Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆளும் கட்சியில் ஆடு புலி ஆட்டம் துவக்கம் வேடிக்கை பார்க்க நிர்வாகிகள் முடிவு

Posted: 22 Jul 2017 06:25 AM PDT

சென்னை:''மாவட்ட தலைநகரங்களில், 27ம் தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத் தில், கட்சியின் அனைத்து அணியினரும் பங்கேற்க வேண்டும். மாணவ, மாணவியரை, அதிகம் பங்கேற்க வைக்க வேண்டும்,'' என, கட்சியினருக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கடிதம் எழுதி உள்ளார்.

அவரது கடிதம்:
குதிரை ஓடிய பின், லாயத்தை பூட்டுவது போல, 'நீட்' தேர்வால், தமிழக மாணவர்கள், கடும் பாதிப்புக்குள்ளாகி, எதிர்காலத்தை இழந்த நிலையில், குதிரை பேர ஆட்சியின் அமைச்சர் கள், டில்லி எஜமானர்களிடம், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி, மனு கொடுத்துள்ளனர். இந்த இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தவும், ...

முதல்வர் அறிவித்த ரூ.28 ஆயிரம் கோடி திட்டங்கள்... சாத்தியமா?

Posted: 22 Jul 2017 07:07 AM PDT

அனைத்து தரப்பு மக்களையும் கவர, ஜெ., பாணியில், முதல்வர் பழனிசாமி, 28 ஆயிரத்து, 314 கோடி ரூபாய்க்கு, அறிவிப்புகளை அள்ளி வீசி உள்ளார். தமிழக அரசு, கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடும் சூழலில், அவரது அதிரடி நடவடிக்கை, எதிர்ப்பாளர்களை திகைப்பில் ஆழ்த்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை, அ.தி.மு.க.,வின் அச்சாணியாக இருந்தார். அவர் கண் அசைவுக்கு, கட்சியினர் அனைவரும் கட்டுப்பட்டனர். சட்டசபையில், மானியக் கோரிக்கையின் போது, அனைத்து துறைகளின் முக்கிய அறிவிப்புகளையும், 110 விதியின் கீழ், அவரே அறிவிப்பார்.அவர் அறிவிப்புகளை வெளியிட்டதும், கூட்டணி கட்சி, ...

1.62 லட்சம் போலி நிறுவனங்களின் உரிமங்கள்... ரத்து!

Posted: 22 Jul 2017 07:48 AM PDT

புதுடில்லி:கறுப்புப்பணம் மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, இதற்காக உருவாக் கப்பட்ட, 1.62 லட்சம் போலி நிறுவனங்களை கண்டறிந்து அவற்றின் உரிமங்களை ரத்து செய்துள்ளது. மேலும், போலி நிறுவனங்கள் நடத்தியவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.

தொழில் ஏதும் செய்யாமல் போலியாக, கறுப்புப் பணத்தை முதலீடு செய்யவும்,சட்ட விரோத பணப் பரிவர்த்தனையின் மூலம் வெளிநாடுக ளில் இருந்து பணத்தை கொண்டு வரவும், போலியான நிறுவனங்கள் பல துவக்கப்பட்டு செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ...

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு... எச்சரிக்கை!

Posted: 22 Jul 2017 09:58 AM PDT

ஜம்மு:''ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், தேவையில்லாமல் தலையிடாமல், உங்கள் வேலை என்னவோ, அதை மட்டும் பாருங்கள்,'' என, அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முதல்வருமான, மெஹபூபா முப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, அமெரிக்கா, அவ்வப்போது முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறது. பாகிஸ்தானில் செயல்படும், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு தலைவன் சையது சலாவுதீனை, 'சர்வதேச பயங்கரவாதி' என, அமெரிக்கா ஜூனில் அறிவித்தது.அப்போது, இந்திய நிர்வாகத்தில் உள்ள, ஜம்மு - காஷ்மீரில், ஹிஸ்புல் ...

எம்.எல்.ஏ.,க்களை தக்கவைக்க சம்பளத்தை உயர்த்திய பழனிசாமி

Posted: 22 Jul 2017 10:43 AM PDT

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, அனைத்து, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறுவதற்காக, அவர்களின் மாத சம்பளத்தை, முதல்வர் பழனிசாமி உயர்த்தி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், முதல்வராக பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். அவர் அப்பதவியில் தொடர்வதை, சசிகலா விரும்பவில்லை. அவர் முதல்வராக விரும்பி, பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார்.அவர், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார். எனினும், 123 எம்.எல்.ஏ.,க்களை தக்க வைத்துக் கொண்ட சசிகலா, முதல்வராக முயற்சித்தார். சொத்து குவிப்பு வழக்கில், அவரது சிறை தண்டனை உறுதியானதால், முதல்வர் வாய்ப்பு, ...

தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு:அலட்சியம் காட்டினால் ஆபத்து

Posted: 22 Jul 2017 10:58 AM PDT

தமிழகத்தில், டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வரும் சூழலில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. அலட்சியம் காட்டினால், உயிர் பலிகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

நாடு முழுவதும், மூன்று மாதங்களாக, டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அறிவிப்பின்படி, அதிகபட்சமாக கேரளாவில், 11 ஆயிரத்து, 581 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்; 20 பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்ததாக, தமிழகத்தில், 4,654 பாதிக்கப் பட்டு உள்ளனர்; ஒருவர் இறந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.ஆனால், ஒரு மாதமாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தை ...

மனித சங்கிலியில் மாணவர்களை பங்கேற்க வையுங்கள்: ஸ்டாலின்

Posted: 22 Jul 2017 11:10 AM PDT

சென்னை:''மாவட்ட தலைநகரங்களில், 27ம் தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத் தில், கட்சியின் அனைத்து அணியினரும் பங்கேற்க வேண்டும். மாணவ, மாணவியரை, அதிகம் பங்கேற்க வைக்க வேண்டும்,'' என, கட்சியினருக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கடிதம் எழுதி உள்ளார்.

அவரது கடிதம்:
குதிரை ஓடிய பின், லாயத்தை பூட்டுவது போல, 'நீட்' தேர்வால், தமிழக மாணவர்கள், கடும் பாதிப்புக்குள்ளாகி, எதிர்காலத்தை இழந்த நிலையில், குதிரை பேர ஆட்சியின் அமைச்சர்கள், டில்லி எஜமானர்களிடம், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி, மனு கொடுத்துள்ளனர்.இந்த இரட்டை வேடத்தை ...

புது கட்சி துவங்க ஆயத்தம் ரசிகர்களை சந்திக்கிறார் கமல்

Posted: 22 Jul 2017 11:14 AM PDT

நடிகர் கமல்ஹாசன், தமிழக அமைச்சர்களின் சவாலை ஏற்று, புதுக்கட்சி துவங்க ஆயத்தமாகி வருகிறார். இதற்காக, மாவட்ட வாரியாக, நற்பணி மன்ற நிர்வாகிகளை அழைத்து, ஆலோசிக்க உள்ளார்.

சமீபத்தில், விஜய், 'டிவி'யில் ஒளிபரப்பப்படும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் விமர்சனம் தொடர்பாக, நிருபர்களை அழைத்து விளக்கம் தெரிவித்த நடிகர் கமல், அப்போது, தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதையடுத்து, அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி. சண்முகம், ராஜு உட்படஆளுங்கட்சியினர், கமலை கடுமையாக விமர்சித்தனர். 'கமலுக்கு துணிச்சல் இருந்தால், அரசியலுக்கு வந்துவிட்டு, ...

சசி சொகுசுக்காக ஹவாலா மூலம் ரூ.2 கோடி கைமாறியது...அம்பலம்!

Posted: 22 Jul 2017 11:28 AM PDT

பெங்களூரு:அ.தி.மு.க., சசிகலா, பெங்களூரு சிறையில் சொகுசு வசதிகளை அனுபவிக்க, ஹவாலா முறையில், இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக தந்தது அம்பலமாகி உள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கூடுதல் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டதை, டி.ஐ.ஜி., ரூபா, மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, கர்நாடகா தலைநகர் பெங்களூரில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தாலும், தனி அறை, பார்வையாளர்களை சந்திக்க வரவேற்பு அறை, பிடித்த ...

இன்றைய(ஜூலை- 23) பெட்ரோல், டீசல் விலை?

Posted: 22 Jul 2017 11:47 AM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.88 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.92 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை -23) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 11 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.66.88 காசுகளும், டீசல் லிட்டருக்கு 2 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.57.92 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை- 23) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

ரயில் 'டிக்கெட்' முன்பதிவு இரு நாட்கள் நிறுத்திவைப்பு

Posted: 22 Jul 2017 12:49 PM PDT

இணையதளத்தில் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்படுவதால் இன்றும், நாளையும், 'டிக்கெட்' முன்பதிவு மற்றும் ரத்து செய்யும் வசதி நிறுத்தி வைக்கப்படுவதாக, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை நடத்தி வருகிறது. இதன்மூலம், ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் பயணியர் அழைத்து செல்லப்படுகின்றனர்.
ஐ.ஆர்.சி.டி.சி.,யின் www.irctc.co.in எனும் இணையதளத்தில், ஆன்லைன் மூலம், 'டிக்கெட்' ...

ஆந்திராவில் உணவின்றி 46 பசுக்கள் பலி

Posted: 22 Jul 2017 01:40 PM PDT

காக்கிநாடா: ஆந்திராவில், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பராமரிக்கப்பட்ட, 46 பசுக்கள், நிமோனியா காய்ச்சல் மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டு, பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா நகரில், ஆதரவற்ற விலங்குகளை பராமரிக்கும் அமைப்பு இயங்கி வருகிறது. இங்கு, 480 பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.
மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், இங்குள்ள பசுக்களில் சில, மர்ம காய்ச்சலால் ...

சிவாஜி சிலைக்கு மீண்டும் சிக்கல்

Posted: 22 Jul 2017 02:35 PM PDT

சிவாஜி சிலையை அகற்றுவதற்கு, சிவாஜி - பிரபு அறக்கட்டளையின் ஒப்புதல் கடிதத்தை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் சமீபத்தில் பெற்று உள்ளனர்.

சிலையை அகற்றினால், மெரினா கடற்கரையின் நடைபாதை சாலையில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அடுத்த கட்ட போராட்டம் நடத்த, சிவாஜி ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை, ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்ட சிவாஜி சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என, தொடுக்கப்பட்ட வழக்கில், சிலையை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2015ல், சட்டசபையில் பேசிய, அப்போதைய ...

'பாலினத்தை தேர்வு செய்யும் உரிமை திருநங்கையருக்கே'

Posted: 22 Jul 2017 03:36 PM PDT

புதுடில்லி:'தங்கள் பாலினத்தை, தாங்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு, திருநங்கையருக்கு வழங்கப்பட வேண்டும்' என, பார்லி., நிலைக்குழு பரிந்துரைந்து உள்ளது.
சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் மீதான, பார்லி., நிலைக்குழு, மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள் விபரம்:'திருநங்கையர் என்பவர், முழுமையாக ஆணோ, பெண்ணோ அல்லாதவர்' என, திருநங்கையர் சட்ட மசோதா வரையறுக்கிறது. இதன்படி, ஆண், பெண் ஆகியோரின் கலவையே, திருநங்கை. அவர், பிறப்பில் என்ன பாலினத்தை சேர்ந்தவராக அறியப்பட்டாரோ, அவ்வாறு இல்லாமல், வேறு பாலினமாக உணர்பவர்.
இந்த வரையறை, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™