரேஷன் கார்டுதாரர் களிடம் இருந்து, 'ஆதார்' விபரங்கள் பெறப்பட்டன. அதில், பலரின் பெயர், பிழையாக இருந்தது; புகைப்படமும் தெளிவாக இல்லாததால், ஸ்மார்ட் கார்டு அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

தர தாமதமாகிறது.
பிழைகளை சரி செய்து தரும்படி, உணவு வழங்கல் துறையினர், ரேஷன்
கார்டுதாரர்களிடம் வலியுறுத்தினர். அதற்கு, கிராம ...

'ஓபி' அதிகாரிகள் 381 பேர் மீது நடவடிக்கை பாய்ந்தது

Posted: 25 Jul 2017 10:25 AM PDT

புதுடில்லி: சரியாகவும், திறம்படவும் வேலை செய்யாத, 24 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 381 மத்திய அரசு உயரதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், மத்திய அரசு பணிகளுக்கான மனிதவள மேம்பாட்டில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, மத்திய அரசின் பணியாளர் நலத்துறை தாக்கல் செய்துள்ளது.இது குறித்து, மத்திய அரசின் பணியாளர் நலத்துறை உயரதிகாரிகள் கூறியதாவது:
சிறப்பாக செயல்பட்டால்
சரியாக வேலை செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, சிறப்பாக ...

'நீட்' தேர்வில் இருந்து விலக்கு நிரந்தர தீர்வு தேவை: ஸ்டாலின்

Posted: 25 Jul 2017 10:37 AM PDT

சென்னை 'நீட் தேர்வு விலக்கில், தற்காலிக தீர்வு தேடாமல், நிரந்தர தீர்வு காண வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:
தமிழக அமைச்சர்கள், தங்கள் எஜமானர்களிடம் மண்டியிட்டு, 'நீட்' தேர்வில் இருந்து, தற்காலிக தீர்வு காணும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இது, தமிழக சட்டசபையில், நிரந்தரத் தீர்வு காண நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கு எதிரானது.
'இரண்டு,மூன்று ஆண்டுகளுக்கு விதிவிலக்கு பெறலாம்; நிரந்தரமான விலக்கு கேட்கக் கூடாது' என, பா.ஜ., மாநில தலைவர், தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்; அது, ...

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா கைது

Posted: 25 Jul 2017 12:07 PM PDT

புதுடில்லி: காஷ்மீரில் கலவரத்தை தூண்ட, பாக்., பயங்கரவாத அமைப்புகளிடம் பணம் பெற்றது தொடர்பாக, காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா கைது செய்யப்பட்டார்.
கலவரம்:
ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்ட போது காஷ்மீர் முழுவதும் கலவரம் வெடித்தது. கலவரத்தை தூண்ட பாக்., பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் பெருந்தொகை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ.,(தேசிய புலனாய்வு ...

இன்றைய(ஜூலை- 26) பெட்ரோல், டீசல் விலை?

Posted: 25 Jul 2017 01:05 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.06காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.94 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை -26) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 1 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.67.06 காசுகளும், டீசல் விலை மாற்றமின்றி, லிட்டருக்கு ரூ.57.94காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை- 26) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

ஒய்வு பெறுகிறார் கேஹர்: அடுத்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பெயர் பரிந்துரை

Posted: 25 Jul 2017 01:45 PM PDT

புதுடில்லி:சுப்ரீம் கோர்ட் அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பெயரை தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள கே.எஸ்.கேஹர் பதவி காலம் ஆகஸ்ட் 27-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை நீதிபதியை நியமனம் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இது தொடர்பாக யாரை நியமிக்கலாம் என கேஹரின் ஆலோசனை கேட்கப்பட்டது. அதற்கு அவர் தீபக் மிஸ்ரா பெயரை பரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 63 வயதாகும் தீபக் மிஸ்ரா , அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ...

எல்லை தாண்டியதை இந்தியா ஒப்புக் கொண்டதா?

Posted: 25 Jul 2017 02:52 PM PDT

புதுடில்லி: ‛சீனாவின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததை இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது' என சீன வெளியுறவு அமைச்சர், வாங்க் யீ கூறியுள்ளார்.
இந்தியா - சீனா எல்லையில் உள்ள டோகோலாம் பகுதியை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சியை, நம் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், எல்லையில் பதற்றமான சூழ்நிலை
நிலவுகிறது. இதுவரை இந்தப் பிரச்னை குறித்து எந்தக் கருத்தையும் கூறாமல் மவுனம் காத்துவந்த, சீன வெளியுறவு அமைச்சர், வாங்க் யீ, நேற்று கூறியதாவது: இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழையவில்லை என, இந்தியா கூறியுள்ளது. அதன்படி பார்த்தால், இந்தியா ...

'ரூ.1,500 கோடியை செலுத்துங்க!': சுப்ரதா ராய்க்கு கோர்ட் உத்தரவு

Posted: 25 Jul 2017 04:19 PM PDT

புதுடில்லி: முதலீட்டாளர்களிடம் வாங்கிய, 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ரூபாயை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக, சஹாரா குழும நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய், 2014ல், கைது செய்யப்பட்டார்.

முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பிக் கொடுப்பதாக, சுப்ரதா ராய் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து, அந்த பணத்தை திரட்டுவதற்காக, அவருக்கு சுப்ரீம் கோர்ட், 'பரோல்' வழங்கியது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™