Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரயில்வேக்கு மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம்... கண்டிப்பு!

Posted: 23 Jul 2017 09:21 AM PDT

புதுடில்லி:'ரயில்களில், பயணியருக்கு வழங் கப்படும் போர்வைகளை துவைப்பதிலும், பரா மரிப்பதிலும், விதிகள் பின்பற்றப்பட வில்லை' என, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், ரயில்வே அமைச்ச கத்தை கடுமையாக சாடியுள்ளது.

பார்லிமென்டில், சி.ஏ.ஜி., தாக்கல் செய்த அறிக்கை விபரம்:ரயில்களில், பயணியருக்கு வழங்கப்படும் போர் வைகள் தவிர்த்த, பிற துணிகளை, ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பின்னும், நன்றாக துவைக்க வேண்டும் என, ரயில்வே வாரியம், விதி வகுத் துள்ளது. போர்வைகள், இரண்டு மாதத் திற்கு ஒரு முறை, நன்றாக துவைக்கப்பட ...

உள்நாட்டு உதிரிபாகங்கள்: ராணுவம் அதிரடி முடிவு

Posted: 23 Jul 2017 09:24 AM PDT

புதுடில்லி:கால தாமதத்தை தவிர்க்கவும், படையை வலுப்படுத்தவும், ராணுவ தளவாடங் களுக்கான முக்கிய உதிரிபாகங்களை உள் நாட்டிலேயே உற்பத்தி செய்வதில், ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.

நாட்டின் பாதுகாப்பு பணியில் உள்ள, 13 லட்சம் ராணுவ வீரர்களுக்கு தேவையான ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை விட, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு, ராணுவம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும்,சராசரியாக, ரூ10 ஆயிரம் கோடி மதிப்புள்ள,ராணுவ தளவாடங்கள், ஆயுதங் களுக்கான உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்படு ...

'மதரீதியில் பேசாதீங்க!' தேர்தல் கமிஷன் வேண்டுகோள்

Posted: 23 Jul 2017 09:27 AM PDT

புதுடில்லி:இடைத் தேர்தல் நடக்கையில், சில அரசியல்வாதிகள், விதிகளை புறந்தள்ளி, மத விவகாரங்களை பேசுவதாக, குற்றஞ்சாட்டி யுள்ள தேர்தல் கமிஷன், இது தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதி உள்ளது.

விதிமீறல்
அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு, தேர்தல் கமிஷன், ஜூன், 29ல், எழுதியுள்ள கடி தம்:இடைத் தேர்தல்கள் நடத்தப்படும் சமயத் தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னும், சில அரசியல் தலைவர்கள், விதி களை மதிக்காமல், மத விஷயங்களை, பேசுகின்றனர். இதற்கான உபாயமாக, தேர்தல் நடக்காத பகுதிக ளில், மத விவகாரங்களை,அரசியல் ...

சொத்து குவிப்பு: நேருவுக்கு சிக்கல் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 23 Jul 2017 09:38 AM PDT

புதுடில்லி:சொத்துக் குவிப்பு வழக்கில், தி.மு.க.,வின், முன்னாள் தமிழக அமைச்சர், நேரு மற்றும் அவர் மனைவியை விடுவித்து, சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில், 2006 - 2011ல், தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவர், நேரு; தற்போது, திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
அதிகரிப்பு
இவர், அமைச்சராக பதவி வகித்தபோது, தன் பெயரிலும், மனைவி சாந்தா, மகன் அருண் பெயரிலும் வருவாய்க்கு அதிகமாக சொத்துக் களை வாங்கி குவித்ததாக, 2011ல் வழக்கு தொடரப்பட்டது.கடந்த, 2006ல், இவர்கள் பெய ...

தமிழகத்தில் பத்திரப்பதிவு முறையில் அதிரடி...மாற்றம்!

Posted: 23 Jul 2017 10:45 AM PDT

தமிழகத்தில், பத்திரப்பதிவு முறையில் அதிரடி மாற்றம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, எந்த ஊர் நிலத்தையும், எந்த ஊரின் சார் - பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியும். இதனால், சொத்து பதிவுக்காக பொது மக்கள் அங்கும், இங்குமாக அலைய வேண்டிய தில்லை; கெடுபிடிகளும் இனி இருக்காது. அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களும், ஆன்லைன் முறைக்கு மாற்றப்படுவதால், இது சாத்தியமாகிறது.

தமிழகத்தில், சொத்து பரிமாற்றம் தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்க ளின் எல்லைகள் பிரிக்கப்பட்டு, எந்தெந்த கிராமங்களில் ...

பார்லி.,யை முடக்காதீங்க! பிரணாப் வலியுறுத்தல்

Posted: 23 Jul 2017 10:48 AM PDT

புதுடில்லி:''பார்லிமென்ட் என்பது விவாதங்கள், ஆலோசனைகள், மறுப்புகள் அடங்கியதாக இருக்க வேண்டும்; பார்லி.,யை முடக்கும் செயல், ஆளும் கட்சியை மட்டுமல்ல, எதிர்க் கட்சியையும் பாதிக்கும்,'' என, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும், பிரணாப் முகர்ஜிவலியுறுத்தினார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 81, பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, பார்லிமென்ட் சார்பில், அவருக்கு பிரிவுபசார விழா நேற்று நடந்தது.பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடந்த விழாவுக்கு வந்த பிரணாப் முகர்ஜியை, துணை ஜனாதிபதி, ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர், சுமித்ரா ...

சலுகைகள் ரத்தானதால் சசிகலா கவலை உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு?

Posted: 23 Jul 2017 11:04 AM PDT

பெங்களூரு:பெங்களூரு சிறையில், அ.தி.மு.க., சசிகலாவுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர், கவலையடைந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறையில் சலுகைககள் பெற, பணம் கைமாறியது உண்மைதானா என்பதை அறிய, சசிகலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அம்பலம்
சொத்து குவிப்பு வழக்கில், 4ஆண்டு தண்டனை பெற்ற, அ.தி.மு.க., சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில், அவருக்கு சலுகை அளிக்க பட்டதை, டி.ஐ.ஜி., ரூபா, அம்பலப்படுத்தினார். இதை ...

பதிலளிக்க நானே போதும்: கமல்

Posted: 23 Jul 2017 11:09 AM PDT

சென்னை:அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் என நடிகர் கமல் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமலஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு எதிராக அமைச்சர்கள் அன்பழகன், ஜெயக்குமார், சண்முகம் மற்றும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பா.ஜ., தலைவர்களும் கமல்ஹாசனை விமர்சித்து உள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கண்டன போஸ்டர்களை ரசிகர்கள் ஒட்டி வருகின்றனர். மதுரை நகரிலும் கமல் ரசிகர் மன்ற சுவரொட்டிகள் ஒட்பப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் ...

கணக்கில் காட்டாத ரூ. 72 ஆயிரம் கோடி மூன்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டது

Posted: 23 Jul 2017 11:14 AM PDT

புதுடில்லி:'கடந்த மூன்று ஆண்டுகளில் வரு மான வரித்துறை நடத்திய பல்வேறு ஆய்வுகள், சோதனைகள் மூலம் கணக்கில் காட்டாத 71 ஆயிரத்து, 941 கோடி ரூபாய் சொத்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் செல் லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு கடந் தாண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. 'செல்லா ததாக அறிவிக்கப்பட்ட, பழைய 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.'மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை யின்படி செல்லாத ரூபாய் ...

'சிரியாவை விட இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் அதிகம்'

Posted: 23 Jul 2017 12:11 PM PDT

புதுடில்லி: கடந்தாண்டு, உலகெங்கும் நடந்துள்ள, பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சிரியாவை விட, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் அதிகம் நடந்துள்ளது' என, குறிப்பிட்டுள்ளது.
கடந்தாண்டில், உலகெங்கும் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், அதை தடுக்க, அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது; அதில் கூறியுள்ளதாவது:
கடந்த, 2016ல், உலகெங்கும் பயங்கரவாத தாக்குதல், முந்தைய ஆண்டைவிட, 9 சதவீதம் குறைந்துள்ளது. ...

ஒரே 'நீட்' வினாத்தாள் தான்! : மத்திய அமைச்சர் உறுதி

Posted: 23 Jul 2017 01:14 PM PDT

கோல்கட்டா: ''மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும், 'நீட்' தேர்வு வினாத்தாள், அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக தயாரிக்கப்படும்,'' என, பா.ஜ.,வை சேர்ந்தவரும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான, பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வான, நீட், நாடு முழுவதும் சமீபத்தில் நடந்தது; ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், மராத்தி உட்பட, 10 மொழிகளில் தேர்வு நடந்தது.
இதில், ஹிந்தி, ஆங்கில வினாத்தாளிலிருந்து, மற்ற மொழி வினாத்தாள் மாறுபட்டு இருந்ததாக புகார் எழுந்தது. வங்க மொழியில் ...

இன்றைய(ஜூலை- 24) பெட்ரோல், டீசல் விலை?

Posted: 23 Jul 2017 02:05 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.01 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.93 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை -24) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 13 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.67.01 காசுகளும், டீசல் லிட்டருக்கு 1 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.57.93காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை- 24) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

போலியை கண்டுபிடிக்க ஆர்.பி.ஐ., புது திட்டம்

Posted: 23 Jul 2017 02:59 PM PDT

புதுடில்லி: செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளில், போலிகள் உள்ளனவா என்பதை கண்டுபிடிக்கும் கருவியை, வாடகைக்கு வாங்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
'டிபாசிட்'புழக்கத்தில் இருந்த, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென,
மத்திய அரசு கடந்தாண்டு அறிவித்தது. பொதுமக்கள், செய்த செல்லாத நோட்டுகள் அனைத்தும், ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப் பட்டன.செல்லாத ரூபாய் நோட்டு தொடர்பாக, பார்லிமென்ட் குழு கூட்டத்தில், சமீபத்தில் ஆஜரான, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், 'செல்லாத ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து எண்ணி வருகிறோம்' ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™