Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


லோக்சபாவில் அமளியில் ஈடுபட்ட காங்., - எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்! காகிதங்களை கிழித்து சபாநாயகர் மீது வீசியதால் அதிரடி

Posted: 24 Jul 2017 08:56 AM PDT

புதுடில்லி: பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைகள் நடப்பது தொடர்பாக லோக்சபாவில் நேற்று விவாதம் நடந்தபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆறு பேர், காகிதங்களை கிழித்து, சபாநாயகர் மீது வீசினர். இதனால், அவர்களை, ஐந்து நாட்களுக்கு, 'சஸ்பெண்ட்' செய்து, சபாநாயகர், சுமித்ரா மகாஜன் அதிரடியாக உத்தரவிட்டார்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்துக்குப் பின், பசு பாதுகாப்பு என்ற பெயரில், வன்முறைகள் நடப்பது குறித்து, காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தலைவர், மல்லிகார்ஜுன கார்கே பிரச்னை ...

துணை ஜனாதிபதி தேர்தல்: தினகரனின் அமைதியால் குழப்பம்

Posted: 24 Jul 2017 09:16 AM PDT

துணை ஜனாதிபதி தேர்தலில், அ.தி.மு.க.,வில், தினகரனின் அணியைச் சேர்ந்த லோக்சபா, ராஜ்ய சபா, எம்.பி.,க்களின் ஆதரவு யாருக்கு என்பதில், குழப்பம் உருவாகி உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, முதல்வர் பழனிசாமியிடம், பிரதமர் மோடியும்; முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திடம், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவும் பேசினர். தினகரனிடம் ஆதரவு கேட்கவில்லை.
காத்திருந்தது பிடிக்கவில்லை.
நெருக்கடி :
'யாரை ஆதரிப்போம் என்பதை பொதுச்செயலர், சசிகலா முடிவு செய்வார்' என, தினகரன் அறிவித்திருந்தார். பின், தம்பிதுரை மூலமாக, பா.ஜ., வேட்பாளரை ...

புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்பு!பதவி பிரமாணம் செய்கிறார் தலைமை நீதிபதி

Posted: 24 Jul 2017 10:12 AM PDT

புதுடில்லி: நாட்டின் புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார். பார்லிமென்ட் மைய மண்டபத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்திற்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் முதல் குடிமகன் பதவியை ராம்நாத் கோவிந்த் அலங்கரிப்பார்.

மீரா குமார்ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில், ...

சசிக்கு ஆம்புலன்ஸ் மூலம் வெளி உணவு: சிறை ஏட்டுவின் 'சாம்ராஜ்யம்'

Posted: 24 Jul 2017 10:26 AM PDT

பெங்களூரு: 'அ.தி.மு.க.,வின் சசிகலாவுக்கு தேவையான பொருட்கள், சிறை வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஏட்டு ஒருவரின் உதவியுடன், ஆம்புலன்ஸ் மூலமாக சிறைக்குள் செல்வது வாடிக்கையாக உள்ளது' என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு சிறை உயர்அதிகாரிகளுக்கு, சிறை அதிகாரி மற்றும் ஊழியர்கள் சிலர் எழுதிய மொட்டை கடிதம் ஒன்று நேற்று வெளியானது.
அதன் விபரம்:
பெங்களூரு சிறையின், புற வாசல் பாதுகாப்புக்கு, கர்நாடக தொழில் பாதுகாப்பு பிரிவு ஏட்டு கஜராஜ மாகனுாரு என்பவரை, அரசு நியமித்திருந்தது. சிறையிலுள்ள கைதிகளை சந்திக்க வரும் உறவினர்களை, சோதனை ...

ஜெ.,க்கு நினைவிடம் கட்டலாமா? அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

Posted: 24 Jul 2017 10:47 AM PDT

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை அகற்றவும், மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்ட தடை விதிக்கக்கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மண்டல விதிகளுக்கு முரணானது
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், எஸ்.துரைசாமி என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. இது, சுற்றுச்சூழல்
பாதுகாப்பு சட்டம் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல ...

அமைச்சர், அதிகாரிகளுக்கு எதிரான 'பைல்' மாயம்

Posted: 24 Jul 2017 10:53 AM PDT

சென்னை: தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்பனையை அனுமதிக்க, லஞ்சம் பெற்றவர்கள் தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு, வருமானவரித் துறை அனுப்பிய, முக்கிய ஆவணங்கள் மாயமானது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், தடையை மீறி, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை நடக்கிறது. போலீஸ் உயர் அதிகாரிகள், லஞ்சம் பெற்று, அவற்றை விற்க அனுமதித்து உள்ளதாக, புகார் எழுந்தது; ஆனால், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
வரி ஏய்ப்பு
இந்நிலையில், குட்கா, பான் மசாலா விற்பனையில் ஈடுபட்டுள்ளோர், வரி ஏய்ப்பு செய்த தகவல் அடிப்படையில், ...

அதே மனு; அதே கோரிக்கை; அதே பேட்டி! ‛நீட்' தேர்வு விவகாரத்தில் டில்லியில் கும்மியடித்த அ.தி.மு.க.,

Posted: 24 Jul 2017 11:01 AM PDT

மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசின் நிலையை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், சமீபத்தில் ராஜ்யசபாவில் தெளிவுபடுத்தி விட்டார்.இருப்பினும், தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர் ஆகிய ஐந்து பேரும், இந்த விவகாரத்துக்காக, ஏற்கனவே டில்லி வந்தனர்.

ராஜ்நாத்துடன் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடி உட்பட மத்திய அமைச்சர்களை சந்தித்து, நீட் தேர்வு குறித்து கோரிக்கை வைத்தனர். எந்த உறுதிமொழியையும் பெறாமல் திரும்பிச்சென்ற, அதே ஐந்து அமைச்சர்களும், நேற்று, மீண்டும் ...

'நீட்' மசோதா: ஜனாதிபதி ஒப்புதல் கோரி வழக்கு

Posted: 24 Jul 2017 11:09 AM PDT

சென்னை, தமிழகத்திற்கு, 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு கோரிய மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெறக் கோரிய மனு மீதான விசாரணையை, வரும், 28க்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

'பொது பள்ளிகளுக்கான மேடை' அமைப்பின் பொதுச் செயலர், பிரின்ஸ் கஜேந்திர பாபு தாக்கல் செய்த மனு: மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவு தேர்வில் விலக்கு கோரி, தமிழக அரசு சட்டசபையில் மசோதா நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது.ஐந்து மாதங்கள் ஆகியும், இந்த மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பவில்லை.
தமிழக ...

ஏ.டி.எம்., ரசீதுகளை எடுத்து பணம் திருட்டு 'சைபர் க்ரைம்' போலீசார் எச்சரிக்கை

Posted: 24 Jul 2017 11:41 AM PDT

கோவை, ஏ.டி.எம்., ரசீதுகளை எடுத்து, பணம் திருடும் கும்பலைச் சேர்ந்த நபர் சிக்கியுள்ளதால், 'சைபர் க்ரைம்' போலீசார், வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளனர்.

வங்கி அதிகாரிகள் போல, போனில் பேசி, வாடிக்கையாளரின், ஏ.டி.எம்., விபரங்களை பெற்று, அவர்களின் கணக்கிலிருந்து பணம் திருடுவது, 'ஆன்லைன்' மூலம் பொருட்களை வாங்குவது போன்ற மோசடிகள் அதிகளவு நடந்து வருகின்றன. இதுபோன்ற மோசடிகளுக்கு, சில தனியார் வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருக்கும் தகவல்கள் வெளிவந்தன.
நுாதன முறையில்
இதற்கிடையே, சேலத்தில், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் ...

இன்றைய(ஜூலை- 25) பெட்ரோல், டீசல் விலை?

Posted: 24 Jul 2017 12:10 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.05காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.94 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை -25) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 4 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.67.05காசுகளும், டீசல் லிட்டருக்கு 1 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.57.94காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை- 25) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

'பாஸ்போர்ட் பெற பான் கார்டு, ஆதார் போதும்'

Posted: 24 Jul 2017 01:12 PM PDT

புதுடில்லி: ''பாஸ்போர்ட் பெறுவதற்கு, பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை; ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்,'' என, வெளியுறவுத் துறை இணையமைச்சர், வி.கே.சிங் தெரிவித்தார்.
பார்லிமென்டில், இது குறித்து, மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, வி.கே.சிங் கூறியதாவது: பாஸ்போர்ட் பெறும் முறையை எளிமையாக்கும் வகையில், பாஸ்போர்ட் சட்டத்தில், சமீபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. ...

பிரிவினைவாத தலைவர்கள் கைது: காஷ்மீரில் இன்று ‛‛பந்த்'

Posted: 24 Jul 2017 01:47 PM PDT

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், பிரிவினைவாத தலைவன், சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷா உட்பட, ஏழு பேரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு, கைது செய்துள்ளது.இதனை கண்டித்து இன்று காஷ்மீரில் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில், , பிரிவினைவாத தலைவன் சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷாவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்படுவது குறித்தும், என்.ஐ.ஏ., தீவிர ...

குறைத்து மதிப்பிடாதீர்கள்! : சீன ராணுவம் எச்சரிக்கை

Posted: 24 Jul 2017 02:44 PM PDT

புதுடில்லி: இந்தியா - சீனா எல்லையில், பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், 'சீன ராணுவம் குறித்து வீண் கற்பனையில், குறைத்து மதிப்பிட வேண்டாம்; எல்லையை காக்க, எதற்கும் தயாராக உள்ளோம்' என, சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான, சிக்கிம் எல்லை - சீனா - பூட்டான் இடையேயான, டோகோலாம் பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில், சாலை பணிகளில் சீனா ஈடுபட்டது. இதை, நம் ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனால், ஒரு மாதத்துக்கும் மேலாக, எல்லையில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது.பேச்சு மூலம், பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™